எங்கள் வீட்டுத் தோட்ட மாமரத்தில்
கைக்கெட்டும் உயரத்தில்
நம்பிக்கையுடன்
கூடுகட்டி முட்டையிட்டு
அடைகாத்துக் கொண்டிருக்கிறது
சிறு பறவை ஒன்று
பறவையினங்களுக்கு எதிராக
நாம் எத்தனைக் கொடுமைகள்
இழைத்த போதும்..
அவைகள் இன்னமும்
நம்மையும் நம்பி அண்டி வாழ முயல்வது
அதன் அன்பை மட்டும்
வெளிக்காட்டுவதாக மட்டும் எனக்குப் படவில்லை
மாறாக நம் சுயநலத்தையும்
வேட்டையாடி உண்ணுதலையே
தருமமாகக் கருதும்
நம் மிருக குணமதனை
சாத்வீகமாய் நமக்குச்
சுட்டிக் காட்டுதலைப் போலவும் ....
கைக்கெட்டும் உயரத்தில்
நம்பிக்கையுடன்
கூடுகட்டி முட்டையிட்டு
அடைகாத்துக் கொண்டிருக்கிறது
சிறு பறவை ஒன்று
பறவையினங்களுக்கு எதிராக
நாம் எத்தனைக் கொடுமைகள்
இழைத்த போதும்..
அவைகள் இன்னமும்
நம்மையும் நம்பி அண்டி வாழ முயல்வது
அதன் அன்பை மட்டும்
வெளிக்காட்டுவதாக மட்டும் எனக்குப் படவில்லை
மாறாக நம் சுயநலத்தையும்
வேட்டையாடி உண்ணுதலையே
தருமமாகக் கருதும்
நம் மிருக குணமதனை
சாத்வீகமாய் நமக்குச்
சுட்டிக் காட்டுதலைப் போலவும் ....
11 comments:
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு (80)
பறவைகள் அனைத்தும் அழிந்தால் மனிதன் வாழமுடியாது.
மனிதர்கள் அனைவரும் அழிந்தால் பறவைகளால் வாழமுடியும், அதுவும் இடையூறுகள் இன்றி...
இது பல Moneyதர்களுக்கு தெரியாத உண்மை...
அவைகளுக்கு துரோகம் செய்யத் தெரியாது. மனிதர்களை நம்புவது அதன் இயல்புகளில் ஒன்றாகி விடுகிறது.
திண்டுக்கல் தனபாலன் //
முதல் வரவுக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்
சிவபார்கவி //
உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி
KILLERGEE Devakottai //
இது பல Moneyதர்களுக்கு தெரியாத உண்மை..//உடன் வரவுக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்//
ஸ்ரீராம். //
ஆம் அருமையாகச் சொன்னீர்கள்
துரோகம் மனிதர்களின் இயல்பாகிப்
போனதை போலவே
வணக்கம் சகோதரரே
அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.படங்களும் அழகாக உள்ளது. பறவைகள் நம்மைப்போல், சுயநலம் என்ற ஒன்றை அறியாததால், அன்பை மட்டுமே வெளிக்காட்டி வாழ்ந்து, நம்முடனும் அன்பாகவே இருக்கிறது. நம் பார்வையில் அதன் வாழ்வை அமைத்துக் கொள்ளும் தைரியத்தை அதற்கு தந்த இறைவன் நல்லவேளையாக சுயநலத்தை தரவில்லை. பறவைகளிடம் நாம் கற்று கொள்ள வேண்டிய குணங்கள் நிறைய இருக்கின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உணர்ந்து பதிந்த உங்கள் விரிவான அருமையான பின்னூட்டம் அதிக மகிழ்வளிக்கிறது...மிக்க நன்றி
மணிப்புறா போல் இருக்கிறது இரண்டு முட்டைகள் இட்டு அடை காக்கும்.
வீதி ஓரம் உள்ள மரம் வெட்டப்படும் வீதியை அகல படுத்த.
கவிஞ்ர் ஐயா வீட்டில் நிம்மதியாக சந்தோஷமாக பயமில்லாமல் இருக்கலாம் என்று தெரிகிறது அதற்கு.
மகிழ்வாய் தன் குஞ்சுகள் பறக்கும் வரை இருக்கட்டும்.
வாழ்த்துக்கள்.
சிறப்பாகச் சொன்னீர்கள்...
எத்தனை தீங்குகள் இழைத்து விட்டோம் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும்!
Post a Comment