Sunday, June 14, 2020

இணைதலும்..இணைத்தலும்..

பிரிதலுக்கும்
பிரித்தலுக்கும் இடையில்
இணைதலுக்கும்
இணைத்தலுக்கும்
ஓரெழுத்து மட்டும் வித்தியாசமில்லை
ஒரு நூறு வித்தியாசமிருக்கிறது

பிரிதல் இணைதல்
சோகமானதாகவோ
சுகமானதோ
இதில் வன்முறையில்லை
இதில் கொள்கை திணிப்பில்லை
அடுத்தவர் தலையீடில்லை

பிரித்தல் இணைத்தல்
சோகமானதோ சுகமானதோ
இதில் வன்முறையுண்டு
கொள்கைத் திணிப்புண்டு
அடுத்தவர் தலையீடு அதிகம் உண்டு

ஜாதி மதத்தில் இருந்து பிரித்து
இனத்தில் சேர்த்தவனாயினும்
இனத்திலிருந்து பிரித்து
தேசீயத்தில் சேர்த்தவனாயினும்
தேசீயத்திலிருந்து பிரித்து
வர்க்கத்தில் இணைத்தவனாயினும்...

அப்பத்தைப் பங்கிட்ட குரங்காய்
அதிகப் பங்குகொண்டவன்
அவனாகத்தான் இருக்கிறான்
நிகழ்வில்
பங்கேற்பவனாக மட்டுமே நாமிருக்கிறோம்
பலனடைபவன் அவனாயிருக்கிறான்

இழப்பதற்கு கோவணம் தவிர
ஏதுமில்லையாயினும்
பிரிதலோ இணைதலோ
முடிவெடுப்பதில்  இனியேனும்
சுயமாய்  இருப்போம்
சுய நலப் பிண்டங்களை
இனி எட்ட நிறுத்தியே ரசிப்போம்

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சுயம் என்றும் சுபம்...

KILLERGEE Devakottai said...

அழகிய விளக்கம் ரசனையோடு சொன்னவிதம் நன்று, நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

பிரிதல் இணைதல்
சோகமானதாகவோ
சுகமானதோ
இதில் வன்முறையில்லை
இதில் கொள்கை திணிப்பில்லை
அடுத்தவர் தலையீடில்லை

பிரித்தல் இணைத்தல்
சோகமானதோ சுகமானதோ
இதில் வன்முறையுண்டு
கொள்கைத் திணிப்புண்டு
அடுத்தவர் தலையீடு அதிகம் உண்டு//

ஓரெழுத்து வித்தியாசத்தை அழகா சொல்லிவீட்டிர்கள். நல்லா யோசிச்சிருக்கீங்க!

ரசித்தேன்.

கீதா

Post a Comment