Thursday, June 18, 2020

கொரோனாவும் சனாதனமும்

மிக நெருக்கமானவர்கள் ஆயினும்
தொட்டுவிடாது மிகக் கவனமாய்
ஒதுங்கியிருந்து.....

எவ்வளவு தெரிந்தவர்கள் ஆயினும்
மேலே பட்டுவிடாது மிகக் கவனமாய்
விலகியிருந்து.

சில மணி நேர,ம் தான் ஆயினும்
வெளியில் சென்று வந்தாலே கவனமாய்
உடல் நனைத்து

சில நிமிடஙகள்தான் ஆயினும்
சாவு வீடு சென்று வந்தால் கவனமாய்
முழுக்குப் போட்டு

வெளியில் உண்ணாது
இடைவெளிப் பராமரிப்புக்குக் குடைபிடித்து

..............................

சனாதனவாதிகளின் சடங்குகள் அனைத்தையும்
விருப்பம் இருப்பினும்
இல்லாதே போயினும்
கட்டாயம் கடைப்பிடிக்கும்படி
சனாதனதர்ம எதிர்ப்பார்களையும்
மாற்றிச் சிரிக்கிறது
நாளும் பல்கிப் பெருகும
சைனச் சனியன் கொரோனா...

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பலவற்றை சின்ன பின்னமாக்கிக் கொண்டிருக்கிறது தீநுண்மி...

KILLERGEE Devakottai said...

கொரோனாவுக்கு செருப்படி இதை கொரோனா படித்தால் இந்தியாவை விட்டு வெளியேறும்.

கரந்தை ஜெயக்குமார் said...

அது மனிதத் தீண்டாமை
இது நோய் தீண்டாமல் இருக்க

Thulasidharan V Thillaiakathu said...

கைவிடப்பட்ட பண்டைய பழக்கவழக்கங்கள் தற்போது மீண்டும்.

கீதா

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

இந்த வைரஸினால் நன்மையும் இருக்கிறது தீமையும் இருக்கிறது மனிதன் இனியாவது திருந்தி வாழட்டும்

koilpillai said...

நிழலின் அருமை வெயிலில்தானே தெரியும?

கோ

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

கொரோனாவைக் கண்டபடி திட்டிவிட்டீர்கள்!!!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

கொரோனாவைக் கண்டபடி திட்டிவிட்டீர்கள்!!!

வெங்கட் நாகராஜ் said...

தீதுண்மி - விரைவில் அகலட்டும்.

நல்லதொரு கவிதை.

மாதேவி said...

கொரோனாவுக்கு கோபம் வரப்போகிறதே :)
நன்றாக சொல்லியுள்ளீர்கள்.

Post a Comment