Friday, June 19, 2020

விதையும் விதைப்பந்தும்

அனுபவத்தில்
விளைந்து முதிர்ந்த
பயனுள்ள வீரியமிக்க விதைகளை
வீணாக்கிவிட விரும்பாது
அறிந்தவர் தெரிந்தவர் அனைவரிடத்திலும்
பயன்பெறட்டும் எனக் கொடுத்துப் போகிறேன்...

மரியாதை நிமித்தம்
பணிவுடன் கனிவுடன்
பெற்றுக் கொண்ட போதிலும்
எவரும் விதைக்கவோ விளைவிக்கவோ
இல்லையெனத் தெரிந்த போது
மிக நொந்து போகிறேன்

இப்போதெல்லாம்
விதைகளை யாரிடமும் கொடுத்தலைத் தவிர்த்து
விதைப் பந்துகளாக்கி
வெளிதனில் விதைத்துப் போகிறேன்

அது மெல்ல முளைவிட
முகமறியாதவர்கள் ஆயினும்
அதன் மதிப்பறிந்தவர்கள்
அதனைப் போற்றிப் பாதுகாக்க
மிக மகிழ்ந்து போகிறேன்..

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...
அருமை...

KILLERGEE Devakottai said...

ஸூப்பர் கவிஞரே
இதை அனைவரும் உணர்தல் வேண்டும்

வெங்கட் நாகராஜ் said...

விதைப்பந்துகளாக அனுபவங்களும்...

அருமை ஐயா.

G.M Balasubramaniam said...

என் எழுத்துகளை ஏனோ நினைவு படுத்துகிறது

Thulasidharan V Thillaiakathu said...

அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

துளசிதரன்

கீதா

Post a Comment