Tuesday, June 30, 2020

பீலிபெய் சாகாடும் அச்சிறும்..

  • அவர்கள் பேச்சை கொஞ்சம்
கவனமாகக் கேளுங்கள்
நெருங்கிய நண்பர்களின் நயவஞ்சகத்தால்
நைந்து போனவர்களாக
அவர்கள் இருக்கலாம்

அவர்கள் கண்களைக் கொஞ்சம்
கருணையோடு பாருங்கள்
உரிமை என்கிற பெயரில்
உறவுகளால் அடிமையாக்கப்பட்டு
அவதிப் படுவர்களாக
அவர்கள் இருக்கலாம்

அவர்களுக்கு மனதுக்குஆறுதலாய்
இரண்டு வார்த்தைகள் கூறுங்கள்
தோல்வி தவிர ஏதுமறியாது
துவண்டு போனவர்களாய்
அவர்கள் இருக்கலாம்

நம்முடையை சிறு கவனம்
நம்முடைய  லேசான கருணைப் பார்வை
நம்முடைய  ஒரே ஒரு ஆறுதல் பேச்சு
என்ன செய்துவிடப் போகிறது என
அசட்டையாக மட்டும் இருந்துவிடாதீர்கள்

அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டு
இறுதியாக உங்களிடம்
அடைக்கலமென வருவோருக்கு
உங்களது சிறு அலட்சியம்
உங்களது சிறு முகச் சுழிப்பு
அவர்களுக்குள் ஒரு பெரும்
பிரளயத்தைஉண்டாக்கிவிடக் கூடும்

பீலிபெய் சாகாடும் அச்சிறும்  அப்பண்டஞ 
சால மிகுத்துப்பெயின் நேரும் அவலம்
உங்கள் சிறு அசிரத்தையால் கூட
அவருக்குள் நேர்ந்து விட வாய்ப்புண்டு
அந்தப் பாவம் நிச்சயம் நமக்கு வேண்டாம்
அதுவும் இந்தக் கொரோனா காலத்தில்
எனவே....yaathoramani.blogspot.com

7 comments:

koilpillai said...

நல்ல அறிவுரை.

koilpillai said...

நல்ல அறிவுரை.

வல்லிசிம்ஹன் said...

மிகப் பெரிய உண்மை. நன்றிமா.

ஸ்ரீராம். said...

இந்த நேரத்துக்குத் தேவையான ஆலோசனை.

ராஜி said...

நல்ல அறிவுரைதான் ஆனா, கேட்கனுமே

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பாக சொல்லி விட்டீர்கள் ஐயா...

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு பதிவு. சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள் ஐயா.

Post a Comment