முன்பு
அலுவலகத்தில்
பணிசெய்த காலத்தில்
என் உடனடி அதிகாரி
வட இந்தியராக இருந்தார்
அவர் ஏனோ
தமிழ் கற்றுக் கொள்ள விரும்பவில்லை
அவருக்காக நானும்
ஹிந்தி கற்றுக் கொள்ள மெனக்கெடவில்லை
இருவருக்கும் ஆங்கிலம்
தெரிந்திருந்ததால்
தொடர்பு கொள்வதில் பிரச்சனையில்லை
இப்போது
இங்கு அடுக்கு மாடி குடியிருப்பில்
காவலர்முதல் அனைத்துப் பணியாளர்களுமே
வட இந்தியர்களாகவே..
அவர்கள் ஏனோ
தமிழ் கற்றுக் கொள்ள முயலவில்லை
என்னால் அவர்களுடன்
தொடர்பு கொள்ளாது
நாளைக்கடத்தச் சாத்தியப்படவில்லை
தவிர்க்க இயலாது
காலத்தின் கட்டாயத்தில்
இப்போது இந்தி கற்றுக் கொண்டிருக்கிறேன்
1965 போராட்டத்தில்
கலந்து கொண்டு கைது செய்யப்பட்டதை
நேற்றுவரை
பெருமைக்குரியதாய் சொல்லிக் கொண்டிருந்த நான்
அலுவலகத்தில்
பணிசெய்த காலத்தில்
என் உடனடி அதிகாரி
வட இந்தியராக இருந்தார்
அவர் ஏனோ
தமிழ் கற்றுக் கொள்ள விரும்பவில்லை
அவருக்காக நானும்
ஹிந்தி கற்றுக் கொள்ள மெனக்கெடவில்லை
இருவருக்கும் ஆங்கிலம்
தெரிந்திருந்ததால்
தொடர்பு கொள்வதில் பிரச்சனையில்லை
இப்போது
இங்கு அடுக்கு மாடி குடியிருப்பில்
காவலர்முதல் அனைத்துப் பணியாளர்களுமே
வட இந்தியர்களாகவே..
அவர்கள் ஏனோ
தமிழ் கற்றுக் கொள்ள முயலவில்லை
என்னால் அவர்களுடன்
தொடர்பு கொள்ளாது
நாளைக்கடத்தச் சாத்தியப்படவில்லை
தவிர்க்க இயலாது
காலத்தின் கட்டாயத்தில்
இப்போது இந்தி கற்றுக் கொண்டிருக்கிறேன்
1965 போராட்டத்தில்
கலந்து கொண்டு கைது செய்யப்பட்டதை
நேற்றுவரை
பெருமைக்குரியதாய் சொல்லிக் கொண்டிருந்த நான்
5 comments:
மிகவும் ரசித்த கவிதை.
தமிழ்நாட்டின் நிலையை அப்பட்டமாகச் சொல்லுது
மொழி பயில ஒரு அர்வம்வேண்டும் எனக்கு ஹிந்தி மொழி பிடிக்காது ஆனால்நீங்கள் சொல்வதுபொல் காலத்தின் கட்டாயத்தால் ஹிந்தி புரியும் ஒரு முறை ரயில் பயணத்தில் ஒரு வடக்கத்திகாரர் தெரியாது என்று சொல்லியே ஹிந்தியில் வித்தகர்களாகி இருப்பார்கள்மதராசிகள் என்றார்
ஆர்வத்திற்கு வாழ்த்துகள் ஐயா...
காலத்தின் கட்டாயம். தேவைகளால் ஏற்படும் தெரிவு!
தேவைகள் ஏற்படும்போது உங்களுக்குப் பிடிக்காததையும் செய்து தான் ஆகவேண்டியிருக்கிறது.
நல்ல பகிர்வு.
Post a Comment