தமிழில்
இருக் "கலாம் "
வந்திருக் "கலாம் "
போயிருக் "கலாம் "
செய்திருக் "கலாம் "
முடித்திருக் "கலாம் "
நினைத்திருக் "கலாம் "
இப்படி நூறு வார்த்தைகள் உண்டு
ஆயினும்
இவைகள் அனைத்தும்
தெளிவற்றவை
உறுதியற்றவை
நேர்மறைத் தன்மையற்றவை
ஆயினும்
தமிழுக்கு
தமிழனுக்கு
இந்தியனுக்கு
உறுதியை உறுதி செய்வதாய்
நேர்மறைத்தன்மை ஊட்டுவதாய்
இளைஞர்கள் நரம்புகளை முறுக்கேற்றுவதாய்
ஒளிகூட்டுவதாய்
வழிகாட்டுவதாய்
ஒரே ஒரு "கலாமாய் " வந்தவரே
அப்துல் "கலாமாய் " ஒளிர்ந்தவரே
இந்த நூற்றாண்டில்
இந்தியனின் உன்னத உயர்வுக்கு
காரணமாய இருந்தவரே
தொடர்ந்து இருப்பவரே
இன்னும் சிலகாலம்
இருந்து வழிகாட்டியாய்
இருந்திருக் "கலாம் "என
இந்தியரெல்லாம்
கண்ணீர்விடவைத்து....
அந்தப் பொறாமைப் பிடித்த காலன்
தன் கோரமுகத்தை
அழிக்கும் புத்தியை
உங்கள் விசயத்திலும்
காட்டிவிட்டானே "பாவி "
அந்தக் காலனை
முன்னே வரவைத்து
காலால் எட்டி உதைத்து
காலம் வென்றவர்கள் பட்டியலில்
முண்டாசுக் கவிஞர் வரிசையில்
எங்கள் அப்துல் "கலாமே '
நீங்களும் சேர்ந்துவிட்ட இரகசியம்
அறிய மாட்டான் அந்த அப் "பாவி "
விழித்து இருக்க
வருவதே கனவென
புதிய வேதம் சொன்னவரே
நீங்கள் ஒளிகூட்டிக் கொடுத்த
தீபமதைக் கையிலேந்தி
புதிய உலகை நிச்சயம் படைப்போம்
இறுதி மூச்சு வரை
ஓயாது உழைத்த பெருந்தகையே
இனியேனும் சிறிது ஓய்வெடுப்பீர்
நீங்கள் காட்டிய வழியில்
வீறு போடத் துடித்திருக்கும்
இளைஞர் படைதனைக் கண்டு
இனியேனும் இரசித்து மகிழ்ந்து
சொர்க்கத்தில் சிறிது ஓய்வெடுப்பீர்
6 comments:
அருமை...
கனவு நாயகனின் கனவுகள்
கனவாகிப் போகாமல்
நனவாக வேண்டும்...
அக்னிச் சிறகுகள்
அனைவருக்கும் தேவை...
வாராது வந்த மாமணி
நினைவிற்கொள்வோம் - வரலாற்றில்
மறக்க இயலாத மாபெரும் தலைவன்
அப்துள் கலாம்!
எமக்குப் பிடித்தவர்களை இழக்கும் போது காலனே வாடா உன்னைக் காலால் மிதிப்பேன் என்பது போல் தான் தோன்றும். அப்துல் கலாம் காலத்தால் மறக்க முடியாத தலைவனே. சிறப்பு வாழ்த்துகள்
மதிப்புமிக்க பதவிக்கு நன்றி ஐயா.இது எனக்கு மிகவும் உதவுகிறது. நீங்கள் எங்களுக்கு இன்னும் ஏதாவது பரிசளிப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் புதிய தலைப்புகளுக்கு நாங்கள் காத்திருக்கிறோம்.
தமிழ் ஆபாச வீடியோ
மறக்க முடியாத மனிதர். சிறப்பான பகிர்வு.
Post a Comment