Monday, October 12, 2020

மனம் நிறைந்த மனோ..


 SPBக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று திருவண்ணாமலையில் அவரது தங்கை S.P.சைலஜா விளக்கேற்றி வேண்டியுள்ளார்.. 


இதில் நெகிழ வைத்த நபர், நெற்றி நிறைய விபூதியுடன், வேட்டி சட்டையில் பயபக்தியுடன் விளக்கேற்றிய மனோ தான்..


பிறப்பால், பழக்க வழக்கத்தால் இஸ்லாமியரான அவரது இந்த சைகை தான் நம் சமூகத்தின் நிஜமான பிரதிபலிப்பு.. '


“வணக்கம் சொல்ல மாட்டேன்', 'பிற மதக் கடவுளுக்குப் பூஜை செய்ததைச் சாப்பிட மாட்டேன்' என்பதெல்லாம் நம் சமூகத்திற்கும் நம் பண்பாட்டிற்கும் சிறிதும் சம்பந்தம் இல்லாத வந்தேறி வழக்கங்கள்.. 


சகமனிதன், வேறு நம்பிக்கை கொண்டிருந்தாலும் அதையும் மதிப்பது தான் நம் மண்ணின் மாண்பு.. மனோ அதைத் தான் கச்சிதமாகச் செய்து காட்டினார்..


வேறு மதங்களைப் பின்பற்றினாலும், அவற்றின் வந்தேறி வழக்கத்தைப் பிடித்துத் தொங்காமல், சக மனிதனின் நம்பிக்கைகளை மதிக்கும் மனோ, யேசுதாஸ் போன்றோர் தான் இந்த மண்ணின் மைந்தர்கள்.. 


இவர்கள் தான் சமூக நல்லிணக்கத்திற்கு அடையாளமாக இருக்க வேண்டியவர்கள்.. 


மாறாக திராவிட & கம்யூனிச ஆட்கள், தாங்கள் தான் செக்யூலரிசத்தின் ஒரே அத்தாரிட்டி என்பது போல் செயல்படுவதால் தான் இங்கு ஒருவருக்கொருவர் இத்தனை முட்டல் மோதல்கள்..


எந்த இந்துவும் சர்ச்சுக்குள்ளோ மசூதிக்குள்ளோ போக யோசிப்பதில்லை.. சிவன், பெருமாள் மாதிரி ஏசு & அல்லாவும் அவனுக்கு ஒரு கடவுள் தான்.. அதனால் தான் அவன் உருத்தாக பிரியாணி கேட்கிறான், வேளாங்கண்ணி மாதா படம் போட்ட மோதிரம், எண்ணெய் கேன் என பயன்படுத்துகிறான்.. 


இதையே பதிலுக்குச் செய்யும் மனோவும் யேசுதாஸும் தான் இந்தச் சமூகம் சமநிலையாக இருக்க முழுபலத்தோடு உதவுபவர்கள்.. 


மனோக்களும் யேசுதாஸ்களும் அதிகரிக்கும் போது தான் செக்யூலரிசம் எத்தனை போலியானது என நமக்குத் தெரிய வரும்..


துரதிர்ஷ்டவசமாக, மனோக்களையும் யேசுதாஸ்களையும் என்றும் அதிகரிக்க விடாது திராவிட & கம்யூனிச அரசியல்.. 'சிறுபான்மை, ஒடுக்குமுறை, பார்ப்பனீயம்' என்றெல்லாம் தூண்டிவிட்டு அவர்களை எந்நேரமும் பயத்திலேயே இருக்க வைத்து, பெரும்பான்மைக்கு எதிராகக் கொம்பு சீவி விடுவது மட்டுமே இவர்களின் குறிக்கோள்.. 


மனித குலத்தின் நோய் கம்யூனிசம் என்றால், தமிழ் இனத்தின் நோய் திராவிடம்.. இந்த நோய்க்கான மருந்து, மனோ, யேசுதாஸ் போன்ற இந்திய பாரம்பரியத்தை மதித்து வாழும் சிறுபான்மையினரின் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமே


நன்றி Ram Kumar

11 comments:

துரை செல்வராஜூ said...

அடடா... இந்தப் படத்திலுள்ளவர் மனோ அவர்களா!..

சில தினங்களுக்கு முன் அமரர் SPB அவர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றிய செய்திகளுடன் இந்தப் படத்தைக் கண்டபோது - திரு மனோ அவர்களைக் கண்டு உணர முடியவில்லை..

இந்தப் பதிவின் மூலம் கண்டு கொண்டேன்...

மகத்தான மனிதருடன்
மாண்புறும் இதயங்கள்!..

வாழ்க.. வாழ்க!..

திண்டுக்கல் தனபாலன் said...

இதுவே மனிதம்...

KILLERGEE Devakottai said...

மதம் மறந்தால் மனிதம் தழைக்கும்.

துரை செல்வராஜூ said...

அன்பின் ஜி...
சமய உணர்வு இருப்பதால் தான் நல்லவர் ஒருவருக்கு இப்படியான வழிபாடுதனைச் செய்திருக்கிறார்கள்...

வெங்கட் நாகராஜ் said...

நல்ல விஷயம். ராம்குமார் முகநூலில் எழுதியபோதே வாசித்தேன். இங்கேயும் பகிர்ந்தது நல்லது.

வல்லிசிம்ஹன் said...

மனித நேயம் மறையவில்லை.
மனோ அவர்கள் குரல் எத்தனையோ பாடல்களில்
மனதை நெகிழ்த்தி இருக்கிறது.
இன்னும் அவர் பாட வேண்டும்.

இறையாண்மை ஓங்கி மதம் மறையட்டும்.

மனோ சாமிநாதன் said...

நண்பரிடம் இருந்த மரியாதையும் அன்பும் மதத்துக்கு அப்பாற்பட்டது என்பதை அழகாக காண்பித்துள்ளார் மனோ !

Bhanumathy Venkateswaran said...

நல்ல பதிவு. மனோ அவர் வசிக்கும் ஆழ்வார் திருநகரில் வெங்கடாஜலபதிக்கு ஒரு கோவில் கட்டியிருக்கிறார். நாதஸ்வர வித்துவானான ஷேக் சின்ன மௌலானா சாஹிப் தன்னுடைய வீட்டில் இந்து கடவுள்களின் படங்களை மாட்டி வைத்திருப்பாராம். நான் பிறப்பால் முஸ்லீமானாலும் இந்து கடவுள்களை பற்றிதானே இசைக்கிறேன் என்பாராம். இப்போதுதான் தேவையில்லாத பிளவு வந்து விட்டது. 

நெல்லைத் தமிழன் said...

மிக நல்ல பதிவு

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இப்பதிவினை முகநூலில் கண்ட நினைவு.
secularism என்ற சொல்லிற்கான பொருள் இதுதான்.

கரந்தை ஜெயக்குமார் said...

மனிதம் போற்றுவோம்

Post a Comment