மூடத்தனத்தால்
பதிந்த நம்பிக்கையின் பலம்
பகுத்தறிவினால்
விளைந்த நம்பிக்கையில் இல்லை
சடங்கு சம்பிரதாயங்களால்
மனதுள் பதிந்த செயல்கள்
பயனறிந்து செய்ய முயல
அதன் சுவடுகளே தட்டுப்படவில்லை
விவரமறியா வயதில்
இணைந்த நட்பின் இறுக்கம்
விவரமறிய தொடரும் நட்பில்
துளியும் இல்லவே இல்லை.
இவையெல்லாம் இப்படி
என ஆகிப் போனதால்தானோ என்னவோ.
இந்தச் சூட்சுமத்தை.
நன்கு புரிந்து கொண்டதால் தானோ என்னவோ
பயனுள்ள தேவையான
விஷயங்களைவிட...
பயனற்ற சுவாரஸ்யங்க்களே
இங்கு அதிகம் விற்பனையாகின்றன
கடமையை பொறுப்பினை
உணர்த்தும் தலைவர்கள்
செல்லாக் காசாக்கிப் போக
உணர்வினை ஆசையினைத்
தூண்டும் தலைவர்களே
வெல்லும் தலைவர்களாகிப் போவதைப் போலவே...
9 comments:
முன்னுக்குப் பின் முரணாகப் பேச்சுபவர்களின் வாய் ஜாலத்தில் எப்பொழுதோ மயங்கியவர்கள் நிறைந்த ஊர் நம் ஊர்.
உவமானங்கள்தான் ரொம்ப யோசிக்க வைக்கின்றன... ஆமாம்தானோ, இல்லையோ என்று என்ன வைக்கின்றன... அரசியல் நிலை என்றுமே எங்குமே மோசம்தான்!
முற்றிலும் உண்மை.
முதலிரண்டு பத்திகள் சரிதான்,முடித்திருக்கும் விதம்... ஆமாவா?
முடிவுக்கு கூடுதல் அழுத்தம் தரவே முதலிரண்டு...அதனால் முடித்திருக்கும் விதம் ஆமாவே.ர
இனி மேலும் கெடலாம்...
மிக அருமை!
முதல் பத்தியும் மூன்றாம் பத்தியும் மிகவும் யதார்த்தமான உண்மைகள்!
கடைசி பத்தி காமராஜருக்கும் கக்கனுக்கும் இன்றைய தலைவர்களுக்கும் உள்ள வித்தியாசங்களை நினைவுபடுத்துகின்றன!
இன்று இருப்பவர்கள் பகுத்தறிவு வியாபாரிகள்.
உண்மை
உண்மை
Post a Comment