Sunday, April 11, 2021

கார்ப்பரேட் தேர்தல்

 எப்படி முயன்றபோதும் தன் மனைவியின்

மனதைக் கவர முடியாது தோற்றவன்

பெண்களைக் கவர்வதில் கெட்டிக்காரன் என

நம்பப்படுகிறவனிடம்/ 

அப்படி ஒரு போலி நம்பிக்கையை 

ஏற்படுத்தி வைத்திருப்பவனிடம்

பெரும் தொகையைக் கொடுத்து 

ஆலோசனை கேட்க...


கெட்டிக்காரனாக நம்பப்படுகிறவன்

தனக்கான  ஆட்களை நியமித்து 

அவன் மனைவியைப் தொடர்ந்து 

தொடரச் செய்து அவருக்கு

கோவில் பிடிக்கும்/ இடியாப்பம் பிடிக்கும்/

ரோஜாப் பூ பிடிக்கும் என பட்டியல் கொடுத்து

பெரும் தொகையைப் பெற்றுக் கொள்ள..


அவன் ஐடியாவை வைத்து இவையெல்லாம்

வாங்கிக் கொடுத்து  தன் மனைவியைக்

கவர முயலுகிறவன் போல.....


(சில நாட்கள் மனைவியிடம் மனம் விட்டுப் பேசிப்

பழகி இருந்தாலே இந்த விஷயங்கள் எல்லாம்

செலவின்றியே தெளிவாகப் 

புரிந்து கொண்டிருக்கமுடியும் )


தன் மாவட்டச் செயலாளர், நகர மற்றும்

ஒன்றியச் செயலாளர் முலம் இந்த ஐ பேக்

நிறுவனத்திற்குச் செலவழித்த தொகையில்

கால் பகுதியைச் செலவழித்திருந்தால் கூட

அவர்களும் தம் தொகுதி மக்களுக்கும்

உண்மையான கட்சித் தொண்டர்களுக்கும்

தேவையானதைச் செய்து வெற்றிக்கு

வித்திட்டிருக்க முடியும்...


இதை விடுத்து ஜன நாயகத்தின் ஆணிவேரான

தேர்தலையே ஒரு கார்பரேட் நிறுவனம் மூலம்

சந்தித்து தேர்தலையே ஒரு கார்பரேட்

பாணியில் சந்தித்தவர்கள் ....


பிற கட்சியினரை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு

உடந்தையானவர்கள்/ கார்பரேட் அடிவருடிகள்

எனப் பிரச்சாரம் செய்வது மட்டுமல்ல


கல்வி போல மருத்துவம் போல

தேர்தலையும் சாமானியர்கள்

சந்திக்க இயலாதபடிச் செய்துவிட்டு (கார்ப்பரேட்டுகளுக்கு வழியமைத்துக் கொடுத்துவிட்டு)

தங்களை ஜனநாயவாதிகள் என்றும்

தங்கள் இயக்கம் பாமர ஜனங்களுக்கானது

எனப் பிரச்சாரம் செய்வதையும்

என்னவென்று சொல்வது....

6 comments:

Anonymous said...

நிதர்சனமான உண்மை.

Anonymous said...

நிதர்சனமான உண்மை

ஸ்ரீராம். said...

உண்மைதான்.

வெங்கட் நாகராஜ் said...

சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள். அவர்களது முயற்சி வெற்றி பெற்று விட்டால் இவை இன்னும் அதிகமாகும்! ஏற்கனவே இப்படியான நிறுவனங்கள் நிறைய வந்து விட்டன.

திண்டுக்கல் தனபாலன் said...

நாட்டின் வெங்கோலன் எவ்வழியோ அவ்வழி...!

ezhil said...

எங்கும் கார்ப்பரேட் மயமாகும் போது.... இவர்கள் மட்டும் என்ன விதிவிலக்கா?...

Post a Comment