*திராவிட கட்சிகளின் பொய்களைப் பொடிப் பொடியாக்கும் NEET முடிவுகள்:*
மேடைகளில், தொலைகாட்சி. விவாதங்களில் , ராஜன் குழு அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகளில் *தொடர்ந்து சொல்லப்பட்டு வரும் பொய்களைப் பொடிப் பொடியாக்கியிருக்கிறது சமீபத்தில் வெளியான நீட் முடிவுகள்.*
பொய்# 1:
நீட் தேர்வு சிபிஎஸ்சி மாணவர்களுக்கு சாதகமானது?.
முடிவுகள் சொல்லும் உண்மை:
*இந்தாண்டு நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களில் 66.5 சதவீதம் பேர் பல்வேறு 22 மாநில போர்ட்களில் படித்தவர்கள்.*
பொய்# 2:
அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறுவது கடினம்.
முடிவுகள் சொல்லும் உண்மை:
*திருச்சியில் மட்டும், அரசு நடத்திய பயிற்சி வகுப்புகளில் பங்கேற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் 62 பேர் இந்த ஆண்டு நீட் தேர்வில் தகுதி பெற்றிருக்கின்றனர்.*
பொய்#3
அரசுப் பள்ளி மாணவர்கள் முதல் முறையில் நீட் தேர்வில் தகுதி பெற முடியாது.
முடிவுகள் சொல்லும் உண்மை: *அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் முதலிடம் பிடித்துள்ள மூவருமே முதல் முறையாகத் தேர்வு எழுதியவர்கள்.*
பி.ஆர். பிரியங்கா (அவ்வை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மதிப்பெண் 414).
ஹரீஷ் குமார் (ஏழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி- மதிப்பெண்: 373)
எஸ். ஆஷிகா (ஈ.வெ.ரா. நாகம்மையார் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி- மதிப்பெண் 351)
*ஆகிய மூவரும் முதலிடம் பிடித்தவர்கள்.*
*மூவருமே முதல் முறையாகத் தேர்வு எழுதியவர்கள்.*
பொய்#4
கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது நீட் தேர்வு.
முடிவுகள் சொல்லும் உண்மை:
கோவை மாவட்டத்தில் உள்ள நஞ்சப்பனூர் என்ற கிராமத்தில் +2 தேறிய பெண் எம். சங்கவி. *பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். அவர் இந்தாண்டு 202 மதிப்பெண்கள் பெற்று தகுதி பெற்றுள்ளார்.*
அரசு மருத்துவக் கல்லூரிகள் ஏதேனும் ஒன்றில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.
கடந்த ஆண்டு விவசாயக் கூலியான தன் தந்தையை இழந்த இளம் பெண் இவர்.
பொய்# 5:
தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு கடினமானது.
முடிவுகள் சொல்லும் உண்மை: *கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.*
*கடந்த ஆண்டு : 57 216.*
*இந்த ஆண்டு: 58,922*
அனைவரும் அறிய வேண்டியது:
*முனைப்போடு உழைத்தால் எவரும் நீட்டில் தகுதி பெறலாம்.*
செய்ய வேண்டியது: #1
நீதிமன்றத்தில் இந்த தரவுகளை எடுத்து வைத்து நீட் எவருக்கும் எதிரானது அல்ல என்று நிறுவ வேண்டும்.
#2 *இந்த உண்மைகளை மாணவர்களுக்கு, குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள், தன்னார்வத் தொண்டர்கள் நம்பிக்கை ஊட்ட வேண்டும்.*
செய்வார்களா?
இந்த முடிவுகள் குறித்து நம் தொலைக்காட்சிகள் அலசுவார்களா?
*சகோதரர்களே!!!*
*நாம் இந்த உண்மையை தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்* .🙏🙏
நன்றி......
மேலும் தகவல் களுக்கு
இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா- !!!!
மேற்கண்ட நீட் பற்றிய எனது முகநூல் பதிவு எழுத்தாளர் மாலன் அவர்கள் பதிவிட்டது. அதன் முக்கியம் கருதி எனது முகநூலில் மறு பதிவிடுகிறேன். மாலன் அவர்களுக்கு நன்றி
2 comments:
உண்மை எப்படி இருந்தாலும் அரசியல் நோக்கங்களுக்காக அவை மறைக்கப்படும். கிராமப்புற மாணவர்களுக்கு கஷ்டம் என்று கூறியே தமிழகத்தில் கல்வியின் தரத்தை வெகுவாக தாழ்த்தி விட்டார்கள்.
// இந்த முடிவுகள் குறித்து நம் தொலைக்காட்சிகள் அலசுவார்களா?.. //
அலசமாட்டார்கள்!...
Post a Comment