🔥 புளியமரத்தின் அடியில் எரிந்து கிடந்த எலும்புகளும் சாம்பலும் மிகப்பெரிய அச்சமூட்டுபவையாக இருந்தன...
இவ்வாறான குறிப்புகள் குவாலியரில் #யூங்_ரோஸ் எனும் பிரிட்டிஷ் படைகளை வழிநடத்திய ஒருவர் குறித்து வைத்துள்ளார்.
மேலே சொன்னது #மணிகர்ணிகா பற்றின குறிப்பு. இப்படி சொன்னால் சுலபமாக புரிந்து கொள்ள முடியும்.
❤️ #லக்ஷ்மிபாய்
#ஜான்சிராணி_லக்ஷ்மி_பாய்.💕
இந்நாளில் தேச பக்தி இல்லாத கழிசடைகளுக்கு இப்படி ஒருவர் இருந்ததும் வாழ்ந்ததும் எப்படி சொல்லி புரியவைப்பது, இன்று அவரது பிறந்த நாள்.நவம்பர் மாதம் 19 ஆம் தேதி 1828 ஆண்டில் புகழ் பெற்ற வாரணாசிக்கு அருகில் மராத்திய பிராமண குடும்பத்தில் பிறந்தவர் தான் பின்னாளில் பிரிட்டிஷ் படைகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஜான்சியின் ராணி லக்ஷ்மி பாய். ஆரம்ப காலத்தில் அவரின் பெயர் #மணிகர்ணிகா, மணிகர்ணிகா தாம்பே.
வீட்டிலேயே கல்வி பயின்ற இவர் (நன்கு கவனியுங்கள் அவர் வாழ்ந்த ஆண்டினை) நான்கு வயதிலேயே தனது தாயார் பாகிரதி_பாய் யை இழந்தார்.இவரது தந்தை மோராபாந்_தாம்பே புகழ் பெற்ற பேஷ்வார் படைகளை நிர்வாகம் செய்தவர்.
( சமீப காலத்தில் பாஜிராவ் மஸ்தானி என்ற இந்தி திரைப்படத்தில் இஃது இடம் பெற்று இருக்கிறது)
இன்றளவும் மணிகர்ணிகா என்கிற பெயருக்கு உத்தரபிரதேச மாவட்டத்தில் அளப்பறிய ஈர்ப்பு உண்டு.பலவிதமான மல்யுத்தம் மற்றும் ஆயுத போர் பயிர்ச்சிகளில் ஈடுபாடு கொண்டிருந்த இவர் மிகச் சிறந்த குதிரையேற்றம் தெரிந்த நபராக இருந்திருக்கிறார். யாருக்கு அடங்காத குதிரைகள் கூட இவர் சொற்படி கீழ் படிந்து நடந்திருக்கிறது.
தனது தனிப்பட்ட பராமரிப்பில் இருந்து குதிரைகளான பவன், பாதல் சாரங்கி ஆகியவற்றில் பாதலுக்கு கடிவாளம் கூட போடப்பட்டது இல்லையாம்.
அதன் மீது பயணிக்கும் சமயத்தில் தானாக முன்வந்து அமர்ந்து இவரை தன் மீது ஏற்றிக் கொண்டு செல்லும் என்கிறது குறிப்புகள். பின்னாளில் ஜான்ஸி கோட்டையில் பிரிட்டிஷ் படைகளுடன் நடந்த சண்டையின் போது இந்த குதிரை தான் கோட்டை உச்சியில் இருந்து ராணியுடன் கீழே பாய்ந்து தன் உயிரைக் கொடுத்து காப்பாற்றியிருக்கிறது. இஃது இன்று இந்த தகவலுடன் அந்த கோட்டை கொத்தளத்தில் காட்சி படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்த பாதல் என்கிற பெயரிடப்பட்ட குதிரை தன் வாழ்நாளில் கடிவாளம் போட அனுமதித்தது இல்லை, கட்டிவைக்கவும் அனுமதித்தது இல்லை, அதுபோலவே தன் மீது லக்ஷ்மி பாயை தவிர வேறு ஒருவரையும் ஏற்றியதும் இல்லை. இதனை தன் வீரர்களுடன் உரை நிகழ்த்தும் போதும் உரையாற்றும் போது தவறாமல் குறிப்பிடும் லக்ஷ்மி பாய் ஒரு ஐந்து அறிவு ஜீவனுக்கே இவ்வளவு திடம் நாம் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டாராம்.
அதற்கு தகுந்தாற்போல் இவர் எதிர்த்து போட்டியிட்ட படைகளின் எண்ணிக்கையில் பத்தில் ஒரு பங்கு மாத்திரமே இவர் பயன் படுத்தி வந்திருக்கிறார். ஆனால் அசாத்தியமான துணிச்சல் மற்றும் போர் தந்திரம் ஆகியவற்றை கொண்டு செயல் பட்டு வெற்றி பெற்று வந்திருக்கிறார்.இன்று வரையில் 1857 ஆம் ஆண்டினை இந்திய சுதந்திர போரின் ஆரம்ப காலமாக வகை படுத்தப்படுவது எல்லாம் இவரின் தாக்கத்தால் தான் என்பது கூட நம்மில் பலருக்கு தெரியாது.
💞உடல் நலமே பிரதானம் என்பதை செயல் வடிவம் கொடுத்து செயல் படுத்தியவர் இவர் தான். தன் ராஜ்ஜியத்தில் உள்ள ஒவ்வொருவரும் காலையில் உடற் பயிற்சி செய்வதை கட்டாயம் மாக்கியிருக்கிறார். தானும் அவ்விதம் பலர் முன்னனியில் பயிற்சி மேற்கொண்டு வந்திருக்கிறார்.பஸ்கி, தண்டல் போன்றவற்றை அநாயாசமாக கையாள கூடியவர் என்கிறது சரித்திரம்.
பிரிட்டிஷ் படைகளின் பொறுப்பு வகித்த #டல்லோசி படாதபாடு பட்டிருக்கிறார் இவரை எதிர் கொள்ள...
பின்னாளில் #பாதல் தன் உயிரைக் கொடுத்து காப்பாற்றிய ஜான்ஸியின் ராணி லக்ஷ்மி பாய் குவாலியர் கோட்டையில் வைத்து பிடிபட்ட நிலையில் தன் வீரர்களுக்கு போரில் படுகாயம் அடைந்த தன்னை கொன்று எரியூட்ட உத்திரவிட்டுயிருக்கார். அஃது நிறைவேற்றப்பட்டது.
அதனை தான் மேல் உள்ள வரிகளில் படித்தீர்கள்.
அப்படி சாம்பலாக இருந்ததை கைப்பற்றி அந்த புளியமரத்தின் அடியிலேயே புதைத்தனராம் பிரிட்டிஷ் படையினர். கிட்டத்தட்ட ஒரு வாரம் வரையில் தீவிர கண்காணிப்பு மற்றும் காவல் போடப்பட்ட இருந்ததாம் அந்த இடத்திற்கு.
பீனிக்ஸ் பறவை போன்று உயிர்த்தெழுந்து வந்தாலும் வரலாம் என்று நம்பியிருக்கிறார்கள் என்றால் எத்தனை வீரியமுடன் அவர் வாழ்ந்திருக்க வேண்டும்??????
அந்த தலைமுறையில் வாழ்ந்த சிறு பெண் குழந்தைகளை கண்டாலேயே பிரிட்டிஷ் படைப்பிரிவினருக்கு அலறல் ஏற்படுமாம்.
இன்று பெயர் மாத்திரமே தெரிந்த சிலராக சுதந்திர இந்தியாவில் சுகமாக வாழ்ந்து கொண்டு வருகிறோம்.
💓 ஜெய் ஹிந்த்.
4 comments:
வாழ்க அவர் வீரம். மிக மிக நன்றி ஜி.
எத்தனை உயிர்ப்புடன் இருந்திருக்கிறது அவர் வாழ்க்கை.
எழுச்சி கொடுக்கும் சரித்திரம்.
படிப்பதற்கு பிரமிப்பாக இருக்கிறது! உங்கள் மூலம் இன்று ஒரு தகவலை தெரிந்து கொண்டேன்!
சிறப்பு. அரிய செய்திகளை அறிந்தேன்.
சிறப்பு...
Post a Comment