Sunday, November 14, 2021
சூரியா...ஜாதி வன்மம் பிடித்தவரே..
இது வன்முறை போலத்தான் படும்..படத்தில் எல்லா கதாபாத்திரங்களுக்கும் உண்மைப் பெயரை வைத்துவிட்டு ஒரு மோசமான கதாபாத்திரத்துக்கு மட்டும் வேறு பெயரை வைத்து அதுவும் வன்னியர் தலைவராக இருந்த ஒருவரின் வைத்தது...இவ்வளவு எதிர்ப்பு வந்தும் மாற்றாமல் கம்னியூஸ்டுகள் நல்லவர்கள் வல்லவர்கள் என பேட்டிக் கொடுப்பது..இதற்கு மட்டும் பதில் சொல்லாமல் தெனாவெட்டாகத் திரிகிறவருக்கு வேறு எப்படி ரெஸ்பாண்ட் செய்வது..இதைச் சொன்னவருக்கு மிதிப்பது என்பது நோக்கம் இல்லை..நிச்சயம்இதை எதிர்த்து வன்முறை என கோர்ட்டுக்குப் போனால் கோர்ட் நிச்சயம் இதை நீக்கவே சொல்லும்..இது ஜாதியை வைத்து கல்லாக்கட்ட நினைப்பவர்களுக்கு நிச்சயம் இது ஒரு பாடமாகவே அமையும்...பதினாறு வகை காய்கறி வைத்து ஓரத்தில் கொஞ்சம் மலம் வைத்த கதையாய் ஒரு அற்புதமான படம் எடுத்து அதில் தன் ஜாதி வன்மத்தை காட்டிய சூரியா அவர் மரியாதையை அவரே கெடுத்துக் கொண்டார் எனத்தான் எனக்குப்படுகிறது..(இதிலெல்லாம் ஒன்றுமில்லை என சூரியா நினைப்பார் ஆயின் அந்த வில்லன் பெயரை அவர் ஜாதி சார்ந்த தலைவரின் பெயரை வைத்து நிரூபிக்கலாம்..)
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
நிரூபித்தால் நல்லவன் இல்லையேல்
கெட்டவன்
காலால் உதைக்க சொல்வது வன்மம். இது வன்னியர்களுக்கு எதிராகத்தான் போகும். இதை தவிர்த்திருக்க வேண்டும்.
சூர்யா ஜாதி வன்மம் பிடித்தவராக மட்டும் தெரியவில்லை. சூரரை போற்று படத்தில் பிராமணர்களுக்கு எதிராகவும் இதில் வன்னியர்களுக்கு எதிராகவும், படத்தில் பெயர்கள் வருவது ஹிந்து தர்மத்துக்கு எதிரானவராக காட்டுகிறது. இது மேலும் மேலும் தொடரும். அடுத்த படத்தில் வன்னியர்களுக்கு ஆதரவாகவும் தேவர் சமுதாயத்துக்கு எதிராகவும் படம் எடுப்பார்.
மேலும், அந்த ஒரு கோடியை இருளர் நலத்துக்கான சங்கத்துக்கு கொடுத்தது (ராஜாக்கண்ணு குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்), அந்த சங்கம் பதிவு செய்யப்படாத ஒன்றாக இருப்பது, கொடுத்த பணம் சூர்யாவின் சொந்த பணமாக இல்லாமல் அறக்கட்டளை பணத்தை கொடுத்தது, அதை பெரிய அளவில் ப்ரமோட் செய்து பணம் பார்ப்பது.. என்று எல்லாமே அவரை ஒரு கடைந்தெடுத்த வியாபாரியாகத்தான் காட்டுகிறது.
"பதினாறு வகை காய்கறி வைத்து ஓரத்தில் கொஞ்சம் மலம் வைத்த கதையாய் ஒரு அற்புதமான படம் எடுத்து.." என்ற கருத்தில் முழுமையாக உடன்படுகிறேன்.
மிக ஆபத்தான மனிதராக தோன்றுகிறார் சூர்யா.
சூர்யாவின் பதிலில் மட்டும் அவர் நேரடியாக பதில் சொல்லவே இல்லை. சொல்லவும் முடியாது!
Post a Comment