🙏
*
“ நாம் உயிருடன் இருக்கும் வரை, நம் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறோமே, அவை அனைத்தையும் செய்கிறோமா ? “
*
காலம் தாழ்த்த வேண்டாம்
*
மிகவும் புத்திசாலியான டாக்டர் ஒருவர் இருந்தார். அவருடைய விசேஷமான குணம் என்னவென்றால், அதாவது, அவர் எப்போதுமே புன்சிரிப்போடு இருப்பதை வழக்கமாகக் கொண்டு இருந்தார். அவர் ஒரு மகிழ்ச்சியான டாக்டர் என்பதை அனைவரும் அறிவார்கள். இறப்பை நெருங்கிக் கொண்டு இருக்கின்ற நிலையில் உள்ள நோயாளி என்றால் கூட, உயிருடன் திரும்பவும் கொண்டு வந்து விட முடியும், என்று இவரைப் பற்றிக் கூறப்படுகிறது.
தன்னிடம் வருகின்ற நோயாளிகள், எல்லோரையும் கடிதம் ஒன்று எழுதித் தரும்படி கூறுவதை தனது வழக்கமாக கொண்டு இருக்கிறார். நீங்கள் உங்கள் வாழ்க்கையின் எஞ்சிய பகுதியை, எவ்வாறு வாழப்போகிறீர்கள்; நீங்கள் உயிரோடு இருந்தால், இப்போது வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்; அவற்றில் விடுபட்டவை என்னென்ன? அதை எல்லாம் இந்தக் கடிதத்தில் எழுதுங்கள்.
நோயாளிகள் அனைவரும் தங்கள் மனதில் இருப்பதை எழுதினார்கள்.
நான் உயிரோடு இருந்தால், என்னுடைய அந்த நேரத்தை, எனது குடும்பத்தினருடன் சேர்ந்து இருப்பேன்.
என்னால் முடிந்தவரைக்கும் என்னுடைய மகன், மகள் மற்றும் அவர்கள் குழந்தைகளோடு விளையாடுவேன்.
நான் என்னுடைய கணவரையும், அவர் பெற்றோரையும் மிகவும் துன்புறுத்தி விட்டேன். ஆபரேஷனுக்குப் பிறகு நான் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டு விட்டு, அவர்களோடு சேர்ந்து சந்தோஷமாக வாழ்வேன்.
சில பேர், அவர்களுடைய இதயத்தின் உள்ளே இருப்பதை அப்படியே எழுதினார்கள்.
சில பேர் இப்படியும் எழுதினார்கள்; யாராவது என்னால் வாழ்க்கையில் துன்பப்பட்டு இருந்தால், பிறகு நான் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு விடுவேன்.
சில பேர் எழுதினார்கள்; அதாவது நான் மகிழ்ச்சியை வாழ்க்கையில் அதிகரிக்கச் செய்வேன்.
வாழ்க்கையில் யாரையும் நான் குறை கூற மாட்டேன்; என்னைப் பற்றி குறை கூற அவர்களுக்கு நான் ஒரு சந்தர்ப்பம் கொடுக்கவும் மாட்டேன். நான் என்ன செய்தாலும், என்னால், யாரும் துன்பம் அடையக் கூடாது, என்பதில் நான் கவனம் எடுத்துச் செய்வேன்.
யாரோ ஒருவர் எழுதினார்; தியானம் மூலமாக நான் வாழ்க்கையின் லட்சியத்தை அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஏராளமான எண்ணிக்கையில் மக்கள், பல்வேறு வித்தியாசமான விஷயங்களைப் பற்றி எழுதினார்கள்.
ஆபரேசனுக்குப் பிறகு நோயாளிகளை வீட்டுக்குத் திரும்ப அனுப்பும் போது, டாக்டர், அவர்கள் எழுதிய கடிதங்களை அவர்களிடம் திரும்பக் கொடுத்தார். அவர்களிடம் கூறினார், “நீங்கள் கடிதத்தில் என்னவெல்லாம் எழுதி இருக்கிறீர்களோ, அதே மாதிரி செய்யுங்கள். இதில் எவ்வளவு உங்களால் வாழ்வில் நிறைவேற்ற முடிகிறது என்பதையும் பாருங்கள். ஒரு வருடம் கழித்து மீண்டும் வாருங்கள்; என்னிடம் கூறுங்கள்; “ உங்களால் என்ன செய்ய முடிந்தது, என்ன மாதிரியான வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்தீர்கள். “
டாக்டரைப் பொறுத்தவரை ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னவெனில், அதாவது ஒருவர் கூட, இவ்வாறு எழுதவில்லை. அதாவது, “நான் உயிரோடு மீண்டும் வந்தால், பிறகு, நான் ஒருவர் மீது பழி தீர்த்துக் கொள்வேன்; நான் என் பகைவனை தீர்த்து விடுவேன்; நான் நிறைய பணம் சம்பாதிக்க விரும்புகிறேன்; நான் என்னை மிகவும் சுறுசுறுப்பாக வைத்துக் கொண்டாக வேண்டும்; பிறரை விட நான் வெற்றி கொண்டாக வேண்டும்; அதிக அளவு மரியாதையை பெற்றிட வேண்டும்.”
ஒவ்வொருவரும் வாழ்க்கையில் வித்தியாசமான அணுகுமுறையைக் கொண்டு இருந்தார்கள். அப்போது, டாக்டர் அவர்களிடம் வினா எழுப்பினார்; “நீங்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருக்கும் போது இவை எல்லாவற்றையும் ஏன் செய்ய விரும்பவில்லை; யார் உங்களை தடுத்து நிறுத்தினார்கள் ……… இப்போது உங்களை தடுத்துக் கொண்டு இருப்பது எது? இப்போதும் காலம் மிகவும் கடந்து விட்டதா?
இதுதான் மகிழ்ச்சியான டாக்டரின் கதை !!
நாம் ஒரு சில கணம் எடுத்துக் கொண்டு நம்முடைய வாழ்க்கையைப் பார்ப்போம். நாம் நமது வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதைப் பற்றி சிந்திப்போம் …….
இந்த மாதிரியான வாழ்க்கையை வாழ்வதற்கு நாம் சற்று முன்னர் தொடங்கியுள்ளோம். வாழ்க்கையின் மகிழ்ச்சி என்பது வாழ்க்கை பயணம் முழுமையாவதில் மட்டுமே இருக்கிறது. அப்போது அங்கே எவ்வித ஆசையும் இல்லை. இனியும் எவ்வித குற்ற உணர்வும் இல்லை. அப்போது நம்மால் கூற முடியும் ……… “நாம் வாழ விரும்பிய அழகான வாழ்க்கையை நாம் வாழ்ந்தோம். “
இன்னும் அதிக காலம் தாழ்த்தி விடாதீர்கள். !!
*
🙏
3 comments:
என்ன யோசித்தாலும் கடைசி காலம் என்ற பதட்டம் நீங்கியபிறகு மீண்டும் 'இயல்பு வாழ்க்கை'க்கு திரும்புவதே மனித வழக்கம்!
நல்லதொரு பகிர்வு. ஸ்ரீராம் சொல்லி இருப்பது போல அந்த நேரத்தில் என்னவெல்லாம் யோசித்தாலும், இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகு அந்த யோசனைகள் அனைத்துமே மறந்து விடுவார்கள் என்பதே நானும் கண்ட நிஜம்.
இதோ உன் வாழ்க்கையின் முடிவு வெகு அருகில் எனும் போது நம் மனம் நல்லதை நினைக்கும்...ஆனால் மீண்டு வந்து சிறிது நாட்களில் மனம் மீண்டும் குரங்காய் பேக் டு ஸ்கொயர் ஒன்...இது பொதுவான மனித மனம். சைக்காலஜி. விதிவிலக்குகள் உண்டுதான்.
மனம் பக்குவப்பட்டு நலல்து செய்ய நினைப்பவர்கள்..
டாக்டரின் அணுகுமுறை நல்லாருக்கு
கீதா
Post a Comment