Monday, August 15, 2022

படித்து வைப்போம்..

 

சுதந்திரப் போராட்டத்தில் அந்தணர்கள் 

வை மு கோதைநாயகி

வை மு கோதைநாயகி மடிசார் கட்டிக்கொண்டு சிறைக்கு சென்ற பிராமண பெண்மணி

 தமிழின் முதல் நாவலாசிரியர், 116 நாவலகளை எழுதியவர். 

துப்பறியும் கதைகள் எழுதிய முதல் பெண், நாடக ஆசிரியர் நாடக டைரக்டர்,மேடை பேச்சாளர், 

சமூக சேவகர், பாடகர்.

தமிழில் எழுத படிக்கத் தெரியாது, பள்ளி சென்று படிக்கும் வாய்ப்பு இல்லை. 

காரணம் வறுமை அல்ல அந்த கால பெண்களின் சூழ்நிலை . 

ஆனால், நன்றாக கதை சொலதசென்றாய ும். பக்கத்து வீட்டு பெண்ணின் உதவியினால் இவர் சொல்ல சொல்ல எழுதப்பட்ட முதல் நாடகம் இந்திராமோகனா 1924.

பின் எழுதவும் படிக்கவும் அவர் அறிந்துகொண்டு எழுதிய நாவல்கள் ஏராளம். 

தான் இயற்றிய “அன்பின் சிகரம்” நாடகத்தினை சென்னை வானொலியில் ஒளிபரப்ப தானே டைரக்ட் செய்தார்.

ஜகன்மோகினி இதழையும், பெண்களுக்கென்று இதழ் ஒன்றையும்  நடத்தியவர்.

 கேட்ட பாடலை அப்படியே மனதில் பதிய செய்து மீண்டும் சுவைபட பாடும் வல்லமை கொண்ட வை மு கோதைநாயகி அவர்கள் திருவல்லிக்கேணியில் பாரதி வீட்டுக்கு எதிரே வாழ்ந்தவர். 

பாரதியார் பாடல்களை எழுதித்தர, நல்ல முறையில் ராகம், தாளம் அமைத்து பாடி பாரதியின் பாடல்களை பரப்பியவர்.

பாரதியின் பெண்கள் தங்கம்மா செல்லம்மா இருவரும் இவரது தோழிகள். 

1901 டிசம்பர் முதல் தேதி இவரது பிறந்த தினம். 

தந்தை வெங்கடாசாரியார், தாயார் பட்டம்மாள்.

ஆறு வயதில் திருமணம். கணவர் பார்த்தசாரதி,  வை மு சடகோபாச்சாரியாரின் தம்பி பார்த்தசாரதி. 

திவ்யதேசமான திருக்கோளூர் பெருமாள் வைத்தமாநிதி குல தெய்வம் என்பதால் “வை” யும்  முடும்பை நகர் பூர்வீகம் என்பதால் “மு” வும் சேர்ந்து வை. மு என்ற முன்னொட்டு வழங்குவது பார்த்தசாரதி குடும்பத்தினருக்கு உள்ளது.

கணவர் ஸ்ரீ வை மு பார்த்தசாரதி சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டவர், 

கணவரை பற்றிய தேசபக்தி னும் தீ  வை மு கோதைநாயகியையும் பற்றியது! 

1932 ஜனவரி 26 தேதியை  சுயராஜ்ய தினமாக  கொண்டாடியது நாடு. 

காந்தியின் கோரிக்கையை ஏற்று கதர் புடவையை அணிந்துகொண்டு மதுவிலக்கு பிரசாரத்தில் ஈடுபட்ட கோதையை நோக்கி கள்ளுக்கடைக் காரர்களின் துப்பாக்கிகள் நீண்டன. 

அஞ்சாமல் கள்ளுக்கடை மறியலுக்கு சென்றார் கோதை.

சுதந்திர போராட்ட நிகழ்வுகளில் தடைகளை மீறி கலந்துகொண்டார் மேடையில் பேசினார். 

பாரதியின் பாடல்களை உணர்ச்சியுடன் பாடினார்.  

சொல்லின் செல்வர் தீரர் சத்திய மூர்த்தி போன்றோர்கள் இவரது பேச்சை கண்டு வியந்தனர்.

ஆங்கில அரசு இவரை கைது செய்து சிறையில் அடைத்தது. 

மடிசார் புடவையுடன் சிறைக்கு சென்ற பிராமண பெண்மணி இவர் என்பது குறித்துக்கொள்ளத்தக்கது..

தேசிய நாவல்களான இவரது தியாகக் கொடி, நளின சேகரன் நாவல்கள் ஆங்கில அரசின் கண்களை உறுத்தியது. சிறையிலிருந்து நாவல் எழுதியவர் .

சுதந்திரத்துக்குப் பின் மகாத்மா சேவா சங்கம் என்ற அமைப்பை அரசு உதவியுடன் அமைத்து மதுவிலக்கு, தீண்டாமை எதிர்ப்பு .பெண்கள் முன்னேறத்துக்கு, பத்திரிகை, எழுத்து என்று பிரபலமானவர் 1960 இல் பிப்ரவரி 20ஆம் தேதி வைத்தமாநிதியில் கலந்தார்.   

 பார்ப்பான் சுதந்திரத்துக்கு சிறை சென்றானா? என்று கேட்கும் வரலாற்று அறிவு அற்றவர்களுக்கு பிராமண பெண்கள் கூட சிறை சென்றார்கள் என்று சொல்லுகிறது வரலாறு .

By..Nambi Srinivasan..

4 comments:

Anonymous said...

அருமையான பதிவு.

bandhu said...

When a pig calls you for a fight, you should not go. One, you cannot win in a dirty environment. Two, it is its home and it will! இதில் pig என்பது பிராமண எதிர்ப்பு அரசியல்வாதிகளுக்கு மிகப் பொருந்தும்!

திண்டுக்கல் தனபாலன் said...

அடடே...

சென்னை பித்தன் said...

வரலாற்று உண்மைகளை மறைக்க முடியாது.

Post a Comment