Wednesday, September 14, 2022

பொறியாளர் தின நல்வாழ்த்துகள்...

 பொறியாளர்கள் தின வாழ்த்து.


(உறுதிமொழி)


பொறியாளர்கள் அனைவருக்கும் வணக்கம்.


அன்புடைய நண்பர்களே,


பண்டைய காலத்திலேயே மனிதன் உயரமான பாறைகளையும், மலைகளையும், மரங்களையும், குகைகளையும், தன்னுடைய பாதுகாப்பிற்காக வாழ்விடமாக பாவித்து வாழ்ந்து வந்தான்.


பின்னர் வேட்டையாடி உண்பதில் உள்ள சிரமத்தை அறிந்து நதிக்கரையினிலே விவசாயம் செய்து பயிரிட்டு அவைகளை உண்டு அதன் நதிக்கரையின் அருகிலேயே சிறுகுடில்கள் அமைத்து வாழ்ந்து வந்தான்.


அதன் தொடர்ச்சியாக மழைநீரை தேக்கி வைத்து அதன் மூலம் விவசாயம் செய்ய முடியும் என்பதை அறிந்து பிற நிலப்பரப்புகளுக்கும் அந்த மழைநீரை கொண்டு சென்று தேக்கி வைத்து விவசாயம் செய்து சிறு குடிசை வீடுகள் அமைத்து வாழ்ந்து வந்தான்.


பின்னர் விவசாயம் செய்த பெருமளவு பொருட்களை வேறு விவசாயம் செய்த இடங்களுக்கு பண்டமாற்று முறையாக தானியங்களை கொடுத்தும் தானியங்களை பெற்றும் அந்தந்த பகுதிகளில் வாழ்ந்து வந்தான்.


பின்நாட்களில் சேகரிக்கப்பட்ட பொருள்களின் அளவு கூடுதலாக இருப்பதினால் சாலை மார்க்கமாக மழை பெய்யும் பொழுது தானியங்களை அடித்து செல்லாமல் இருப்பதற்க்கு சற்று மேடான பகுதிகளை கண்டறிந்து தானிய சேகரிப்பு மையங்களை அமைத்து அதன் அருகிலேயே வீடுகள் அமைத்து வாழ்ந்து வந்தான்.


ஒரு கட்டத்தில் மின்சாரத்தை கண்டுபிடித்ததின் விளைவாக இன்று கிராமங்கள், நகரங்கள், மாநகரங்கள், நாடுகள் உலகமே தன்னுடைய வழக்கமான நடைமுறைகளில் இருந்து மின்சாரத்தை பயன்படுத்துதலின் வாயிலாக இன்றைய நவநாகரிகம் வரை மாறியுள்ளது அருமை பொறியாளர்களே.


இந்த நவநாகரிகத்தில் எண்ணற்ற சொல்ல முடியாத அளவிற்கு வளர்ச்சிகளை பெற்றுள்ளோம். ஆனால் நம்முடைய ஆதிமனிதன் வாழ்ந்த வாழ்வியல் முறையை மாற்றியமைத்ததன் மூலமாக நவநாகரிகத்தால் வாங்க முடியாத ஆனால் ஆதிமனிதன் அளவில்லாது பயன்படுத்திய காற்று, நீர் ஆகியவற்றை இன்று நாம் அளவான நீர், மாசுடைய காற்று ஆகியவற்றை நமக்கு நாமே உருவாக்கி கொண்டுள்ளோம்.


விழித்துக் கொள்வோம் பொறியாளர்களே! நண்பர்களே நாம் கட்டுகின்ற (அ) நாம் தீர்மானிக்கின்ற எதுவாக இருந்தாலும் இயற்கையை பால்படுத்தாமலும் இருக்கின்ற மரங்களை வெட்டாமலும், மரங்கள் அற்ற பகுதியிலே கட்டிடம் கட்ட இருந்தால் அந்த பகுதியிலே நல்ல இயற்கை சூழல்கள் உருவாகும் அளவிற்கு நமது நாட்டு மரங்களையும் மழைநீர் சேகரிப்பு களங்களையும், கழிவுநீர் சுத்திகரிப்பு முறைகளையும், குப்பைகள் அகற்றக்கூடிய வழிகளையும் கண்டறிந்து அதை செயல்முறைபடுத்த நம்மால் ஆன அளவு முயற்சி செய்வோம். நமக்கு கட்டிடம் கட்ட வாய்ப்பு வழங்குகின்ற நம்முடைய வாடிக்கையாளர்களுக்கும் எடுத்துரைப்போம் என்ற உறுதிமொழியையும் எடுத்துக் கொள்வோம். இந்த பொறியாளர் தின வாழ்த்துக்களையும் நமக்கு நாமே வாழ்த்திக் கொள்வோம்.

 ஏனென்றால் கட்டுமான துறை சார்ந்த பொறியாளர் படிப்பே அத்துனை பொறியியல் துறைக்கும் ஆதாரமான துறை அத்தகைய ஆதாரமான துறையை கொண்டுதான் நம்முடைய முன்னோர்கள் மின்சாரத்தை கண்டுபிடிப்பதற்க்கு முன்பாகவே வியத்தகு கட்டிடங்களை உருவாக்கியுள்ளார்கள். அவர்கள் எல்லாம் இந்த நாளிலே போற்றப்பட வேண்டியவர்கள்.


அனைத்து பொறியாளர்களுக்கும் தோழமையுடன் பொறியாளர் தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதன் மூலமாக பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.    


நன்றி! வணக்கம்!!


இப்படிக்கு,

லயன் பொறியாளர் நல் நாகராஜன்,

Raj Shree Builders & NR Consultancy,

Dindigul. 624003. Mob-9842170763.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

பொறியாளர் தின வாழ்த்துகள்...

Post a Comment