சில ஆங்கில வார்த்தைகளில்
சில எழுத்துக்கள் இருந்தபோதும்
அது உச்சரிக்கப்படாமல்
இருப்பதே சரியான உச்சரிப்பு என
பாடம் நடத்தினார் ஆங்கில ஆசிரியர்
" ஏன் அப்படி "என
நான் கேட்டபோது
"அது அப்படித்தான்"
சில வார்த்தைகளில்
சில எழுத்துக்கள் இருந்தாலும்
அது சைலண்ட் ஆகிப் போகும் "
என்றார் ஆசிரியர்
குழப்பமாய் இருந்தது எனக்கு..
பின் அன்றைய செய்தித் தாளைப் படிக்கையில்
"போதைத் தடுப்பில் அரசு உறுதியாய் இருக்கிறது
அவசியமெனில் அதை ஒழிக்க நான்
சர்வாதிகாரி ஆவேன் " என
முதல்வர் முழங்கியது இருந்தது
நான் ஏதும் புரியாது
"மதுவும் போதைப் பொருள்தானே
அரசே அதை விற்கிறதே " என்றேன்
நக்கலாய்ச் சிரித்தபடி என் நண்பன்
" இங்கு திட என்பதே சைலெண்ட் ஆக்கும் " என்றான்.
3 comments:
ஹா.. ஹா.. ஹா...
ஹா.. ஹா.. நியாயமான கேள்வி
ஹா... ஹா...
Post a Comment