Thursday, April 7, 2011

பெண்ணெழுத்து

முதலில் என்னையும் மதித்து பதிவிட அழைத்தமைக்கு
திருமதி ஆயிஷா பவுல் அவர்களுக்கு என் வணக்கத்தையும்
நன்றியையும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்

ஆரம்பம் முதல் இந்தத் தொடர் துவங்கியதில் இருந்து
அனைவரின் பதிவுகளையும் தொடர்ந்து படித்து வருகிறேன்
அனைவரின் கருத்துக்களும் ஒவ்வொரு வகையில்
சிறப்பாகத்தான் இருந்தன

என்னைப்பொறுத்தவரை பெண்களின் பிரச்சனைகள் குறித்து
பெண்கள் எழுதத் துவங்கியதைத்தான்
பெண்ணெழுத்து என்கிற அர்த்தத்தில் தான்
நான் இதை எழுதுகிறேன்

நான் ஏற்கெனவே ஒரு பின்னூட்டத்தில்  குறிப்பிட்டதைபோல
பிரசவம் பார்க்கும் மருத்துவர்கள் எல்லாம்
ஆணாக இருந்த காலத்தைவிட
பெண்மருத்துவர்கள் வரத்துவங்கியபின்புதான்
பிரசவதில்  பிரச்சனைகள் குறையத் துவங்கின

அதைப்போலவே பெண்கள் பிரச்சனை குறித்து
மிகப் பெரிய ஆண் எழுத்தாளர்கள் எல்லாம்
எழுதிய காலங்களில் அவர்கள் பெண்களை
ஆண்களுக்கென படைக்கப்பட்ட ஒரு பாண்டமாகவே
கருதி எழுதினார்களே ஒழிய அவர்களை ஒரு ஜீவனாகவே
மதித்து எழுதவில்லை.(ஒரு சிலரைத் தவிர)
அந்தக் குறை மட்டும் அல்ல
பெண்களின் மிகச் சரியான பிரச்சனைகள் குறித்து
மிகச் சரியாக (ஏன் நாகரீகமாகக் கூட) எழுதக்கூட
பெண்ணெழுத்தர்களின் வருகை அவசியமாக இருந்தது
பெண்களின் சிந்தனை முன்னேற்றத்திற்கும்
சமூக முன்னேற்றத்திற்கும் கூட
அவர்களது வருகை முக்கிய காரணம் என்றால்
 நிச்சயம் அது மிகையாகாது

பெயர்பட்டியலோடு கதைப்பட்டியலோடு
பட்டியலிட்டு எனது வாதத்தை நிலை நாட்ட எனக்கு ஆசைதான்
ஆயினும்  பதிவின் நீளம் கருதி இதை இத்துடன் முடிக்கிறேன்
பதிவிட அழைத்தமைக்கு மீண்டும் ஒருமுறை
நன்றி கூறி முடிக்கிறேன்

18 comments:

raji said...

தங்களின் எழுத்து எப்பொழுதும் போலவே சரியான இலக்கை
நோக்கியே பயணித்திருக்கிறது.ஆனால் தங்களிடம் இது விஷயமாக
இன்னும் நிறைய கருத்துக்கள் எதிர்பார்த்தேன்.ஏனோ சுருக்க முடித்து விட்டீர்கள் என்பது எனக்கு சற்று
ஏமாற்றம்தான் திரு ரமணி சார்

வை.கோபாலகிருஷ்ணன் said...

//பெண்மருத்துவர்கள் வரத்துவங்கியபின்புதான்
பிரசவதில் பிரச்சனைகள் குறையத் துவங்கின

பெண்களின் மிகச் சரியான பிரச்சனைகள் குறித்து
மிகச் சரியாக (ஏன் நாகரீகமாகக் கூட) எழுதக்கூட
பெண்ணெழுத்தர்களின் வருகை அவசியமாக இருந்தது
பெண்களின் சிந்தனை முன்னேற்றத்திற்கும்
சமூக முன்னேற்றத்திற்கும் கூட அவர்களது வருகை முக்கிய காரணம்//

சுருக்கமாக, அழகாக, தெளிவாக, நாசூக்காக, நன்றாகவே சொல்லிவிட்டீர்கள்.

பாராட்டுக்கள், ஐயா.

MANO நாஞ்சில் மனோ said...

//பிரசவம் பார்க்கும் மருத்துவர்கள் எல்லாம்
ஆணாக இருந்த காலத்தைவிட
பெண்மருத்துவர்கள் வரத்துவங்கியபின்புதான்
பிரசவதில் பிரச்சனைகள் குறையத் துவங்கின//

மிக சரியாக சொன்னீர்கள் குரு....

MANO நாஞ்சில் மனோ said...

//பெயர்பட்டியலோடு கதைப்பட்டியலோடு
பட்டியலிட்டு எனது வாதத்தை நிலை நாட்ட எனக்கு ஆசைதான்
ஆயினும் பதிவின் நீளம் கருதி இதை இத்துடன் முடிக்கிறேன்//

உங்கள் எழுத்து எப்பவுமே எனக்கு தேன் போல இருக்கும். இன்னும் கூடுதலாக எழுதி இருக்கலாம்....

ஆயிஷா said...

//பெண்கள் பிரச்சனை குறித்து
மிகப் பெரிய ஆண் எழுத்தாளர்கள் எல்லாம்
எழுதிய காலங்களில் அவர்கள் பெண்களை
ஆண்களுக்கென படைக்கப்பட்ட ஒரு பாண்டமாகவே
கருதி எழுதினார்களே ஒழிய அவர்களை ஒரு ஜீவனாகவேமதித்து எழுதவில்லை.(ஒரு சிலரைத் தவிர)//

தெளிவாக சொல்லி இருக்கீங்க. நன்றி சகோ .

Chitra said...

பெண்களின் மிகச் சரியான பிரச்சனைகள் குறித்து
மிகச் சரியாக (ஏன் நாகரீகமாகக் கூட) எழுதக்கூட
பெண்ணெழுத்தர்களின் வருகை அவசியமாக இருந்தது
பெண்களின் சிந்தனை முன்னேற்றத்திற்கும்
சமூக முன்னேற்றத்திற்கும் கூட
அவர்களது வருகை முக்கிய காரணம் என்றால்
நிச்சயம் அது மிகையாகாது



...... கருத்துக்களை அருமையாக சொல்றீங்க. :-)

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.

சிவகுமாரன் said...

ரொம்பவும் சுருக்கமாக முடித்து விட்டீர்கள். உங்கள் டச் இதில் இல்லை. பெண்கள் கோபித்துக் கொள்ள போகிறார்கள் ரமணி சார்

செல்ல நாய்க்குட்டி மனசு said...

பெண்களின் பிரச்சினையை பெண்ணின் நுணுக்கத்தோடு சொன்னவர்கள் மிக உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறார்கள் பெண்களிடையே, உதாரணம் : கே பாலச்சந்தர், எழுத்தாளர் பாலகுமாரன். பெண் எழுத்தாளர்கள் எளிதில் அடையக் கூடியது இந்தநிலை

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

பிரச்சினைகளைப் பார்க்கும்போது நாம் ஆணுக்கென்று ஒரு பார்வை, பெண்ணுக்கென்று ஒரு பார்வையாகவும் பிரித்து நமக்குச் சௌகர்யமான கோணத்தில் பார்க்கிறோம். கோணம் சரியானதாகவும் தெளிவானதாகவும் அமையும் போது அது பெண்களையும் ஆண்களையும் சமமாகவே ஈர்க்கிறது.

சிந்தனைகளைக் கீறும் பதிவு என்றாலும் இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கக் கூடாதா என எண்ண வைத்ததும் உண்மை ரமணியண்ணா.

RVS said...

சார்! இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம். நன்றாக போனபோது திடும் என்று முடித்தது போல இருந்தது. தெளிவான சிந்தனைகள். நன்றி. ;-)

வெங்கட் நாகராஜ் said...

சிறிய பதிவு எனினும் பொட்டில் அடித்தாற்போல் தெளிவாய் சொல்லி இருக்கிறது உங்கள் பகிர்வு.

மாதேவி said...

நல்ல கருத்துக்களை எடுத்துக் கூறியுள்ளீர்கள்.

சிலர் கூறியதுபோல இன்னும் எழுதியிருக்கலாமோ எனப் படிக்கும்போது தோன்றியது.

G.M Balasubramaniam said...

உங்கள் கருத்துக்கள் தெளிவாக இருக்கின்றன,ரமணி சார். (உங்களைப் போலவே...)

குறையொன்றுமில்லை. said...

தெளிவான கருத்துக்களை அழகாக சுருக்கமாகச்சொல்லி
இருக்கீங்க. நல்லா இருக்கு.

இராஜராஜேஸ்வரி said...

அழகான, சுருக்கமான, தெளிவு கூடிய கருத்துக்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

Sriakila said...

அழகாக, சுருக்கமாக, தெளிவாக இருக்கிறது உங்கள் பதிவு.

S.Venkatachalapathy said...

பெண் எழுத்தாளர்கள் இன்னும் மேலோட்டமாக எழுதுவதைப் போல் பல நேரங்களில் எனக்குப் படுகிறது.சில பிரபல வார வெளியீடுகளில் அந்தரங்க ஆலோசனை தருகிறேனென்று கிளம்பி ஆண்களை நாகரீகமில்லாமல் சாடுவதைப் படிக்கும் போது இது பெண்ணெழுத்து தானா என்று சந்தேகம் வருகிறது. இன்னும் பெண்கள் தைரியமாக எழுத சூழல் அமையவில்லை போலும். இனைய தளம் நல்ல முடிவு சொல்லும். காத்திருப்போம்.

Post a Comment