Monday, August 15, 2011

ஒரு சினிநொறுக்ஸ்

பத்மினி பிக்சர்ஸ் என்கிற பெயரில்
திரைபட இயக்குநர் பிஆர்.பந்துலு அவர்கள்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை வைத்து
மிகப் பிரமாதமான பிரமாண்டமான படங்கள் தயாரித்து இயக்கி உள்ளார்கள்
குறிப்பாக கப்பலோட்டிய தமிழன்.வீரபாண்டிய கட்டபொம்மன்
கர்ணன்முதலான படங்கள்
இவைகள்எல்லாம் காலத்தால்அழியாத மாபெரும் காவியங்கள்.
இவைகள் எல்லாம்பெயரும் புகழும் சேர்த்துக் கொடுத்த அளவு
அவருக்குப் பணம் சம்பாதித்துக் கொடுக்கவில்லை

அதே சமய்ம் ஏ.பி நாகராஜன் அவர்களும் நடிகர் திலகம்
அவர்களை வைத்து பல படங்கள் இயக்கி உள்ளார்
ஆயினும் அவைகள் எல்லாம் மிகப் பிரமாண்டமான
தயரிப்புகள் எனச் சொல்ல முடியாது என்வே
அவருக்கு பொருளாதர ரீதியில் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை

இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட நாளில் ஏ.பி.என் அவர்களின்
 நவராத்திரி படமும் பி.ஆர்.பந்துலு அவர்களின்
முரடன் முத்து படமும் வெளியாகிறது.அதுவரை நடிகர் திலகம்
அவர்களின் படங்கள் 99 வெளியாகி இருக்கின்றன
இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகி இருப்பதால்
எது 100வது படம் எனச் சொல்லவேண்டிய நிலையில்
நடிகர் திலகம் அவர்கள் இருக்கிறார்கள் .தமிழ் நாடே
நடிகர் திலகம் அவர்களின் முடிவுக்காகக் காத்திருக்கிறது

விமர்சனங்கள் மற்றும் 9 விதமான கதாபாத்திரங்களில்
நடிகர் திலகம் அவர்களின் நடிப்பு மற்றும் மக்கள் ஆதரவு என
அனைத்திலும் நவராத்திரியே முன்னணியில் இருந்ததால்
நவராத்திரியே 100 வது படம் என அறிவிக்கிறார்.

இது நடிகர் திலகம் அவர்களை வைத்து நஷ்டப்பட்டாலும்
பரவாயில்லை என செலவு அதிகம் செய்து சரித்திரப் படங்களாகவும்
புராணப் படங்களாகவும் எடுத்த பி.ஆர் பந்துலு அவர்களை
மிகவும் சங்கடப் படுத்திவிடுகிறது

அந்த வேதனையில் அதுவரை புரட்சித்தலைவரை வைத்து படமே
எடுக்காத பி.ஆர் பந்துலு அவர்கள் முதன் முதலாக
மிகப் பிரமாண்டமான படமாக ஒரு படம் எடுக்கிறார்
ஒரு வேகத்தில் எடுக்கும் படத்தில் எத்தனை சிறப்புகள்
செய்ய முடியுமோ அத்தனையும் செய்து அந்தப் படத்தை
தன் வாழ் நாள் சாதனைப் படமாகவே எடுக்கிறார்
அதுதான் ஆயிரத்தில் ஒருவன்.
அந்தப் படம் வசூலில் மிகப் பெரிய சாதனைப் படைத்து
இன்றுவரை எவர் க்ரீன் படமாகவே உள்ளது

பி.ஆர் பந்துலு மட்டும் அல்ல தமிழ் பட சாதனை இயக்கு நர்கள்
ஏ.பி. என் அவர்களும் ஸ்ரீதர் அவர்களும் கூட தங்களது
 சாதனை மற்றும்சோதனைப் படங்களால் வந்த
 பொருளாதரப் பின்னடைவை புரட்சிதலைவரை வைத்து
 படம் எடுத்துதான் சரிசெய்து கொண்டார்கள்
அந்தப் படங்கள் எதுவென தெரிந்தவர்கள் பின்னூட்டமிடலாமே !


சினி நொறுக்ஸ் தொடரும்

75 comments:

காந்தி பனங்கூர் said...

ஐயா, உங்களுடைய மரண பயம் பதிவு அருமையாக இருந்தது. அது போன்ற சுவாரசியமான பதிவை எதிர்பார்க்கிறேன். நன்றி

குறையொன்றுமில்லை. said...

சினி நொறுக்ஸெல்லாமே நல்லாஇருக்கு.தொடருங்கள்.

தமிழ் உதயம் said...

ஏ.பி.என் அவர்களின் நவராத்திரி, பி.ஆர். பந்துலுவின் முரடன்முத்து என்பதனை மாற்றி பதிவிட்டிருக்கிறிர்கள்.

Unknown said...

விகடனில் பொக்கிஷம் என்று ஒரு பகுதி வருது அதை படித்த மாதிரி ஒரு சந்தோசம் தொடருங்கள் சகோ
அருமையான பதிவு ...

விடை தெரியவில்லையே சகோ

Unknown said...

தமிழ் மனதில் இணைத்து வாக்களித்தேன்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சுவாரஸ்யம்...
தொடருங்கள்...

Madhavan Srinivasagopalan said...

அப்பலாம் நான் ரொம்ப சின்ன புள்ளை( ம்ம்ம் பொறக்கவே இல்லையோ..?)
தெரியாத விஷயம்..
வித்தியாசமானது.. நன்றி பகிர்விற்கு

வெங்கட் நாகராஜ் said...

ஐ... சினி நொறுக்ஸ்... சமீப காலத்திய படங்கள் வேண்டாம். பழைய படங்களோடு ஒப்பிடும்போது இப்போதைய படங்கள் ஏனோ பிடிப்பதில்லை. அவ்வப்போது இதைத் தொடருங்கள்...

நல்ல பகிர்வுக்கு நன்றி.

கதம்ப உணர்வுகள் said...

இது நான் அறியாத விஷயங்கள்....சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.....

காலத்தால் அழியாத காவியங்களாக சொன்ன மூன்று படங்களில் நான் பார்த்தது கர்ணன் மட்டுமே...

நஷ்டம் ஏற்பட்டவர்கள் புரட்சித்தலைவர் எம் ஜி ஆரை வைத்து பிரம்மாண்டமாக எடுத்த ஆயிரத்தில் ஒருவன் படமும் மிக அருமையான படம்....

நிறைய விஷயங்கள் அறிய முடிந்தது ரமணி சார்....

பந்துலு படம் தான் நவராத்திரி சக்க போடு போட்டுச்சே... அப்புறம் ஏம்பா பந்துலு வேதனைப்பட்டு எம் ஜி ஆரை வைத்து படம் எடுத்தார்? எனக்கு இது புரியவே இல்லை....

இன்னும் தொடருங்கள் ரமணி சார்....தெரியாத விஷயங்கள் திரைத்துறையை பற்றி அறிய இது ஒரு சந்தர்ப்பம்...

அன்பு நன்றிகள் ரமணி சார் பகிர்வுக்கு...

Unknown said...

ஸ்ரீதரின் படம் உரிமைக்குரல் (அல்லது மீனவ நண்பன்)

Anonymous said...

ஏ.பி.என் அவர்களும் ஸ்ரீதர் அவர்களும் கூட தங்களது
சாதனை மற்றும்சோதனைப் படங்களால் வந்த
பொருளாதரப் பின்னடைவை புரட்சிதலைவரை வைத்து படம் எடுத்துதான் சரிசெய்து கொண்டார்கள்

அந்தப் படங்கள் எதுவென தெரிந்தவர்கள் பின்னூட்டமிடலாமே !

1. ஸ்ரீதரின் படம் உரிமைக்குரல் மற்றும் மீனவ நண்பன். ஆனால், உரிமைக்குரல் வெற்றி பெற்ற அளவுக்கு மீனவ நண்பன் போகவில்லை.

2. ஏ.பி.என் அவர்கள் தயாரித்த படம் நவரத்தினம். வசூலைப் பொறுத்தவரை ஒரு தோல்விப்படம்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

சிறுவயதில் நிறைய படங்கள் அதுவும் சிவாஜி, எம்.ஜி.ஆர். நடித்த படங்கள் அநேகமாக எல்லாமே பார்த்துள்ளேன். இயக்குனர் யார் என்பதெல்லாம் அப்போது ஆராய்ச்சி செய்வதில்லை.

இயக்குனர்களுக்காக படம் பார்க்க ஆரம்பித்தது
கே. பாலச்சந்தர், விசு, பாக்யராஜ், பாரதிராஜா போன்றவர்களின் படங்களே!

நல்லதொரு பதிவு ஆரம்பித்துக் கொடுத்துள்ளீர்கள்.
மற்றவர்களும் இதைத் தொடரட்டும். வாழ்த்துக்கள்.

கவி அழகன் said...

அருமையான சினி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சுவாரசியமான தகவல்

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
திரு பாரதி ராஜா 'வேதம் புதிது' போன்ற நல்ல படத்தை எடுத்து அந்த நஷ்டத்தை ஈடுகட்ட 'கொடி பறக்குது' படத்தை எடுத்து ஈடு கட்டினார் என்று நினைக்கிறேன்.
நன்றி சார்.

ஜோதிஜி said...

திரைப்படத் துறையில் இருந்தீங்களோ?

Unknown said...

சினிமாப் பக்கம் போயிட்டீங்க
அதனாலே என்னை மறந்திட்டீங்க!

புலவர் சா இராமாநுசம்

மாய உலகம் said...
This comment has been removed by the author.
மாய உலகம் said...

ஆஹா காவிய காலத்திற்கு அழைத்துச்சென்று கலைத்துறையை பற்றி சுவாராசியங்களுக்கான பதிவு நன்றிகளுடன் வாழ்த்துக்கள் சகோதரரே...!~

பந்தலு அவர்கள் நமது புரட்சி தலைவருடன் இணைந்த படங்கள் ஆயிரத்தில் ஒருவன், நாடோடி,ரகசிய போலிஸ் 115, தேடி வந்த மாப்பிள்ளை, மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் . இவர் இறந்த பிறகு இவர் இயக்கிய கப்போலோட்டிய தமிழன் என்ற படத்தைப்பார்த்த இந்திராகாந்தி படத்தின் முழு வரி விலக்கையும் நீக்கினார்.. ஜெயலலிதாவை திரைத்துறையில் அறிமுகப்படுத்திய பெருமையும் இவரையே சாரும்.


தேடி வந்த மாப்பிள்ளையில் எனக்கு பிடித்த இரண்டு பாடல்கள்...

1. மாணிக்க தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன என்ன
மன்னன் முகம் கனவில் வந்தது மஞ்சள் நதி உடலில் வந்தது

2. வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும்
அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும்
=====================================
நடிகர் திலகத்தை வைத்து எடுத்த மக்களைப் பெற்ற மகராசி
'நவராத்திரி'
திருவிளையாடல்,திருவருட்செல்வர்,திருமால் பெருமை,சரஸ்வதி சபதம்,தில்லானா மோகனாம்பாள்,கந்தன் கருணை என்னும் படங்கள் மாபெரும் வெற்றி படமாய் நாகராஜனுக்கு அமைந்தது.
புரட்சி தலைவரை வைத்து எடுத்தப்படம் நவரத்தினம்.

கடைசியில் அனைத்தயும் திரையுலகிலயே இழந்தார் ஏ பி என்
=======================================
புரட்சி தலைவரை வைத்து ஸ்ரீதர் அவர்கள் இயக்கி வெற்றி பெற்ற படம் - உரிமை குரல், மீனவ நண்பன்..
==============
நன்றி

ஸ்ரீராம். said...

பி ஆர் பந்துலு பற்றி கேள்விப்படாத தகவல் சுவாரஸ்யமாக இருந்தது. விடைகளை மற்றவர்கள் சொல்லி விட்டார்கள்!

Yaathoramani.blogspot.com said...

காந்தி பனங்கூர் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி

Yaathoramani.blogspot.com said...

Lakshmi //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி

Yaathoramani.blogspot.com said...

தமிழ் உதயம்

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி

பிரணவன் said...

நல்ல தகவல் sir. . .100வது படத்துல இப்படியெல்லாமா பிரச்சனை வரும். . .

Anonymous said...

சுவாரஸ்யம்..தொடருங்கள்...என் சுதந்திர தின வாழ்த்துக்கள்...

Yaathoramani.blogspot.com said...

# கவிதை வீதி # சௌந்தர்//

தங்கள் மேலான வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Madhavan Srinivasagopalan //

தங்கள் மேலான வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //


தங்கள் மேலான வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மஞ்சுபாஷிணி //

தங்கள் மேலான வரவுக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
என் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //

தங்கள் மேலான வரவுக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
என் மனமார்ந்த நன்றி

M.R said...

சினி நொறுக்ஸ் அருமையான தகவலுடன் தொடங்கியுள்ளது

தொடர்ந்து வாசிக்கிறேன் நண்பரே

பகிர்வுக்கு நன்றி

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்ய வேண்டியதை செய்து விட்டேன் நண்பரே

சுதா SJ said...

பாஸ் மிக சுவராசியமான பதிவு,
படிக்க படிக்க திகட்டாதது சினிமா விஷயம் தானே
அதுவும் பொக்கிஷம் போன்ற உங்கள் பழைய விடயங்களை
படிக்க மிக மிக சுவராசியமாக இருக்கு தொடருங்கள்..
வாழ்த்துக்கள்,

மேலே ஒரு நண்பர் குறிப்பிட்டது போல்
விகடனின் பொக்கிஷம் பகுதி படிப்பதை போன்ற ஒரு பிரமை.

சுதா SJ said...

நீங்கள் மேலே குறிப்பிட்ட படங்களில்
கர்ணன் எனக்கு மிகவும் புடித்த திரைப்படம்.

"உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது..."
என்ற பாடலை மறக்கவா முடியும்,
நான் அதிகம் பழைய படங்களைத்தான் விரும்பி பார்ப்பேன்
அதற்கமைய நீங்கள் தொடங்கி இருக்கும்
இந்த தொடர் எனக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுக்குது
தொடருங்கள் பாஸ் நானும் தொடருகிறேன்......

காட்டான் said...

வணக்கமையா அருமையான தகவல்களுக்கு நன்றி.. நானும் சிலவேளைகளில் யோசித்துப்பார்பேன் ஏன் நடிகர் திலகத்தின் சிறந்த படங்கள் வெற்றி பெறுவதில்லைன்னு.. உதாரணமாக ராஜராஜ சோழன் படம் இலங்கையில் மாபெரும் வெற்றி இந்தியாவில் சுமார்தான்.. இத்தனைக்கும் சுதந்திர போர் வீரர்களை திரையில் தனது நடிப்பாற்றலால் கண்முன்னே நிறுத்தியவர் அவர்தான்.. 

Yaathoramani.blogspot.com said...

கலாநேசன் //

தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி

Yaathoramani.blogspot.com said...

கவி அழகன் //
தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி

Yaathoramani.blogspot.com said...

Rathnavel //

தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி

Yaathoramani.blogspot.com said...

புலவர் சா இராமாநுசம் //

தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். //
தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி

Yaathoramani.blogspot.com said...

பிரணவன் //

தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி

Yaathoramani.blogspot.com said...

.Reverie //

தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி

Yaathoramani.blogspot.com said...

M.R //
தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி

Yaathoramani.blogspot.com said...

"கற்றது தமிழ்" துஷ்யந்தன்//

தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

Yaathoramani.blogspot.com said...

காட்டான்//

தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

Yaathoramani.blogspot.com said...

JOTHIG ஜோதிஜி //

அந்தக் காலத்தில் எப்படியும் ஒரு படமாவது
இயக்கி விட வேண்டும் என கொஞ்சம்
வெறியாகத் திரிந்தேன்
ஆகையால் சினிமா சம்பத்தப் பட்ட அனைத்து
தகவல்களையும் ஆர்வமாய் தெரிந்து வைத்திருப்பேன்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

Yaathoramani.blogspot.com said...

தமிழ் உதயம் //

அவசரத்தில் மாற்றி எழுதிவிட்டேன்
தவறினை உடன் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி
சரிசெய்துவிட்டேன்
வரவுக்கும் வாழ்த்துக்கும் மீண்டும் நன்றி

அப்பாதுரை said...

கேள்விப்பட்டதில்லை. சுவாரசியமான தகவல்.
ஏபிஎன் எம்ஜிஆரை வைத்துப் படமெடுத்தாரா? அதுவும் தெரியாது. உரிமைக்குரல் பின்னணி தெரியும் - கொஞ்சம் விவரமாகவே சிம்மக்குரலுக்கு வைரநெஞ்சமென்று தெரிந்து கொண்டேன். எந்த அளவுக்கு உண்மையென்று தெரியாது.

Yaathoramani.blogspot.com said...

அப்பாதுரை //

தங்கள் மேலான வரவுக்கும் விரிவான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

vidivelli said...

thakavalukku nanri....

Yaathoramani.blogspot.com said...

vidivelli //

வரவுக்கு நன்றி

சாந்தி மாரியப்பன் said...

சினி நொறுக்ஸ் சுவாரஸ்யமா இருக்கு.. நிறைய கேள்விப்படாத தகவல்கள். அடிக்கடி நொறுக்ஸும் பரிமாறுங்க :-))

Yaathoramani.blogspot.com said...

அமைதிச்சாரல் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனம் கனிந்த நன்றி

ஸாதிகா said...

சுவாரஸ்யமாக உள்ளது.தொடருங்கள்.சினி நொறுக்ஸ் மட்டுமல்லாமல் மற்ற ஆல் இன் ஆல் நொறுக்ஸையும் உங்கள் பாரவையில் எப்படி உள்ளது என்று காண ஆவல்.

G.M Balasubramaniam said...

சினிமா பார்த்ததெல்லாம் ஒரு பொழுதுபோக்குக்காகத்தான்.நான் அண்மையில் பார்த்தபடம் காந்தஹார். அதுவும் அதை இயக்கிய மேஜர் ரவியின் அழைப்பிற்கு இணங்கி ப்ரிவ்யூ தியேட்டரில். மற்றபடி சினிமா பற்றிய சேதிகளில் ஆர்வம் காட்டியது இல்லை. இருந்திருந்தால் இடுகைகள் பதிவிட இன்னொரு களமாக இருந்திருக்கலாம். படிக்க சுவாரசியமாக இருக்கிறது. பாராட்டுக்கள்.

ADHI VENKAT said...

சினி நொறுக்ஸ் நல்லாயிருக்கு சார்.தொடருங்கள்.

அம்பாளடியாள் said...

சுவாரச்சியமான பதிவு தொடர வாழ்த்துக்கள் ஐயா...........

Yaathoramani.blogspot.com said...

ஸாதிகா//

தங்கள் வரவுக்கும் விரிவான
பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

தங்கள் வரவுக்கும் விரிவான
பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

கோவை2தில்லி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி

Yaathoramani.blogspot.com said...

அம்பாளடியாள் //.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி

Murugeswari Rajavel said...

ரமணி சாரிடமிருந்து இப்படி ஒரு தலைப்பா?இயக்குநர் ஆவது என்று வெறியோடிருந்தேன் என்று சொல்லியிருக்கிறீர்கள்.திரைத்துறை தொடர்பாக சுவாரஸ்யமான தகவல்களைத் தருவீர்கள்.

Anonymous said...

நல்ல தகவல்கள் நண்பரே

Yaathoramani.blogspot.com said...

urugeswari Rajavel //

தங்கள் மேலான வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஷீ-நிசி //

தங்கள் மேலான வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் நன்றி

இராஜராஜேஸ்வரி said...

வித்தியாசமான பகிர்வு.

Yaathoramani.blogspot.com said...

இராஜராஜேஸ்வரி//

தங்கள் மேலான வரவுக்கு நன்றி

அம்பாளடியாள் said...

இன்றும் ஒரு வித்தியாசமா ஆக்கம் என் தளத்தில்
உங்கள் மேலான கருத்தினை எதிபார்க்கின்றேன்...
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.....

Yaathoramani.blogspot.com said...

அம்பாளடியாள்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி

vanathy said...

வித்யாசமா இருக்கு. தொடருங்கள்...

Yaathoramani.blogspot.com said...

vanathy //

வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி

Riyas said...

good post sir..

Yaathoramani.blogspot.com said...

Riyas //
வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி

மனோ சாமிநாதன் said...

தஞ்சைக்கு அவசர வேலையாய் வந்திருப்பதால் தாமதமாகத்தான் தங்கள் வலைத்தளப்பக்கம் வந்தேன், வந்ததும் திகைப்பாய் இருந்தது. கவிதைகள் எல்லாம் சற்று இளைப்பாறுகின்றனவா? இருந்தாலும் மாறுதலான இந்தப் பதிவும் சுவாரசியமாகவே இருக்கிறது!!

Yaathoramani.blogspot.com said...

மனோ சாமிநாதன்//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

kowsy said...

தெரியாத பல தகவல்கள் தெரிந்து கொள்ளச் செய்தமைக்கு நிறைவான வாழ்த்துகள்

Yaathoramani.blogspot.com said...

சந்திரகௌரி//



தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Post a Comment