Thursday, August 18, 2011

விட்டு விலகி விடுதலையாகி...

தொட்டு தொடர்ந்து தொடர்கதைகளாகி
வாழ்வென ஆகிப்போனவைகளையெல்லாம்
விட்டு விலகி விடுதலையாகிப் பார்க்கையில்..
சராசரிப் பார்வையில்
நேராகத் தெரிவனவெல்லாம்
சரியாகப் பார்க்கையில்
தலைகீழாகத்தான் தெரிகின்றன

உணவின்றி பல நாளும்
நீரின்றி சில நாளும்
உயிர் வாழக் கூடும் எனினும்
தொடர் சுவாசமின்றி
சில நொடிகள் கூட
உயிர் வாழுதல் இயலாதெனினும்

உணவுக்கெனவும் நீருக்கெனவும்
வாழும் நாளெல்லாம்
உழைத்தே சாகும் மனிதன்
சுவாசம் குறித்து சிறிதும்
கவனம் கொள்ளாது
விலங்கென வாழ்தலே
சரியெனக் கொள்ளுதலை
யோசித்துப் பார்க்கையில்...

அறத்தை மூலதனமாக்கி
பொருளீட்டலும்
அங்ஙனம் ஈட்டிய பொருள்கொண்டு
இன்பம் அனுபவித்தலே
அறவழி என வாழ்தலை விடுத்து

இன்பம் துய்த்தலும்
அதற்கென எங்ஙனமாயினும்
பொருளீட்டத் துடித்தலும்
அறமது குறுக்கிடுமாயின்
அதனை வெட்டிச் சாய்த்து
அரக்கனாய் வாழ்தலே
முறையெனத் தெளிவதைப்
நாளும் பார்க்கையில்..

இக்கணம் ஒன்றே சாசுவதம் எனத்
தெளிவாகத் தெரிந்திருந்தும்
நேற்றைய கவலைகளில்
நாளைய கனவுகளில்
வாழ் நாளையெல்லாம்
பாழாக்கித் தொலைத்துவிட்டு
"எண்ணங்களால் இமயத்தை
அசைத்து மகிழ்ந்து
செயலால் துரும்பசைக்காது"
வாய்ச் சொல் வீரர்களாய்
வாழ்ந்து வீழ்வோரை
கணந்தோரும் பார்க்கையில்...

காணுகின்ற அனைத்தையும்
பகுத்தறிவுக்கு உட்படுத்தி
பரிசீலித்துப் பார்க்கையில்
மனிதர்களின் பார்வையில்
வௌவால்கள் எல்லாம்
தலைகீழாய் தொங்குதல் போலே
வௌவால்களின் பார்வையில்
மனிதர்கள் எல்லாம்
தலை கீழாய் உலவுதல் போலே

நிலைமாறிப் பார்க்கையில்
நேராகவும் சரியாகவும்
தெரிவன எல்லாம்
தவறாகவும் தலைகீழாகவுமே
தோன்றிச் சிரிக்கிறது

முண்டாசுக் கவி வாக்கின்படி
"சிட்டுக்குருவியைப்போலே
விட்டு விடுதலையாகி .."
விலகி நின்று பார்த்தால்தான்
விளங்காதவை எல்லாம் தெளிவாக
விளங்கத் துவங்குமோ?
புரியாததை எல்லாம் குழப்பமின்றி
புரியத் துவங்குமோ ?

71 comments:

சாந்தி மாரியப்பன் said...

//விலகி நின்று பார்த்தால்தான்
விளங்காதவை எல்லாம் தெளிவாக
விளங்கத் துவங்குமோ?//

சில சமயங்களில் அப்படித்தானே இருக்கு :-)

குறையொன்றுமில்லை. said...

ஆமா, சில சமயங்களில் இல்லே, பல சமயங்களில்
அப்படித்தான்.

குறையொன்றுமில்லை. said...

"சிட்டுக்குருவியைப்போலே
விட்டு விடுதலையாகி .."
விலகி நின்று பார்த்தால்தான்
விளங்காதவை எல்லாம் தெளிவாக
விளங்கத் துவங்குமோ?
புரியாததை எல்லாம் குழப்பமின்றி
புரியத் துவங்குமோ ?

ஸாதிகா said...
This comment has been removed by the author.
ஸாதிகா said...

//இன்பம் துய்த்தலும்
அதற்கென எங்ஙனமாயினும்
பொருளீட்டத் துடித்தலும்
அறமது குறுக்கிடுமாயின்
அதனை வெட்டிச் சாய்த்து
அரக்கனாய் வாழ்தலே
முறையெனத் தெளிவதைப்
நாளும் பார்க்கையில்//

இன்றைய இளைய தலைமுறையினரில் அநேகரின் மனஓட்டத்தை படம் பிடித்துக்காட்டிய வரிகளிது.

VELU.G said...

//இக்கணம் ஒன்றே சாசுவதம் எனத்
தெளிவாகத் தெரிந்திருந்தும்
//

உண்மை

அழகான கருத்துள்ள கவிதை

தமிழ் உதயம் said...

நிறைவான கவிதை மட்டுமல்ல - நிறைய நிறைய அறிவுப்பூர்வமான விஷயங்களுடன் கவிதை..

சாகம்பரி said...

//விட்டு விடுதலையாகி .// அதன் பின் நடந்தவற்றை நினைத்துப் பார்த்தால் அவமானம் மட்டுமே மிஞ்சும். சுய நலமாக 90% தவறாக செயல்பட்டிருப்பதும் புரியும்.

Yaathoramani.blogspot.com said...

அமைதிச்சாரல்//

தங்கள் மேலான வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் நன்றி

Yaathoramani.blogspot.com said...

Lakshmi //

தங்கள் மேலான வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸாதிகா//

தங்கள் மேலான வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் நன்றி

Yaathoramani.blogspot.com said...

VELU.G //

தங்கள் மேலான வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் நன்றி

Yaathoramani.blogspot.com said...

தமிழ் உதயம் //

தங்கள் மேலான வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் நன்றி

Yaathoramani.blogspot.com said...

சாகம்பரி //

தங்கள் மேலான வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் நன்றி

Unknown said...

முடிவுத் தேதி முதலில் அறியும் வாய்ப்பு கிடைத்திருப்பின், மானிடம் வாழும் தெய்வமாகியிருக்கும்!

இன்று போலே என்றும் வாழ்வேன்! என்பதே தர்மமானதால், மானிடனாகவும், சிலசமயம் விலங்காகவும் இருக்கிறான்!

சிந்தனையும், படைப்பும் அருமை!

Rathnavel Natarajan said...

விட்டு விலகி விடுதலையாகிப் பார்க்கையில்..
சராசரிப் பார்வையில்
நேராகத் தெரிவனவெல்லாம்
சரியாகப் பார்க்கையில்
தலைகீழாகத்தான் தெரிகின்றன

அருமையான கவிதை. மனசைத் தொடுகிறது ரமணி சார்.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html

Yaathoramani.blogspot.com said...

ரம்மி //

தங்கள் மேலான வரவுக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Rathnavel //

தங்கள் மேலான வரவுக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

ADHI VENKAT said...

”முண்டாசுக் கவி வாக்கின்படி
"சிட்டுக்குருவியைப்போலே
விட்டு விடுதலையாகி .."
விலகி நின்று பார்த்தால்தான்
விளங்காதவை எல்லாம் தெளிவாக
விளங்கத் துவங்குமோ?
புரியாததை எல்லாம் குழப்பமின்றி
புரியத் துவங்குமோ ?”

உண்மையான கருத்துக்கள் சார்.
நல்லதொரு கவிதை.

சக்தி கல்வி மையம் said...

அசத்தல் கவிதை வாழ்த்துக்கள்..

சுதா SJ said...

//மனிதர்களின் பார்வையில்
வௌவால்கள் எல்லாம்
தலைகீழாய் தொங்குதல் போலே
வௌவால்களின் பார்வையில்
மனிதர்கள் எல்லாம்
தலை கீழாய் உலவுதல் போ//

சூப்பர் ரெம்ப ரசித்த இடம்

சுதா SJ said...

பாஸ் உங்கள் கவிதைகள் எல்லாம்
வாழ்க்கையின் வழிகாட்டல்கள் போலவே இருக்கு
உங்கள் கவிதைகள் எல்லாமே தரமானவைதான்

Yaathoramani.blogspot.com said...

கோவை2தில்லி //

தங்கள் மேலான வரவுக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வேடந்தாங்கல் - கருன் *!

தங்கள் மேலான வரவுக்கு
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் //

தங்கள் வரவுக்கும் விரிவான பின்னூட்டம்
மற்றும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

மனோ சாமிநாதன் said...

"இன்பம் துய்த்தலும்
அதற்கென எங்ஙனமாயினும்
பொருளீட்டத் துடித்தலும்
அறமது குறுக்கிடுமாயின்
அதனை வெட்டிச் சாய்த்து
அரக்கனாய் வாழ்தலே
முறையெனத் தெளிவதைப்
நாளும் பார்க்கையில்.."

மிக அழகான வரிகள்! வழக்கம்போல அருமையானதொரு கவிதை!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//மனிதர்களின் பார்வையில் வௌவால்கள் எல்லாம்
தலைகீழாய் தொங்குதல் போலே; வௌவால்களின் பார்வையில் மனிதர்கள் எல்லாம் தலை கீழாய் உலவுதல் போலே//

எல்லா விஷயங்களுமே சரியோ தவறோ, அவரவர் பார்வையில் தான் உள்ளன என்பதை வெகு அழகாகச் சொன்ன தங்களின் இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தன.

நல்ல கவிதை. நல்ல சொல்லாடல். முழுவதுமே அருமையாக உள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.vgk

G.M Balasubramaniam said...

விட்டு விடுதலையாகிவிலகி நின்று பார்த்தால்தான், விளங்காதவைஎல்லாம் தெளிவாய் விளங்குமோ.?புரியாதவை எல்லாம் குழப்பமின்றிபுரியத் துவங்குமோ.?சந்தேகமே வேண்டாம். கேள்விக்குறி எதற்கு. உணர்ச்சிகளுக்கு சிறிது ஓய்வு கொடுத்துவிட்டு, அறிவு பூர்வமாக விருப்பு வெறுப்பின்றி பார்த்தால் நேராக இருப்பது நேராகவும் தலைகீழாக இருப்பது தலைகீழாகவும் தெளிவாகத் தெரியும். அருமையான பதிவுக்குப் பாராட்டுக்கள்.

Yaathoramani.blogspot.com said...

மனோ சாமிநாதன்//

தங்கள் மேலான வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனம் கனிந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //

தங்கள் மேலான வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனம் கனிந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

தங்கள் மேலான வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனம் கனிந்த நன்றி

Anonymous said...

உங்க கவிதை வந்து கொஞ்ச நாளாயிட்டோன்னு தோணிச்சு...ரமணி சார்..
அழகான கவிதை ...ரசித்தேன்...

Murugeswari Rajavel said...

Superb ரமணி சார்.சினி நொறுக்ஸ் ஏதோ வாசிக்கலாம்.
ரமணி சாரின் கவிதைக்கு இணை இல்லை.மனது தொடும் வரிகள்.

காட்டான் said...

வணக்கமையா நானும் கவனித்து வருகிறேன் உங்கள் கவிதைகள் மனித வாழ்வின் கூறுகளை அழகாக தொட்டுச்செல்கிறது... அதுவும் வொவாள்கள் அருமையான உதாரணம்.. வாழ்த்துக்கள் ஐயா..

காட்டான் குழ போட்டான்..

கவி அழகன் said...

அசத்தல் கவிதை
கருத்தாளம் மிக்க கவிதை
படித்தேன் ரசித்தேன்

வெங்கட் நாகராஜ் said...

”விட்டு விலகிப் பார்த்தால் தான் விளங்காதவை எல்லாம் தெளிவாய் விளங்குமோ”

மிக நல்ல வரிகள். நீண்ட கவிதையை இரண்டு முறை படித்து ருசித்தேன். சொல்லி இருக்கும் கருத்து மிக அருமை....

Yaathoramani.blogspot.com said...

Reverie //

தங்கள் மேலான வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனம் கனிந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Murugeswari Rajavel //


தங்கள் மேலான வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனம் கனிந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

காட்டான்//

தங்கள் மேலான வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனம் கனிந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கவி அழகன் //

தங்கள் மேலான வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனம் கனிந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ்//

தங்கள் மேலான வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனம் கனிந்த நன்றி

மாய உலகம் said...

விட்டு விடுதலையாகி விலகி நின்று பார்க்கையில் விளங்காதவை எல்லாம் தெளிவாக விளங்கத்தொடங்கும் ஆனால் விளங்கியதை விவரிக்க தோனாது, அப்படி விவரிப்பதும் இந்த பாழும் உலகில் வீணே.... பகிர்வுக்கு வாழ்த்துக்கள் சகோதரரே

Yaathoramani.blogspot.com said...

மாய உலகம் //
தங்கள் மேலான வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனம் கனிந்த நன்றி

கீதமஞ்சரி said...

வார்த்தைகளில் வசியப்படுகிறது மனம். வசமான மனத்தில் வளையவருகிறது சுரீரென்று சாட்டை சுழற்றும் கரு. அருமையான கவிதை.

தினேஷ்குமார் said...

அருமையான கவிதை வரிகள் சார்....

Yaathoramani.blogspot.com said...

கீதா

தங்கள் மேலான வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனம் கனிந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தினேஷ்குமார்

தங்கள் மேலான வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் நன்றி

Unknown said...

// மனிதர்களின் பார்வையில்
வௌவால்கள் எல்லாம்
தலைகீழாய் தொங்குதல் போலே
வௌவால்களின் பார்வையில்
மனிதர்கள் எல்லாம்
தலை கீழாய் உலவுதல் போலே//

சகோ
மேற்கண்ட வரிகள் இதுவரை யாரும்
சொல்லாத, உவமை, கற்பனை ஆகும்
வரவர தத்துவக் கவிஞர் என பாராட்டும்
அளவிற்கு உயர்ந்து விட்டீர்
வாழ்க! வளர்க!

புலவர் சா இராமாநுசம்

கதம்ப உணர்வுகள் said...

பயங்கரமா யோசிக்கிறீங்க ரமணி சார்....

மனிதர்களின் செயல்களில் நல்லவை உண்டா இல்லையான்னு எப்படி அறிந்துக்கொள்வது?

பொருள் ஈட்டுவதில் தப்பில்லை ஆனால் அதை நேர்வழியில் தான் ஈட்டினோமா என்றால் கூனிக்குறுகி தலை குனியும் நிலை அரசியல்வாதிகளுக்கு தான் முதலில்...ஊழல் செய்தாவது எதைப்பிடித்தாவது எவனையாவது கொளுத்தியாவது பதவியை தக்கவைத்துக்கொள்ளும் போராட்டம் நினைவுக்கு வருகிறது உங்கள் கவிதை வரிகளை படிக்கும்போது....

ஒரு தாயாக தன் குழந்தையை பார்க்கும்போது தன் குழந்தையின் செயல்கள் கண்டிப்பாக தவறு தெரிவதில்லை... அதே குழந்தை மணம் புரிந்து கணவன் வீட்டுக்கு போகும்போது தன் குழந்தையால் புகுந்த வீட்டிற்கு நல்லப்பெயர் வரவேண்டுமே என்று பாடுபடத்தோன்றும் நல்லவைகளை பார்த்து பார்த்து தன் குழந்தைக்கு புத்திமதி சொல்லத்தோணும்...

யாருடைய செயல்களும் சராசரியாக பார்க்கும்போது ஒரு மாதிரி தெரிவதும்....அதே தன்னில் இருந்து விலகி யாரோவாக நின்று பார்க்கும்போது கண்டிப்பா புலப்படாத எத்தனையோ விஷயங்கள் புரியவரும்னு யோசிச்சு வரிகள் அமைத்தது மிக சிறப்பு ரமணி சார்....

மனிதனின் கண்ணுக்கு வௌவால்கள் தலைக்கீழாய் தெரிவது போல வௌவால்களின் கண்ணுக்கு மனிதன் தலைக்கீழாய்.... அழகிய உவமானம் இது....

நல்லவழியில் பொருள் ஈட்டவேண்டும்... அப்ப தான் அதை தான தர்மம் செய்யவும் நல்ல வழியில் நேர்மையாக செலவு செய்யும்போதும் ஒரு மனதிருப்தி ஏற்படும்...

அதே தீய வழியில் ஈட்டிய பொருள்களானால் அது போனாலும் திருடனுக்கு தேள் கொட்டிய நிலையாகிவிடும் சொல்லவும் முடியாது வெளியே...

சிந்தனையின் வேர்கள் எங்கிருந்து உதயமாகின்றன?
நாட்டின் நடப்பா? தினப்படி காணும் நிகழ்வா? ஆனால் ஏதோ ஒன்று அழுத்தமாய் மனதில் தங்கிவிட்டது... அதனால் தான் இப்படி ஒரு கவிதை சிறப்பாக தரமுடிந்திருக்கிறது உங்களால்....

தவங்கள் பல இயற்றும் முனிவர்கள் சித்தர்கள் உணவின்றி நீரின்றி வாழமுடிந்தது சுவாசமும் கட்டுப்படுத்தி கட்டுக்குள் வைத்திருக்க முடிந்தது....

சராசரி மனிதனால் உணவு நீர் சுவாசம் லஞ்சம் ஊழல் இது எதுவுமே இல்லாமல் வாழமுடியாது என்று நறுக்கு தெறித்தாற்போல் சிறப்பாக சொல்லி விட்டீர்கள் ரமணி சார்...

என்னை அதிகம் சிந்திக்கவைத்தது பலமுறை கவிதை வரிகளை வாசிக்கவைத்தது, நல்லாத்மாக்கள் உலவும் அன்பு உலகை காணமுடியுமா என்று யாசிக்கவும் வைக்கிறது....அழகிய சிந்தனை.... அன்பு வாழ்த்துகள் ரமணி சார்....

RVS said...

அசத்தல் ரகம் தலைவரே!
விட்டு விடுதலையாகி என்று ஆரம்பித்து தமிழ் ராட்ஷசன் பாரதியின் சிட்டுக் குருவியைப் போலேவை வைத்து முடித்து அசத்திவிட்டீர்கள்.

இரண்டு முறை படித்தேன்! தேன்..தேன்... :-)

Yaathoramani.blogspot.com said...

எழுதுவது தருகிற சுகத்தைவிட
மிகச் சரியாக என்னுடைய எண்ணங்களைப்
புரிந்து கொண்டு பின்னூட்டம் இடுகிற
தங்களைப் போன்றவர்களின்
பாராட்டுதல்கள்தான் என்னைத் தொடர்ந்து
எழுதத் தூண்டுவது மட்டுமல்லாது
வித்தியாசமாகவும் பயனுள்ள பதிவாகவும்
தரச் செய்கிறது
தங்கள் மேலான வரவுக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
என் மனமார்ந்த நன்றி
மஞ்சுபாஷிணி

Yaathoramani.blogspot.com said...

.புலவர் சா இராமாநுசம் //
சகோ
மேற்கண்ட வரிகள் இதுவரை யாரும்
சொல்லாத, உவமை, கற்பனை ஆகும்
வரவர தத்துவக் கவிஞர் என பாராட்டும்
அளவிற்கு உயர்ந்து விட்டீர்
வாழ்க! வளர்க!



தங்கள் மேலான வரவுக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
என் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

RVS
இரண்டு முறை படித்தேன்! தேன்..தேன்... :-

தங்கள் மேலான வரவுக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
என் மனமார்ந்த நன்றி

Anonymous said...

''...இக்கணம் ஒன்றே சாசுவதம் எனத்
தெளிவாகத் தெரிந்திருந்தும்
நேற்றைய கவலைகளில்
நாளைய கனவுகளில்
வாழ் நாளையெல்லாம்
பாழாக்கித் தொலைத்துவிட்டு
"எண்ணங்களால் இமயத்தை
அசைத்து மகிழ்ந்து
செயலால் துரும்பசைக்காது"
வாய்ச் சொல் வீரர்களாய்..''
த்தானே பலர் வாழ்வு. மிக வித்தியாசமாக கவிதைக் கட்டுரையாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துகள் பணி தொடரட்டும்.
வேதா. இலங்காதிலகம்.

Yaathoramani.blogspot.com said...

kovaikkavi //

தங்கள் வரவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

மாலதி said...

அறத்தை மூலதனமாக்கி
பொருளீட்டலும்
அங்ஙனம் ஈட்டிய பொருள்கொண்டு
இன்பம் அனுபவித்தலே
அறவழி என வாழ்தலை விடுத்து//

உங்களின் எழுத்துகள் நாளும் மெருகேறி வருகிறது இந்த குமுகத்தின் சிக்கல் களை மக்களுக்கு படம் பிடிப்பதில் தேர்ந்து நிற்கிறீர் உளம் கனிந்த பாராட்டுகள் தொடர்க ........

இராஜராஜேஸ்வரி said...

"சிட்டுக்குருவியைப்போலே
விட்டு விடுதலையாகி .."//

எத்தனை அருமையான வரிகள்!
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

Yaathoramani.blogspot.com said...

மாலதி //.

தங்கள் வரவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

இராஜராஜேஸ்வரி //

தங்கள் மேலான வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனம் கனிந்த நன்றி

அம்பாளடியாள் said...

தொட்டு தொடர்ந்து தொடர்கதைகளாகி
வாழ்வென ஆகிப்போனவைகளையெல்லாம்
விட்டு விலகி விடுதலையாகிப் பார்க்கையில்..
சராசரிப் பார்வையில்
நேராகத் தெரிவனவெல்லாம்
சரியாகப் பார்க்கையில்
தலைகீழாகத்தான் தெரிகின்றன

வாழ்க்கையின் உண்மைச் சூழலை
மிக அழகாகவும் பொறுப்புடனும் உணர்ந்து
அரியதோர் நல் அறிவுரைகளையும் கலந்து
சிறப்பாக எழுதப்பட்ட கவிதை வரிகள் அருமை!...
மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .முடிந்தால் என்
கவிதைகளையும் ,இன்றைய நகைச்சுவையையும்
கண்டு உங்கள் கருத்தினைத் தாருங்கள்

RAMA RAVI (RAMVI) said...

//இக்கணம் ஒன்றே சாசுவதம் எனத்
தெளிவாகத் தெரிந்திருந்தும்
நேற்றைய கவலைகளில்
நாளைய கனவுகளில்
வாழ் நாளையெல்லாம்
பாழாக்கித் தொலைத்துவிட்டு//

அருமையாக உள்ளது இந்த வரிகள்.
சிந்திக்க வேண்டிய விஷயம். அழகாக கவிதையாக எழுதியுள்ளீர்கள்.

வணக்கம் ரமணி.
சில வாரங்களாக உங்க பதிவுகளை படித்து வருகிறேன். இன்றுதான் கருத்து சொல்லுகிறேன்.நன்றி.

Yaathoramani.blogspot.com said...

அம்பாளடியாள்//

தங்கள் மேலான வரவுக்கும்
விரிவான பின்னூட்டத்தற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

RAMVI //

தங்கள் மேலான வரவுக்கும்
விரிவான பின்னூட்டத்தற்கும்
மனமார்ந்த நன்றி

M.R said...

ஆம் நண்பரே ஆம் ,எதையும் விழகி நின்று தான் பார்க்க வேண்டி உள்ளது. பணம் சம்பாதிக்க குணம் இலக்கும் சமுதாயம் தான் இது.எல்லோரையும் சொல்லவில்லை. கண்களை விற்று ஓவியம் வாங்கி,கைகளை விற்று தூரிகை வாங்கி என்ன பயன் .இருந்தாலும் இதுதானே இப்பொழுது நடைமுறையில் இருக்கிறது. உள்ளத்தின் வேதனைகள் அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.நன்றி நண்பரே

Yaathoramani.blogspot.com said...

M.R //

தங்கள் மேலான வரவுக்கும்
விரிவான பின்னூட்டத்தற்கும்
மனமார்ந்த நன்றி

அப்பாதுரை said...

பலமுறை படித்துவிட்டேன் ரமணி. 'இனம் புரியாத வலியின் வெளிப்பாட்டைத் தொடர்ந்த இனம் புரியாத வலி' என்று வட்டமாக ஏதோ தோன்றுகிறதே தவிர இன்னதென்று சொல்லத் தெரியவில்லை. வௌவால் பார்வைக்குப் புதுக் காட்சியா? நன்று.

மஞ்சுபாஷிணியின் விரிவான கருத்தும் நன்று.

Yaathoramani.blogspot.com said...

அப்பாதுரை//

தங்கள் மேலான வரவுக்கும்
விரிவான பின்னூட்டத்தற்கும்
மனமார்ந்த நன்றி

Unknown said...

அழகான கவிதை!

Yaathoramani.blogspot.com said...

விக்கியுலகம் //

தங்கள் மேலான வரவுக்கும்
விரிவான பின்னூட்டத்தற்கும்
மனமார்ந்த நன்றி

raji said...

விலகி நின்று பார்க்கும் பக்குவம் வாழ்வில் வந்து விட்டால் வேறென்ன வேண்டும்?
நல்ல சிந்தனையைத் தூண்டும் பதிவு.பகிர்விற்கு நன்றி

Yaathoramani.blogspot.com said...

raji

தங்கள் மேலான வரவுக்கும்
ன பின்னூட்டத்தற்கும்
மனமார்ந்த நன்றி

Post a Comment