Wednesday, August 31, 2011

கணபதி துதி


கணபதி திருவடி
அனுதினம் அடிபணி
துயரது இனிஇல்லை-இனி
இன்பமே எனஅறி

கஜமுகன் திருமுகம்
கண்டுகளி தினமினி
நிஜமென மருவிடும்-உடன்
வருகிற கனவினி

பரமனின் முதல்மகன்
அடியினை உடன்பணி
பயமது அடங்கிடும்-உடன்
தொடர்ந்திடும் ஜெயமினி

உமையவள் திருமகன்
புகழ்மொழி தினம்படி
நிலைபெறும் நிம்மதி-இனி
நிலைத்திடும் என்றறி

சரவணன் மனம் கவர்
கரிமுகன் பதம்பணி
குறையினி என்றுமில்லை-இனி
நிறைவுதான் எனத்தெளி

71 comments:

M.R said...

ஆஹா வினாயகர் சதுர்த்தி அதுவுமாக கணபதி துதி தந்துள்ளீர்கள். வினாயகர் அருள் கிட்டும் அனைவருக்கும். பகிர்வுக்கு நன்றி நண்பரே

M.R said...

tamil manam 1

வை.கோபாலகிருஷ்ணன் said...

கணபதி பற்றிய கவிதை அருமை.
இனிய “பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்”

தமிழ்மணம் : 2 vgk

மாய உலகம் said...

கணபதி துதி - சொல்வோம் வாழ்வில் வளம்பெருவோம்... பகிர்வுக்கு நன்றி சகோதரரே!

தமிழ் மணம் 4

ராமலக்ஷ்மி said...

அனைவரும் நலமே வாழ கணபதியைத் துதிப்போம்.

வாழ்த்துக்கள்!

முனைவர் இரா.குணசீலன் said...

நமக்கும் மேலே ஒரு சக்தி இருக்கிறது என்ற எண்ணம் நம் அகம்பாவத்தை அழிக்கும் மிகப் பெரிய ஆயுதம்!!

Yaathoramani.blogspot.com said...

M.R


தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
வாக்களித்தமைக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //


தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
வாக்குக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மாய உலகம் .

தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
வாக்குக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ராமலக்ஷ்மி

தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
வாக்குக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

முனைவர்.இரா.குணசீலன் //


தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
வாக்களித்தமைக்கும் மனமார்ந்த நன்றி

Unknown said...

வாழ்க கணபதி
வரம்பெற இரமணி
சூழ்க நலமே
சோதனை இலமே
புலவர் சா இராமாநுசம்

Anonymous said...

கணபதி துதி
கவிதை அருமை...
இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்...

Prabu Krishna said...

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...

ஜோதிஜி said...

நமக்கும் மேலே ஒரு சக்தி இருக்கிறது என்ற எண்ணம் நம் அகம்பாவத்தை அழிக்கும் மிகப் பெரிய ஆயுதம்!!


மிகச்சரியானது. ஆனால் இதை சமீப காலமாக எத்தனை பேர்கள் உண்மையாக புரிந்துள்ளார்கள் என்பதே கேள்விக்குறி?

Rathnavel Natarajan said...

மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
நல்ல கவிதை.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
மிக்க நன்றி.

G.M Balasubramaniam said...

I am away from home. vaazththukkal.

குறையொன்றுமில்லை. said...

பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

Madhavan Srinivasagopalan said...

பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

ராஜி said...

பிள்ளையார் பண்டிகை அதுவுமாக, ஐயனை துதிக்க ஒரு நல்ல பாடலை தந்தமைக்கு நன்ரி ஐயா! வினாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் ஐயா! தாங்களும், தங்கள் குடும்பத்தினரும் எல்லா வளங்களையும் பெற்று வாழ இறைவனை இத்திருனாளில் பிரார்த்திக்கின்றேன்.

வெங்கட் நாகராஜ் said...

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.... தினத்திற்கு ஏற்ற நல்ல கவிதை...

தமிழ் உதயம் said...

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...

தனிமரம் said...

முந்திக்கணபதியின் துதி நல்லா இருக்கின்றது கடவுளை மறக்கவில்லை உங்கள் பதிவு!

சுதா SJ said...

கணபதி துதி நன்று பாஸ்

Yaathoramani.blogspot.com said...

புலவர் சா இராமாநுசம்

தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
வாக்களித்தமைக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ரெவெரி //

தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
வாக்களித்தமைக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Prabu Krishna (பலே பிரபு)//

தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
வாக்களித்தமைக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

JOTHIG ஜோதிஜி //

தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
வாக்களித்தமைக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam

தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
வாக்களித்தமைக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Lakshmi

தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
வாக்குக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Madhavan Srinivasagopalan //

தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
வாக்குக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ராஜி //

தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
வாக்குக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ்

தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
வாக்களித்தமைக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தமிழ் உதயம்//

தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
வாக்களித்தமைக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

துஷ்யந்தன்

தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
வாக்களித்தமைக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Nesan
தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
வாக்களித்தமைக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Rathnavel //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் முக நூலில்
பகிர்ந்தமைக்கும் வாக்க்ளித்தமைக்கும்
மனமார்ந்த நன்றி

RAMA RAVI (RAMVI) said...

கணபதி துதி அருமை.
பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

Yaathoramani.blogspot.com said...

RAMVI //
தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

கவி அழகன் said...

விநாயகர் சதூர்த்தி வாழ்த்துக்கள்.

Yaathoramani.blogspot.com said...

கவி அழகன் //

தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Anonymous said...

உங்களுக்கும் விநாயகர்சதுர்த்தி வாழ்த்துகள்

குமரி எஸ். நீலகண்டன் said...

நல்லதோர் வாழ்த்துடன் நன்மை தரும் விநாயகர் சதுர்த்தி... உங்களுக்கும் வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

கந்தசாமி//.

தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

குமரி எஸ். நீலகண்டன்//

தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

இராஜராஜேஸ்வரி said...

குறையினி என்றுமில்லை-இனி
நிறைவுதான் எனத்தெளி/

தெளிவான அருமையான கணபதிதுதி பகிர்வுக்குப் பாராட்டுகள்.

Yaathoramani.blogspot.com said...

இராஜராஜேஸ்வரி

தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

ADMIN said...

அழகு..! பக்தி மிக்க பாடலை எளிய தமிழில் கொடுத்தமைக்கு ஆயிரம் கோடி நன்றிகள்!

ADMIN said...

இங்கே ஒரு தன்னம்பிக்கை கவிதை ஒன்று.. படித்துப் பார்த்து தாங்கள் எப்படி இருக்கிறது என்று சொல்ல வேண்டும்..!

இனி தடைகள் இல்லை உனக்கு!

ADMIN said...

எனக்கு மிகவும் பிடித்திருப்பதால் தங்களின் தளத்தில் Follower-ஆகவும் இணைந்துவிட்டேன்..

Unknown said...

ஒபனரைப்பற்றி அழகா சொல்லி இருக்கீங்க அண்ணே நன்றி! Opener - முதல் கடவுள் அல்லவா அதான் சொன்னேன்!

Yaathoramani.blogspot.com said...

தங்கம்பழனி //

தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

விக்கியுலகம்//

தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

கதம்ப உணர்வுகள் said...

அருமையான வரிகளால் எங்க செல்லக்குட்டி வினாயகருக்கு துதி பாடியது மிக மிக சிறப்பு ரமணி சார்....

அன்பு பாக்களால் வினாயகருக்கு ஒரு பாமாலை சூட்டி இருக்கீங்க. அசத்தல்....

மனதில் ஒரு காரியம் நினைத்து செயல்படுத்துமுன் வினாயகரை மனதில் துதித்துவிட்டு ஆரம்பித்தால் வெற்றி கிட்டும் என்பது உறுதி....

சின்னப்பிள்ளையில் எனக்கு கீர்த்தி வினாயகரை தவிர வேறு தோழமை இல்லை... அபிஷேகமும் பூஜையும் பேச்சும் அமோகமாக நடக்கும்... எதிர் நின்று பார்ப்போருக்கு பைத்தியம் போன்று தெரியும் என் பேச்சும் செயலும்... ஆனால் மனம் ஒன்றி செய்யும் பூஜை தான் இறைவனை நாம் அடையும் வழி....

இன்றும் என் கைப்பிடித்து வழி நடத்தி செல்வது கீர்த்தி வினாயகர் தான்...

இப்ப வினாயகர் சதுர்த்திக்கு ஜம்முனு ஜோரா சண்டிகர்ல இருந்து வந்திருக்கார் பிள்ளையார் எங்க வீட்டு பூஜை அறைக்கு.... என் தோழி கொண்டு வந்து கொடுத்தார்....சஹஸ்ரநாம அர்ச்சனையில் ஒரே குதூகலம் தான் வினாயகருக்கு....

மனம் நிறைந்த வினாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் ரமணி சார்....

அருமையான கவிதை எங்க வினாயகருக்காக வரைந்த வரிகள் மிகமிக சிறப்பு ரமணி சார் அன்பு வாழ்த்துகள்....

கதம்ப உணர்வுகள் said...

ஓம் ஹேரம்பாய மதமோதித மமசங்கட நிவாராய ஸ்வாஹா:

ஸ்ரீ கணநாதனே நமோ நமோ
ஜெய கணநாதனே நமோ நமோ
சங்கரன் புதல்வா நமோ நமோ
சரணம் ஐங்கரனே நமோ நமோ

மூல முதல்வனே நமோ நமோ
மோதக ப்ரியனே நமோ நமோ
கரிமுகத்தழகனே நமோ நமோ
கருணாகரனே நமோ நமோ

---------------------

கஜானனா ஹே ஷுபானனா
கௌரி மனோகர ப்ரிய நந்தனா
பஷுப திதனய்யா இபானனா
ஹே பரம நிரஞ்சன ஷுபானனா....

----------------------

Yaathoramani.blogspot.com said...

அன்பு சுபாஷிணிக்கு
வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
இந்தப் பாடலில் மொத்தம் 45 வார்த்தைகளைப்
பயன்படுத்தி இருக்கிறேன்
ஒரே ஒரு நெடில் எழுத்து தவிர
எல்லாமே குறில் எழுத்துக்கள்தான்
ஒரே ஒரு நேரசையைத் தவிர மற்ற
எல்லாமே நிரையசையே
கணபதி துதி ஒன்று எழுதச் சொல்லி
என் மனைவி சொன்னார்கள்
கணபதி துதி என்கிற சொல்லே
நிரையசையாக இருந்ததால் அப்படியே
எழுதலாமே என இதைச் செய்திருக்கிறேன்
யாரும் இதைக் குறிப்பிட்டு பின்னூட்டமிடுவார்களா
எனப் பார்த்திருந்தேன்
யாரும் சொல்லாததால் நானே சொல்லும்படியானது
மீண்டும் தங்கள் மேலான வரவுக்கும் விரிவான
பின்னூட்டத்த்ற்கும் வாழ்த்துக்கும் நன்றி கூறி..

Kavinaya said...

கணபதி துதி அழகா இருக்கு. நான் சொல்லணும்னு வந்ததையெல்லாம், அதுக்குள்ள நீங்களே சொல்லீட்டீங்க.. ஹி..ஹி.. :)

Yaathoramani.blogspot.com said...

கவிநயா//

தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

கதம்ப உணர்வுகள் said...

ரமணி சார் ஒரு ரகசியம் சொல்றேன் கேளுங்க...

எனக்கு இலக்கணம் வெண்பா ஹுஹும் தெரியாதே....

அதனால் தான் நீங்க சொன்ன விவரங்கள் படித்தப்ப விழி பிதுங்கி முழிக்கிறேன் திரு திருன்னு.....

இதே கலை இதை பார்த்திருந்தால் கண்டிப்பா கண்டுப்பிடிச்சிருப்பார் ரமணி சார்....

ஞானசூனியம் மஞ்சு ஞானசூனியம் தமிழ் இலக்கணம் தெரியாத ஞானசூனியம்...

கரெக்ட் இப்ப தான் படிச்சு பார்த்தேன்... (தான் = நேரசை) என்ற ஒரு நெடில் - தவிர மீதி எல்லாமே குறில் நிரையசை தான்....

அருமையான முயற்சி ரமணி சார்.... நான் தான் கோட்டை விட்டுட்டேன்...

உங்க படைப்புகளில் எப்பவும் எதுனா விஷயம் இருக்கும்.... இதுல அப்படி ஒன்னும் விஷேஷமா காணலையேன்னு நினைச்சேன்....

இப்ப நீங்க சொன்னபின் தான் தெரிஞ்சுது....மிக அருமையான முயற்சி ரமணி சார்....

மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் ரமணி சார்....

Yaathoramani.blogspot.com said...
This comment has been removed by the author.
Yaathoramani.blogspot.com said...

மஞ்சுபாஷிணி//

வரவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Anonymous said...

என்ன இது பிள்ளையார் பாடல் ஆன்மிகத்தில் இறங்கியாச்சோ! என்று நினைத்தேன்! ஓ!...விநாயகர் சதுர்த்தி!.....மகிழ்ச்சி. நல்லது. நல்ல வரிகள். பாராட்டுகள்.

மாலதி said...

சரவணன் மனம் கவர்
கரிமுகன் பதம்பணி
குறையினி என்றுமில்லை-இனி
நிறைவுதான் எனத்தெளி//
நல்ல நயத்தோடு ஆக்கம் நிறைவு செய்து இருக்கிறீர்கள் நாளுக்கேற்ற நல்ல ஆக்கம் நான்தான் தாமதம் பாராட்டுகள்.

Yaathoramani.blogspot.com said...

kovaikkavi //

தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மாலதி

தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

முனைவர் இரா.குணசீலன் said...

தொடர்ந்து என் வலையில் இலக்கியத் தேன் பருகியமைக்காக உங்களுக்கு “இலக்கியத் தேனீ“ என்னும் விருது வழங்கி மகிழ்கிறேன்..

http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_04.html

நன்றி.

ரிஷபன் said...

படிக்கும்போதே மனசுக்குள் ஒரு உற்சாகம்.. அழகான வரிகள்.

Yaathoramani.blogspot.com said...

முனைவர்.இரா.குணசீலன்//

இலக்கிய வித்தகர் மூலம் விருதுபெறுவதை
நான் கிடைத்தற்கரிய பெரும் பேறாகக் கருதுகிறேன்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ரிஷபன் //

தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Anonymous said...

வள்ளியை மணம் புரிய உதவியதால் சரவணன்
மனம் கவர்ந்த கணபதி .... உங்களின் அவர் துதி
எங்களின் மனம் கவருகிறது.

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரவாணி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Post a Comment