Thursday, November 17, 2011

ஜென் சித்தப்பு


"எட்டு எட்டா உலக வாழ்வைப் பிரிச்சுக்கோ "
கத்திக்கொண்டிருந்த ரேடியோவின்
கழுத்தைத் திருகி நிறுத்தினான சித்தப்பு

"எட்டு எட்டெல்லாம் ரொம்ப நெருக்கம்
இருபது இருபதாய்ப் பிரிப்பதே ரொம்பச் சரி " என்றார்
எப்போதும் தாடி மீசையுடன்
யோசித்தபடி இருப்பதாலோ
இப்படி ஏடா கூடமாகப் பேசுவதாலோ
"ஜென் "னென்றே கிண்டலடிக்கப் படும்
என் ஒன்றுவிட்ட சித்தப்பா

"எப்படி "என்றேன் வியந்தபடி

"முதல் இருபதில் பயிற்சி
இரண்டாம் இருபதில் முயற்சி
மூன்றாம் இருபதில் வளர்ச்சி
நாலாம் இருபதில் முதிர்ச்சி
இப்படி இருக்கப் பழகினால்
வாழ்வில் என்றுமே மகிழ்ச்சி " என்றார்

"ஆஹா எளிதாய் இருக்கிறதே "என்றேன்

"இல்லையில்லை
கேட்கத்தான் எளிதாய் இருக்கும்
எதுவும் நம் கையில் இருக்காது
முதல் இருபதை சூழல் தீர்மானிக்கும்
இரண்டாம் இருபதை சோம்பல் நிர்மானிக்கும்
மூன்றாம் இருபதை காமம் கெடுக்கும்
நாலாம் இருபதை ஆசை தடுக்கும் "என்றார்

"அதை சரி செய்ய
என்ன செய்யலாம் "என்றேன்

"முதல் இருபதில் நிதானமும்
இரண்டாம் இருபதில் வேகமும்
மூன்றாம் இருபதில் சம நிலையும்
நாலாம் இருபதில் சவ நிலையும் பழகினால்
உனக்கது ஒருவேளை உதவலாம் "என்றார்

கொஞ்சம் புரிந்த மாதிரி இருந்தது

"இதை அடைய என்ன பயிற்சி செய்யலாம்
எப்படி முயற்சி எடுக்கலாம் "என்றேன்

"உடல் இருக்குமிடத்திலேயே மனத்தையும்
மனம் இருக்கும் இடத்திலேயே உடலையையும்
வைக்கப் பழகினால் போதும்
வேறெதுவும் வேண்டவே வேண்டாம் "என்றார்

 "இதற்கும் ஜென் தியரிக்கும்
ஏதேனும் சம்பந்தம் உண்டா? "என்றேன்

நான் உளறுவதாக நினைத்தாரோ
கிண்டலடிப்பதாக நினைத்தாரோ தெரியவில்லை
அவர் பதிலேதும் சொல்லவில்லை
"எனக்கு இப்போது பசிக்கிறது
சாப்பிடுவோமா ? "என்றார் சிரித்தபடி

79 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

Advocate P.R.Jayarajan said...

//"இல்லையில்லை
கேட்கத்தான் எளிதாய் இருக்கும்
எதுவும் நம் கையில் இருக்காது
முதல் இருபதை சூழல் தீர்மானிக்கும்
இரண்டாம் இருபதை சோம்பல் நிர்மானிக்கும்
மூன்றாம் இருபதை காமம் கெடுக்கும்
நாலாம் இருபதை ஆசை தடுக்கும் "என்றார்

"அதை சரி செய்ய
என்ன செய்யலாம் "என்றேன்

"முதல் இருபதில் நிதானமும்
இரண்டாம் இருபதில் வேகமும்
மூன்றாம் இருபதில் சம நிலையும்
நாலாம் இருபதில் சவ நிலையும் பழகினால்
உனக்கது ஒருவேளை உதவலாம் "என்றார்

கொஞ்சம் புரிந்த மாதிரி இருந்தது//

புரிகிறது...

நல்ல பதிவு..

வாழ்த்துகள்..

அப்பாதுரை said...

எளிமையான letter, சூட்சும envelope.
(ஐந்தாம் இருபது காணும் நாள் இதோ வந்துவிட்டது.. அதற்கு ஏதாவது ஜென் பார்க்க வேண்டும்)

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

//உடல் இருக்குமிடத்திலேயே மனத்தையும்
மனம் இருக்கும் இடத்திலேயே உடலையையும்
வைக்கப் பழகினால் போதும்//

சூட்சுமம் அதுதான்.

//இதற்கும் ஜென் தியரிக்கும்
ஏதேனும் சம்பந்தம் உண்டா? "என்றேன்.

எனக்கு இப்போது பசிக்கிறது
சாப்பிடுவோமா ? "என்றார் சிரித்தபடி.//

நிஜமாகவே ஜென் சித்தப்புதான். அற்புதமான இடுகை ரமணியண்ணா.

Avargal Unmaigal said...

உங்கள் பதிவை படித்த பின் எனக்கு முதல் இருபதில் இருந்து வாழ்க்கையை மறுபடியும் தொடங்க ஆசை . முடியுமா கொஞ்சம் ஐடியா தருங்களேன்.
நல்ல பதிவு, வாழ்த்துக்கள்

தமிழ் உதயம் said...

சிந்திக்க செய்த பதிவு. முதல் இருபது சரியாக வந்தால் பிற இருபதுகள் சரியாகவே அமையுமோ.

ஸாதிகா said...

முதல் இருபதில் பயிற்சி
இரண்டாம் இருபதில் முயற்சி
மூன்றாம் இருபதில் வளர்ச்சி
நாலாம் இருபதில் முதிர்ச்சி
இப்படி இருக்கப் பழகினால்
வாழ்வில் என்றுமே மகிழ்ச்சி

முதல் இருபதை சூழல் தீர்மானிக்கும்
இரண்டாம் இருபதை சோம்பல் நிர்மானிக்கும்
மூன்றாம் இருபதை காமம் கெடுக்கும்
நாலாம் இருபதை ஆசை தடுக்கும்

முதல் இருபதில் நிதானமும்
இரண்டாம் இருபதில் வேகமும்
மூன்றாம் இருபதில் சம நிலையும்
நாலாம் இருபதில் சவ நிலையும் பழகினால்
உனக்கது ஒருவேளை உதவலாம்

உடல் இருக்குமிடத்திலேயே மனத்தையும்
மனம் இருக்கும் இடத்திலேயே உடலையையும்
வைக்கப் பழகினால் போதும்
வேறெதுவும் வேண்டவே வேண்டாம்

அடடடடா..பொன்னெழுத்தில் பொறித்து பாதுக்காக்கபடவேண்டிய வார்த்தைகள்.மிகவும் அருமை சார்.

SURYAJEEVA said...

முதல் இருபதில் சூழல் நிர்மாணிக்கும்... அங்கேயே முடிஞ்சுடுச்சு.. அதுக்கப் புறம் வேற பேச்சுக்கே இடமில்லை... தோழர், செம பதிவு...

Unknown said...

கலக்கல் பதிவு சார்.. ரொம்ப எளிமையா பெரிய விஷயம் சொல்லி இருக்கீங்க

K.s.s.Rajh said...

////முதல் இருபதில் பயிற்சி
இரண்டாம் இருபதில் முயற்சி
மூன்றாம் இருபதில் வளர்ச்சி
நாலாம் இருபதில் முதிர்ச்சி
இப்படி இருக்கப் பழகினால்
வாழ்வில் என்றுமே மகிழ்ச்சி " என்றார்////

பாஸ் அருமை அருமை

ஹ ர ணி said...

"முதல் இருபதில் பயிற்சி
இரண்டாம் இருபதில் முயற்சி
மூன்றாம் இருபதில் வளர்ச்சி
நாலாம் இருபதில் முதிர்ச்சி
இப்படி இருக்கப் பழகினால்
வாழ்வில் என்றுமே மகிழ்ச்சி "

00000

முதல் இருபதை சூழல் தீர்மானிக்கும்
இரண்டாம் இருபதை சோம்பல் நிர்மானிக்கும்
மூன்றாம் இருபதை காமம் கெடுக்கும்
நாலாம் இருபதை ஆசை தடுக்கும் "

00000

Excellent words sir. mantiram pool irukkirathu.

"முதல் இருபதில் நிதானமும்
இரண்டாம் இருபதில் வேகமும்
மூன்றாம் இருபதில் சம நிலையும்
நாலாம் இருபதில் சவ நிலையும் பழகினால்
உனக்கது ஒருவேளை உதவலாம்

00000

குறையொன்றுமில்லை. said...

"உடல் இருக்குமிடத்திலேயே மனத்தையும்
மனம் இருக்கும் இடத்திலேயே உடலையையும்
வைக்கப் பழகினால் போதும்
வேறெதுவும் வேண்டவே வேண்டாம் "என்றார்

சரியாதானே சொல்லி இருக்காங்க.

அம்பாளடியாள் said...

"முதல் இருபதில் நிதானமும்
இரண்டாம் இருபதில் வேகமும்
மூன்றாம் இருபதில் சம நிலையும்
நாலாம் இருபதில் சவ நிலையும் பழகினால்
உனக்கது ஒருவேளை உதவலாம் "என்றார்

அப்படியா விசயம் தெரிந்துகொண்டது நல்லதாப் போச்சு .அருமை!.....மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .அப்போ அவங்கள என்ன செய்யலாம்!..என் தளத்தில உள்ள கேள்விக்குறி.உங்கள் பதிலையும் கொடுங்கள் ஐயா .

அம்பாளடியாள் said...

தமிழ்மணம் 6

Yaathoramani.blogspot.com said...

சுந்தர்ஜி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Advocate P.R.Jayarajan //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஹ ர ணி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

நண்டு @நொரண்டு -ஈரோடு

தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அப்பாதுரை //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தமிழ் உதயம் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

suryajeeva //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸாதிகா //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஜ.ரா.ரமேஷ் பாபு //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அம்பாளடியாள் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Lakshmi //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

சத்ரியன் said...

உண்மை தான் ரமனி ஐயா,

உடலையும்,மனதையும் ஒரே புள்ளியில் வைத்திருப்பதில் ”இருபதுகள் இருப்பது” உண்மைதான்!

ஆகச் சிறந்த பதிவு.

Yaathoramani.blogspot.com said...

சத்ரியன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

raji said...

உங்களால மட்டும் எப்பிடி விஷயங்களை இப்பிடி வித்தியாசமான கோணத்தில் பாக்க முடியுது சார்!


//"உடல் இருக்குமிடத்திலேயே மனத்தையும்
மனம் இருக்கும் இடத்திலேயே உடலையையும்
வைக்கப் பழகினால் போதும்
வேறெதுவும் வேண்டவே வேண்டாம் "என்றார்//

வித்தியாசமான கோணத்தில் பார்க்கறதோட இல்லாம அதைப் பத்தி சிந்திச்சு அதுக்கு தீர்வும் தரமுடியுதே!

பகிர்விற்கு நன்றி சார்!

Unknown said...

வைரமுத்துக்கு போட்டி வந்தாச்சு! நல்ல பதிவு! தம 7

மகேந்திரன் said...

இருபதா பிரிச்சு ரொம்ப நீளமாக்கி
அதற்கு தடை எதனால் வரும் எனக்கூறி அதற்கான
வடிகாலும் சொல்லி
சும்மா அசத்திட்டேங்க நண்பரே...
முதல் இருபதை சூழல் தீர்மானிக்கும் என்று சொல்கையில்
கொஞ்சம் பக்குன்னு தான் இருக்கு, இன்றைக்கு இருக்கும் சூழல் தான்
நமக்கு நன்றாக தெரியுமே...
அடுத்த இருபதை சோம்பல் தீர்மானிக்கும்,
சூழலில் கண்டவற்றை தன்னகத்தே நல்லவைகளையும் தேவையானவைகளையும் கட்டுப்படுத்திக் கொள்ள மிகவும் கடினமாக உழைத்தாக வேண்டும் அதில் சோம்பல் நுழைந்துவிட்டால் அடுத்த இருபதும் அம்பேல்...
அருமையான பதிவு நண்பரே...

Yaathoramani.blogspot.com said...

raji //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ரமேஷ் வெங்கடபதி

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மகேந்திரன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா குரு கலக்கல் அறிவுரை, நிதர்சன உண்மையும் கூட....!!!

உங்க சித்தப்பு கலக்கிட்டாரு போங்க...!!!

MANO நாஞ்சில் மனோ said...

முதல் இருபதை சூழல் தீர்மானிக்கும், அடடடடா கொஞ்சம் கஷ்ட்டமாவே இருக்கு...!!!

Yaathoramani.blogspot.com said...

MANO நாஞ்சில் மனோ //.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

ADHI VENKAT said...

சரியாத் தான் சொல்லியிருக்கிறார். அனைவரும் கடைபிடித்தால் நன்றாக இருக்கும்.

Yaathoramani.blogspot.com said...

கோவை2தில்லி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Murugeswari Rajavel said...

வாழ்க்கை விளக்கத்தை இதை விட யாராலும் அழகாய்ச் சொல்ல முடியாது.

சக்தி கல்வி மையம் said...

சாதாரணமா ஒரு பெரிய செய்தி..

வாழ்த்துக்கள்..

Yaathoramani.blogspot.com said...

Murugeswari Rajavel //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

!* வேடந்தாங்கல் - கருன் *! //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

சாந்தி மாரியப்பன் said...

//"முதல் இருபதில் நிதானமும்
இரண்டாம் இருபதில் வேகமும்
மூன்றாம் இருபதில் சம நிலையும்
நாலாம் இருபதில் சவ நிலையும் பழகினால்
உனக்கது ஒருவேளை உதவலாம் "என்றார்//

நல்லதொரு விளக்கம். அருமை.

Yaathoramani.blogspot.com said...

அமைதிச்சாரல் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

G.M Balasubramaniam said...

மூன்று இருபது நிலைகளும் தாண்டியாயிற்று. என்னைப் பொருத்தவரை இந்த நான்காம் இருபது நிலைதான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுதான் சவ நிலையா.? ஜென் சித்தப்புவுக்குப் பாராட்டுக்கள்.

Anonymous said...

சிந்திக்க செய்த பதிவு... முதல் இருபது சரியாக வந்தால் பிற இருபதுகள் சரியாகவே அமையுமோ...

நல்லதொரு விளக்கம் ரமணி சார்...

சென்னை பித்தன் said...

அனைவரின் சிந்தனையையும் தூண்டும் பகிர்வு!

vimalanperali said...

நல்ல செய்தி சொல்லிச்செல்கிற பதிவு.வாழ்த்துக்கள்.எந்த இருபதில் எது வந்து சேரும் என்பதை காலம்தான் இப்போது நிர்ணயிக்கிறது.

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ரெவெரி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சென்னை பித்தன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

விமலன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

செல்ல நாய்க்குட்டி மனசு said...

நல்ல பாடம் சொல்லித் தரீங்க ரமணி சார்,

Yaathoramani.blogspot.com said...

rufina rajkumar //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

வெங்கட் நாகராஜ் said...

//"உடல் இருக்குமிடத்திலேயே மனத்தையும்
மனம் இருக்கும் இடத்திலேயே உடலையையும்
வைக்கப் பழகினால் போதும்
வேறெதுவும் வேண்டவே வேண்டாம் "என்றார்// ரொம்ப கஷ்டமாச்சே...

நல்ல கவிதை மூலம் வாழ்க்கைப் பாடம்...

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

A.R.ராஜகோபாலன் said...

தீர்மானித்து நிர்மாணிக்கும் சூட்சமம் அபாரம் ரமணி சார். வாழ்வை வகைப் படுத்திய விதம் வியாபம்

Yaathoramani.blogspot.com said...

A.R.ராஜகோபாலன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

துரைடேனியல் said...

Arumai Sir!
TM 15.

Yaathoramani.blogspot.com said...

துரைடேனியல் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

M.R said...

வித்தியாசமான சிந்தனை ,பகிர்வுக்கு நன்றி
த.ம 16

Yaathoramani.blogspot.com said...

M.R //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

சுந்தரா said...

அருமையான வாழ்க்கைப்பாடம்.

புரிந்துநடந்துகொண்டால் பிரச்சனையேயிருக்காது.

பகிர்வுக்கு மிக்க நன்றி!

Yaathoramani.blogspot.com said...

சுந்தரா //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

கவி அழகன் said...

கலக்கல் இருபது

Yaathoramani.blogspot.com said...

கவி அழகன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Unknown said...

மிகவும் அழகான அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார்

Yaathoramani.blogspot.com said...

சிநேகிதி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

r.v.saravanan said...

வாழ்க்கைப் பாடம் அருமை சார்

முனைவர் இரா.குணசீலன் said...

உடல் இருக்குமிடத்திலேயே மனத்தையும்
மனம் இருக்கும் இடத்திலேயே உடலையையும்
வைக்கப் பழகினால் போதும்

பாகுபாடும் தீர்வும் சிந்திக்கத்தக்கனவாக உள்ளது அன்பரே.

அருமை..

முயற்சிப்போம்.

Thooral said...

அருமையான வாழ்க்கை பாடம் ..
கவிதை அருமை

Yaathoramani.blogspot.com said...

r.v.saravanan //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ayaram thinagarapandian //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

முனைவர்.இரா.குணசீலன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

ShankarG said...

ஜென் சித்தப்பு மற்றொரு நல்ல படைப்பு. கவிதை முழுதும் சுவாரசியம் படர்ந்திருக்கிறது. வாழ்க.

Yaathoramani.blogspot.com said...

ShankarG //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Anonymous said...

ரமணி சார் ,
அதுதானே கஷ்டம் ?
சமைக்கும் பொது கணினி , கணினி பார்க்கும் போது டிவி ,
டிவி பார்க்கும் போது கணவர் + குழந்தை என்ன செய்கிறார்கள்
என்னும் நினைப்பு வந்து பிழைப்பைக் கெடுக்கிறது.
எல்லாம் அருமை சார் , பின்பற்றினால் அருமையோ அருமை தான்.
அப்புறம் , முன் 2 இருபதும் , பின் 2 இருபதும் மாறி இருப்பதாகப் படுகிறது எனக்கு.

Yaathoramani.blogspot.com said...

தங்கள் வரவுக்கும் விரிவான அழகான
பின்னூட்டதிற்கும் மனமார்ந்த நன்றி
கொஞ்சம் தீவீரமாக யோசித்துத்தான்
இருபதின் பலவீனங்க்களை அடுக்கினேன்
மீண்டும் யோசித்துப் பார்க்கிறேன்

Post a Comment