Tuesday, November 22, 2011

அதிருப்தி


ஒரு உணர்வாகவோ
ஒரு நிகழ்வாகவோ
ஒரு சொல்லாகவோ
என்னை அசைத்துப் போகிறது
ஒரு சிறு அதிர்வு

அதுவரை எங்கோ புதைந்து கிடந்த
அனுபவக் கனல்
மிக இயல்பாக அதனுடன்
தன்னை இணைத்துக் கொண்டு
எரிக்கத் துவங்குகிறது

அதிர்வுடன்
அனுபவக் கனல் இணைய
உணர்வு அதை ஊதிப் பெரிதாக்க
உள்ளமெங்கும் ஒளியும் உஷ்ணமும்
என்னை உலுக்கிப் போடுகிறது

என்னுள்
சிதறிக் கிடந்த வார்த்தைச் சுள்ளிகள்
தானாக அதனுடன் இணைய
சிறு பொறி வேள்வித் தீயாக
விஸ்வரூபம் எடுக்கிறது

என்னால்
எனச் சொல்லிக் கொள்ள ஏதுமில்லை
சிதறிக் கிடப்பவைகளை
சேகரித்து தருபவனாக  மட்டுமே இருப்பதால்
பெருமைப்பட ஏதுமில்லை

ஆயினும் வழக்கம்போல
"அடுத்த முறையேனும்
நல்ல படைப்பைத் தர முயற்சி செய் "என
முகம்சுளித்து வெறுப்பேற்றிப் போகிறது
திருப்தியடையாத கவிமனது

93 comments:

ரிஷபன் said...

என்னுள்
சிதறிக் கிடந்த வார்த்தைச் சுள்ளிகள்
தானாக அதனுடன் இணைய
சிறு பொறி வேள்வித் தீயாக
விஸ்வரூபம் எடுக்கிறது

கவிதை எடுத்த விஸ்வரூப தரிசனம் அபாரம்.

அப்பாதுரை said...

புலிவாலை ஏன் பிடித்துக் கொண்டு திரிகிறோம் என்று புரியவைத்த வரிகள்.. நன்று.

Anonymous said...

எனக்கும் கொஞ்ச நாளாகவே...'என் மேல் வராத' அதே அதிருப்தி/ஐயம் உங்கள் மேல்...

கவிதையை விட்டுவிடுவீர்களோ என்று...

அதற்கு கவிதை மூலமே பதில் அளித்ததுக்கு நன்றி ரமணி சார்...

குறையொன்றுமில்லை. said...

அழகான கவிதை வரிகள் வாழ்த்துக்கள்.

Anonymous said...

கொஞ்ச நாளாகவே...
எனக்கும் 'என் மேல் வராத' அதே அதிருப்தி/ஐயம் உங்கள் மேல் ரமணி சார்...

கவிதையை விட்டுவிடுவீர்களோ என்று...

அதற்கு கவிதை மூலமே பதில் அளித்ததுக்கு நன்றி...

ரசித்தேன்...

Anonymous said...

இரண்டு முறை இட்டும் பின்னூட்டம் காணாமல் போனதாய் நினைக்கிறேன்...உங்கள் ஸ்பாம் இல் தேடுங்க ரமணி சார்...

தமிழ் உதயம் said...

உங்களுக்காக எழுதப்பட்டதாக இருந்தாலும் எல்லோரு(என)க்கும் பொருந்துபவையே. நல்ல கவிதை.

அம்பாளடியாள் said...

வாழ்த்துக்கள் ஐயா உங்கள் மனநிலையே எமது
நிலையம் .மிக அழகாக உணர்வை வெளிக்காட்டிய
சிறப்பான பகிர்வுக்கு மிக்க நன்றி ......

அம்பாளடியாள் said...

தமிழ்மணம் 3

வெங்கட் நாகராஜ் said...

//என்னுள்
சிதறிக் கிடந்த வார்த்தைச் சுள்ளிகள்
தானாக அதனுடன் இணைய
சிறு பொறி வேள்வித் தீயாக
விஸ்வரூபம் எடுக்கிறது// அப்பாடி... என்னதொரு வார்த்தைப் பிரயோகம்.... நல்ல கவிதை....

முனைவர் இரா.குணசீலன் said...

ஆயினும் வழக்கம்போல
"அடுத்த முறையேனும்
நல்ல படைப்பைத் தர முயற்சி செய் "என
முகம்சுளித்து வெறுப்பேற்றிப் போகிறது
திருப்தியடையாத கவிமனது

\\//\\//\\///\\//\\//\\//\\

நிறைவடையாத மனம் இருக்கும் வரை நிறைவான படைப்புகள் வருவதை உங்களால் தடுக்கமுடியாது அன்பரே..

நன்று.

vanathy said...

ரமணி அண்ணா, நலமா?
வழக்கம் போலவே சூப்பர் வரிகள். தொடர வாழ்த்துக்கள்.

M.R said...

கவிதை பிறக்கும் விதம் சொல்லிய விதம் அருமை நண்பரே

த.ம 7

செல்ல நாய்க்குட்டி மனசு said...

உங்களுக்கு கவிதை கருவாய் ஒரு சிறு பொறி போதும் போலிருக்கிறது

Madhavan Srinivasagopalan said...

// ஆயினும் வழக்கம்போல
"அடுத்த முறையேனும்
நல்ல படைப்பைத் தர முயற்சி செய் "என
முகம்சுளித்து வெறுப்பேற்றிப் போகிறது
திருப்தியடையாத கவிமனது //

இப்பவாவது புரிஞ்சிதே..

சும்மா..!

Unknown said...

எல்லாமே இங்குதான் இருந்தது
எடுத்தாளும்வரை கேட்பாரில்லை!
உணர்ச்சியின்
முயற்சியில்
கோர்க்கப்பட்டது
கவிதைச்சரமானது!
கோர்த்தவருக்கே
மாலையாக்கப் பட்டது! 8!

Unknown said...

நிறைகுடம் (ரமணி அய்யா) தழும்பாது

MANO நாஞ்சில் மனோ said...

என்னால்
எனச் சொல்லிக் கொள்ள ஏதுமில்லை
சிதறிக் கிடப்பவைகளை
சேகரித்து தருபவனாக மட்டுமே இருப்பதால்
பெருமைப்பட ஏதுமில்லை//

ஆஹா அழகா சொல்லிட்டிங்க குரு பெருமை பட என்ன இருக்கிறது இல்லையா....

MANO நாஞ்சில் மனோ said...

திருப்தியடையாத கவிமனது//

கவிஞனுக்கு அழகே அதுதானே குரு.....!!!

Yaathoramani.blogspot.com said...

ரிஷபன் /

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அப்பாதுரை //

ஒரு வாசகம் சொன்னாலும்
மணிவாசகமாகச் சொன்னீர்கள்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Lakshmi //.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தமிழ் உதயம் //

இது நமக்காக எழுதப்பட்டதே
வரவுக்கும் அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அம்பாளடியாள் //

தாங்கள் எவ்வளவு உணர்வுபூர்வமான விஷயத்தையும்
மிக அழகாகத் தெளிவாக வார்த்தைகளுக்குள்
அடங்க வைத்துவிடுகிறீகள்.அந்த லாவகம்
வாய்க்கவில்லையே என்கிற ஆதங்கம் எனக்குண்டு
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Unknown said...

உண்மைதான் சகோ!
138 கவிதைகளை நான் வலைவழி பதிவு செய்தும் திருப்தி அடையாத கன் மனதே இக் கவிதைக்கு சாட்சி!
நன்று!

த ம ஓ 9

புலவர் சா இராமாநுசம்

Yaathoramani.blogspot.com said...

Madhavan Srinivasagopalan //

தங்கள் வரவுக்கும் வித்தியாசமான
அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

முனைவர்.இரா.குணசீலன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

vanathy //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

ஹேமா said...

உங்கள் ஒவ்வொரு படைப்புமே ஒவ்வொரு அதிர்வுதான் !

Yaathoramani.blogspot.com said...

M.R //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

rufina rajkumar //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

SURYAJEEVA said...

ஒரு ஓவியர் சொன்னதாக கதை உண்டு...
கேள்வி: உங்களின் சிறந்த படைப்பு எது?
பதில்: என்னுடைய அடுத்த ஓவியம்...

Yaathoramani.blogspot.com said...

ரமேஷ் வெங்கடபதி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

பிரணவன் said...

சிதறிக் கிடப்பவைகளை
சேகரித்து தருபவனாக மட்டுமே இருப்பதால்
பெருமைப்பட ஏதுமில்லை. . . அருமை
உங்களின் ஒவ்வொரு படைப்பிலும் ஞானத்தை மட்டுமே தேடுபவன் ஆகையால், அதையும் நீங்கள் அளவற்று தருவதாலும் நான் ஞானியாக்கப்படுகின்றேன். . .

Angel said...

//என்னுள்
சிதறிக் கிடந்த வார்த்தைச் சுள்ளிகள்
தானாக அதனுடன் இணைய
சிறு பொறி வேள்வித் தீயாக
விஸ்வரூபம் எடுக்கிறது//

ரசித்துக்கொண்டிருக்கிறேன் மீண்டும் மீண்டும் இந்த வரிகளையே .அருமையான கவிதை

சாந்தி மாரியப்பன் said...

//அதிர்வுடன்
அனுபவக் கனல் இணைய
உணர்வு அதை ஊதிப் பெரிதாக்க
உள்ளமெங்கும் ஒளியும் உஷ்ணமும்
என்னை உலுக்கிப் போடுகிறது//

ஒவ்வொருவரின் உள்ள உணர்வுகளை அழகா சொல்லிட்டீங்க..

Unknown said...

அழகான வரிகள் அருமை

வை.கோபாலகிருஷ்ணன் said...

தமிழ்மணம்: 11

நல்ல உணர்வுகள். எல்லோருக்குமே உள்ளவைகளை அழகாகச் சொல்லி விட்டீர்கள். திரு.அப்பாத்துரை அவர்கள் சொல்வதுபோல,இது புலி வாலைப் பிடித்துள்ள அனுபவமே. பாராட்டுக்கள்.

Yaathoramani.blogspot.com said...

ராக்கெட் ராஜா //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சிநேகிதி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அமைதிச்சாரல் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

angelin //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

பிரணவன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாக்மூட்டி எழுதத் தூண்டும் தங்கள்
விரிவான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

suryajeeva //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஹேமா //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

புலவர் சா இராமாநுசம் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

கீதமஞ்சரி said...

அதிர்வுகளால் அசையாத மனங்கொண்டோர் உண்டு.
அனுபவக்கனலை அடக்கிவைக்கும் குணங்கொண்டோர் உண்டு.
ஊதிப்பற்றும் வகையில் உணர்வற்றோர் உண்டு.
உள்ளே வார்த்தைகளற்ற வெற்றிடங்களும் உண்டு.
வார்த்தைகள் இருந்தாலும் சேகரிக்க சிரமப்படுவோர் உண்டு.
இத்தனைத்திறனும் இணைந்து இன்கவி படைப்பார் எவருண்டு?
எத்தனைக் கவிகள் படைத்தாலும் நிறைவுறாத மனம் கண்டு
இன்னும் இன்னும் மலரும் இனிய கவிச்செண்டு என்று
மகிழ்வாய் ரீங்கரிக்கிறதே என் மனவண்டு!
பாராட்டுகள் ரமணி சார்.

ஸ்ரீராம். said...

அருமை.
எண்ணக் கனல்.
அதிர்வும் நிகழ்வும் இடமாறியிருக்கலாமோ...

Yaathoramani.blogspot.com said...

கீதா //

தங்கள் வரவுக்கும் விரிவான அழகான
உற்சாகமூட்டும் கவித்துவமான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

ராமலக்ஷ்மி said...

//என்னால்
எனச் சொல்லிக் கொள்ள ஏதுமில்லை
சிதறிக் கிடப்பவைகளை
சேகரித்து தருபவனாக மட்டுமே இருப்பதால்
பெருமைப்பட ஏதுமில்லை//

அருமை. நல்ல கவிதை.

பால கணேஷ் said...

ரமணி சார்... சில சிறுகதைகளையும் கட்டுரைகளையும் பின்னாளில் படித்துப் பார்க்கையில் இன்னும் நன்றாகச் செய்திருக்கலாமோ என்று தோன்றும். திருப்தி என்பது வந்து விட்டால் வளர்ச்சி நின்றுவிடும் தானே..? அருமையான கவிதை தந்து ரசிக்க வைத்தமைக்கு நன்றி...

K.s.s.Rajh said...

அருமை

த.ம.14

Unknown said...

கவிதை அருமை

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். //
அருமையான கருத்துக்கு நன்றி
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கணேஷ் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ராமலக்ஷ்மி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

K.s.s.Rajh //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

விக்கியுலகம் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

RAMA RAVI (RAMVI) said...

//ஆயினும் வழக்கம்போல
"அடுத்த முறையேனும்
நல்ல படைப்பைத் தர முயற்சி செய் "என
முகம்சுளித்து வெறுப்பேற்றிப் போகிறது
திருப்தியடையாத கவிமனது//

அருமை.

மிக அழகான கவிதை வரிகள்.

Yaathoramani.blogspot.com said...

RAMVI //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

மகேந்திரன் said...

இது.. இதுவே..
சிதறிக்கிடக்கும் சுள்ளிகளை பொறுக்கி
கட்டாக தர முயற்சிக்கும் எண்ணமே ஒவ்வொரு படைப்பும்..
ஆழ்ந்த சிந்தனையுள்ள படைப்பு நண்பரே...
இம்மனநிலை இருக்கும் வரை
அடுத்த படைப்பு சபையேறும் என்பதில்
சந்தேகமில்லை...
அருமை அருமை நண்பரே..

Yaathoramani.blogspot.com said...

மகேந்திரன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

G.M Balasubramaniam said...

CONTENTMENT SMOTHERS IMPROVEMENT. போதாது,இன்னும் செப்பனிட வேண்டும் என்னும் தாகம் இருந்தால்தான் உயரத்தை அடைய முடியும். AIM AT THE STARS. AT LEAST YOU WILL REACH THE TREE TOP.வாழ்த்துக்கள்.

சசிகுமார் said...

கவிதை மிக அருமை... தமிழ்மணம் 16

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //


தங்கள் வரவுக்கும் விரிவான அழகான
உற்சாகமூட்டும் கவித்துவமான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சசிகுமார் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

ADHI VENKAT said...

அருமையான வரிகள் சார்.

Yaathoramani.blogspot.com said...

கோவை2தில்லி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

சாகம்பரி said...

எல்லாமே சரிதான் சார். ஆனால் கடைசி வரிகள் மட்டும் எனக்கு பொருத்தமாகவில்லை. இதயத்துள் சுமந்திருந்த எதையோ இறக்கி வைத்த நிம்மதி மட்டுமே முடிவில் கிட்டுகிறது. மீண்டுமொருமுறை படித்து பார்க்கக்கூட தயக்கமாக இருக்கிறது. ஒருவேளை என்னுடைய படைப்புகள் 100 சதவிகிதம் முழுமை பெறாததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். மிக்க நன்றி சார்.

Yaathoramani.blogspot.com said...

சாகம்பரி //

தாங்கள் குறிப்பிடுவதும் சரிதான்
தன் திறமையில் முழுமையான தன்னம்பிக்கை
கொண்டவர்களுக்கு அதிருப்தி ஏற்பட
சந்தர்ப்பமில்லை.தங்கள் மேலான வரவுக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

துரைடேனியல் said...

WoW. Super!
TM 19.

raji said...

கவியின் உணர்வுகள் வெளிப்பட்ட விதம் நன்று.பகிர்விற்கு நன்றி

Yaathoramani.blogspot.com said...

துரைடேனியல் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

raji //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

அம்பாளடியாள் said...

வணக்கம் ஐயா தங்கள் அடுத்த ஆக்கத்தைக் காண
ஆவலுடன் வந்தேன் காணவில்லை .முடிந்தால்
வாருங்கள் என் கவிதை காத்திருக்கின்றது அதற்கு
உங்கள் கருத்தோடு கூடிய ஊக்குவிப்பினைக் கொடுங்கள் .மிக்க நன்றி ...

Yaathoramani.blogspot.com said...

சென்னை பித்தன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அம்பாளடியாள் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

இராஜராஜேஸ்வரி said...

சிறு பொறி வேள்வித் தீயாக
விஸ்வரூபம் எடுக்கிறது
திருப்தியடையாத கவிமனது...!!!!!
அருமையான வரிகள்..

Anonymous said...

Pl check your Spam Folder Ramani Sir..

மாலதி said...

எங்கோ ஒரு நிகழ்வு அதிர்வாக மாற்றம் பெறுகிறது ஆனால் உங்களின் பல ஆக்கங்கள் உண்மையில் எழுசையைதருகிறது பாராட்டுகள் நன்றி

Yaathoramani.blogspot.com said...

இராஜராஜேஸ்வரி ..

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ரெவெரி //

தங்கள் குறிப்பிட்டதற்கு நன்றி
நிறைய சிறந்த பதிவர்களின் சிறந்த பின்னூட்டங்கள்
ஸ்பெர்மில் இருந்தன.ஏனென்று தெரியவில்லை
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மாலதி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

vimalanperali said...

வாஸ்தவம்தான்.தடுக்கி விட்ட சிறுகல்தானே இவ்வளவையும் யோசிக்க வைக்கிறது.அதுபோலவே அதிவுகளின் உலகில் எல்லாம் தனியாகவே,தனித்த யோசனையாகவே,தனித்த செயல்பாடாகவே,தனித்த சிந்தனையாகவே/

Yaathoramani.blogspot.com said...

விமலன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

ஹ ர ணி said...

உண்மைதான் ரமணி சார். நம்முடைய படைப்பில் நாம் நிறைவுற்றுவிட்டால் நமது படைப்பு இறந்துபோகிறது. இன்னும் இன்னும என்று அனல் எரியவேண்டும். மற்றவர்கள் அதன் வெப்பத்தினை உணர்ந்து பகிரும்போதுதான் நம்முடைய படைப்பு உயிர்கொள்கிறது. உண்மையான படைப்பாளியின் தரமான படைபபாளியின் மனநிலை இது. சரியாக சொன்னீர்கள். அருமை.

Yaathoramani.blogspot.com said...

ஹ ர ணி //

தங்கள் வரவுக்கும் விரிவான அழகான
உற்சாகமூட்டும் கவித்துவமான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

ShankarG said...

ஆஹா! உண்மைக் கவிஞனின் ஆதங்கத்தை அருமையாகச் சொல்கிறது இந்தக் கவிதை. மிகவும் அற்புதம் ரமணி.

Yaathoramani.blogspot.com said...

ShankarG //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Anonymous said...

உங்கள் கவிதை அருமை. வாழ்த்துகள். இதை வாசிக்க எனது ஒரு கவிதையின் சிறு சாயல் தெரிந்தது. இணைப்பு இணைக்கிறேன் இது கவிதை பகுதி ஒன்றில் வந்த கவிதை. இப்போது போவது கவிதை இரண்டின் தொடர்.
http://kovaikkavi.wordpress.com/2010/09/13/69-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d/
Vetha. Elangathilakam.

Yaathoramani.blogspot.com said...

kovaikkavi //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Post a Comment