Monday, April 2, 2012

ஒரே ஒரு சொற்றொடர்..

காவியம் படைக்க வேண்டாம்
கதையோ கவிதையோ கூட வேண்டாம்
ஒரே ஒரு வாக்கியத்தை
உலகுக்கு வழங்கிச் செல்ல முயல்வோமா ?

வாழ்ந்த வாழ்வை
அர்த்தப் படுத்தக் கூடியதாய்
ஒட்டு மொத்த  வாழ்வின்
அனுபவங்களை உள்ளடக்கியதாய்
வாழத் துவங்குவோருக்கு
நல் வழியைக் காட்டக் கூடியதாய்...

ஒரே ஒரு சொற்றொடரை
கொடுத்துச் செல்ல முயல்வோமா?

"உன்னையே நீயறிவாய் "என்பதாய்
"ஆசையே அழிவுக்கு காரணம் " என்பதாய்
'யாதும் ஊரே யாவரும் கேளீர் " என்பதாய்
"வியர்வை காயும் முன் கூலியைக் கொடு "என்பதாய்
"இதுவும் கடந்து போகும்" என்பதாய்
""எல்லோரும் இன்புற்று இருப்பதுவே அல்லாமல்
வேறொன்றும் அறியே பராபரமே " என்பதாய்...

இப்படி
ஒரே ஒரு நன்மொழியை
படைத்துக் கொடுக்க முயல்வோமா ?

வார்த்தை தேடும் முயற்சியில்
நமக்கு வாழ்வின் அர்த்தம் புரியவும்
வாழ்வின் அர்த்தம் புரிந்ததால்
வாக்கியமும் கைகூட வாய்ப்பதிகம் என்பதாலும்...

காவியம் படைக்க வேண்டாம்
கதையோ கவிதையோ கூட வேண்டாம்
ஒரே ஒரு சொற்றொடரை
உலகுக்கு வழ்ங்க முயல்வோமா ?

40 comments:

சின்னப்பயல் said...

ஒரே ஒரு சொற்றொடரை
உலகுக்கு வழங்க முயல்வோமா ?////நல்லாருக்கு ரமணி சார்..வாழ்த்துகள்..!

குறையொன்றுமில்லை. said...

காவியம் படைக்க வேண்டாம்
கதையோ கவிதையோ கூட வேண்டாம்
ஒரே ஒரு சொற்றொடரை
உலகுக்கு வழ்ங்க முயல்வோமா ?

எவ்வளவு அர்த்தமுள்ள வரிகள்.

வெங்கட் நாகராஜ் said...

//காவியம் படைக்க வேண்டாம்
கதையோ கவிதையோ கூட வேண்டாம்
ஒரே ஒரு சொற்றொடரை
உலகுக்கு வழ்ங்க முயல்வோமா ?//

நல்ல ஆசை சார். எதாவது நமது என்று சொல்ல விட்டுச் செல்ல ஆசைதான்!

நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி.

பால கணேஷ் said...

நமக்கு என்று ஒரு நற்சொல்... ஏ‌தாவது ஒன்றை நமதென்று விட்டுச் செல்வோமா..! நியாயமான, அருமையான ஆசை! அரிய படைப்பு!

Unknown said...

//காவியம் படைக்க வேண்டாம்
கதையோ கவிதையோ கூட வேண்டாம்
ஒரே ஒரு சொற்றொடரை
உலகுக்கு வழ்ங்க முயல்வோமா ?//

நியாயமான ஆசை!
தேவையான ஆசை!

புலவர் சா இராமாநுசம்

வை.கோபாலகிருஷ்ணன் said...

//காவியம் படைக்க வேண்டாம்
கதையோ கவிதையோ கூட வேண்டாம்
ஒரே ஒரு சொற்றொடரை
உலகுக்கு வழ்ங்க முயல்வோமா ?//

நல்லதொரு ஆக்கபூர்வமான ஆலோசனை தான்.
பாராட்டுக்கள்.

துரைடேனியல் said...

சார். கலக்கிட்டீங்க. அருமையான படைப்பு. நானும் ஒன்றை சொல்லட்டுமா?

'இலக்கிய தாகமே உண்மையான தாகம்' (சும்மா ட்ரை பண்ணேன். சரியா வரலேன்னு நினைக்கிறேன். சரி ரொம்ப யோசிச்சு வேற ஏதாவது ட்ரை பண்ணறேன். அசத்தல் படைப்பு. தொடருங்கள்.

துரைடேனியல் said...

சார். விருப்பமிருந்தால் உங்கள் இமெயிலை எனக்கு அனுப்புங்கள். கொஞ்சம் பேச வேண்டியிருக்கிறது. என் இமெயில் முகவரி:- duraidanielraj@gmail.com

ஹேமா said...

பெரியவர்கள் சொல்லி வையுங்கள்.
பின் தொடர்கிறோம் !

Anonymous said...

நல்ல சிறந்த சிந்தனை தான். இது உங்கள் எண்ணம். வாழ்த்துகள். என்னைப் பொறுத்தவரை அ- விலிருந்து ஒள வரை. ஆத்திசூடி வரிகளாக எழுதியுள்ளேன். குறட் தாழிசை எழுதுகிறேன் தொடர்களாக. இது அவரவர் சொந்த விருப்பம் என்பது எனது எண்ணம். பணி தொடரட்டும்..
வேதா. இலங்காதிலகம்.

Avargal Unmaigal said...

நல்லதொரு ஆக்கபூர்வமான ஆலோசனை தான். பாராட்டுக்கள்.

எனது முயற்சி இதோ.....

மதத்தை நேசிப்பவன் மண்ணுக்குள்ளும் மனத்தை நேசிப்பவன் மனிதரின் மனதுக்குள்ளும் புதைந்து போகிறார்கள்..

ஓ..ஓ ரொம்ப நீளமாக போய்விட்டதோ....

Seeni said...

solluvom ayyaa!
solluvom'

sariyaana vaarthaiyai-
solli irukkeenga!

மகேந்திரன் said...

அருமை அருமை...

நாம் நின்ற இடத்திற்கு ஒரு அடையாளம் வேண்டுமென
அழகாய் சொல்லும் கவிதை.
உலகுக்கு கருத்து சொல்கிறேன் என்று
பக்கம் பக்கமாக எழுத வேண்டியதில்லை.... சிறு சொல்லேனும் எழுதினாலே
போதுமானது.. என்று சொல்லிப்போகும் நடை அழகு...

Unknown said...

ஒன்றே செய்
நன்றே செய்..அதை
இன்றே செய்..
எனும் கூற்று நினைவில் வருகிறது!

திருவாசகம் வேண்டாம் ஒருவாசகம் போதும்
காலம் நம்மை நினைவிலிருக்க!

மாறுபட்ட சிந்தனை..நன்று!

Yaathoramani.blogspot.com said...

சின்னப்பயல் //

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Lakshmi //

எவ்வளவு அர்த்தமுள்ள வரிகள். //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //

நல்ல ஆசை சார். எதாவது நமது என்று சொல்ல விட்டுச் செல்ல ஆசைதான்!
நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கணேஷ் //

நமக்கு என்று ஒரு நற்சொல்... ஏ‌தாவது ஒன்றை நமதென்று விட்டுச் செல்வோமா..! நியாயமான, அருமையான ஆசை! அரிய படைப்பு!//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

புலவர் சா இராமாநுசம் //

நியாயமான ஆசை!
தேவையான ஆசை!//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஹேமா //

தங்கள் உடன் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

kovaikkavi //

நல்ல சிறந்த சிந்தனை தான். இது உங்கள் எண்ணம். வாழ்த்துகள்.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //

நல்லதொரு ஆக்கபூர்வமான ஆலோசனை தான். பாராட்டுக்கள்.

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Seeni //

solluvom ayyaa!
solluvom'//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மகேந்திரன் //

அருமை அருமை...
நாம் நின்ற இடத்திற்கு ஒரு அடையாளம் வேண்டுமென
அழகாய் சொல்லும் கவிதை.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

துரைடேனியல் //.

சார். கலக்கிட்டீங்க. அருமையான படைப்பு.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ரமேஷ் வெங்கடபதி //...

திருவாசகம் வேண்டாம் ஒருவாசகம் போதும்
காலம் நம்மை நினைவிலிருக்க!
மாறுபட்ட சிந்தனை..நன்று! //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

ஸாதிகா said...

ஆக்கப்பூர்வமான அருமையான படைப்பு.

முத்தரசு said...

நல்ல ஆலோசனை - பாராட்டுக்கள்

Yaathoramani.blogspot.com said...

ஸாதிகா //

ஆக்கப்பூர்வமான அருமையான படைப்ப //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மனசாட்சி™ //

நல்ல ஆலோசனை - பாராட்டுக்கள்

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்!
// ஒரே ஒரு சொற்றொடரை
உலகுக்கு வழங்க முயல்வோமா ? //
நல்ல யோசனை! நமக்கு முன்னே ஆட்டோ ஓட்டுநர்கள் இந்த காரியத்தை தொடங்கி விட்டார்கள். “ஆட்டோ வாசகங்கள்” எல்லா நகரிலும் பிரபலம்.

அருணா செல்வம் said...

உங்கள் பதிவுகள் அனைத்தும்
எங்களை நன்றாக யோசிக்க வைக்கிறது ஐயா.
நன்றி.

ADHI VENKAT said...

அருமையான சிந்தனை......
த.ம.14

Yaathoramani.blogspot.com said...

தி.தமிழ் இளங்கோ //

நல்ல யோசனை! நமக்கு முன்னே ஆட்டோ ஓட்டுநர்கள் இந்த காரியத்தை தொடங்கி விட்டார்கள். “

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

VANJOOR //

தங்கள் உடன் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

AROUNA SELVAME //

உங்கள் பதிவுகள் அனைத்தும்
எங்களை நன்றாக யோசிக்க வைக்கிறது ஐயா.
நன்றி//.

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கோவை2தில்லி //

அருமையான சிந்தனை......//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

G.M Balasubramaniam said...

திட்டமிட்டுச் செய். திட்டமிட்டதைச் செய்.

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

K. ASOKAN said...

நல்ல ஆசை நிறைவேறட்டும்

Post a Comment