வாக்கியக் குச்சிகளை ஒடித்து
உன் மனோலயப்படி
சுள்ளிகளாக்கி பரப்பி வை
நீள ஒழுங்கு ஒரு பொருட்டில்லை
வார்த்தைகளை
ஊதி ஊதிப் பெரிதாக்கி உப்பவை
இரத்தசோகைப் பிடித்தவன் முகம் போலது
வாக்கியத்திற்கு பொருந்தாவிடினும்
அது ஒரு பொருட்டில்லை
உன் படைப்பை எப்போதும்
ஒரு புதர் போல்
ஒரு புதிர்போல் பராமரி
எதையும் விளங்கச் சொல்லி
சராசரியாகிப் போகாதே
புரிந்த படைப்பை விட
புரியாத படைப்பே
நிறையச் சொல்லிப் போகும்
புரியாதவன் நிறையப் புரிந்து கொள்வான்
விளங்காதவன் நிறைய விளங்கிக் கொள்வான்
எவனை மிதித்தோ
எவனை அணைத்தோ
வெளிச்ச மேடையில் ஒரு இடம் பிடி
சந்தேகமே இல்லை
தற்காலக் கவி உலகில்
இணையற்ற இறவாக் கவி நீதான் இனி
உன் மனோலயப்படி
சுள்ளிகளாக்கி பரப்பி வை
நீள ஒழுங்கு ஒரு பொருட்டில்லை
வார்த்தைகளை
ஊதி ஊதிப் பெரிதாக்கி உப்பவை
இரத்தசோகைப் பிடித்தவன் முகம் போலது
வாக்கியத்திற்கு பொருந்தாவிடினும்
அது ஒரு பொருட்டில்லை
உன் படைப்பை எப்போதும்
ஒரு புதர் போல்
ஒரு புதிர்போல் பராமரி
எதையும் விளங்கச் சொல்லி
சராசரியாகிப் போகாதே
புரிந்த படைப்பை விட
புரியாத படைப்பே
நிறையச் சொல்லிப் போகும்
புரியாதவன் நிறையப் புரிந்து கொள்வான்
விளங்காதவன் நிறைய விளங்கிக் கொள்வான்
எவனை மிதித்தோ
எவனை அணைத்தோ
வெளிச்ச மேடையில் ஒரு இடம் பிடி
சந்தேகமே இல்லை
தற்காலக் கவி உலகில்
இணையற்ற இறவாக் கவி நீதான் இனி
59 comments:
///புரிந்த படைப்பை விட
புரியாத படைப்பே
நிறையச் சொல்லிப் போகும்
புரியாதவன் நிறையப் புரிந்து கொள்வான்
விளங்காதவன் நிறைய விளங்கிக் கொள்வான்///
மிக மிக உண்மை
//புரிந்த படைப்பை விட
புரியாத படைப்பே
நிறையச் சொல்லிப் போகும்
புரியாதவன் நிறையப் புரிந்து கொள்வான்
விளங்காதவன் நிறைய விளங்கிக் கொள்வான்//
புரிந்து விட்டது, யாருக்கும் ஒண்ணும் புரியப்போவதில்லை, எதையாவது எழுது என்று சொல்லுகிறீர்கள்.
நான் இணையற்ற கவியாகவே வேண்டாம்!
அதற்கு இணையத்தில் ஏராளமான பேர்கள் உள்ளனர்.
எங்கள் ரமணி சார் போல பாமரனுக்கும் புரிவது போன்ற ”யாதோ” கவிஞர் தான் என்னைப் பொருத்தவரை இணையற்ற கவிஞர்.
பகிர்வுக்கு நன்றி. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
புரிந்த படைப்பை விட
புரியாத படைப்பே
நிறையச் சொல்லிப் போகும்....உண்மை..பகிர்வுக்கு நன்றி. http://www.rishvan.com
நீங்கள் சொல்லும் இணையற்ற கவி நானல்ல என்று நம்புகிறேன்.
nalla ezhuthaakkam!
katti pottathu-
varikal!
எவனை மிதித்தோ
எவனை அணைத்தோ
வெளிச்ச மேடையில் ஒரு இடம் பிடி
:::
கரெக்ட்தான் ஐயா. என்னதான் திறமை இருந்தாலும் சிபாரிசு இல்லைனா வெளிச்சத்துக்கு வர முடியாது. பகிர்வுக்கு நன்றி ஐயா
அடடா... இணையற்ற கவியாக அழகாக வழி சொல்லியிருக்கீங்க. வெளிச்ச மேடையில இடம் பிடிக்க எவனையும் மிதிக்க மனசில்ல எனக்கு. புரியாம எழுதறதுங்கறதும் வராதே எனக்கு. ஸோ... நான் கவியாக முடியாது. (சின்ன வயசுல தமிழ் வாத்தியார் ஒரு தடவை ‘கவி’ன்னு என்னை கூப்டிருககார்).
வணக்கம் நண்பரே,
இதற்கு முன் நீங்கள் இட்ட ஒரு படைப்பு தான்
எனக்கு நினைவுக்கு வருகிறது..
"யாருக்கும் புரியாததை எவருமே புரிந்துகொள்ளாத
நடையில் எழுதுவதே" சிறந்த கவிதை என ஒரு
பதிப்பாளர் வாங்கிக் கொண்டார் என....
எது எப்படியோ..
முதலில் எழுதக் கற்றுக்கொள்ளவேண்டும்
என அறிவுறுத்தும்........
சிறந்த ஆக்கம்.
புரிந்த படைப்பை விட
புரியாத படைப்பே
நிறையச் சொல்லிப் போகும்
புரியாதவன் நிறையப் புரிந்து கொள்வான்
விளங்காதவன் நிறைய விளங்கிக் கொள்வான்
ஆமா உண்மைதான் நல்லா சொல்லி இருக்கீங்க.
அதாவது வார்த்தைகளும், வரிகளும் அது சொல்லிப்போகும் அர்த்தங்களுக்கும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருப்பதுபோல எழுதினாலே அவன் மகா கவிஞன் என்று சொல்ல வருகிறீர்கள் அல்லவா? புரிகிறது. என்ன செய்ய? இப்போதைய கவி உலகம் அப்படித்தான் இருக்கிறது!!!
எளிமையான வார்த்தைகளில் சொல்ல வந்ததை தெளவுபட சுருங்கச் சொல்லி இருக்கிறீரகள்...!!!
குறிப்பாக எந்தத் துறை கவிஞர்களைச் சொல்ல வருகிறீர்கள் என்பது நன்றாகவே தெரிகிறது. பகிர்வினுக்கு நன்றி..!!
//கவியாக சுருக்கு வழி\\
அட இதுக்கும் கூட கவியா?
கவியில் உண்மை என்ற மசாலாவை பரவலாக தூவி உள்ளீர்களே.
அழகான கவி பாராட்டுகள் சார்
ஐயா புரியாம எழுதனும்னு தான் முயற்சி பண்றேன் முடியலையே எப்படி போட்டாலும் புரிஞ்சிக்கிறாங்க நிறைய படிச்சியிருப்பான்களோ அருமையா சொன்னீங்க ஐயா.
அருமையா சொல்றீங்க.....:)
த.ம.6
நம் சமூகத்தில்
சாதாரணப் பட்டவர்கள்தான் அதிகம்
அவர்களுக்கு புரியும்படு எழுதுவதே
நல்லது
இணையற்ற சுருக்குவழி
நல்ல எழுத்தாளனுக்கு அழகல்ல சார்
பாமரனையும் போய்ச் சேரல் வேண்டும்
நம் எழுத்துக்கள்
புரியக்கூடியதால் எழுதுவதே சாதாரணமாக எல்லோருக்கும் புரிகிறது.என்னைச் சாடுவீர்களோ தெரியவில்லை புரியாமல் சிலசமயங்களில் நானும் எழுதுகிறேன்.அப்படியான கவிதைகளில் நான் நினைத்து எழுதாத கருவைக்கூடச் சொல்லிப்போவார்கள் சிலர்.கவிதையின் அடிப்படையும் அதுவாம்.ஒரு கவிதை பல கருத்துக்களைக் காட்டுவது !
Avargal Unmaigal //
மிக மிக உண்மை
தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வை.கோபாலகிருஷ்ணன் //
எங்கள் ரமணி சார் போல பாமரனுக்கும் புரிவது போன்ற ”யாதோ” கவிஞர் தான் என்னைப் பொருத்தவரை இணையற்ற கவிஞர்.
பகிர்வுக்கு நன்றி. பாராட்டுக்கள். வாழ்த்துகள் //
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Suresh Subramanian //
உண்மை..பகிர்வுக்கு நன்றி.//
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சிவகுமாரன் ...//
நீங்கள் சொல்லும் இணையற்ற கவி நானல்ல என்று நம்புகிறேன்.//
மிகச் சரி நிச்சயமாக நீங்கள் இல்லை //
.தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Seeni //
.
nalla ezhuthaakkam!
katti pottathu-
varikal!
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ராஜி //
கரெக்ட்தான் ஐயா. என்னதான் திறமை இருந்தாலும் சிபாரிசு இல்லைனா வெளிச்சத்துக்கு வர முடியாது. பகிர்வுக்கு நன்றி ஐயா //
.தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கணேஷ் //.
.
அடடா... இணையற்ற கவியாக அழகாக வழி சொல்லியிருக்கீங்க. வெளிச்ச மேடையில இடம் பிடிக்க எவனையும் மிதிக்க மனசில்ல எனக்கு. புரியாம எழுதறதுங்கறதும் வராதே எனக்கு. ஸோ... நான் கவியாக முடியாது //
.தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
மகேந்திரன் //
எது எப்படியோ..
முதலில் எழுதக் கற்றுக்கொள்ளவேண்டும்
என அறிவுறுத்தும்........
சிறந்த ஆக்கம். //
.தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
Lakshmi //
ஆமா உண்மைதான் நல்லா சொல்லி இருக்கீங்க //.
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
palani vel //
எளிமையான வார்த்தைகளில் சொல்ல வந்ததை தெளவுபட சுருங்கச் சொல்லி இருக்கிறீரகள்...!!!
குறிப்பாக எந்தத் துறை கவிஞர்களைச் சொல்ல வருகிறீர்கள் என்பது நன்றாகவே தெரிகிறது. பகிர்வினுக்கு நன்றி..!//!
மிகச் ச்ரியாகப் புரிந்து பின்னூட்டமிட்டமைக்கு
மனமார்ந்த நன்றி
மனசாட்சி™ //...
கவியில் உண்மை என்ற மசாலாவை பரவலாக தூவி உள்ளீர்களே //.
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
wesmob //
அழகான கவி பாராட்டுகள் சார் //
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சசிகலா //
அருமையா சொன்னீங்க ஐயா.//
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
புரிந்த படைப்பை விட
புரியாத படைப்பே
நிறையச் சொல்லிப் போகும்
புரியாதவன் நிறையப் புரிந்து கொள்வான்
விளங்காதவன் நிறைய விளங்கிக் கொள்வான்
///அட....அருமையாக கவிதை படைத்திருக்கீங்க!
அட போட வைத்த வரிகள்.
சசிகலாவின் கமெந்ட் படித்து கொஞ்ச நேரம் சிரித்தேன்.
//புரிந்த படைப்பை விட
புரியாத படைப்பே
நிறையச் சொல்லிப் போகும்
புரியாதவன் நிறையப் புரிந்து கொள்வான்
விளங்காதவன் நிறைய விளங்கிக் கொள்வான்//
அருமை! புரியாத கவிதைகள் படிப்பவரது கற்பனைக் குதிரையை தட்டி விடும்! நல்ல கவிதை.
நான் கவிதை எழுதுவது என்னமோ இப்படித்தான்...வார்த்தைகளை மடக்கிப் போட்டு! புரியாத வார்த்தைகள் எழுத எனக்குத் தெரியாது! சட்டியில் இருந்தால்தானே....!! :))
ரமணி சார்!
மிக அருமையான படைப்பு. நான் வெகு நாட்களாக இதைத்தான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். இவ்வளவு இருண்மை, புரியா குறியீடுகள், இருட்டு படிமங்கள் என்று எழுதும் இந்த பின் நவீனத்துவக் கவிஞர்களை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது. இதில் இவர்களுக்கு பெருமை வேறு. புரியவில்லை என்றுதான் செய்யுள் வடிவத்திலிருந்து புதுக்கவிதைக்கு மாறினான் இலக்கிய வாசகன். ஆனால் இப்போது நவீனக் கவிதை என்ற பெயரில் மறுபடியும் அந்தப் புரியா இருட்டு உலகத்துக்கு மறுபடியும் பயணம். இதுல இந்த நவீனக் கவிதைகளை உற்றுக் கவனிச்சீங்கன்னா உருப்படியா எதுவும் எழுத மாட்டாங்க. முலை, அல்குல், புணர்ச்சி, காமம், வெறி, இன்னும்....அரங்கத்தில் சொல்ல இயலா அசுத்தங்கள்தான் கவிதை எனும் பெயரிலே அரங்கேறுகின்றன இந்த நவீனக் கவிதைகளில். பாமரனுக்காக திரும்பிய இலக்கிய தேவதை இன்று மறுபடியும் மேதைகளுக்காக (அப்படின்னு சொல்லிக்கிறாங்க...என்ன பண்ண?) விபச்சாரம் செய்யக் கிளம்பி விட்டாள்.
அருமையான மனம் கவர்ந்த படைப்பு. தொடருங்கள்...!
சசிகலா கமெண்ட் ரசித்தேன். ஹேமாவுக்கு ஒரு குட்டு வைக்கணும்.
கோவை2தில்லி //
அருமையா சொல்றீங்க.....:)//
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
செய்தாலி //
நம் சமூகத்தில்
சாதாரணப் பட்டவர்கள்தான் அதிகம்
அவர்களுக்கு புரியும்படு எழுதுவதே
நல்லது
இணையற்ற சுருக்குவழி
நல்ல எழுத்தாளனுக்கு அழகல்ல சார் //
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஹேமா //
நான் தங்கள் படைப்பின் தீவீர ரசிகன்
படைப்பின் கரு வடிவத்தைத் தேர்ந்தெடுக்கவேண்டும்
பாத்திரத்திற்காக பொருள் கூடாது
பொருளைப் பொருத்தே ஏனம் இருக்கவேண்டுமென்பது
எனது கருத்து
தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஸாதிகா //
///அட....அருமையாக கவிதை படைத்திருக்கீங்க!//
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அப்பாதுரை //
.
அட போட வைத்த வரிகள்.//
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வெங்கட் நாகராஜ் //
அருமை! புரியாத கவிதைகள் படிப்பவரது கற்பனைக் குதிரையை தட்டி விடும்! நல்ல கவிதை.//
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஸ்ரீராம். //
நான் கவிதை எழுதுவது என்னமோ இப்படித்தான்...வார்த்தைகளை மடக்கிப் போட்டு! புரியாத வார்த்தைகள் எழுத எனக்குத் தெரியாது! //
.தங்கள் வரவுக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
நன்று
தீபிகா(Theepika) //
நன்று //
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
புரியாதவன் நிறையப் புரிந்து கொள்வான்
விளங்காதவன் நிறைய விளங்கிக் கொள்வான்
தற்காலக் கவி உலகில் இணையற்ற இருண்மைக் கவி !!!!!!!!????!!
வணக்கம்! நாட்டு நடப்பை அப்படியே போட்டு உடைத்து விட்டீர்கள். இன்னும் மேடையில் ஏறி சில வரிகளை இரண்டு அல்லது மூன்று முறை அழுத்தி உச்சரித்து விட்டால் முத்திரைக் கவிதைகளாகிவிடும்.
துரைடேனியல் //
அருமையான மனம் கவர்ந்த படைப்பு. தொடருங்கள்...//!
பலவிஷயங்களில் ஒத்த கருத்துடையவர்களாக
இருக்கிறோம் என நினைக்கிறேன்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான
அருமையான பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
இராஜராஜேஸ்வரி //.
தற்காலக் கவி உலகில் இணையற்ற இருண்மைக் கவி //!!!!!!!!????!!
.தங்கள் வரவுக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்
.தி.தமிழ் இளங்கோ //...
இன்னும் மேடையில் ஏறி சில வரிகளை இரண்டு அல்லது மூன்று முறை அழுத்தி உச்சரித்து விட்டால் முத்திரைக் கவிதைகளாகிவிடும்.//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
புரிந்த படைப்பை விட
புரியாத படைப்பே
நிறையச் சொல்லிப் போகும்
புரியாதவன் நிறையப் புரிந்து கொள்வான்
விளங்காதவன் நிறைய விளங்கிக் கொள்வான்
புரியும் படிச் சொன்னீர்கள் அன்பரே..
guna thamizh //
புரியும் படிச் சொன்னீர்கள் அன்பரே..//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னுட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கவிதை எழுத இன்னொரு எளிய வழி!
"நான் நேற்று தி.நகர் ரங்கநாதன் தெரு சென்று கறிகாய்,பழங்கள் வாங்கி வீடு திரும்பினேன்"..
இது வாக்கியம்.
"நான் நேற்று தி.நகர் ரங்கநாதன் தெரு
சென்று கறிகாய்,பழங்கள் வாங்கி
வீடு திரும்பினேன்"
இது பாதிகவிதை
"நேற்று நான்,நேரே ரங்கநாதன் தெரு சென்று,
கறிகாய்,கனிகள் கடையில் வாங்கி,
விடு விடு என வீடு திரும்பினேன்"
இது முழுக்கவிதை.
"நான்
நேற்று
தி.நகர்
ரங்கநாதன்
தெரு
சென்று
கறிகாய்,
பழங்கள்
வாங்கி
வீடு
திரும்பினேன்"
இது புதுக்கவிதை
"நான், வீடு, ரங்கநாதன் தெரு, கறிகாய்,
பழங்கள், திரும்பினேன்"
இது ஹைக்கூ
அருமையான விளக்கம்
அருமையான பின்னூட்டம்
வருகைக்கு நன்றி
இந்தப் படைப்பில் தெரிகிறது, நீங்கள் இணையற்ற கவிஞர் அல்ல என்று. எழுதியது புரிகிறதே.
ரமணி ஐயா...
என்னுடைய ஆதங்கத்தை அப்படியே பிட்டு பிட்டு வைத்திருக்கிறீர்கள்.
பத்து பனிரெண்டு வயதின் போது தமிழ் மீடியத்தில் படித்துவிட்டு ஆங்கில படம் பார்க்கப் போய் ஒன்றும் புரியாமல் எல்லோரும் சிரிக்கிறார்கள் எல்லோரும் கைதட்டினார்கள் என்று நாமும் சிரித்துக் கைதட்டிவிட்டு வருவது போல சில கவிதைகளைப் படித்துவிட்டு எல்லோரும் ஆஷா ஓஷோ...வென பின்னோட்டம் இட்டுவிட்டு வருகிறார்களே... ஏதோ பெரியதாக விசயம் இதில் இருக்கிறது போல என்று நினைத்து கொள்வேன். அதை புரிந்து கொள்ள நமக்கு பக்குவம் வரவில்லையோ என்றும் கவலை பட்டுக்கொள்வேன்.
ஏதோ... இன்றைக்குத் தான் நீங்கள் புரிய வைத்திருக்கிறீர்கள். மிக்க நன்றிங்க ரமணி ஐயா.
..AROUNA SELVAME //
இன்றைக்குத் தான் நீங்கள் புரிய வைத்திருக்கிறீர்கள். மிக்க நன்றிங்க ரமணி //
.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
G.M Balasubramaniam //
இந்தப் படைப்பில் தெரிகிறது, நீங்கள் இணையற்ற கவிஞர் அல்ல என்று. எழுதியது புரிகிறதே.//
நல்லவேளை தப்பித்தேன்
தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
எளிய நடையில் அசத்தலாக எழுதியிருக்கிறீர்கள்..
இன்றைய பல புதுக் கவிதைகளைப் படித்த விளைவில் விளைந்ததா இக்கவிதை?
இருண்மை'யை இறவாக்' என மாற்றினால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது எனது எண்ணம்.
நன்றி.
அறிவன்#11802717200764379909 //
இருண்மை'யை இறவாக்' என மாற்றினால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது எனது எண்ணம்.//
நீங்கள் சொன்ன மாற்றம் சரிதான்
மாற்றிவிட்டேன்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
Post a Comment