Monday, August 20, 2012

நடிப்பறியா நடிகர்கள்

ஒத்திகையற்ற அரங்கேற்றம்
சோபிப்பதில்லை
முதல் ஒத்திகையில்
நடிகனுக்கு கதாபாத்திரத்தை
அறிமுகப் படுத்தும் இயக்குனர்
பின்னர் தொடர்கிற ஒத்திகைகளில்
கதாபாத்திரத்தின் இயல்பறியவும்
அதனுடன் இணையவும்
பின் அதுவாக மாறவுமே
பயிற்சியளிக்கிறார்

அதனால்தான்
ஒத்திகையின் போது
நடிகன் முதலில் அவனை
மறக்கக் கற்பிக்கப்படுகிறான்
பின் படிப்படியாய்
கதாபாத்திரமாகவே
மாறக் கற்பிக்கப்படுகிறான்

அரங்கேற்ற நாளில்
தன்னை முற்றாக மறந்த
கதாபாத்திரமாகவே மாறிய நடிகன்
அவனது அத்துணை நாள் முயற்சியும்
முழுமையடைந்ததாய் அறிகிறான்
பெரும் மகிழ்ச்சியும் கொள்கிறான்

 நடிப்பின்  இலக்கண மறியாத
நாடகத்தின் சூட்சுமம் அறியாத
பேதை நடிகனோ
மாறவும் தெரியாது
தன்னை மறக்கவும் தெரியாது
தான் தானாகவே இருந்து
அவனும் கஷ்டப்படுகிறான்
நம்மையும் கஷ்டப்படுத்துகிறான்.......

தினம் இரவில் கண் மூட
வாழ்நாளெல்லாம்
அந்தப் "பெரிய இயக்குனர் "
ஒத்திகை நடத்தியும்
மரண அரங்கேற்றத்தில்
முழுமையாய்
இணைத்துக் கொள்ளவும்
மாறிக் கொள்ளவும் அறியாது
நாம் நாமாகவே  இருந்து
துடிக்கிற தவிக்கிற
அஞ்ஞான மனிதர்கள்
நமமைப்போலவே


28 comments:

சின்னப்பயல் said...

அரங்கேற்ற நாளில்
தன்னை முற்றாக மறந்த
கதாபாத்திரமாகவே மாறிய நடிகன்
அவனது அத்துணை நாள் முயற்சியும்
முழுமையடைந்ததாய் அறிகிறான்
பெரும் மகிழ்ச்சியும் கொள்கிறான்

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கம் அருமை சார்... நன்றி... (TM 4)

இடி முழக்கம் said...

அற்புதமான வரிகள் ...பகிர்வுக்கு நன்றி தோழரே...

இடி முழக்கம் said...

த.ம 5

கோமதி அரசு said...

கவிதை அருமையாக இருக்கிறது.



வாழ்த்துக்கள்.

geevanathy said...

//நடிப்பின் இலக்கண மறியாத
நாடகத்தின் சூட்சுமம் அறியாத
பேதை நடிகனோ
மாறவும் தெரியாது
தன்னை மறக்கவும் தெரியாது
தான் தானாகவே இருந்து
அவனும் கஷ்டப்படுகிறான்
நம்மையும் கஷ்டப்படுத்துகிறான்...//

அருமையான வரிகள்...

Unknown said...

ஏதேது..வைரங்களின் ஜொலிப்பு வனப்பேறுகிறதே...!

மிக நன்று! முத்திரைக் கவிதை!

Rasan said...

அற்புதமான கவிதை. அருமையாகவுள்ளது. பகிர்ந்தமைக்கு நன்றி.

இன்று என்னுடைய தளத்தில் ஏணிப்படி

அருணா செல்வம் said...

அரங்கேறியாகி விட்டது
கடைசி நிமிட நடிப்பு
உச்சக்கட்டம் “மரணம்“
சிறப்பாக முடிவதற்கு
அஞ்ஞான நாடக மனிதர்கள்
நம்மைப் போல தான் இருப்பார்கள்.

ஆழ்ந்த கருத்து.
அருமைங்க ரமணி ஐயா.

ஹேமா said...

தன்னை நடிகனாக நினைக்காமல் முழுதாக அந்தப் பாத்திரமாகவே நினைக்கும் நடிகன்.அவன் நடிப்பறியா நடிகனோ.அற்புதமாகச் சொன்ன விதம் அழகு !

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான கருத்துக்கள்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஒவ்வொருமுறை படிக்கும்போதும் பல விளக்கங்கள் தோன்றுகின்றன.தத்துவார்த்தமான விஷயங்களை எளிமையான வார்த்தைகளால் சொல்லி விடுகிறீர்கள்.
பதிவர் திருவிழாவில் தங்களை சந்திக்க மிக்க ஆவலாக இருக்கிறேன்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

இன்றைய எனது பதிவிற்கு முதல் கருத்திட்டதற்கு மிக்க நன்றி ஐயா!
த.ம 9

vimalanperali said...

கதாபாத்திரத்திற்கும்,சூழலிக்கும் தகுந்தவாறு தன்னை மாற்றிக்கொள்ளாத மனிதர்கள் நிறையப்பேர் உள்ளார்கள்அவர்கள் நிறையவே கஷ்டப்படுகிறார்கள்.நல்ல படைப்பு,நல்ல கருத்துக்கள்.

சாந்தி மாரியப்பன் said...

நல்லாருக்குது..

//ஒத்திகையற்ற அரங்கேற்றம் சோபிப்பதில்லை//

உண்மைதானே. ஒரு பதிவு எழுதணும்ன்னாலும் மனசுக்குள்ள ஒருக்கா ஒத்திகை பார்த்துக்கிட்டா நல்லா அமைஞ்சுருதில்லே.

தூங்குவதை மரணத்துக்கான ஒத்திகையாக உவமைப்படுத்தியது அருமை.

சசிகலா said...

அரங்கேற்ற நாளில்
தன்னை முற்றாக மறந்த
கதாபாத்திரமாகவே மாறிய நடிகன்
அவனது அத்துணை நாள் முயற்சியும்
முழுமையடைந்ததாய் அறிகிறான்
பெரும் மகிழ்ச்சியும் கொள்கிறான்.

தங்கள் வரிகளை படித்தால் இன்னமும் பெருமகிழ்ச்சி அடைவார்கள் ஐயா.

சீனு said...

மிகவும் ரசித்தேன் கவி நடையை விட பொதிந்திருந்த கருத்துக்களை

Athisaya said...

ஆழமான கருத்துக்கள் ஐயா!!நானும் நடிக்கிறேன்.பெரும்பாலும் பாத்திரத்துடன் ஒட்டிக்ககொள்ளாமல் தனித்திருந்த அவஸ்தைபடுகிறென்.ஒப்பற்ற வாழ்வியல் சிந்தனை தங்கள் வரிகளில் இருக்கிறது.வாழ்த்துக்கள் ஐயா!

G.M Balasubramaniam said...

மரண அரங்கேற்றதுக்கா இத்தனை ஒத்திகை அந்த இயக்குனர் நடத்துகிறார். நாம்தான் தினம் தினம் செத்து உயிர்க்கிறோமே. இந்த ஒத்திகையே புரியவில்லையா, போதவில்லையா.

MARI The Great said...

அருமையான பதிவு! நல்ல கருத்துக்கள் (TM 11)

”தளிர் சுரேஷ்” said...

அருமையான கவிதை! ஆழமான கருத்துக்கள்! நன்றி!

இன்று என் தளத்தில்
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 5
http://thalirssb.blogspot.in/2012/08/5.html

சென்னை பித்தன் said...

உறங்குவது போலும் சாக்காடாயினும் உறக்கம் வேறு இறப்பு வேறுதானே!அருமை

சென்னை பித்தன் said...

த.ம.12

ஸ்ரீராம். said...

அருமை.
எனக்கு ஏனோ த.ம ஓட்டுப் பெட்டி கண்ணில் படவில்லை.

அப்பாதுரை said...

சுவாரசியமான வரிகள்.. கடைசி பத்தியைக் கொஞ்சம் மாற்றி எழுதியிருக்கலாமோ?

ஆத்மா said...

நல்ல பதிவு சார்..பல தடவைகள் உங்கள் தளம் வந்தும் விரைவாக திரும்பிவிட்டேன்... இணைய இணைப்பின் சிக்கல்களின் காரணத்தினால் தொடருங்கள்

மாதேவி said...

விளக்கத்துடன் அருமை.

வெங்கட் நாகராஜ் said...

//தினம் இரவில் கண் மூட
வாழ்நாளெல்லாம்
அந்தப் "பெரிய இயக்குனர் "
ஒத்திகை நடத்தியும்
மரண அரங்கேற்றத்தில்
முழுமையாய்
இணைத்துக் கொள்ளவும்
மாறிக் கொள்ளவும் அறியாது
நாம் நாமாகவே இருந்து
துடிக்கிற தவிக்கிற
அஞ்ஞான மனிதர்கள்
நமமைப்போலவே//

அற்புதமான வரிகள்....

த.ம. 13

Post a Comment