உண்மையானவனாய் இருப்பதைவிட
உண்மையானவனைப்போல இருப்பது
அதிகத் துயர் தராது
அது எளிதானதும் கூட
நேர்மையானவனாய் இருப்பதைவிட
நேர்மையானவனைப்போல் இருப்பது
அதிகச் சிரமம் தராது
அதுதான் ஆகக் கூடியதும் கூட
புத்திசாலியாய் இருப்பதைவிட
புத்திசாலியைபோல் இருப்பது
எளிதில் பிறரைக் கவரும்
அதிலதான் அதிக வசீகரமும் கூட
சக்திமிக்கவனாய் இருப்பதைவிட
சக்திமிக்கவன் போல் இருப்பது
பாதித்துயர் அழிக்கும்
அதுவே பாதுகாப்பானது கூட
நண்பனாய் இருப்பதை விட
நண்பனைப்போல் இருப்பது
ஏமாற்றத்தை அடியோடு அழிக்கும்
அதுதான் பிழைக்கும் வழி கூட
போல இருப்பது போலி என்பது
இலக்கணத்திற்குத்தான் பொருந்தும்
மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பது
பழமொழிக்குத் தான் சரி
இக்காலச் சூழலில்
"போல " இருப்பதுவே
நிஜமாகக் கருதப்படும்
"மின்னுவது " மட்டுமே
பொன்னாக மதிக்கப்படும்
என்வே...... ( உண்மையானவனாய்.... )
உண்மையானவனைப்போல இருப்பது
அதிகத் துயர் தராது
அது எளிதானதும் கூட
நேர்மையானவனாய் இருப்பதைவிட
நேர்மையானவனைப்போல் இருப்பது
அதிகச் சிரமம் தராது
அதுதான் ஆகக் கூடியதும் கூட
புத்திசாலியாய் இருப்பதைவிட
புத்திசாலியைபோல் இருப்பது
எளிதில் பிறரைக் கவரும்
அதிலதான் அதிக வசீகரமும் கூட
சக்திமிக்கவனாய் இருப்பதைவிட
சக்திமிக்கவன் போல் இருப்பது
பாதித்துயர் அழிக்கும்
அதுவே பாதுகாப்பானது கூட
நண்பனாய் இருப்பதை விட
நண்பனைப்போல் இருப்பது
ஏமாற்றத்தை அடியோடு அழிக்கும்
அதுதான் பிழைக்கும் வழி கூட
போல இருப்பது போலி என்பது
இலக்கணத்திற்குத்தான் பொருந்தும்
மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பது
பழமொழிக்குத் தான் சரி
இக்காலச் சூழலில்
"போல " இருப்பதுவே
நிஜமாகக் கருதப்படும்
"மின்னுவது " மட்டுமே
பொன்னாக மதிக்கப்படும்
என்வே...... ( உண்மையானவனாய்.... )
35 comments:
haa haa!
unmaithaanayyaaa......
rasithen!
layiththen!
நல்லவளைப் போலவே நடிப்பது சிரமம் இல்லையா:-)))))
கலி முத்தினதின் அடையாளம் காக்காய்ப் பொன்னுக்கு மட்டுமே மதிப்பு:(
உண்மையை நம்புவதை விட பொய்யைத்தான் உலகம் அதிகம் நம்புகிறது! அருமை.
உண்மை தான் சார்... இன்றைய நவீன உலகம் இப்படித் தான் மாறிக் கொண்டு வருகிறது... நன்றி... வாழ்த்துக்கள்... (TM 3)
எது நிஜம் எது போலியென்றே சில சமயங்களில் பிரித்தறிய இயலுவதில்லை. போல இருப்பதனால் நமக்கும் பிறர்க்கும் நன்மை மட்டுமே உண்டாகுமென்றால் போலியாய் இருப்பதிலும் மனம் உடந்தையே... மனதில் உருவாகும் பல முடிச்சுகளை லாவகமாய் அவிழ்த்துவிடுகிறீர்கள் ரமணி சார். பாராட்டுகள்.
"உண்மையானவனாய் இருப்பதைவிட
உண்மையானவனைப்போல இருப்பது
அதிகத் துயர் தராது
அது எளிதானதும் கூட".
உண்மைதானுங்க ..
பாராட்டுகள்.ரமணி சார்.
இக்காலச் சூழலில்
"போல " இருப்பதுவே
நிஜமாகக் கருதப்படும்
"மின்னுவது " மட்டுமே
பொன்னாக மதிக்கப்படும்//அருமையாக சொல்லி இருக்கிங்க.தொடருங்கள்.
போல இருப்பது போலி
நாங்கள் அவ்வாறு இல்லை ஐயா..உங்கள் படைப்புகளை உண்மையாகவே பாராட்டுகிறோம்!
நன்று..வாழ்த்துக்கள்!
அர்த்தமுள்ள வரிகள் சார்.......8
நிஜம் பேசிய வரிகள். அருமை.
Well said ரமணி சார்..
பேஸ்மட்டம் வீக்காயிருந்தாலும் பில்டிங் ஸ்ட்ராங்கா இருக்குறதுபோல நடிக்கிறவங்களுக்குத் தான் இது காலம்.
அருமையான பதிவு'போல' இருக்கு.
:-) (just kidding)
இக்காலச் சூழலில்
"போல " இருப்பதுவே
நிஜமாகக் கருதப்படும்
"மின்னுவது " மட்டுமே
பொன்னாக மதிக்கப்படும்/
உண்மை தான் ஐயா அற்புதமாக சொன்னீர்கள்.
இன்றைய உலகத்துக்கான உன்மையான வரிகள்..
அருமை.
#போல இருப்பது போலி என்பது
இலக்கணத்திற்குத்தான் பொருந்தும்
மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பது
பழமொழிக்குத் தான் சரி
#
உண்மையை உரக்க சொல்லி உள்ளீர்கள் கவிதையாக
அசலைவிட நகலுக்கு மதிப்பு அதிகமா ரமணி சார்.?
“போல“ என்பதெல்லாம்
இருப்பது போல
இல்லாமல் போய்விடும்.
அருமையான பதிவு.
நன்றி ரமணி ஐயா.
ஒரு மாணவனிடம் கேட்டேன்.
"எதிர்காலத்தில் நீ யாராக வர விரும்புகிறாய்?"
"அய்யா! நான்,என் தந்தையைப்போல ஒரு பெரிய மருத்துவராக வர ஆசைப்படுகிறேன்!" என்றான் அவன்.
"அப்படியா!உன் தந்தை என்ன அத்தனை பெரிய மருத்துவரா?"
"இல்லை அய்யா! அவரும் பெரிய மருத்துவராக வர ஆசைப்பட்டார், அவ்வளவுதான்!"
அடேயப்பா! "போல" எனும் ஒரு சொல்லை வைத்துக்கொண்டு "போலோ"வே விளயாடியுள்ளீர்களே, ரமணி அய்யா!!
அதைத்தான் நானும் செய்கிறேன்.ஹி,ஹி1
அருமை
மிக அருமையான படைப்பு. தூள் கிளப்புகிறீர்கள்.
உறுதி கொண்ட நெஞ்சத்தினருக்கு சரி. பலவீன மனிதர்கள் இதையே பின்பற்றினால்....?!!!. ஆகவே வாய்மையே வெல்லும். நிஜங்கள் முன் நிழல்கள் நிற்க முடியாது. சரிதானே சார்?!... உங்களது எள்ளல் நடை, நையாண்டி தர்பார் வியக்க வைக்கிறது. வாழ்த்துக்கள்...!
எனக்கு தெரிந்த ஒரு தாய், தன மகனும் , மருமகளும் தன்னிடம் அன்பாக இல்லை என்று மிகவும்
ஆதங்கப்பட்டு "அவனைச்சொல்லிகுற்றமில்லை ; அவன் அவளுடைய ஆதிக்கத்தில் இருக்கிறான்..
அம்மா உனக்கு என்ன வேண்டும் என்று பாசான்குடனாவது என்னைக்கேட்கட்டும் , என்று தான்
ஆசைப்படுகிறேன் " என்று என்னிடம் கூறினார் ;
இப்படி கூட ஒரு திருப்தியா என்று வியந்தேன் ; தங்களுடைய இந்த பகிர்வு என் ஆச்சர்யத்திற்கு விடையாக
அமைந்திருக்கிறது !
மாலி .
எனக்கு தெரிந்த ஒரு தாய், தன மகனும் , மருமகளும் தன்னிடம் அன்பாக இல்லை என்று மிகவும்
ஆதங்கப்பட்டு "அவனைச்சொல்லிகுற்றமில்லை ; அவன் அவளுடைய ஆதிக்கத்தில் இருக்கிறான்..
அம்மா உனக்கு என்ன வேண்டும் என்று பாசான்குடனாவது என்னைக்கேட்கட்டும் , என்று தான்
ஆசைப்படுகிறேன் " என்று என்னிடம் கூறினார் ;
இப்படி கூட ஒரு திருப்தியா என்று வியந்தேன் ; தங்களுடைய இந்த பகிர்வு என் ஆச்சர்யத்திற்கு விடையாக
அமைந்திருக்கிறது !
மாலி .
உண்மையாய்
உண்மை உரைத்தீர்
உண்மை ...
போலிகளால் வெகுவாக நொந்துபோய் இதுபோல ஒரு முடிவுக்கு வந்தாச்சா?!
இக்காலச் சூழலில்
"போல " இருப்பதுவே
நிஜமாகக் கருதப்படும்
"மின்னுவது " மட்டுமே
பொன்னாக மதிக்கப்படும்
உண்மைக்கு காலம் இல்லை என்று
மனம்கொண்ட சுமை அகல எதிர்மறை
உணர்வுகளை கொண்டாடுவது போல
கொண்டாடி வந்த வலிதரும் கவிதை
வரிகளுக்கு நன்றி ஐயா .உண்மையே
என்றும் உயரிய இடத்திற்கு கொண்டு
செல்லும் இதையே உங்கள் கருத்தாக எண்ணி
பெருமைகொள்கின்றேன் .தொடர
வாழ்த்துக்கள் ஐயா .
மிக அற்புதமான வரிகள் ரமணி சார்… நேற்றிரவே படித்துவிட்டேன் கவிதை… இந்த கவிதை படித்ததுமே உங்களுக்கு போன் செய்ய நினைத்தேன். ஆனால் இரவாகிவிட்டதே என்று அழைக்கவில்லை…என்னென்னவோ எண்ண அலைகள் எனக்குள்….
என்னை துரோகித்த உறவுகள், நட்புகள் அனைவரையும் மன்னிக்க முடிந்த அளவு என்னை பண்படுத்திய கவிதை வரிகள் இது என்றால் அது மிகையில்லை ரமணி சார்…
எப்படி உங்களால் மட்டும் இப்படி எல்லாம் யோசிக்க முடிகிறதுன்னு எனக்குள் ஆச்சர்யம்….
இப்போது நடப்பது கலிகாலம் என்பதால் எங்கும் உண்மை எடுபடவில்லை… உண்மையான அன்பு கெக்கலிக்கப்படுகிறது.. நேர்மை புறக்கணிக்கப்படுகிறது… பாசமும் கனிவும் பைத்தியம் எனச்சொல்லி ஒதுக்குகிறது….
ஆயாசம் அதிகம் எனக்குள்… ஏன் இப்படி என்று? என் வேதனைகளுக்கெல்லாம் இந்த கவிதை வரிகளில் பதிலா கொடுத்துட்டீங்களேப்பா….
உண்மையானவனாய் இருப்பதை விட அது போல இருப்பது வேதனையும் தராது அது தான் எளிதும் கூட… எவ்வளவு உண்மையான வார்த்தைகள்… ஆமாம்.. ஆமாம். உண்மையானவனாய் இருப்பது “ போல “ என்றாவது ஒரு நாள் சோர்ந்துவிடும்.. எளிது தான்… துயரும் தராது தான்… ஆனால் அந்த ”போல” மாறும் தன்மை உடையது… உண்மையானது தன்னை நிரூபிக்க போராடாது… ஆனால் “போல” தன்னை உண்மையானவனாய் காட்ட போராடிப்பின் பலன் தரலைன்னா அடப்போ என்று சோர்ந்துவிடும்.
இந்த பத்தியை படிக்கும்போது அலுவலகத்தில் நான் தினம் தினம் பார்க்கும் “போல” கேரக்டர்ஸ் நினைவுக்கு வந்தது… நேர்மையாக வேலை செய்வோருக்கு சிரமங்களும் அதிகம் நல்லப்பெயர் கிடைப்பதும் அரிது… அதே நேர்மையானவரைப்போல வேலை செய்ததாய் காட்டுவோருக்கு கிடைக்கவேண்டிய நல்லவை எல்லாமே கிடைக்கும்..சிரமங்களே இல்லாமல் கிடைப்பது தான் என்றாலும் நிலைக்காது என்பதே நிதர்சனம்…நேர்மையாய் வேலை செய்வோருக்கு கிடைக்கவேண்டிய நல்லவைகள் கண்டிப்பாக கிடைக்கும்… ஆனால் காத்திருப்பு கொஞ்சம் நீளமாகும்.
இந்த பத்தியை ரசித்து வாசித்தேன் ரமணி சார். ஏன்னா அதிபுத்திசாலிகள் தான் புத்திசாலி என்பதை காட்டிக்கொள்ளாது. அதுவே ”போல” காட்டிக்கொள்ள தன் முயற்சியை பலவிதமாய் செய்யும்.. நிறைகுடம் தளும்பாது… ”போல” பிறரை கவர தன் பக்கம் திருப்ப செய்யும் முயற்சிகள் அந்த நேரத்துக்கு மட்டுமே கைக்கொடுக்கும்… ஆனால் புத்திசாலி போல இருப்பவன் புத்திசாலியைப்போல சிந்திக்கமுடியாதே…. அப்ப மாட்டிக்கொள்வானே?
இது ஆறுதல் தரும் பத்தி. சக்திமிக்கவனாய் இருப்பவனை பார்த்தாலே தெரியும்… உடல் சக்தி எதிரிகளிடம் இருந்து பாதுகாக்க உதவும். அதே பலகீனம் நிறைந்தவன் சக்தி மிக்கவன் போல காட்டிக்கொள்வதால் எதிரிகளிடம் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்வான். மனபலம் இல்லாதவன் மனபலம் இருப்பது போல காட்டிக்கொள்பவன் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தன் பலவீனத்தை தன்னை மறந்து வெளிக்கொண்டுவந்துவிடுவான்…. அதுவே அவனுக்கு தோல்வியும் ஆகும்…தன் கண்ணீரை தன் பலவீனத்தை மறைத்து சக்தி உள்ளவன் போல காட்டிக்கொண்டாலும் தன்னை அறியாமல் வெளிக்கொணர்ந்துவிடுமே பலவீனத்தை….
உண்மையே ரமணி சார்… அழுகை வருகிறது இந்த பத்தியை படிக்கும்போது…. ஆத்மார்த்தமாய் நட்பை மதிக்கும்போது ஏமாற்றத்தை தாங்கும் சக்தி கிடைக்காது என்பதே… ஆனால் எதிர்ப்பார்ப்பில்லாத அன்பை பரிமாறும்போது ஏமாற்றங்களும் குறைவாகவே இருக்கும் என்பது உண்மையே…. நட்பை நம்பி நேர்மையாக இருந்து ரகசியங்கள் பகிர்ந்து துன்பங்களை சொல்லி அழுது சந்தோஷத்தை பகிர்ந்து நட்பை மதித்து இருக்கும்போது அந்த நட்பை ஏற்பதற்கு தகுதியான குணங்கள் அதே நம்பிக்கையும் நேர்மையும் இருக்கவேண்டும் என்பதே… இந்த இரண்டும் இல்லாத நட்பு நமக்கு கண்டிப்பாக ஏமாற்றத்தை கொடுக்கிறது. நிலைப்பதும் இல்லை… ஆனால் பழகிய நாட்கள் ரணம் நிறைந்த வேதனைகளை நெஞ்சில் நிலைக்கவைத்து தீராத சோகங்களை மட்டுமே கொடுத்துவிடுகிறது. அதனாலேயே நண்பனாய் இருப்பதை விட நண்பனைப்போல இருக்கச்சொன்னது மிக அருமையாக இருக்கிறது ரமணி சார்… இப்பெல்லாம் நான் நட்பு என்றாலே மிரள்கிறேன். பயப்படுகிறேன். சிதைத்த நட்பின் வலி இன்னும் தீராத நிலையில் இனி அன்பை மட்டுமே பரிமாறி எல்லோருடனும் அன்புடன் இருக்க மட்டுமே முடிவு செய்தேன்…
தாயின் அன்பு போல, போலி இல்லை. அதே தாய் முதுமடையும்போது தன் பிள்ளையிடம் அதே அன்பை தான் குழந்தையாகி தன் பிள்ளையிடம் பெற துடிக்கும்போது சூழ்நிலை கைதியாகி மனைவிக்கு முன் தன் அன்பை தன் தாயிடம் காட்டமுடியாமல் பிள்ளையும் தவிக்கும்…. அந்த தாய் தன் மனதை தேத்திக்கொள்வாள்… சரி நம்மால் கொடுக்கமுடிந்த அன்பை நம் பிள்ளையால் கொடுக்க அவன் இயலாமை தடுக்கிறது என்று.. அந்த சமயம் பிள்ளை மனைவிக்கும் தாய்க்கும் நடுநிலையாய் நின்று தன் பாசத்தை “போல” காண்பித்துவிடும். வேறுவழி?? அந்த “போல” அன்பிலேயே தாயும் மகிழ்ந்துவிடுவதும் உண்டு….
கலிகாலத்தில் “போல” தான் நம்புகிறது உலகம்… ஆமாம் உண்மையே… மின்னுவதை தான் அதிகம் மக்கள் விரும்புவது கூட…. ஆனால் தங்கம் மின்னவில்லை என்றாலும் அதன் மதிப்பு அதிகம்… அதை எல்லோராலும் வாங்கமுடிவது இல்லை…
”போல” எல்லோராலும் விரும்பப்பட்டாலும் நிலைக்காது என்பதே உண்மை…
“போல” அதிக அர்த்தங்களும், ரகசியங்களும், கருத்துகளும் சுமந்து இந்த கவிதைக்கு பலம் சேர்க்கிறது….
உண்மையான அன்பு
நேர்மையான நட்பு
தாயான கனிவு
கண்டிக்கும் தந்தை
தோளணைக்கும் சகோதரம்
இதெல்லாம் என்றும் குடத்திலிட்ட விளக்காய் பிரகாசிக்கும்.. அதை அறிந்து உள்நுழைந்து ஒளியைப்பெற்று பயன்பெற்றோரும் உண்டு.
உண்மைக்கும் நேர்மைக்கும் சோதனைகள் பெருகிக்கொண்டே இருக்கும் உலகம் உள்ளவரை. ஆனால் சத்தியம் தான் ஜெயிக்கும். நிலைத்தும் நிற்கும் என்பதை இறுதி வரை மிக அழகாக சொல்லிவிட்டது ரமணி சார்..
கவிதை வரிகள் முதலில் இருந்து நான் படித்துக்கொண்டே வந்தபோது இறுதி வரி என்னை நிமிர்ந்து உட்கார வைத்தது ரமணி சார்…
மணிமகுடம் அழகு தான். அதில் ஒரு வைரக்கல் பதிக்கும்போது அதன் மதிப்பு கோடி பெறுகின்றது. இந்த கவிதைக்கு மகுடம் சேர்ப்பதே கடைசி வரி தான் ரமணி சார்..
யார் “போல” இருந்தாலும் நான் நானாகவே இருப்பேன். என் தனித்தன்மையை, அன்பை, நல்லவைகளை நேர்மையை தொடர்வேன் என்று ஆணித்தரமாக சொன்ன கடைசி வரி எனக்கு மிகவும் விருப்பமானது ரமணி சார்...
என்றும் போல் இன்றும் உங்கள் கவிதையின் ரசிகையாய்….
அன்பு வாழ்த்துகளுடன் கூடிய நன்றிகள்…
போல....
எத்தனை பேர் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்....
உண்மையான வரிகள் ஐயா.
த.ம. 17
கெட்டவர்கள் நல்லவர்களாய் நடித்து நடித்து பின் நல்லவர்களாய் மாறினால் நல்லது.
போலிகளுக்கு மதிபபு இருந்தாலும் உண்மை என்றும் அழியாது அல்லாவா சார்!.
Post a Comment