" ஏதோ ஒன்று குறைவதைப் போலுள்ளது
இன்னும் கொஞ்சம் முயற்சி செய் "என்கிறேன்
தரையில் சட்டென விழுந்து ஓடும்
தை மாத மேகம் போல்
சிறு வெறுப்பு அவன் முகம் கடக்கிறது
"எதுகை இருக்கிறது
மோனை இருக்கிறது
பாயாசத்து முந்திரியாய்
படிமமும் இருக்கிறது
மொக்கையாக இல்லாது
ஒரு செய்தியும் சொல்லி இருக்கிறேன்
கவிதைக்கு வேறென்ன வேண்டும் "என்கிறான்
"தலைவாரிப் பூச்சூடுகிறாள்
ஆடை அணிவிக்கிறாள்
சோரூட்டுகிறாள்.தாலாட்டுகிறாள்
தாய்க்குரிய அனைத்தையும் செய்வதால்
அவள் தாயாக இருக்கவேண்டும் என்பதில்லை
கவிதைக்குரிய அனைத்தும் இருப்பதால்
அது கவிதை போல் இருக்கலாம்
ஆயினும் அது கவிதையாய் இருக்கவேண்டியதில்லை
ஏனெனில் கவிதை ஒரு புராடெக்ட் இல்லை"என்கிறேன்
"பின் இவை ஏதுமற்றதுதான் கவிதையா ""என்கிறான்
"அப்படியும் இருக்கலாம்
கவிதை வெறும் சொல்லடுக்கு இல்லை
கவிதை நாட்டு நடப்புகளைச் சொல்லும்
செய்தித் தாளும் இல்லை
இலக்கண அறிவை விளம்பிட உதவும்
விடைத்தாளும் இல்லை
தான் அறிந்ததை பிறர் அறியச் சொல்லும்
விளம்பர சாதனமும் இல்லை
தான் உணர்ந்ததை பிறர் உணரச் செய்பவை எவையோ
அவை மட்டுமே கவிதையாய் இருக்க முடியும்
ஏனெனில் கவிதை ஒரு உணர்வு கடத்தி "என்கிறேன்
புரிந்தது போல் லேசாகத் தலையாட்டிப் போகிறான்
புரிந்ததும் புரியாததும் அவனது அடுத்த படைப்பில்
புரிந்துவிடும் என்பது நமக்கெல்லாம் புரிந்தததுதானே ?
37 comments:
தான் உணர்ந்ததை பிறர் உணரச் செய்பவை எவையோ
அவை மட்டுமே கவிதையாய் இருக்க முடியும்
ஏனெனில் கவிதை ஒரு உணர்வு கடத்தி "என்கிறேன்
nalla vilakkam.
சரியான கணிப்பு ,உண்மையில் நீங்கள் சொல்வது சரி,\\தான் உணர்ந்ததை பிறர் உணரச் செய்பவை எவையோ
அவை மட்டுமே கவிதையாய் இருக்க முடியும்//
/தான் உணர்ந்ததை பிறர் உணரச் செய்பவை எவையோ
அவை மட்டுமே கவிதையாய் இருக்க முடியும்
ஏனெனில் கவிதை ஒரு உணர்வு கடத்தி "என்கிறேன்
// அடடா...என்ன அருமையான விளக்கம்.
த. ம 3
ஒரு நிழல்ப்படத்தின் குறைவாக இருக்குமோ? :-)அருமை ஐயா அருமை அனைவரின் உள்ளத்தில் உள்ள உணர்வுகளும் இதுதான். அருமையான பகிர்வு.
\\\தான் உணர்ந்ததை பிறர் உணரச் செய்பவை எவையோ அவை மட்டுமே கவிதையாய் இருக்க முடியும்\\\ நல்ல கருத்து !
ரமணி,
'கவிதை என்பது உணர்வு கடத்தி' ஒரு கவிதைக்கான இலக்கணத்தை நன்றாகச் சொல்கிறது. வாழ்க, வளர்க.
கவிதைக்கு ஒரு இலக்கணம். . ?
உணர்வு கடத்தி - அழகான படிமம்.
(க)விதை உங்களுக்கு எப்படிக் கிடைக்கிறது என்று கொஞ்சம் உங்களைக் கடந்து எங்களுக்குத் தெரிந்தால் நன்றாக இருக்கும் :-)
நீங்கள் சொல்வதும் உண்மை தான் இரமணி ஐயா.
மரபில் எழுதுவது தான் கவிதைக்கு அழகென்று நினைத்து...
நான் எதுகையையும் மோனையையும் அழகாக அடுக்கி...
இலக்கணத்திற்காகச் சொல்லவந்ததைச் சுறுக்கி...
இயற்சீர் வெண்டளையிலும், வெண்சீர் வெண்டளையிலும் விரவி வந்தள்ளதா என்று பார்த்து...
தளை தட்டுகிறதா... என்று ஆராய்ந்து எழுதினாலும்... சாதாரண புதுக்கவிதைக்குக் கிடைக்கும் மதிப்பு கூட கிடைப்பதில்லை.
ஆனால்.... காகிதக் கப்பலை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.
உண்மையானக் கப்பலைச் செய்யத் தெரிந்தவர்கள் செய்தால் தான் அதில் பயணம் போக முடியும்... என்பதையும் நான் இங்கே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
உரைநடையை ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதிவிட்டு அதைக் கவிதை என்று சொல்வது நியாயமா என்றும் எனக்குத் தெரியவில்லை.
தவறு இருப்பின் மன்னிக்கவும் இரமணி ஐயா.
மிகச்சரி...கவிதை உணர்வுகளின் வடிகாலும் ஆகுமே..!
அருமை! நான் அடிக்கடி யோசிப்பதுண்டு, கவிதை என்பது அறிவு சார்ந்ததா, உணர்வு சார்ந்ததா என்று! ஆனால் உணர்வான கவிதைதான் அடுத்தவரையும் உணர வைக்கும் என்று அழகாகச் சொல்லிவிட்டீர்களே!
உணர்வுகளின் வெளிப்பாடு நல்ல கவிதையாகின்றது.
கவிதையின் இலக்கணம் சொல்லிய கவிதை சிறப்பு! வாழ்த்துக்கள்! நன்றி!
ரசித்து படித்தேன் !
அருமை
தொடர வாழ்த்துகள்...
Lakshmi /
தங்கள் முதல் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
கவியாழி கண்ணதாசன் //
சரியான கணிப்பு ,உண்மையில் நீங்கள் சொல்வது சரி,\\தான் உணர்ந்ததை பிறர் உணரச் செய்பவை எவையோ
அவை மட்டுமே கவிதையாய் இருக்க முடியும்//
தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஸாதிகா //
// அடடா...என்ன அருமையான விளக்கம்./
/தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
semmalai akash //
ஒரு நிழல்ப்படத்தின் குறைவாக இருக்குமோ? :-)அருமை ஐயா அருமை அனைவரின் உள்ளத்தில் உள்ள உணர்வுகளும் இதுதான்.
அருமையான பகிர்வு///
தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
.
koodal bala //
நல்ல கருத்து !//
தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ShankarG //
,
'கவிதை என்பது உணர்வு கடத்தி' ஒரு கவிதைக்கான இலக்கணத்தை நன்றாகச் சொல்கிறது. வாழ்க,..
தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
G.M Balasubramaniam //
கவிதைக்கு ஒரு இலக்கணம். . ?
இலக்கணம் எனச் சொல்ல முடியாது
ஒரு மாறுதலான யோசனை அவ்வளவே
யோசித்துப் பார்த்தால் நமக்கும் கவிதை காதல்
கடவுள் தவிர நினைத்தவுடன் இஷ்டத்திற்கு
எழுதுவதற்கு பிரச்சனையில்லாத பொருள்
வேறு என்னதான் இருக்கிறது
தங்கள் உடன் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அருணா செல்வம் //
நீங்கள் சொல்வதும் உண்மை தான் இரமணி ஐயா.
மரபில் எழுதுவது தான் கவிதைக்கு அழகென்று நினைத்து...நான் எதுகையையும் மோனையையும் அழகாக அடுக்கி...இலக்கணத்திற்காகச் சொல்லவந்ததைச் சுறுக்கி...
இயற்சீர் வெண்டளையிலும், வெண்சீர் வெண்டளையிலும் விரவி வந்தள்ளதா என்று பார்த்து...தளை தட்டுகிறதா... என்று ஆராய்ந்து எழுதினாலும்... சாதாரண புதுக்கவிதைக்குக் கிடைக்கும் மதிப்பு கூட கிடைப்பதில்லை.//
உரைநடையை ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதிவிட்டு அதைக் கவிதை என்று சொல்வது நியாயமா என்றும் எனக்குத் தெரியவில்லை//
.நான் உங்கள் படைப்புகளின் பரம ரசிகன்
பட்டுச் சேலை கட்டி தலை நிறையப் பூச் சூடி
தரை பார்த்து தடம் பார்த்து நடந்து வரும்
பெண்ணைப் பார்க்க சந்தோஷமாகத்தான் உள்ளது
காலச் சூழல் பிழைப்பு அப்படி எல்லோராலும்
பவனி வர முடியவில்லை
ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்னால்
இப்போது ஜீன்ஸ் அணியும் பெண்களை நினைப்பதை போல
சல்வார் கமீஸ் சுடிதார் அணிந்த பெண்களை
சேலை கட்டும் பெண்களை ஒப்பிட்டு கொஞ்சம்
வித்தியாசமாகப் பார்த்த காலம் எனக்கு நன்றாகத் தெரியும்
நான் எழுத ஏதேனும் ஒரு விஷயம் கிடைத்தால்
வசன கவிதைக்கும் வசனத்துக்கும் இடையில்
(யாதோ )ஒரு வடிவத்தில் எழுதிவிடுகிறேன்
எழுத விஷயம் ஏதுமில்லை எழுத்தித்தான்
ஆகவேண்டும் எனில் சட்டென மரபுக் கவிதைக்கு
வந்து விடுகிறேன் அவ்வளவே.
தங்கள் வரவுக்கும் விரிவான அருமையான
சிந்திக்கத் தூண்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அப்பாதுரை //
உணர்வு கடத்தி - அழகான படிமம்.//
அந்த ஒரு வார்த்தையின் விரிவாகத்தான்
இதை எழுதினேன்
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சிறப்பான வரிகள்.
ஆம் கவிதைகள் காலத்தை சொல்லும் கண்ணாடிகள் தான் .மரபுக்கவிதைக்கு தமிழில் பண்டிதமாக வேண்டும். புதுக்கவிதைக்கு இலக்கணங்கள் தேவையில்லையே. காலத்திற்கேற்றார் போல் வளைந்து கொடுத்தால் தானே வாழ முடியும் .வளைந்து தான் கொடுக்கிறோமேயொழிய உடைந்து வேறு கிளைக்குத் தாவுவதில்லை . கவிதை அழகு..
தான் உணர்ந்ததை பிறர் உணரச் செய்பவை எவையோ
அவை மட்டுமே கவிதையாய் இருக்க முடியும்
ஏனெனில் கவிதை ஒரு உணர்வு கடத்தி "என்கிறேன்//
நீங்கள் சொல்வது உண்மைதான்.
கவிதை மனதில் உள்ள உணர்வுகளை வெளிப்படுத்தும் கண்ணாடி தான். நல்ல விளக்கம்.
King Raj //
மிகச்சரி...கவிதை உணர்வுகளின் வடிகாலும் ஆகுமே..!//
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சுடர்விழி //
அருமை! நான் அடிக்கடி யோசிப்பதுண்டு, கவிதை என்பது அறிவு சார்ந்ததா, உணர்வு சார்ந்ததா என்று! ஆனால் உணர்வான கவிதைதான் அடுத்தவரையும் உணர வைக்கும் என்று அழகாகச் சொல்லிவிட்டீர்களே!//
தங்கள் வரவுக்கும் விரிவான அருமையான
சிந்திக்கத் தூண்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மாதேவி //
உணர்வுகளின் வெளிப்பாடு நல்ல கவிதையாகின்றது//
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
.
மீனாக்ஷி //
Beautiful!//
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
s suresh //
கவிதையின் இலக்கணம் சொல்லிய கவிதை சிறப்பு! வாழ்த்துக்கள்! நன்றி!//
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சேக்கனா M. நிஜாம் .//
.
ரசித்து படித்தேன் !
அருமை/
/தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
உணர்வு கடத்தி...அருமையான சொல்லாடல் !
ஹேமா //
உணர்வு கடத்தி...அருமையான சொல்லாடல் !/
/
/தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
தான் உணர்ந்ததை பிறர் உணரச் செய்பவை எவையோ
அவை மட்டுமே கவிதையாய் இருக்க முடியும்
ஏனெனில் கவிதை ஒரு உணர்வு கடத்தி "என்கிறேன்
agree....
congratz..
Vetha.Elangathilakam.
kovaikkavi said...//
தான் உணர்ந்ததை பிறர் உணரச் செய்பவை எவையோ
அவை மட்டுமே கவிதையாய் இருக்க முடியும்
ஏனெனில் கவிதை ஒரு உணர்வு கடத்தி "என்கிறேன்
agree....
congratz..//
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வணக்கம்
ஐயா.
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்றுபார்வையிட முகவரி.
http://blogintamil.blogspot.com/2014/08/blog-post_16.html?showComment=1408144560192#c7901132577909697036
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment