வனவாசம் முடிந்து திரும்பும் ஸ்ரீராமனுக்காக
மாலைக்குப் பின் முதன் முதலாய்
மீண்டும் பகலைக் கண்ட அயோத்தி
ஒலி ஒளி வெள்ளத்தில் தத்தளிக்க
ஒழிய இடமில்லா நிசப்தமும் இருளும்
ஒதுங்கியிருந்த அந்தப்புரத்துள்
புகைப் போல் மெல்லப் பரவி
திடப் பொருளாய் உருமாறத் துவங்க
தலைவிரி கோலமாய் இருளோடு இருளாக
இறுகிப் போய்க் கிடந்தாள்
இளமையை யும் அழகையும் உணர்வையும்
காலக் கரைசலில் கரையவிட்ட ஊர்மிளை
அடக்குமுறைக்குப் பயந்திருந்த அடிமையாய்
அதுவரை அடங்கிக் கிடந்த பணிப்பெண் மெல்ல
"மகாராணி அச்சமாய் இருக்கிறது
மன்னரை வரவேற்கும் விதமாய்
ஒரு சிறு அகல் விளக்காவது ஏற்ற
அடிமையை அனுமதிக்க வேண்டும்"எனப் பணிகிறாள்
மெல்லப் புன்னகைத்த ஊர்மிளை
"நிஜத்துக்கு ஒளியும் ஒலியும் சரி
நிழலுக்கு எதற்கு ?
அதற்கு இருளும் நிசப்தமுமே போதும் "என்கிறாள்
அரண்மனை வாயிலில்
ஸ்ரீ ராம ஜெய கோஷம்
விண்ணைத் தொட்டுக் கொண்டிருக்கிறது
48 comments:
மெல்லப் புன்னகைத்த ஊர்மிளை
"நிஜத்துக்கு ஒளியும் ஒலியும் சரி
நிழலுக்கு எதற்கு ?
அதற்கு இருளும் நிசப்தமுமே போதும் "என்கிறாள்
ஆமாம், உண்மைதான் அருமையாக உணர்த்தியுள்ளீர்கள். நன்றி.
தம
நிஜமில்லாமல் நிழல் ஏது ஐயா...?
நிஜத்திற்கு ஆராதனை செய்தால் அது நிழலுக்கும் தானே பொருந்தும்.
சற்று குழப்பமான பதிவு.
நான் யோசித்துவிட்டு வருகிறேன்....இரமணி ஐயா.
நிழலுக்கு எதற்கு ?
அதற்கு இருளும் நிசப்தமுமே போதும் "
அருணா செல்வம் //
தனக்கு உண்மையான கணவனாக இல்லாது
ஸ்ரீ ராமனுக்கு விசுவாசமான தம்பியாகவே
இருந்த தனது கணவன் குறித்த வருத்தத்தை
லெட்சுமணனின் மனைவி வெளிப்படுத்துவதாக
சொல்லமுயன்றிருக்கிறேன்..தனித்து இயங்காத
நிழலை வேறு உறவுகள் ஏற்றுக் கொள்ளக் கூடும்
மனைவியால் முடியுமா என்ன ?
தங்கள் வரவுக்கும் சிந்திக்கவைத்த பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
semmalai akash //
ஆமாம், உண்மைதான் அருமையாக உணர்த்தியுள்ளீர்கள். நன்றி.//
தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கவியாழி கண்ணதாசன் //
நிழலுக்கு எதற்கு ?
அதற்கு இருளும் நிசப்தமுமே போதும் "//
தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
புரிதலுடன் கூடிய அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அய்யா!
நீங்கள் அருணாவிற்கு கொடுத்த-
விளக்கத்திற்கு பிறகுதான்-
எனக்கும் புரிந்தது....
பகிர்வுக்கு மிக்க நன்றி!
சீதையின் கஷ்டம் சொன்னவர்கள் ஊர்மிளையை மறந்தார்கள். கவனிக்காமல் விடப்பட்ட இன்னொரு கதாநாயகி.
ஊர்மிளையின் தியாகத்தையும் சோகத்தையும் யார் உணர்ந்தார்கள்.
இராமாயண காவியத்தில் விளக்கொளி தந்தவள் ஊர்மிளை.
ஒளியைக் கொடுத்துவிட்டதால் நிழலானாள்.அவளும். அருமையாக உணர்த்தி இருக்கிறீர்கள்.
வணக்கம்!
சீா்மிசை கொண்ட கம்பன்
செப்பிய விருத்த நுாலில்
ஊா்மிளை என்ற பெண்ணை
ஓரிரு அடியில் சொல்வான்!
பார்மிசை காணும் வண்ணம்
படைத்துள கவிதை கண்டேன்!
போ்மிசை ஓங்கும் வண்ணம்
பீடுடன் இராமன் காப்பான்!
கவிஞா் கி. பாரதிதாசன் - பிரான்சு
kambane@yahoo.fr
ஸ்ரீராம். //
சீதையின் கஷ்டம் சொன்னவர்கள் ஊர்மிளையை மறந்தார்கள். கவனிக்காமல் விடப்பட்ட இன்னொரு கதாநாயகி.//
தங்கள் உடன் வரவுக்கும்
புரிதலுடன் கூடிய அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வல்லிசிம்ஹன் //
ஒளியைக் கொடுத்துவிட்டதால் நிழலானாள்.அவளும். அருமையாக உணர்த்தி இருக்கிறீர்கள்//
தங்கள் உடன் வரவுக்கும்
புரிதலுடன் கூடிய அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் //
பார்மிசை காணும் வண்ணம்
படைத்துள கவிதை கண்டேன்!
போ்மிசை ஓங்கும் வண்ணம்
பீடுடன் இராமன் காப்பான்!//தங்கள் ஆசியுடன் கூடிய
கவிதைப் பின்னூட்டம் என் பாக்கியம்
வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
//"நிஜத்துக்கு ஒளியும் ஒலியும் சரி
நிழலுக்கு எதற்கு ?
அதற்கு இருளும் நிசப்தமுமே போதும் "//
சரியாக தான் சொல்லியிருக்கிறார். அவரின் துன்பம் அவருக்கு...
யாராலும் கவனிக்கப் படாத ஊர்மிளையின் பார்வையில் யோசித்திருப்பது சிறப்பு. பாவம் அவள் என்ன தவறு செய்தாள்?
"நிஜத்துக்கு ஒளியும் ஒலியும் சரி
நிழலுக்கு எதற்கு ?
பரிதாபம் அள்ளிக்கொண்டு போகிறது.
த.ம.5
கோவை2தில்லி //
சரியாக தான் சொல்லியிருக்கிறார். அவரின் துன்பம் அவருக்கு...//
தங்கள் உடன் வரவுக்கும்
புரிதலுடன் கூடிய அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
T.N.MURALIDHARAN //
யாராலும் கவனிக்கப் படாத ஊர்மிளையின் பார்வையில் யோசித்திருப்பது சிறப்பு.//
தங்கள் உடன் வரவுக்கும்
புரிதலுடன் கூடிய அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வித்தியாசமான புனைவு
மெல்லப் புன்னகைத்த ஊர்மிளை
"நிஜத்துக்கு ஒளியும் ஒலியும் சரி
நிழலுக்கு எதற்கு ?
அதற்கு இருளும் நிசப்தமுமே போதும் "என்கிறாள்//
அற்புதம்! நன்றீ ஐயா!
ஒருவரும் நினைக்காத ஊர்மிளையயை ஊர் அறியச் செய்தீர்! எனக்கே மறந்து விட்டபெயரை நினைவு படுத்தினீர்! நன்றி!
சிலிர்க்க வைத்த சிந்தனை. ஒரு ராமனை ஆராதிக்க எத்தனை பேரை அனாதையாக்கியிருக்கிறோம்!!
தற்காலத்திலும் பல மனைவிமார் மனதினுள் இப்படி எண்ணங்கள் ஆழ்ந்து கிடக்கின்றன....அருமை!
வாரே வாஹ்..வாஹ்!
அருமை..வாழ்த்துக்கள்!
நிசப்தம்தான் உண்மையை உரக்கச் சொல்லி வைக்கும்.அழகான உண்மை !
மொத்தமாக மறந்துவிட்ட ஒரு பாத்திரம் ஊர்மிளையுடையது....
அவரைப் பற்றிய கவிதை நன்று.
சிறு கவிதையில் அழகாய் சொல்லி இருக்கின்றீர்கள்.வித்தியாசமான புனைவு.வாழ்த்துக்கள் சார்
அழ. பகீரதன் //
.
வித்தியாசமான புனைவு//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
பாடப் பெறாத தலைவிக்கு ஒரு அருமையான, உணர்வு பூர்வமான கவிதை!
Seshadri e.s. //
அற்புதம்!//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
புலவர் சா இராமாநுசம் //
ஒருவரும் நினைக்காத ஊர்மிளையயை ஊர் அறியச் செய்தீர்! எனக்கே மறந்து விட்டபெயரை நினைவு படுத்தினீர்! நன்றி!//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அப்பாதுரை //
சிலிர்க்க வைத்த சிந்தனை. ஒரு ராமனை ஆராதிக்க எத்தனை பேரை அனாதையாக்கியிருக்கிறோம்!!//
தங்கள் உடன் வரவுக்கும்
புரிதலுடன் கூடிய அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
koodal bala //
தற்காலத்திலும் பல மனைவிமார் மனதினுள் இப்படி எண்ணங்கள் ஆழ்ந்து கிடக்கின்றன....அருமை!//
தங்கள் பின்னூட்டத்தின் மூலம்
வேறு ஒரு விசாலமான அர்த்தம்
இருப்பது புரிய மகிழ்வு கொண்டேன்
வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ரமேஷ் வெங்கடபதி //
வாரே வாஹ்..வாஹ்!
அருமை..வாழ்த்துக்கள்!/
/உற்சாகத்துடன் கூடிய தங்கள் பின்னூட்டம்
அதிக சந்தோஷம் தருகிறது
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ஹேமா //
நிசப்தம்தான் உண்மையை உரக்கச் சொல்லி வைக்கும்.அழகான உண்மை !//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வெங்கட் நாகராஜ் //
.
மொத்தமாக மறந்துவிட்ட ஒரு பாத்திரம் ஊர்மிளையுடையது....
அவரைப் பற்றிய கவிதை நன்று//
தங்கள் உடன் வரவுக்கும்
புரிதலுடன் கூடிய அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
.
ஸாதிகா //
.
சிறு கவிதையில் அழகாய் சொல்லி இருக்கின்றீர்கள்.வித்தியாசமான புனைவு.வாழ்த்துக்கள் சார்//
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Ranjani Narayanan //
பாடப் பெறாத தலைவிக்கு ஒரு அருமையான, உணர்வு பூர்வமான கவிதை!.
.தங்கள் உடன் வரவுக்கும்
புரிதலுடன் கூடிய அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//
நல்லதொரு சிந்தனை! உண்மையில் ஊர்மிளை தான் இராமயணத்தில் பாராட்டப்படவேண்டியவள்! அவளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த தங்கள் கவிதை மிகவும் சிறப்பு! நன்றி!
ராமாயணக் காவியத்தில் ராமனின் நிழலாய் இருந்ததால் லட்சுமணன் போற்றப் பட்டான். அவனை நிழல் என்பதால் அவன் மனைவி ஆதங்கப் படுகிறாள்.... ஹூம்....! ஒரு கதையில் எல்லோரையும் நாயகர்களாக்க முடியாதே. ராமன் இருக்குமிடம் அயோத்தி என்று சீதை கானகம் சென்றதுபோல் ஊர்மிளை செல்லவில்லையே. இருந்தாலும் வித்தியாசமான சிந்தனை. பாராட்டுக்கள்.
அருமை வித்தியாசமான சிந்தனை பாராட்டுக்கள்
வித்தியாசமான சிந்தனைக் களம்!
சிலரை வெளிச்சத்தில் ஆழ்த்துகிறது!.
வாழ்த்துகள்!.
//"நிஜத்துக்கு ஒளியும் ஒலியும் சரி
நிழலுக்கு எதற்கு ?
அதற்கு இருளும் நிசப்தமுமே போதும் "//
கிளாஸ்! படிச்சு கலங்கி போயிட்டேன். மனசுல இடி இறங்கின மாதிரி ஒரு உணர்வு.
s suresh //
நல்லதொரு சிந்தனை! உண்மையில் ஊர்மிளை தான் இராமயணத்தில் பாராட்டப்படவேண்டியவள்! அவளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த தங்கள் கவிதை மிகவும் சிறப்பு! நன்றி!//.
தங்கள் உடன் வரவுக்கும்
புரிதலுடன் கூடிய அருமையான
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//
G.M Balasubramaniam //
வித்தியாசமான சிந்தனை. பாராட்டுக்கள்./
/தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Student Drawings //
அருமை வித்தியாசமான சிந்தனை பாராட்டுக்கள்//
/தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
தோழன் மபா, தமிழன் வீதி //
வித்தியாசமான சிந்தனைக் களம்!
சிலரை வெளிச்சத்தில் ஆழ்த்துகிறது!.
வாழ்த்துகள்!.../
தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி /
மீனாக்ஷி //
கிளாஸ்! படிச்சு கலங்கி போயிட்டேன். மனசுல இடி இறங்கின மாதிரி ஒரு உணர்வு.//
தங்கள் உணர்வு பூர்வமான பின்னூட்டம்
அதிக உற்சாகமளிக்கிறது.
வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
Post a Comment