Wednesday, January 30, 2013

சுயம்

குளங்களில் கண்மாயில்
விளைந்து கிடக்கிற
வளமான களிமண்ணெடுத்து
கையில் இருக்கிற அச்சினில்
திணித்துத் திணித்து எடுக்கிறேன்
கண்ணனும் சிவனும்
தொந்திப் பிள்ளையாரும்
 மிக மிக அழகான
பொம்மைகளாய்
என் எதிரில் சிரிக்கிறார்கள்

ஆயினும் வீட்டில்
எப்போதும் பூசைக்கு
என் பேரன் கைகளால் பிசைந்து
அரை நாள் செலவ்ழித்து
மீண்டும் மீண்டும் திருத்திப்
பிள்ளையாரைப் போலச  செய்திருக்கிற
விக்ரகத்தைத்தான் பயன்படுத்துகிறேன்

பிள்ளையர்ர் கூட
அதில் கு டியிருக்கத்தான்
விருப்பப்படுவார்ப்  போலப் படுகிறது
 எனக்கு


 மீள்பதிவு 

13 comments:

உஷா அன்பரசு said...

குழந்தையிடத்தில்தானே தெய்வத்தையும் காண முடிகிறது. அருமை!

”தளிர் சுரேஷ்” said...

உண்மைதான்! அச்சுப்பிள்ளையாரை விட கைகளில் பிடிக்கும் பிள்ளையாருக்கு மதிப்பு மட்டுமல்ல மனதிருப்தியும் அதிகம்! அழகான அருமையான கவிதை! நன்றி!

RajalakshmiParamasivam said...

ரமணி சார்,

உங்கள் கடவுள் பக்தியும் , பேரன் பாசமும் பளிச்சிடும் கவிதை.

நன்றி பகிர்விற்கு,

ராஜி

G.M Balasubramaniam said...

இதெல்லாம் அப்படியெல்லாம் தோன்றுவது சகஜமையா.! These are manifestations of LOVE.

தி.தமிழ் இளங்கோ said...

மீள்பதிவு என்று நினைக்கிறேன்! (ஏற்கனவே உங்கள் பதிவில் படித்ததாக நினைவு) தாத்தா – பேராண்டி இருவருக்கும் இடையே உள்ள பாசம் விவரிக்க முடியாததுதான்.

சாந்தி மாரியப்பன் said...

அருமை. குழந்தைகள் எதைச்செய்தாலும் கடவுள் அதை விரும்புவார்.

ராமலக்ஷ்மி said...

மிக அருமை.

ADHI VENKAT said...

அருமை. குழந்தைகள் எது செய்தாலும் அழகு தான்...:)

சசிகலா said...

அழகான ஓவியத்தை விடவும் குழந்தையின் கிறுக்கல் அபார அழகு தான்.

Unknown said...

குழந்தைகள் எது செய்தாலும் அழகு அழகு மட்டுமே ரமணி சார் சூப்பர்

Unknown said...

http://studentsdrawings.blogspot.in
மாணவர்களின் அருமையான படைப்புகள் அனைவரும் வருக

Avargal Unmaigal said...

சுயப் படைப்புதான் மனத்திற்கு சந்தோஷம் தருகிறது...


அட நீங்க தாத்தாவா? ஆனா பார்த்தா அப்படி தெரியவில்லையே....

கவியாழி said...

பேரனின் கைப்பட்டு பேரானந்தத்தோடு செய்த பிள்ளை யார் அல்லவா?

Post a Comment