பதிவர்கள் சந்திப்பில் முதன் முதலாக தனது அருமையானகவிதை நூலை வெளியிட்டு முத்திரை பதித்த கவிதாயினி சசிகலா அவர்களைத் தொடர்ந்துபுத்தகக் கண்காட்சியில்
கவியாழி கண்ணதாசன் அவர்கள்"அம்மா நீ வருவாயா அனபை மீண்டும் தருவாயா "என்கிற அருமையான கவிதை நூலை வெளியிட இருக்கிறார்கள்
இவரிடம் போனால் நல்லவிதமாக நாலு வார்த்தை சொல்வார்என நம்பி பெரியவர்களிடம் நல்ல நாளில் ஆசி பெறுதலைப் போன்றேஅல்லது முழுவதும் படித்து விட்டுத்தான் கருத்தினைச் சொல்வார்என்கிற நம்பிக்கையிலோ கவிதாயினி சசிகலாவைத் தொடர்ந்துகவியாழி அவர்களும் தன்னுடைய கவிதைகளை எனக்குஅனுப்பி என்னுடைய கருத்தினைக் கோரி இருந்தார்
மன்னர் வருகையின் முன்னால் " ராஜாதி ராஜ ராஜ கம்பீரராஜ மார்த்தாண்ட ராஜகுல திலக "என மன்னரின்அருமை பெருமைகளைச் சொல்லிப் போதல்தானேசிறப்பு மற்றும் நமது மரபும் கூட. அந்த வகையில்அவருடைய கவிதைகளுக்கு நான் அளித்த வாழ்த்துரையைஇங்கே பதிவு செய்வதில் பெருமை கொள்கிறேன்அவர் மென்மேலும் பல கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுகவி உலகுக்கு மட்டுமின்றி பதிவுலகிற்கும் பெருமை சேர்க்கவேணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
"கவிஞன் என்பவன் உணர்வுப்பூர்வமானவன்
அவன் கதாசிரியனைப் போல தனது கதாபாத்திரத்தையும்
சூழலையும் ஊதி ஊதிப் பெரிதாக்கி தான் சொல்லவேண்டிய
கருத்தை காது சுற்றி மூக்கைத்தொடுபவன் இல்லை
கவிஞன் நெத்தியடியாய் மனதோடு மட்டும்
பேசக் கூடியவன்தனது கருத்தைச் சாதிக்கவேண்டும் என்பதற்காக கட்டுரையாளரைப்போல வாதத்தின் திறனையும் அறிவையும்
வால் பிடித்துத் திரிபவன் இல்லை
இந்த இரண்டு விஷயங்களையும் மிகத் தெளிவாகத்
தெரிந்திருப்பதனால்தானோ என்னவோ
கவியாழி அவர்களின்கவிதைகளில் சுற்றி வளைத்துப்
பேசுபவையும்தேவையற்ற விளக்கங்களும் அறவே இல்லை
தீமைகளைச் சாடுவதில் உள்ள புயல்போன்ற
வேகமாகட்டும்மனிதாபிமானம் கொள்ளுமிடங்களில்
கொள்ளுகிறமயிலிறகின் மென்மையாகட்டும்
அவை வரிந்துதிணிக்கப் படாமல் இயல்பாகவே
அமைந்து விடுவதேஅவரது கவிதைகளின் சிறப்பு
ஒரு சராசரி மனிதன் கவிஞனாக பிறப்பெடுக்கவேண்டும்
எனில்அவன் காதலிக்கத் தெரிந்தவனாக இருக்கவேண்டும்,
காதலிப்பவனாக இருக்கவேண்டும்
இன்னும் சிறப்பானகவிதைகள் அவனிடம் இருந்து
வரவேண்டும் எனில்அவன் காதலில் தோற்றவனாக
இருக்கவேண்டும் என்பார்கள்
கவியாழி அவர்கள் அப்படித் தோற்றவராகத்
தெரியவில்லையாயினும்அவரது கவிதைகளில்
சொட்டும் காதல் ரசம்உண்மையில்படிப்பவர்களை
பிரமிக்கச் செய்வதோடுஇதுவரை காதல் உணர்வு
கொள்ளாதவர்களையும்நிச்சயம்
காதல் செய்யத் தூண்டும்அவரது கவிதைத் தொகுப்பில்
இந்த மூன்று சுவைகளும்அதிகமாக விரவிக்
கிடந்தாலும் நவரசங்களுக்குக் குறைவில்லை
பாயாசத்தில் முந்திரி என்றால் பொறுக்கி எடுக்கலாம்
அனைத்துமே முந்திரியெனில்அப்படியே தட்டோடு
தருதல்தானேஅறிவுடமை,
எனவே தனித்தனியாக கவிதை வரிகளை
தேர்ந்தெடுத்து விளக்கிக் கொண்டிராமல்
அவரது கவிதைகளைப்படித்து யான் பெற்ற இன்பத்தை
முழுமையாக நீங்களும் பெறுவதோடுமேலும்
கவியுலகுக்கு இன்னும் சிறப்பான பங்களிப்பை
கவியாழி அவர்கள்தர வாழ்த்த வேணுமாய்
அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் "
அன்புடன்
ரமணி
36 comments:
நன்றிங்க சார்,நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி மீண்டும் மீண்டும் இன்னும் நல்ல கவிதைகளைத் தருவேன் என்பதை உங்களின் மூலமாக தெரிவித்துகொள்கிறேன்
பதிவராக இருந்து நூல் வெளியிடும் கவியாழி கண்ணதாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். எங்களூர் நண்பர்கள் சின்ன சின்ன சிதறல்கள் அகிலா, பெண் எனும் புதுமை சரளா, மற்றும் கோவை நேரம் ஜீவா ஆகியோரும் தங்கள் புத்தகங்களை வெளியிடுகிறார்கள் அவர்களுக்கும் என் வாழ்த்துகள். இந்த முன்னேற்றம் அனைத்து பதிவர்களுக்கும் ஒரு உற்சாகத்தைக் கொடுக்கும்
ஆமாங்க கவிதை எழுத எல்லாராலும் முடியாதுதான், அதற்கு என்று தனிதிறமை வேண்டும்தான். நூல் வளியீட்டுக்கு கவியாழி கண்ணதாசன் சார், எழில் அறிமுகப்படுத்தி இருக்கும் சின்னச்சின்ன சிதறல்கள அகிலா, பெண் என்னும் புதுமை சரளா, கோவை நேரம் ஜீவா அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து இன்னும் பலரை ஊக்கபடுத்துவோம்.பல புத்தகங்கள் இன்னும் பலரால் வெளிவரட்டும்.கவியாழி அவர்களுக்கு வாழ்த்துகள்.
எல்லோராலும் கவிதை எழுத முடியாது.
அப்படி எழுதுபவர்களை பாராட்டுவது தானே அழகு.
கவிதை நூல் வெளியிடும் கவியாழி கண்ணதாசன் அவர்களுக்கும், மற்றவர்க்கும்,
அதை உங்கள் பதிவ் மூலம் தெரியபடுத்திய உங்களுக்கும் நன்றி.
ராஜி
ஐயாவின் ஆசி கிடைக்கவே என்னைப் போல் பலர் காத்திருக்கிறார்கள் வரிசையில்... என்பதை உணரும் போது அளவிலா மகிழ்ச்சி அடைகிறேன். உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் இனிய பொங்கல் தினங்கள் ..வாழ்த்துக்கள் !
கவிதைத் தொகுப்பு வெளியிடும் கவிஞர் கவியாழி கண்ணதாசன் அவர்களுக்கு வாழ்த்துகள். சிறப்பான பகிர்வு.
த.ம. 5
கவிஞனைப் பாராட்டும்போது, கதை எழுதுபவர்களையும் கட்டுரை எழுதுபவர்களையும் குறைவாக மதிப்பிடாமல் இருந்திருக்கலாமோ. கவியாழி கண்ணதாசனுக்கு வாழ்த்துக்கள்.
கவிதை தொகுப்பு வெளியிடும் கவிஞ்ர் கவியாழி கண்ணதாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
கண்ணதாசன் அவர்கள் கவிதை நூலுக்கு நீங்கள் அளித்த வாழ்த்துரை அருமை.
சசிக்கலாவிற்கும் மற்றும் புத்தகம் வெளியிடுபவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.
கவிதை தொகுப்பு வெளியிடும் கவிஞ்ர் கவியாழி கண்ணதாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.நேற்று உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டு பெருமை கொண்டேன் இன்று இங்கே உங்கள் புகழ் உயர பறப்பதால் மீண்டும் சந்தோசம் ....
மேலும் புத்தகமாக வெளியிட்ட அணைத்து கவிஞர்களுக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் ......
கவிஞருக்கு வாழ்த்துகள்.
புத்தகம் வெளியிடுவது பெரிய விடயம்.
தொடர்ந்து எழுதுக... வெற்றி பெருக...
பொங்கல் வாழ்த்துகளுடன்...
நிற்க ...
புத்தகத்தை பாராட்டி
நல் வாழ்த்துரை நல்கிய உங்களுக்கும்
பொங்கல் நன்னாள் வாழ்த்துகள்.
அருமையான அணிந்துரை!ரமணியின் முத்திரை பதிந்த எழுத்து.
சர்க்கரைப் பொங்கல் வாழ்த்துகள்
இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!
நல்லதொரு வாழ்த்துரை! நானும் க்யுவில் நின்று கொண்டிருக்கிறேன்! புத்தக வெளியீடு செய்யும் கவிஞருக்கு வாழ்த்துக்கள்!
கவியாழி கண்ணதாசன் அவர்களுக்கு வாழ்த்துகள்.
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்-எழில்
கவியாழி கண்ணதாசன் அவருக்கு வாழ்த்துக்கள். மேன்மேலும் பல்வேறு படைப்புகளை தர வேண்டுகிறோம். :)
கவியாழி கண்ணதாசன் //
மேன்மேலும் பல்வேறு படைப்புகளை தர
வாழ்த்துக்கள்
ezhil //
எங்களூர் நண்பர்கள் சின்ன சின்ன சிதறல்கள் அகிலா, பெண் எனும் புதுமை சரளா, மற்றும் கோவை நேரம் ஜீவா ஆகியோரும் தங்கள் புத்தகங்களை வெளியிடுகிறார்கள் /
/தாங்கள் குறிப்பிட்டுள்ள பதிவர்கள் அனைவரும்
நான் விரும்பித் தொடர்ந்து தொடரும் பதிவர்களே
அவர்களுக்கு என மனமார்ந்த வாழ்த்துக்களைச்
சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்
தங்க்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
எழுத்தாளப்பதிவர்கள் அனைவருக்கும் இனிய பாராட்டுகள்.
கவிஞருக்கு என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்....
துளசி கோபால் //
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
இனிய மனம் கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்
மகேந்திரன் //
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
இனிய மனம் கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்
பூந்தளிர் //
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கோவி //
பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து இன்னும் பலரை ஊக்கபடுத்துவோம்/
/தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
rajalakshmi paramasivam ..//
கவிதை நூல் வெளியிடும் கவியாழி கண்ணதாசன் அவர்களுக்கும், மற்றவர்க்கும்,
அதை உங்கள் பதிவ் மூலம் தெரியபடுத்திய உங்களுக்கும் நன்றி./
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//
Sasi Kala ..
ஐயாவின் ஆசி கிடைக்கவே என்னைப் போல் பலர் காத்திருக்கிறார்கள் வரிசையில்... என்பதை உணரும் போது அளவிலா மகிழ்ச்சி அடைகிறேன்./
/தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//
இராஜராஜேஸ்வரி //.
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//
ரமேஷ் வெங்கடபதி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
//
வெங்கட் நாகராஜ் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
மகேந்திரன்//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
துளசி கோபால் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
இக்பால் செல்வன்//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
ரியாஸ் அஹமது //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
Post a Comment