Friday, February 15, 2013

சலிப்பில் விளையும் விழிப்பு

எல்லாமே எழுதியாகிவிட்டது
எழுதுவதற்கு இனி
என்ன இருக்கிறது என்கிற எண்ணம்
உங்களுக்குள் இப்போதெல்லாம்
அடிக்கடி வந்து போகிறதா ?

சொல்லவேண்டியதெல்லாம்
விதம் விதமாய்
சொல்லியாகிவிட்டது
வித்தியாசமாய்ச் சொல்லஇனி
என்ன இருக்கிறதுஎன்கிற கவலை
உங்களுக்குள் இப்போதெல்லாம்
அடிக்கடி தோன்றத் துவங்குகிறதா ?

எழுதுவதால்
என்னமாறுதல் ஏற்பட்டுவிடப்போகிறது ?
இதுவரை எழுதியதில்
என்னதான் பெரிய விளைவுகளைக் கண்டோம் ?
இனியும் எழுதுவதில்
என்ன பயன்தான் இருக்கப் போகிறது
என்கிற ஆதங்கம் உங்களுக்குள்
விஸ்வரூபமெடுத்து உங்களைத்
தூங்கவிடாது செய்கிறதா ?

இனி கவலையை விடுங்கள்
இப்போது முதல்
அதிக சந்தோஷம் கொள்ளுங்கள்

ஏனெனில் இத்தகைய
எண்ணமும்
 கவலையும்
ஆதங்கமும்
ஊற்றெடுத்த பின்புதான்
படைப்பாளிகள் பலர்

தாங்கள் சராசரிகள் இல்லைஎன்பதை
நிரூபிக்க அதிகம் முயன்று இருக்கிறார்கள்

தங்கள் படைப்பும்
சராசரித்தனமானதில்லை என நிரூபிக்க
அதிகத் திறன் பெற உழைத்திருக்கிறார்கள்

அதன் விளைவாய்
காலம் கடக்கும்  பல அரியபடைப்புகளை
உலகுக்கு பரிசாகக் கொடுத்திருக்கிறார்கள்

என்வே
இனி கவலைப் படுவதை விடுங்கள்
இப்போது முதல்
அதிகச் சந்தோஷம் கொள்ளத் துவங்குங்கள்







28 comments:

உஷா அன்பரசு said...

கொஞ்ச நாட்களாக உங்களை காணவில்லையே ஐயா.. தினமும் உங்கள் பதிவை தேடி பார்ப்பதுண்டு. பொருத்தமான கவிதை!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தன்னம்பிக்கை வரிகள்....


உன்மைதான் சலிப்பு தான் ஒருவரை அடுத்த பரிணாமத்திற்கு அழைத்துக்செல்கிறது...

கவியாழி said...

உண்மைதான் சலிப்பு வேண்டாம் .உங்களது படைப்புகள் உலகுக்கு பரிசாகக் கொடுத்திருக்கிறார்கள்

RajalakshmiParamasivam said...

நலமா? கொஞ்ச நாட்களாக உங்களை வலைப் பக்கம் காணோமே!

நல்ல அருமையான கவிதை வடித்துள்ளீர்கள்.

நன்றி பகிர்விற்கு.

சசிகலா said...

என்ன இது நாம நினைப்பதை அப்படியே எழுதியிருக்காங்களே என்று நினைத்தேன் தன்னம்பிக்கை தரும் விதமாக முடித்த விதம் சிறப்பு ஐயா.

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றாகச் சொன்னீர்கள்... சலிப்பு ஏற்பட்டாலே இழப்பு ஆரம்பம் (மனதிலும்)...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

மாற்றுப் பார்வை.சலிப்பை நிச்சயம் தடுக்கும்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

த,ம.5

kowsy said...

சரியாகச் சொன்னீர்கள் . ஒவ்வொருவர் மனதினுள்ளும் புகுந்து வந்திருக்கின்றீர்கள். ஆனால் உண்மைதான் ஒவ்வொரு படைப்பும் உலகத்திற்கு எதோ ஒரு செய்தியைச் சொல்லிச் செல்லும் என்பது வாஸ்தவம்தான். எழுதிய கை என்றும் ஓய்வதில்லை . எதையும் பிறர்க்கு எடுத்துக் காட்டத் தவறுவதில்லை

Unknown said...

அகலப் பார்வை ..நமக்கு எழுதும் விஷயங்களை அள்ளித் தருமே ! பரந்து விரிந்த பதிவுகள்..படிப்பவரையும் சலிப்பில் ஆழ்த்தாமல் ..தொடர்ந்து வரச் செய்யுமே ! (தங்களின் ஆலோசனைகள் தான் இவை)

நன்று..வாழ்த்துக்கள்!

”தளிர் சுரேஷ்” said...

மிகவும் வித்தியாசமான கோணத்தில் சிந்தித்த கவிதை! அருமையான தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள்! நன்றி!

Anonymous said...

தலைப்பும், கவிதையும் அசத்தல்.

'சலிப்பு' இது நம்ப வாழ்கையை ஒட்டு மொத்தமா வீணாக்கிடும். சலியாத மனம் வேண்டும்னு பட்டர் அபிராமி கிட்ட வேண்டுவார். இது அபிராமி அந்தாதி விருத்தத்துல வரும். எப்படிப்பட்ட ஒரு தெளிந்த அறிவு இருந்திருந்தா பட்டர் இதை கேட்டிருப்பார்ன்னு எண்ணி எண்ணி எத்தனையோ முறை மாஞ்சு போயிருக்கேன், இன்னும் மாஞ்சு போறேன்.

வாழ்கையை கடைசி வரைக்கும் அழகா ரசனையோட வாழணும்னு விரும்பினா இந்த சலிப்புக்கு மனசுல இடமே கொடுக்க கூடாது.
நீங்க இந்த கவிதைல சலிப்பை தவிர்த்தால் சாதிக்கலாம்னு அருமையா, அழகா சொல்லிடீங்க.


கரந்தை ஜெயக்குமார் said...

சொல்லும் பொருளும் அருமை அய்யா.

சாந்தி மாரியப்பன் said...

சலிப்பு தோன்றுவது இயற்கைதான். ஆனாலும் அதெல்லாம் நீறு பூத்த நெருப்புதான். உள்ளிருக்கும் கனல் அணையாதவரைக்கும் நம் படைப்பாற்றலும் என்றுமே அழியாது.

SURYAJEEVA said...

உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொண்டது போல் எனக்கு படுகிறது, அது பலருக்கும் பயன் பட போகிறது

Asiya Omar said...

மிக அருமை..!

உஷா அன்பரசு said...

நிறைய சமயங்களில் மனிதர்களுக்கு தோன்றுவதுதான். அருமை ஐயா!

ADHI VENKAT said...

உற்சாகமூட்டும் வரிகள்.

இராஜராஜேஸ்வரி said...

இப்போது முதல்
அதிகச் சந்தோஷம் கொள்ளத் துவங்குங்கள்

அற்புதமான மெருகேறிய வரிகள்.. பாராட்டுக்கள்..

RAMA RAVI (RAMVI) said...

மிகவும் உற்சாகமூட்டும் விதமான பதிவு. மிக்க நன்றி சார்.

Unknown said...

உண்மை! சலிப்பு வரத்தான் செய்கிறது!

G.M Balasubramaniam said...


எழுதுவதற்கு பொருளாஇல்லை. ஆனால் எழுத சில சமயம் சலிப்பு தோன்றுவது உண்மை.இனிமேல் தொடர்ந்து எழுதும் போது ” நான் சராசரிக்கும் மேலே “ என்று எண்ணலாம் என்கிறீர்கள். .நன்றி.

ஸ்ரீராம். said...

ஒரு முனையின் முடிவிலிருந்து தொடங்கும் புதிய தொடக்கம்!

Rekha raghavan said...

நல்ல கருத்துள்ள பதிவு.

ரேகா ராகவன்.

Anonymous said...

தயிர் சாதம் நல்லாருந்தது

Anonymous said...

அலுப்பா, சலிப்பா எதுவாயினும் நல்ல சிந்தனையே.
பயணம் தொடர வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

S.டினேஷ்சாந்த் said...

ருமையான தலைப்பு தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள் பிரமாதம்

ShankarG said...

'சலிப்பில் விளையும் விழிப்பு' ஆழ்ந்த அனுபவத்தின் வெளிப்பாடா? அல்லது கற்றும், கேட்டும் தெரிந்து கொண்டதா? நல்லதொரு படைப்பு. ஆனாலும் சலிப்பு உறைந்து விடாமல் இருப்பதும் அவசியம் அல்லவா? ஏனெனில் தேடுதலுக்கான தாகம் நீர்த்துப் போய் விடும் அபாயத்திற்கும் இடமுண்டுதானே!

Post a Comment