Friday, May 10, 2013

உன்னழகுப் போதையிலே........

சேலைகட்டி அந்திவேளை
நீநடந்து போகையில
பாலையான சாலைகூட
சோலையாகிப் போகுதடி

விட்டுவிட்டு பார்த்தபடி
எட்டுவைச்சுப் போகையிலே
பட்டமரம் துளிர்க்குதடி
பாதையெல்லாம் மணக்குதடி

குடமெடுத்து நீரெடுத்து
இடுப்பசைய நடக்கையிலே
சொரணயத்த வீதிகூட
சொர்க்கலோகம் ஆகுதடி

அன்னமென நீ நடந்து
சொர்ணமென்னைக்  கடக்கையிலே
ஒன்னுமத்த கரிநாளும்
திரு நாளாய் மாறுதடி

நீநடந்த பாதையிலே
நான்நடந்து போனாலே
வானகத்தில் நடப்பதுபோல்
மனம்மகிழ்வு கொள்ளுதடி

உன்னழகு போதையிலே
நாளெல்லாம் நான்உளறும்
ஒன்னுமத்த வார்த்தைகூட
கவிதைபோலத் தோணுதடி

38 comments:

Ranjani Narayanan said...

காதல் போதை நன்றாகத் தெரிகிறது உங்கள் கவிதையில்!
இல்லையென்றால் இத்தனை அருமையான கவிதையை 'ஒன்னுமத்த' வார்த்தை என்று கூறி யிருப்பீர்களா? எல்லாம் அவள் அழகு தரும் போதை!

கே. பி. ஜனா... said...

காதல் போதைக் கவிதை ஜோர்!

இராஜராஜேஸ்வரி said...

ஒன்னுமத்த வார்த்தைகூட
கவிதைபோலத் தோணுதடி

அழகுப்போதை கவிதை..!

மகேந்திரன் said...

என்ன ஒரு சந்தநடை...
அருமை அருமை...
" கன்னியின் கடைக்கண் பார்வையொன்று போதும்
மண்ணில் குமரற்கு மாமலையும் ஒரு கடுகாம்""
வாசிக்க வாசிக்க இனிமையாக இருக்கிறது கவிதை...
வாழ்த்துக்கள் ரமணி ஐயா ..

வெற்றிவேல் said...

காதல் போதை......

அழகா இருக்கு...

கோமதி அரசு said...

ஒன்னுமத்த வார்த்தைகூட
கவிதைபோலத் தோணுதடி//
காதல் கவிதை அருமை.

தி.தமிழ் இளங்கோ said...

போதையை வெறுக்கும் உலகம், காதல் போதையை மட்டும் ரசிக்கிறது. உங்கள் பழைய கல்லூரி நோட்டில் நீங்கள் எழுதிய கவிதைபோல் தெரிகிறது.

உஷா அன்பரசு said...

//உன்னழகு போதையிலே
நாளெல்லாம் நான்உளறும்
ஒன்னுமத்த வார்த்தைகூட
கவிதைபோலத் தோணுதடி//
ஆஹா காதலை அழகாத்தான் சொல்லியிருக்கிங்க.
த.ம -5

Unknown said...

குடமெடுக்கும் பெண்கள்..!

ஹூம்..அந்த நாளும் வந்திடாதோ..?

வாசிக்க இனிமை !

அம்பாளடியாள் said...

போதை தரும் காதல் கவிதை அருமை !
வாழ்த்துக்கள் ஐயா மேலும் தொடரட்டும் .

திண்டுக்கல் தனபாலன் said...

மயக்க வைக்கும் போதை...

வாழ்த்துக்கள் ஐயா...

கரந்தை ஜெயக்குமார் said...

அனுபவ வரிகள் போலவே தோன்றுகினறது அய்யா.

மாதேவி said...

காதல் கவி அருமை.

”தளிர் சுரேஷ்” said...

காதல் கமழும் வரிகள்! அருமையான நாட்டுப்புற கவிதை! நன்றி!

அப்பாதுரை said...

மாறுதல் கவிதை மனதுக்கு ஆறுதல் கவிதை.

கவியாழி said...

பெண்களின் அழகே போதைதானே. இருந்தும் உங்கள் கவிதை மேலும் போதையேற்றுகிறது

சிவகுமாரன் said...

அட அட அட அட
துள்ளித் துள்ளித் ஓடுகிறது கவிதை.
தங்களின் " அவளைப்" போலே

ananthu said...

காதல் போதைக்கு வயதில்லை என்று நிரூபித்துவிட்டீர்கள் ...

G.M Balasubramaniam said...


மீசை நரைட்தாலும் ஆசை நரைக்கவில்லை. மனசுக்கு வயசேது ? கவிதை ரசனை அருமை.

Yaathoramani.blogspot.com said...

Ranjani Narayanan //
காதல் போதை நன்றாகத் தெரிகிறது உங்கள் கவிதையில்!
இல்லையென்றால் இத்தனை அருமையான கவிதையை 'ஒன்னுமத்த' வார்த்தை என்று கூறி யிருப்பீர்களா? எல்லாம் அவள் அழகு தரும் போதை//

முதல் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி


!

Yaathoramani.blogspot.com said...

கே. பி. ஜனா... //
.
காதல் போதைக் கவிதை ஜோர்!//

உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

இராஜராஜேஸ்வரி//

ஒன்னுமத்த வார்த்தைகூட
கவிதைபோலத் தோணுதடி
அழகுப்போதை கவிதை.//

உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மகேந்திரன் //
என்ன ஒரு சந்தநடை...
அருமை அருமை...
" கன்னியின் கடைக்கண் பார்வையொன்று போதும்
மண்ணில் குமரற்கு மாமலையும் ஒரு கடுகாம்""
வாசிக்க வாசிக்க இனிமையாக இருக்கிறது கவிதை...
வாழ்த்துக்கள் ரமணி//

உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

இரவின் புன்னகை //
.
காதல் போதை......
அழகா இருக்கு..//

உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கோமதி அரசு//

ஒன்னுமத்த வார்த்தைகூட
கவிதைபோலத் தோணுதடி//
காதல் கவிதை அருமை.//

உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தி.தமிழ் இளங்கோ s//
.
போதையை வெறுக்கும் உலகம், காதல் போதையை மட்டும் ரசிக்கிறது. உங்கள் பழைய கல்லூரி நோட்டில் நீங்கள் எழுதிய கவிதைபோல் தெரிகிறது.//

உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

உஷா அன்பரசு //

//உன்னழகு போதையிலே
நாளெல்லாம் நான்உளறும்
ஒன்னுமத்த வார்த்தைகூட
கவிதைபோலத் தோணுதடி//
ஆஹா காதலை அழகாத்தான் சொல்லியிருக்கிங்க.//

உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ரமேஷ் வெங்கடபதி //
.
குடமெடுக்கும் பெண்கள்..!
ஹூம்..அந்த நாளும் வந்திடாதோ.//

அடடா ,,,குடம் வயதைக் காட்டிக்
கொடுத்துவிட்டதே
வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

.

Yaathoramani.blogspot.com said...

அம்பாளடியாள் //

போதை தரும் காதல் கவிதை அருமை !
வாழ்த்துக்கள் ஐயா மேலும் தொடரட்டும் //.

உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன்//

மயக்க வைக்கும் போதை...//

உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கரந்தை ஜெயக்குமார் //

அனுபவ வரிகள் போலவே தோன்றுகினறது /

/உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மாதேவி //

காதல் கவி அருமை//./

உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

s suresh //

காதல் கமழும் வரிகள்! அருமையான நாட்டுப்புற கவிதை! நன்றி!//

உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

அப்பாதுரை s//
\
மாறுதல் கவிதை மனதுக்கு ஆறுதல் கவிதை/

/உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி


.

Yaathoramani.blogspot.com said...

கவியாழி கண்ணதாசன் //

பெண்களின் அழகே போதைதானே. இருந்தும் உங்கள் கவிதை மேலும் போதையேற்றுகிறது//

/உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சிவகுமாரன் //

அட அட அட அட
துள்ளித் துள்ளித் ஓடுகிறது கவிதை.
தங்களின் " அவளைப்" போலே//

/உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ananthu //

காதல் போதைக்கு வயதில்லை என்று நிரூபித்துவிட்டீர்கள் ...///

உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

மீசை நரைட்தாலும் ஆசை நரைக்கவில்லை. மனசுக்கு வயசேது ? கவிதை ரசனை அருமை./

உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

/

Post a Comment