கோழையை வென்று
வீரனெனப் பெயர் பெறுவதைவிட
வீரனிடம் தோற்றுக் கோழையெனப்
பெயர் பெறுவது
நமக்குச் சிறந்ததாகப் படுவதாலா ?
கஞ்சன் தரும்
வள்ளல் பட்டத்தை விட
வள்ளல் தரும் கஞ்சன் பட்டம்
நமக்குக் கொஞ்சம்
உயர்வானதாகப் படுவதாலா ?
முட்டாளிடம் பெறும்
அறிஞன் பட்டத்தை விட
அறிஞன் தரும் முட்டாள் பட்டம்
நமக்குக் கூடுதல்
மகிழ்வளிக்கச் செய்வதாலா ?
நல்லவன் என
அயோக்கியன் தரும்.சான்றிதழை விட
நல்லவன் தரும்அயோக்கியச் சான்று
நம்மைக் கொஞ்சம்
பெருமை கொள்ளச் செய்வதாலா ?
சராசரி வாசகன் தரும்
கவியரசுப் பட்டத்தை விட
பதிவர்கள் தரும் "மொக்கைப்" பட்டம்
நமக்குக் கொஞ்சம்
அதிகப் பரவசம் தந்து போவதாலா ?
வீரனெனப் பெயர் பெறுவதைவிட
வீரனிடம் தோற்றுக் கோழையெனப்
பெயர் பெறுவது
நமக்குச் சிறந்ததாகப் படுவதாலா ?
கஞ்சன் தரும்
வள்ளல் பட்டத்தை விட
வள்ளல் தரும் கஞ்சன் பட்டம்
நமக்குக் கொஞ்சம்
உயர்வானதாகப் படுவதாலா ?
முட்டாளிடம் பெறும்
அறிஞன் பட்டத்தை விட
அறிஞன் தரும் முட்டாள் பட்டம்
நமக்குக் கூடுதல்
மகிழ்வளிக்கச் செய்வதாலா ?
நல்லவன் என
அயோக்கியன் தரும்.சான்றிதழை விட
நல்லவன் தரும்அயோக்கியச் சான்று
நம்மைக் கொஞ்சம்
பெருமை கொள்ளச் செய்வதாலா ?
சராசரி வாசகன் தரும்
கவியரசுப் பட்டத்தை விட
பதிவர்கள் தரும் "மொக்கைப்" பட்டம்
நமக்குக் கொஞ்சம்
அதிகப் பரவசம் தந்து போவதாலா ?
46 comments:
சராசரி வாசகன் தரும்
கவியரசுப் பட்டத்தை விட
பதிவர்கள் தரும் "மொக்கைப்" பட்டம்
நமக்குக் கொஞ்சம்
அதிகப் பரவசம் தந்து போவதாலா ?
யாதோ...!
//சராசரி வாசகன் தரும் கவியரசுப் பட்டத்தை விட பதிவர்கள் தரும் "மொக்கைப்" பட்டம்//
ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !
மொக்கை என்றால் என்னவென்று மேலும் விபரமாக [உதாரணங்களுடன்] ஓர் பதிவு கொடுத்தால் நல்லது.
ஏன் என்ற கேள்வியே நானும் கேட்கிறேன்.
பத்திரிக்கைகளுக்கு அனுப்பி அவை ஏற்கப்படவில்லை என்றால் ஏற்படும் ஏமாற்றம் இங்கு இல்லை. அதனால் பதிவராகத் தொடர்கிறோம் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்தக் கருத்தை கவிதையில் சொல்ல வரவில்லை எனக்கு.
மொக்கை பட்டம் - ஹா...ஹ....
நல்லவன் என
அயோக்கியன் தரும்.சான்றிதழை விட
அயோக்கியன் தரும் நல்லவனெனும் சான்று...????
மாற்றி எழுத வேண்டும் என்று நினைக்கிறேன் இரமணி ஐயா.
ஏன் தொடர்கிறேன்....?
எனக்குள் நானும் கேட்டுக்கொண்ட கேள்வி இது.
உங்களின் கவிதை தான் இதற்கு பதிலா என்றும் எனக்குத் தெரியவில்லை.
யோசிக்கத் துாண்டிய பதிவு.
அருமை இரமணி ஐயா.
அருணா செல்வம் //
/சரி செய்து விட்டேன்
உடன் வரவுக்கும் தவறினைச்
சுட்டிக்காட்டியமைக்கும் மனமார்ந்த நன்றி
இராஜராஜேஸ்வரி //
உடன் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வை.கோபாலகிருஷ்ணன் //
தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
தாங்கள் மொக்கைப் பதிவே போடாத
காரணத்தால் அது குறித்து அறிந்திருக்க
வாய்ப்பில்லை என்பது சரிதான்
(மொக்கை குறித்தே ஒரு மொக்கைப் பதிவு போடவா ? )
Sasi Kala //
உங்களிடன் இருந்தும் இது குறித்து ஒரு
பதிவு வரும் என நினைக்கிறேன்
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
முரண் தொடை!
Ranjani Narayanan //
பத்திரிக்கைகளுக்கு அனுப்பி அவை ஏற்கப்படவில்லை என்றால் ஏற்படும் ஏமாற்றம் இங்கு இல்லை. அதனால் பதிவராகத் தொடர்கிறோம் என்று எனக்குத் தோன்றுகிறது./
/அப்படிச் சொல்லமுடியாது
சினிமாவில் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும்
நாடகத்தில் நடிப்பதை நடிகர் திலகம் போன்ற
சிறந்த நடிகர்கள் விரும்பியதன் காரணமே
அவர்கள் நடிப்பின் மீது கொண்டிருந்த காதலும்
அவர்களது நடிப்பின் மீது அவர்கள் கொண்டிருந்த
அசைக்கமுடியாத நம்பிக்கையும்
ரசிகர்களின் நேரடி பாராட்டுதைலைப் பெறும் சுகமும்
என நினைக்கிறேன்.பதிவுகளுக்கும் இது பொருந்தும்
என நினைக்கிறேன்
//Ramani S said...
வை.கோபாலகிருஷ்ணன் //
//தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி//
சந்தோஷம்.
தாங்கள் மொக்கைப் பதிவே போடாத
காரணத்தால் அது குறித்து அறிந்திருக்க
வாய்ப்பில்லை என்பது சரிதான்//
நான் ஒரு நான்-மொக்கை [அதாவது NON-மொக்கை] எனச் சொல்லிவிட்டீர்கள். அதுவ்ரை எனக்கு சந்தோஷமே.
//(மொக்கை குறித்தே ஒரு மொக்கைப் பதிவு போடவா ? )//
மொக்கை குறித்து மொக்கைப்பதிவுதான் போட வேண்டும் என்ற் அவசியம் இல்லை.. அது நல்ல SHARP ஆகவே இருக்கட்டும். ;)))))
பதிவுகள் எழுதுவதால் உடனுக்கு உடன் பாராட்டுகள் , வாழ்த்துக்கள் கிடைத்து விடுகிறது. நமக்கும் எழுதுவதால் மனதுக்கு மகிழ்ச்சி, மற்றும் மன நிறைவு ஏற்படுகிறது அதனால் பதிவராய் தொடர்கிறோம் என நினைக்கிறேன்.
//இராஜராஜேஸ்வரி said...
சராசரி வாசகன் தரும்
கவியரசுப் பட்டத்தை விட
பதிவர்கள் தரும் "மொக்கைப்" பட்டம்
நமக்குக் கொஞ்சம்
அதிகப் பரவசம் தந்து போவதாலா ?
யாதோ...!//
ஒரே சொல்லில் கருத்துச்சொல்லி அசத்தி விட்டார்களே!
வியந்து போனேன். மகிழ்ந்து போனேன். திரு யாதோ ரமணி சார்.
பதிவிட்ட உங்களுக்கும், முதல்; கருத்திட்ட அவர்களுக்கும் என் நன்றியோ நன்றிகள்.
புலவர் இராமாநுசம் //
முரண் தொடை!//
இரத்தினச் சுருக்கமான பின்னூட்டம்
மனம் கவர்ந்தது.வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கோமதி அரசு //
.
பதிவுகள் எழுதுவதால் உடனுக்கு உடன் பாராட்டுகள் , வாழ்த்துக்கள் கிடைத்து விடுகிறது. நமக்கும் எழுதுவதால் மனதுக்கு மகிழ்ச்சி, மற்றும் மன நிறைவு ஏற்படுகிறது அதனால் பதிவராய் தொடர்கிறோம் என நினைக்கிறேன்.''
மிகச் சரியான கருத்து
தங்கள் வரவுக்கும் அருமையான
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
எந்தப் பட்டம் வேண்டுமானாலும் கொடுக்கட்டும்...
பகிர்வதினால் பெறும் சந்தோசமே தனி...
வாழ்த்துக்கள் ஐயா...
எந்த பட்டம் வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் கொடுக்கட்டும் அய்யா.
ஆனால் நாள்தோறும் வாசிக்கிறோம், நாமும் வாசிக்கப்படுகிறோம் என்பதை உணர்வதில் உள்ள மகிழ்விற்கு ஈடு இணை ஏது அய்யா.
வித்தியாசமான சிந்தனை .உடனுக்குடன் கிடைக்கும் கருத்தே பதிவராய் தொடர்வதற்கு காரணம் என்றுதான் நானும் கருதுகிறேன்.
வித்தியாசமான கோணத்தில் எழுப்பப்பட்டிருக்கும் விடை தெரியா வினாக்கள்...இரசனைக்கு மட்டுமல்ல-சிந்திக்கவும் தூண்டியது தங்கள் பதிவு. வாழ்த்துக்கள் அன்பரே...!
த.ம. 6
ஏன் என்ற கேள்வியை நானும் கேட்கிறேன்
nalla sinthanai
//பதிவர்கள் தரும் "மொக்கைப்" பட்டம்
நமக்குக் கொஞ்சம்
அதிகப் பரவசம் தந்து போவதாலா ?//
"மொக்கை " பட்டம் கொடுப்பது நம் பதிவைப் படித்த பின் தான் .அதனால் தான் அதிகப் பரவசம் அடைகிறோமோ ,என்னமோ?
unmaithaanga ayyaa...!
பதிவுகளைப் படித்து “ மொக்கை “ என வேண்டுமானால் நினைத்துக் கொள்வார்களே தவிர பதிவுலகில் அநேகமாக எல்லாக் கருத்துரைகளும் ஆஹா, ஓஹோ தான். பதிவுகள் விமரிசிக்கப் படுவதில்லை என்பதுதானே நிஜம். திண்டுக்கல் தனபாலன் கூறுவதுபோல் பகிர்வது மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள்.
ஆர்த்தமுள்ள கவிதை ..
மனித மனம் தாகம் கொண்டது அது எப்போதும் தன் தாகத்தை தனித்து கொள்வதில்லை..அதேபோல் தேடுதல் ஒவ்வொரு பதிவிலும் பதிவுகளிலும் இருக்கிறது.
சிந்திக்கத்தூண்டும் கவிதை ஐயா!
சிலர் பதம் பார்க்கவும்,வதம் செய்யவும்,மதம் கொள்ளவும் இன்னும் சிலர் மரம் வெட்டவும்,மனம் தட்டவும்,டீக்கடை கிடைக்காமல் பேப்பர் படிக்க,மொக்கை பேச என.....
ஏதோ ஏதோ ஒரு மப்பு:)
திண்டுக்கல் தனபாலன்//
எந்தப் பட்டம் வேண்டுமானாலும் கொடுக்கட்டும்...
பகிர்வதினால் பெறும் சந்தோசமே தனி...//
மிகச் சரியான கருத்து
வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கரந்தை ஜெயக்குமார் //
எந்த பட்டம் வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் கொடுக்கட்டும் அய்யா.
ஆனால் நாள்தோறும் வாசிக்கிறோம், நாமும் வாசிக்கப்படுகிறோம் என்பதை உணர்வதில் உள்ள மகிழ்விற்கு ஈடு இணை ஏது அய்யா//
தங்கள் வரவுக்கும் தெளிவான
விரிவான அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள்
T.N.MURALIDHARAN //
வித்தியாசமான சிந்தனை .உடனுக்குடன் கிடைக்கும் கருத்தே பதிவராய் தொடர்வதற்கு காரணம் என்றுதான் நானும் கருதுகிறேன்.//
தங்கள் வரவுக்கும் தெளிவான
விரிவான அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள்
S. Hameeth //
வினாக்கள்...இரசனைக்கு மட்டுமல்ல-சிந்திக்கவும் தூண்டியது தங்கள் பதிவு. வாழ்த்துக்கள் அன்பரே.//
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள்
கவியாழி கண்ணதாசன் /
/தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த வாழ்த்துக்க
நாம் அறிந்ததை பகிர்ந்து கொண்டு பிறர் பகிரும் செய்திகளை அறிந்துகொள்வதோடு உவகையும் ஏற்படுகிறது. பலவிதமான தகவல்கள் ஒரே இடத்தில் எளிதாகப் படிக்கவும் முடிகிறது, அதனால் என்று நினைக்கிறேன்.
உங்கள் கவிதை அருமை.
abdul //
nalla sinthanai//
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள்
rajalakshmi paramasivam //
"மொக்கை " பட்டம் கொடுப்பது நம் பதிவைப் படித்த பின் தான் .அதனால் தான் அதிகப் பரவசம் அடைகிறோமோ ,என்னமோ? //
தங்கள் கருத்தும் ஒரு வகையில் சரிதான்
உடன் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Seeni//
unmaithaanga ayyaa...//
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள்
G.M Balasubramaniam //
திண்டுக்கல் தனபாலன் கூறுவதுபோல் பகிர்வது மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள்//
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள்
//indrayavanam.blogspot.com //
ஆர்த்தமுள்ள கவிதை //
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள்
கலாகுமரன் //
.
மனித மனம் தாகம் கொண்டது அது எப்போதும் தன் தாகத்தை தனித்து கொள்வதில்லை..அதேபோல் தேடுதல் ஒவ்வொரு பதிவிலும் பதிவுகளிலும் இருக்கிறது.//
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள்
தனிமரம் //
சிந்திக்கத்தூண்டும் கவிதை ஐயா!//
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள்
ராஜ நடராஜன் /
ஏதோ ஏதோ ஒரு மப்பு:)
மறுப்பது அவ்வளவு எளிதில்லை
தங்கள் வரவுக்கும் அருமையான
தெளிவைத் தரும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கிரேஸ் //
நாம் அறிந்ததை பகிர்ந்து கொண்டு பிறர் பகிரும் செய்திகளை அறிந்துகொள்வதோடு உவகையும் ஏற்படுகிறது. பலவிதமான தகவல்கள் ஒரே இடத்தில் எளிதாகப் படிக்கவும் முடிகிறது, அதனால் என்று நினைக்கிறேன்.
உங்கள் கவிதை அருமை//
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான தெளிவான விரிவான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
Post a Comment