நெருக்கமான காதல் காட்சியில்
நண்பனான நடிகையின் கணவன்
நினைவில் அடிக்கடி வந்து போக
பதறியபடி நடித்தனைச் சொல்லி
சக்திக்குள் கால்கள் இருப்பினும்
தாமரையாய் பூக்கிறார் ஒருவர்
தான் புதுமையானவன் என
விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக
அறையின் அந்தரங்கங்களை
மேடையில் விரித்துக்காயப் போட்டு
"தொகுப்பாளினிக்கும் " முத்தம் கொடுத்து
பால்ச் சங்கெடுத்து
விஷமூட்டிப் போகிறார் ஒருவர்
யாரும் எட்டிப்பார்க்கமுடியாதபடி
அந்தரங்கமாய் அந்தப்புரமாய்
படுக்கையறையை வைத்துக் கொள்ளுவதையோ
அறைக்குள் யார் இருக்கிறார்கள் என்பது குறித்தோ
சமூகம் அக்கறை கொள்ளாத போது
அவர்கள் மட்டும் ஏன்
சந்தர்ப்பம் கிடைக்கையில்
நடுத்தெருவில் பாய் விரிக்கிறார்கள்
ஒருவேளை
அவசரமாயினும்
வீட்டில் வசதி இல்லையாயினும்
கோவணம் கட்டியவன் எல்லாம்
குளக்கரைதான் போகவேண்டும்
நாகரீக உடையணிந்தவன்
சமூக அந்தஸ்துள்ளவன்
நடுத்தெருவில் மலம் கழிப்பது கூட
நமக்காகத்தான் என்கிற மனோபாவம்
நமக்குள் மண்டித் தொலைத்ததாலா ?
நண்பனான நடிகையின் கணவன்
நினைவில் அடிக்கடி வந்து போக
பதறியபடி நடித்தனைச் சொல்லி
சக்திக்குள் கால்கள் இருப்பினும்
தாமரையாய் பூக்கிறார் ஒருவர்
தான் புதுமையானவன் என
விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக
அறையின் அந்தரங்கங்களை
மேடையில் விரித்துக்காயப் போட்டு
"தொகுப்பாளினிக்கும் " முத்தம் கொடுத்து
பால்ச் சங்கெடுத்து
விஷமூட்டிப் போகிறார் ஒருவர்
யாரும் எட்டிப்பார்க்கமுடியாதபடி
அந்தரங்கமாய் அந்தப்புரமாய்
படுக்கையறையை வைத்துக் கொள்ளுவதையோ
அறைக்குள் யார் இருக்கிறார்கள் என்பது குறித்தோ
சமூகம் அக்கறை கொள்ளாத போது
அவர்கள் மட்டும் ஏன்
சந்தர்ப்பம் கிடைக்கையில்
நடுத்தெருவில் பாய் விரிக்கிறார்கள்
ஒருவேளை
அவசரமாயினும்
வீட்டில் வசதி இல்லையாயினும்
கோவணம் கட்டியவன் எல்லாம்
குளக்கரைதான் போகவேண்டும்
நாகரீக உடையணிந்தவன்
சமூக அந்தஸ்துள்ளவன்
நடுத்தெருவில் மலம் கழிப்பது கூட
நமக்காகத்தான் என்கிற மனோபாவம்
நமக்குள் மண்டித் தொலைத்ததாலா ?
33 comments:
எல்லாம் பணம் தான்...
/// கோவணம் கட்டியவன் எல்லாம்
குளக்கரைதான் போகவேண்டும் ///
சரியாகச் சொன்னீர்கள்...
நடுத்தெருவில் மலம் கழிப்பது கூட
நமக்காகத்தான் என்கிற மனோபாவம்
நமக்குள் மண்டித் தொலைத்ததாலா ?// உண்மைதான்
அதற்க்கு மட்டும்தான் விழா எடுக்கவில்லை.
பழமொழி அருமை
த,ம. 3
முதல் பத்தியின் பின்புலம் தெரியாதே?
விபத்து உண்டாக நிறைய காரணிகள், கர்த்தாக்கள் குறைந்தது இருவர் தேவையாகிறது. இரண்டாவது பத்தி விபத்து என்றுத் தோன்றினாலும் கர்த்தாக்களில் ஒருவரின் பின்புலமே பெரிய விபத்தாக இருப்பதால்..
அன்று மேடையில்...
அவர்
அந்தத் தொகுப்பளினிக்கு
இதழ் ஒத்தடம்
வாரி வழங்குகையில்
கைதட்டி ரசிக்க ஆட்கள் இருந்தார்களே...
நம் சமூகமா இது..
வெள்ளித் திரையில்
கண்டு ரசித்து ரசித்து
மூளை மழுங்கி விட்டதோ...
கையுயர்த்தி முட்டி மடக்கி..
தலையில் குட்டாமல்
கைகொட்டி சிரித்தார்களே...
அன்றுதான்
நம் சமூகம் தொலைந்ததோ...
===
புகழின் போதையில்
மயங்கிக் கிடக்கும்
கைப்பாவைகள்
அந்தரங்கத்தை
அனைவர் முன்னும்
கூச்சமின்றி
விற்றுப்போகும்
சந்தர்ப்பவாதிகள் இவர்கள்..
மாண்புகள் கொண்ட
சாமானியன் நம்மால்
ஏற்றுக்கொள்ள முடியவில்லை ..
==
எழுதவேண்டும் யோசித்து
எப்படி என்று மனம் புழுங்கிக்கொண்டிருந்தேன் ...
==
அற்புதமாக அனாயாசமாக
அதுவும் அழகிய மேற்கோள்களுடன்
நீங்கள் கவி வரைந்த விதம்
மிகவும் அழகு ரமணி ஐயா ..
சமூகம் அக்கறை கொள்ளாத போது
அவர்கள் மட்டும் ஏன்
சந்தர்ப்பம் கிடைக்கையில்
நடுத்தெருவில் பாய் விரிக்கிறார்கள்//
நியாயமான கேள்விதான் குரு, சமூகம் இதை ரசிக்கிறதொன்னு சந்தேகமாக இருக்கிறது.
சமுதாயச் சீர்கேட்டைச் சாடும் ஆதங்க வரிகளில் சமுதாயத்தின் பால் உள்ள அக்கறையை உணர்கிறேன். கவியும் கருத்தும் மிக மிக நன்றி ரமணி சார்.
இது போன்றதொரு சமூக சாட்டையை உங்களால் தான் அழகான கவிதையாய்க் கைக்கொண்டுவர முடிகிறது... நன்றி ஐயா...
Why are we getting obsessed with what actors say or do.?நமக்காக எனும் மனோபாவம் ஒன்றும் மண்டிக் கிடக்கவில்லை. நம்மால் முடியவில்லையே என்ற மறைமுக ஏக்கம் காரணமாயிருக்கலாம். சந்தர்ப்பம் அமையாததும் ஒரு காரணமாகலாம். மாற்றுக் கருத்துக்கும் இடமுண்டு என்று எண்ணி எழுதியது.
இதற்கென்றே ஒரு கூட்டம்! உங்கள் கவிதை, வார்த்தைகளால் நன்றாக ஒரு விளாசல்!
நான் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கவில்லை! செய்தித்தாள்கள் மூலம்தான் தெரிந்து கொண்டேன். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அந்த அம்மணிகளின் வீட்டில் என்ன நடந்தது, பிள்ளைகள் என்ன சொன்னார்கள் என்று தெரியவில்லை. தெருவில் அபார்ட்மெண்டில் என்ன பார்வை வீசினார்கள் என்றும் தெரியவில்லை. ஒருவேளை இவற்றையும் விரைவில் விளம்பரம் ஆக்கி விடுவார்கள்.
சரியான சவுக்கடி! பிரபலங்கள் இப்படி பொது இடத்தில் கூத்தடிப்பதால் சமூகம் மேலும் சீரழகிறது! நன்றி!
கவிதை கொண்டு தலையில் குட்டி விட்டீர்கள் ரமணி சார்.
I fully agree with Author's view.
நிழலுக்கும் நிஜத்திற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளாத ரசிகர்கள் இருக்கும் வரை , இது போன்ற நிகழ்வுகள் தொடரும் அய்யா.நன்றி சொன்னீர்.
நறுக்கான சாட்டையடி
//மகேந்திரன் //
நபுகழின் போதையில்
மயங்கிக் கிடக்கும்
கைப்பாவைகள்
அந்தரங்கத்தை
அனைவர் முன்னும்
கூச்சமின்றி
விற்றுப்போகும்
சந்தர்ப்பவாதிகள் இவர்கள்..
மாண்புகள் கொண்ட
சாமானியன் நம்மால்
ஏற்றுக்கொள்ள முடியவில்லை
super
திண்டுக்கல் தனபாலன்//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள்
கவியாழி கண்ணதாசன் //
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள்
T.N.MURALIDHARAN //
பழமொழி அருமை//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள்
அப்பாதுரை ..//
முதல் பத்தியின் பின்புலம் தெரியாதே?
விபத்து உண்டாக நிறைய காரணிகள், கர்த்தாக்கள் குறைந்தது இருவர் தேவையாகிறது. இரண்டாவது பத்தி விபத்து என்றுத் தோன்றினாலும் கர்த்தாக்களில் ஒருவரின் பின்புலமே பெரிய விபத்தாக இருப்பதால்.//
மிகச் சரியான புரிதல்களுடன் கூடிய
விரிவான அருமையான பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்றி
.
மகேந்திரன்//புகழின் போதையில்
மயங்கிக் கிடக்கும்
கைப்பாவைகள்
அந்தரங்கத்தை
அனைவர் முன்னும்
கூச்சமின்றி
விற்றுப்போகும்
சந்தர்ப்பவாதிகள் இவர்கள்..
மாண்புகள் கொண்ட
சாமானியன் நம்மால்
ஏற்றுக்கொள்ள முடியவில்லை ..
==
எழுதவேண்டும் யோசித்து
எப்படி என்று மனம் புழுங்கிக்கொண்டிருந்தேன் //
மிகச் சரியான புரிதல்களுடன் கூடிய
விரிவான அருமையான பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்றி
.
MANO நாஞ்சில் மனோ //
.
நியாயமான கேள்விதான் குரு, சமூகம் இதை ரசிக்கிறதொன்னு சந்தேகமாக இருக்கிறது.//
தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கீத மஞ்சரி //
சமுதாயச் சீர்கேட்டைச் சாடும் ஆதங்க வரிகளில் சமுதாயத்தின் பால் உள்ள அக்கறையை உணர்கிறேன். கவியும் கருத்தும் மிக மிக நன்றி ரமணி சார்.//
தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ezhil//
இது போன்றதொரு சமூக சாட்டையை உங்களால் தான் அழகான கவிதையாய்க் கைக்கொண்டுவர முடிகிறது... நன்றி ஐயா...//
தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
.G.M Balasubramaniam //
நம்மால் முடியவில்லையே என்ற மறைமுக ஏக்கம் காரணமாயிருக்கலாம். சந்தர்ப்பம் அமையாததும் ஒரு காரணமாகலாம். மாற்றுக் கருத்துக்கும் இடமுண்டு என்று எண்ணி எழுதியது.
தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி..
தி.தமிழ் இளங்கோ //
இதற்கென்றே ஒரு கூட்டம்! உங்கள் கவிதை, வார்த்தைகளால் நன்றாக ஒரு விளாசல்!//
தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி..
s suresh //
சரியான சவுக்கடி! பிரபலங்கள் இப்படி பொது இடத்தில் கூத்தடிப்பதால் சமூகம் மேலும் சீரழகிறது! நன்றி!//
தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி..
rajalakshmi paramasivam //
கவிதை கொண்டு தலையில் குட்டி விட்டீர்கள் ரமணி சார்.//
தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி..
Madhavan Srinivasagopalan //
I fully agree with Author's view.//
தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி..
கரந்தை ஜெயக்குமார் //
நிழலுக்கும் நிஜத்திற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளாத ரசிகர்கள் இருக்கும் வரை , இது போன்ற நிகழ்வுகள் தொடரும் அய்யா.நன்றி சொன்னீர்//
தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி..
abdul //
தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி..
Post a Comment