அவசரமாய் வேலையிருந்தும்
நேரத்தின் "கன "மறிந்தும்
அழகான பெண்பார்த்து
அசந்துபோய் நிற்பதனை..
ஆள்தரம் தெரியாது
மணிகேட்ட பெண்ணுடனே
நாள்கணக்கில் பேசஎண்ணி
வாய்பிளந்து கிடப்பதனை...
ராங்கால்தான் என அறிந்தும்
பேசியது பெண்ணானால்
போங்காட்டம் ஆடஎண்ணி
திரும்படயல் செய்வதனை
சொல்லிநிதம் அறுத்ததையே
சொல்கூட மாற்றாது
சொல்லிவதம் செய்வதனை
பேச்சில்சுகம் பெறுவதனை
சொல்வதற்கு ஏதுமற்றும்
சொல்லுகின்ற திறனுமற்றும்
சொல்லிவிட முயல்வதனை
வாசகனைக் கொல்வதனை
முகநூலில் பெண்படமே
முகப்பாக இருக்குமெனில்
அகமகிழ்ந்து நாள்தோறும்
"லைக்"போடும் கொடுமைதனை
சாறெடுத்த கரும்பதனை
சக்கையெனச் சொல்லுதல்போல்
ஓர்சொல்லில் சுருக்கமாக
மொக்கையெனச் சொல்லலாமே ?
(மொக்கைக்கு விளக்கம் கேட்ட
பதிவுலக பிதாமருக்காக)
நேரத்தின் "கன "மறிந்தும்
அழகான பெண்பார்த்து
அசந்துபோய் நிற்பதனை..
ஆள்தரம் தெரியாது
மணிகேட்ட பெண்ணுடனே
நாள்கணக்கில் பேசஎண்ணி
வாய்பிளந்து கிடப்பதனை...
ராங்கால்தான் என அறிந்தும்
பேசியது பெண்ணானால்
போங்காட்டம் ஆடஎண்ணி
திரும்படயல் செய்வதனை
சொல்லிநிதம் அறுத்ததையே
சொல்கூட மாற்றாது
சொல்லிவதம் செய்வதனை
பேச்சில்சுகம் பெறுவதனை
சொல்வதற்கு ஏதுமற்றும்
சொல்லுகின்ற திறனுமற்றும்
சொல்லிவிட முயல்வதனை
வாசகனைக் கொல்வதனை
முகநூலில் பெண்படமே
முகப்பாக இருக்குமெனில்
அகமகிழ்ந்து நாள்தோறும்
"லைக்"போடும் கொடுமைதனை
சாறெடுத்த கரும்பதனை
சக்கையெனச் சொல்லுதல்போல்
ஓர்சொல்லில் சுருக்கமாக
மொக்கையெனச் சொல்லலாமே ?
(மொக்கைக்கு விளக்கம் கேட்ட
பதிவுலக பிதாமருக்காக)
37 comments:
உண்மை உண்மை
உண்மையைத் தவிர வேறு இல்லை...
அருமையோ அருமை !!
இரமணி ஐயா... நீங்கள் சொன்னதெல்லாம் தான் “மொக்கை“ என்பதா? எனக்கு இதன் அர்த்தம் புரிந்து கொள்ள இவ்வளவு நாள் ஆகியது.
மொக்கையைக் குறித்த மொக்கைப் பதிவு “மொக்கையாக“ இல்லாமல் அருமையாக உள்ளது இரமணி ஐயா.
//முகநூலில் பெண்படமே
முகப்பாக இருக்குமெனில்
அகமகிழ்ந்து நாள்தோறும்
"லைக்"போடும் கொடுமைதனை//
முகநூல் பக்கமெல்லாம் நான் போகாதவன் ஆகையால் இதனை முழுவதுமாக அனுபவ ரீதியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.
இருப்பினும் ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது.
//சாறெடுத்த கரும்பதனை
சக்கையெனச் சொல்லுதல்போல்
ஓரெழுத்தில் சுருக்கமாக
மொக்கையெனச் சொல்லலாமே ?//
இது கரும்பென இனிக்கும் உதாரணம் தான். சக்கைபோடு போட்டுள்ளீர்கள். மகிழ்ச்சி.
//(மொக்கைக்கு விளக்கம் கேட்ட பதிவுலக பிதாமகர் மன்னிப்பாராக)//
மன்னிப்பெல்லாம் எதற்கு?
மொக்கையைப் பற்றி மேலும் மிகச்சரியான உதாரணங்களுடன் சொல்ல ஏதோ தங்களுக்குத் தயக்கம் உள்ளது என்பதை நான் நன்கு உணர்ந்து கொண்டு விட்டேன்.
ஏதோ சுற்றிவளைத்து, பட்டும் படாததுமாக ஆனால் சுவையாகச்சொல்லி இருப்பதற்கு மிக்க நன்றி.
பாராட்டுக்கள்.
[நாம் தினமும் பார்க்காத மொக்கைகளா என்ன ;))))) விளக்கம் ஏதும் தேவையில்லை தான் ]
பகிர்வுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்..
இவ்வளவு மொக்கைகள் உள்ளனவா.? தெரியவில்லையே. பட்டியலுக்கு நன்றி.
சாறெடுத்த கரும்பதனை
சக்கையெனச் சொல்லுதல்போல்
ஓர்சொல்லில் சுருக்கமாக
மொக்கையெனச் சொல்லலாமே ?
மொக்கை பற்றி ரசனையான உதாரணங்கள்..!
ஆள்தரம் தெரியாது
மணிகேட்ட பெண்ணுடனே
நாள்கணக்கில் பேசஎண்ணி
வாய்பிளந்து கிடப்பதனை...
வேடிக்கை மனிதர்கள்...!
மொக்கை குறித்த விளக்கம் அருமை! நன்றி!
நல்ல விளக்கம் ஐயா...
வாழ்த்துக்கள்... நன்றி...
சுருங்க சொல்லி விளக்கி விட்டீர்கள்.
இக்கணமே பதிவெழுத
அக்கப்போர் ஒன்றில்லா
சிக்கல்தனை தீர்க்க வந்த
மொக்கையே நீ வாழ்க!
அன்புடன்
மொக்கைப் புலவர்
முகநூலில் பெண்படமே
முகப்பாக இருக்குமெனில்
அகமகிழ்ந்து நாள்தோறும்
"லைக்"போடும் கொடுமைதனை//
அய்யய்யோ நீங்களுமா குரு.....ஹா ஹா ஹா ஹா...மொக்கைக்கு விளக்கம் நல்லாதேன் இருக்கு ஹி ஹி...
//இக்கணமே பதிவெழுத
அக்கப்போர் ஒன்றில்லா
சிக்கல்தனை தீர்க்க வந்த
மொக்கையே நீ வாழ்க!//
Super!!!
இத்தனை நாள் நான் போட்ட பதிவுகள் எல்லாமே 'மொக்கை' என்று நீங்கள் வகைப்படுத்தியதை பலமாக கண்டிக்கிறேன்!
மொக்கைக்கு
நீண்டதொரு
விளக்கம்
அருமை அய்யா
ரசித்தேன்
சுவைத்தேன்
நன்றி
சாறெடுத்த கரும்பதனை
சக்கையெனச் சொல்லுதல்போல்
ஓர்சொல்லில் சுருக்கமாக
மொக்கையெனச் சொல்லலாமே ?
என்ன ஒரு கொலைவெறி :))))
இருப்பினும் மொக்கை குறித்து விழுந்த தத்துவ வரிகள்
அருமை ஐயா !!........வாழ்த்துக்கள் இனிய கவிதை வரிகள் இனிதே தொடரட்டும் .
மொக்கைக்கு விளக்கம் சிறப்பு. அதற்கு Facebook like போல் போட மாட்டேன். கவிதைக்கு வந்த பின்னூட்டங்கள் சிரிக்க வைத்தன. நீங்கள் இப்போ என்பது தெரிகிறது சார்
மகேந்திரன் //
உண்மை உண்மை
உண்மையைத் தவிர வேறு இல்லை//
தங்கள் முதல் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கவியாழி கண்ணதாசன் //
அருமையோ அருமை !!//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அருணா செல்வம் ''.
மொக்கையைக் குறித்த மொக்கைப் பதிவு “மொக்கையாக“ இல்லாமல் அருமையாக உள்ளது இரமணி ஐயா.//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
\வை.கோபாலகிருஷ்ணன் //
ஏதோ சுற்றிவளைத்து, பட்டும் படாததுமாக ஆனால் சுவையாகச்சொல்லி இருப்பதற்கு மிக்க நன்றி.
பாராட்டுக்கள்.//
மொக்கை குறித்து ஆழமாக யோசிக்க வைத்தமைக்கும்
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//
G.M Balasubramaniam //
இவ்வளவு மொக்கைகள் உள்ளனவா.? தெரியவில்லையே. பட்டியலுக்கு நன்றி.//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
இராஜராஜேஸ்வரி //
மொக்கை பற்றி ரசனையான உதாரணங்கள்..!//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
s suresh //
மொக்கை குறித்த விளக்கம் அருமை! நன்றி!//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
திண்டுக்கல் தனபாலன் //
நல்ல விளக்கம் ஐயா...//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
rajalakshmi paramasivam //
சுருங்க சொல்லி விளக்கி விட்டீர்கள்.//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மொக்கைப் புலவர் //
இக்கணமே பதிவெழுத
அக்கப்போர் ஒன்றில்லா
சிக்கல்தனை தீர்க்க வந்த
மொக்கையே நீ வாழ்க!//
யாரெனக் கண்டுபிடிக்கமுடியவில்லை
கவிதை மிக மிக அருமை வாழ்த்துக்கள்
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
MANO நாஞ்சில் மனோ //
அய்யய்யோ நீங்களுமா குரு.....ஹா ஹா ஹா ஹா...மொக்கைக்கு விளக்கம் நல்லாதேன் இருக்கு ஹி ஹி...//
கொஞ்சம் உங்களைப்போல ஜாலி மூடிலும்
இருந்து பார்க்கலாமே என எழுதியது
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
bandhu //
இத்தனை நாள் நான் போட்ட பதிவுகள் எல்லாமே 'மொக்கை' என்று நீங்கள் வகைப்படுத்தியதை பலமாக கண்டிக்கிறேன்!//
தங்கள் பின்னூட்டங்களின் ரசிகன் நான்
வெகு நாட்களுக்குப் பின் தங்கள் வரவு
மகிழ்வளிக்கிறது
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் வித்தியாசமான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கரந்தை ஜெயக்குமார் //
மொக்கைக்கு
நீண்டதொரு
விளக்கம்
அருமை அய்யா
ரசித்தேன்
சுவைத்தேன்//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அம்பாளடியாள் //
என்ன ஒரு கொலைவெறி :))))
இருப்பினும் மொக்கை குறித்து விழுந்த தத்துவ வரிகள்
அருமை ஐயா !!........வாழ்த்துக்கள் இனிய கவிதை வரிகள் இனிதே தொடரட்டும் .//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் வித்தியாசமான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
சந்திரகௌரி //
.
மொக்கைக்கு விளக்கம் சிறப்பு. அதற்கு Facebook like போல் போட மாட்டேன். கவிதைக்கு வந்த பின்னூட்டங்கள் சிரிக்க வைத்தன//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றிகடைசி வரிக்கான அர்த்தம்தான் சரியாகப்புரிந்து கொள்ள இயலவில்லை
.
Manju Bashini Sampathkumar மொக்கை என்ற வார்த்தை யார் கண்டுப்பிடித்திருப்பார் என்று யோசிக்கவைக்கும் அளவுக்கு அருமையான கவிதை வரிகள் இங்கு சொல்லிச்செல்கிறது விதம் விதமான சும்மா இருத்தல் அல்லாது மொக்கை எப்படி உருவம் எடுத்தது என்பதனை…
இனி மொக்கை என்ற சொல் எங்கும் காணுவோருக்கு கண்டிப்பாக இந்த கவிதை வரிகள் நினைவுக்கு வரும் அது மட்டும் உறுதி…
எத்தனை அவசியமான, அவரமான வேலை இருந்தாலும் அம்பாளைப்போன்று அட்டகாசமான தேஜஸுடன் எதிரில் ஒரு பெண் வந்து நின்றுவிட்டால் இதயம் ஸ்தம்பித்து போவதுடன்.. எதிரில் நிற்கும் பெண் நம்மைப்பற்றி என்ன நினைப்பார் என்று கூட யோசிக்க விடாமல் மூளை செயல் எல்லாமே மரத்துப்போகசெய்யும் ஒரு விஷயத்தை மிக அருமையா முதல் பத்திலேயே தொடங்கி இருக்கீங்க ரமணிசார்…
அவசரமாக செல்லுமிடம் வேண்டி காத்திருக்கும் பெண் சங்கோஜப்பட்டு டைம் என்ன என்று கேட்டுவிட்டால் என்னவோ காதலிக்க சம்மதம் என்று சொன்னது போல காதில் விழுந்த தேனாய் நினைத்து கற்பனை உலகில் சஞ்சாரித்துக்கொண்டே டைம் கேட்ட பெண்ணிடம் அசடு வழியும் அசகாயசூரர்களை பதம் பார்த்திருக்கிறது இரண்டாம் பத்தி…
போன் செய்தபோது தெரியாத்தனமாக இராங் நம்பராகிவிட்டாலும் எடுத்தது பெண் என்றால் உடனே லிட்டர் கணக்கில் அசடு வழிந்து பேசுவது அப்பக்கத்தில் இருக்கும் பெண்ணே உணரும் வகையில் பேசுவதை சாட்டையடியாக்கி இருக்கிறீங்க இந்த பத்தியில்….
பேசிப்பேசி எல்லோரின் சமயங்களைக்கொல்லும் ஒரு சில கில்லர்களைப்பற்றி….
முகநூலில் பெண்கள் படம் போட்டு ஆண்கள் சில சமயம் வைத்திருக்கும்போது அது பெண் என்று நினைத்துக்கொண்டு கர்மமே கண்ணாயிரமாய் கர்மசிரத்தையாய் லைக் தினம் போடுபோரின் திறமையைப்பற்றி….
இத்தனை வதம் செய்வோரை… சாறெடுத்த கரும்பை சக்கை என்ற ஒற்றைச்சொல்லாய் சொல்வது போல மொக்கை என்று சொல்லிவிட்டு போனால் தான் என்ன என்று விளாசி இருக்கும் வரிகள் சுப்பர்ப் ரமணிசார்… ரசித்து வாசித்தேன்
எனக்கும் மொக்கை என்றால் என்னவென்றே தெரியாது - தெரிந்தது போல் பாவனையோடு இருந்தவனுக்கு இது ஏதோ கொஞ்சம் விளக்குவது போல இருக்கிறது. இது போன்ற சொற்கள் என் முன் விழுவதற்குள் நரை விழுந்துவிட்டதே!
அப்பாதுரை //
தங்கள் வருவதற்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
இப்படி ஒரு விளக்கத்தை நான் எதிர்ப்பார்க்கல...!!!
Post a Comment