Saturday, May 18, 2013

கேள்விகளும் பதில்களும்

கேள்வி வேள்விகளில் கிடைக்கும்
வரங்களே பதில்களாயினும்
வரங்களே மீண்டும் வேள்வித்தீயை
பற்றவைத்துப் போவதே
வாழ்வின் சுவாரஸ்யம்

பதில் கிடைத்த கேள்விகளை விட
குழப்புகிற பதில்களும்
பதிலறியா கேள்விகளும்
புதிய சிந்தனையை விதைத்துப்  போவதே
வாழ்வில் அற்புதம்

கேள்விகளுக்கான பதில்கள் கூட
கேள்விக்கானதாக இல்லாது
கேட்கப்பட்டவருக்கானதாய் இருப்பதாலேயே
கேள்விகூட பலசமயங்களில்
குழம்பி மௌனமாகிவிடுகிறது

"நல்ல கவிதை நூலுக்கு
எது தேவை "என்கிற கேள்வியை
நால்வருக்குமுன் விரித்தபோது

இளைஞன்   "அனுபவ அறிவு " எனச் சொல்ல
ஆங்கில வழிகற்றவன்   "மொழி அறிவு "எனச் சொல்ல
 யதார்த்தவாதி "கற்பனை " எனச் சொல்ல
எழுத்தாளனோ "நல்ல பதிப்பகம்  " எனச் சொல்ல
நான்  குழம்பியும் போனேன்
மௌனமாகியும்   போனேன்

 இருப்பது மறந்து  இல்லாதது  குறித்தே
எப்போதும்   நினைத்திருப்போர்
நிறைந்திருக்கும் உலகினில்

"கேள்வி வரைத்தன்று கேள்வி அதுகூட
கேள்வி பெறப்பட்டார் வரைத்து "
என்றேப் படுகிறது எனக்கு
உங்களுக்கு ?

39 comments:

கோமதி அரசு said...

பதில் கிடைத்த கேள்விகளை விட
குழப்புகிற பதில்களும்
பதிலறியா கேள்விகளும்
சிந்தனையை செழுமைப்படுத்திப் போவதே
வாழ்வில் அற்புதம்//
ஆம்,நீங்கள் சொல்வது உண்மை.

கரந்தை ஜெயக்குமார் said...

பதில் கிடைத்த கேள்விகளை விட
குழப்புகிற பதில்களும்
பதிலறியா கேள்விகளும்
புதிய சிந்தனையை விதைத்துப் போவதே
வாழ்வில் அற்புதம்,,,,
ஆம் அய்யா தாங்கள் சொல்வது உண்மைதான். கேள்விகளே வாழ்வின் ஏணிகள் என்று எங்கோ படித்ததாக ஞாபகம் அய்யா.

உஷா அன்பரசு said...

//கேள்வி வரைத்தன்று கேள்வி அதுகூட
கேள்வி பெறப்பட்டார் வரைத்து "
என்றேப் படுகிறது எனக்கு
உங்களுக்கு ?// - நிஜம்தான்!

த.ம-2

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

//கேள்விகளுக்கான பதில்கள் கூட
கேள்விக்கானதாக இல்லாது
கேட்கப்பட்டவருக்கானதாய் இருப்பதாலேயே
கேள்விகூட பலசமயங்களில்
குழம்பி மௌனமாகிவிடுகிறது//
உண்மை! சிந்திக்க வைக்கும் வரிகள்.
அர்த்தமுள்ள கவிதை

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

த.ம.3

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

தமிழ்மணம் 4

கவியாழி said...

குழப்புகிற பதில்களும்
பதிலறியா கேள்விகளும்//
குழப்பம் எல்லோரின் சிந்தனையை மாற்றிவிடும் எனவே குழம்பக் கூடாது

தி.தமிழ் இளங்கோ said...

கவிஞரின் கேள்விக்கு முடிவு ஏது?

abdul said...

//கேள்விகளுக்கான பதில்கள் கூட
கேள்விக்கானதாக இல்லாது
கேட்கப்பட்டவருக்கானதாய் இருப்பதாலேயே
கேள்விகூட பலசமயங்களில்
குழம்பி மௌனமாகிவிடுகிறது//

super and true

இதை பிரபலங்களிடம் காணலாம்

அம்பாளடியாள் said...

ஒரு வித்தியாசமான சிந்தனை சிறப்பாகவும் உள்ளது வாழ்த்துக்கள் ஐயா !

திண்டுக்கல் தனபாலன் said...

அந்த அற்புதம் தொடர்ந்தால் என்றும் தொடரும் வாழ்வின் சுவாரஸ்யம்...

வாழ்த்துக்கள்...

பால கணேஷ் said...

எழுத்தாளனின் கோணத்தில் கவிதைக்குத் தேவை பதிப்பகம், இளைஞனின் கோணத்திலோ அனுபவம். கேள்விக்கான பதில்கள் ஆளுக்கேற்றபடி மாறத்தான் செய்கின்றன. வித்தியாசமான சிந்தனைப் பின்னணியில் சுவாரஸ்‌யமாகச் சொல்லி அசத்திட்டீங்க!

மகேந்திரன் said...

யதார்த்தம்
நிதர்சனம்
பளிச்சிடுகிறது
உங்கள் கவிதையில் ரமணி ஐயா..

சசிகலா said...

தங்கள் அனுபவம் அழகாக கேள்வி கேட்கிறது ஐயா.

G.M Balasubramaniam said...


என்னுள் நிறையவே கேள்விகள் எழுகின்றன. பதிகள்தான் கிடைப்பதில்லை. என்ன செய்வது.? என் கேள்விகள் காலங்காலமாக நிலவி வரும் நம்பிக்கைகளின் ஆணிவேரை அசைக்கிறேன் என்றல்லவா கருதுகிறார்கள்.
பதிலறியாக் கேள்விகள் புதிய சிந்தனைகளின் வித்து என்கிறீர்கள். ஆனால் கேள்வி கேட்பவன் ஏதோ கிழித்த கோட்டுக்கு உள் இருந்துதான் கேள்விகேட்க வேண்டும் என்றல்லவா எண்ணுகிறார்கள்.பதிவுக்குப் பாராட்டுக்கள்.

Unknown said...

பதில் கிடைத்த கேள்விகளை விட
குழப்புகிற பதில்களும்
பதிலறியா கேள்விகளும்
புதிய சிந்தனையை விதைத்துப் போவதே
வாழ்வில் அற்புதம்

உண்மைதான்

Matangi Mawley said...

On a different day- I feel that- All questions have already been asked. Men- at different times, arrive at the same questions, yet through different answers. It's the answers that are different. Not the questions. The day when the questions become different- would be the day when the Earth would have again born. Until then-- it's just the routine business...

”தளிர் சுரேஷ்” said...

கேள்வியும் பதிலும் சிறப்பு! அருமையான படைப்பு! நன்றி!

Anonymous said...

வரங்களே மீண்டும் வேள்வித்தீயை
பற்றவைத்துப் போவதே
வாழ்வின் சுவாரஸ்யம்
அதிலே மூழ்கி முத்தெடுப்போம். இனிய வாழ்த்து.
Vetha.Elangathilakam

Yaathoramani.blogspot.com said...

Manju Bashini Sampathkumar சிந்தனாவாதியின் மற்றுமொரு படைப்பு…. கேள்விகள் பிறப்பதே பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தேடலின் புறப்பாடு… ஏன் எதற்கு எப்படி என்ற கேள்விகளின் சாராம்சம் பதில்களின் பொக்கிஷங்கள் நிறைந்தவை…. குழப்பினாலும் மௌனித்தாலும் வேறு பதில் அளித்தாலும் கேள்விகளிலேயே பதில் கிடைக்காமல் வேறு கேள்வி பிறந்தாலும் வாழ்க்கையை சுவாரஸ்யமாக்குவதும் தேடலை உயிர்ப்புடன் வைப்பதும் கேள்விகளின்றி வேறு என்னவாக இருக்கமுடியும்?

குழந்தையின் கேள்விகளில் பெற்றோர் நாம் கற்கிறோம் பாடங்கள்.. பிள்ளைகளுக்கு பாடங்கள் சொல்லித்தரும்போது பிள்ளைகள் கேட்கும் அசாத்தியமான கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலாமல் நம் சிந்தனைகளை விரிக்கிறோம். தேடலில் தொடர்கிறோம். சரியான பதில் தேடப்போய் இன்னும் நிறைய அனுபவ ஞானம் பெருகவும் வழி செய்கிறது கேள்விகள்…

அருமையான ஆராய்ச்சி ரமணிசார்… நல்ல கவிதை நூலுக்கு… எது தேவை என்ற கேள்விக்கு ஆளுக்கு ஆள் பதில் வித்தியாசப்படுகிறது… அனுபவ அறிவு, மொழி அறிவு, கற்பனை, நல்ல பதிப்பகம்.. எல்லோருமே அவரவர் எல்லை வரை சிந்தித்து பகிர்ந்த பதில்கள் இவை… நல்ல கவிதை நூலுக்கு சாராம்சம் கவிதைக்கான கருவில் தொடங்கி….. அருமையான எளிமையான வரிகளில் மக்களை கவரும் விதத்தில் எழுதப்படும் அலங்காரமில்லாத எளிய வரிகள்.. அதை வாசிக்கும் வாசகர்களின் ரசனை…. இப்படியே தொடர்ந்துக்கொண்டே இருக்கும் முடிவே இல்லாது… விடைகள் எப்போதுமே கிடைத்ததுமே கேள்விகள் எழுவது நின்றுவிடுவதில்லை என்ற அழுத்தமான கருத்தை உணர்த்திய கவிதை வரிகள் ரமணி சார்.

சரியான வார்த்தை.. இருப்பதை மறந்து இல்லாததை குறித்தே சிந்திக்கும் உலகமக்களிடையே கேள்விகள் தினம் தினம் புதிய அவதாரம் எடுக்கிறது.. தரும் வரமாக பதில்கள் அமைந்தாலும் அதிலும் கேள்விகள் தொக்கியே நிற்கிறது…. உங்களுடன் நானும் உடன்படுகிறேன் இந்த கருத்தில் ரமணிசார்…. அருமையான கருத்து அமைந்த கவிதை வரிகள் அசத்தல்….

Yaathoramani.blogspot.com said...

கோமதி அரசு //


ஆம்,நீங்கள் சொல்வது உண்மை.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கரந்தை ஜெயக்குமார்//

தாங்கள் சொல்வது உண்மைதான். கேள்விகளே வாழ்வின் ஏணிகள் என்று எங்கோ படித்ததாக ஞாபகம்/
/
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

உஷா அன்பரசு //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

T.N.MURALIDHARAN //

உண்மை! சிந்திக்க வைக்கும் வரிகள்.
அர்த்தமுள்ள கவிதை//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கி. பாரதிதாசன் கவிஞா் //

தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...


கவியாழி கண்ணதாசன் //

குழப்பம் எல்லோரின் சிந்தனையை மாற்றிவிடும் எனவே குழம்பக் கூடாது//

தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தி.தமிழ் இளங்கோ //
.
கவிஞரின் கேள்விக்கு முடிவு ஏது?//

தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...


abdul //

தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அம்பாளடியாள் //

ஒரு வித்தியாசமான சிந்தனை சிறப்பாகவும் உள்ளது வாழ்த்துக்கள் ஐயா !//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் //

வாழ்த்துக்கள்./

/தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

.பால கணேஷ் //

கேள்விக்கான பதில்கள் ஆளுக்கேற்றபடி மாறத்தான் செய்கின்றன. வித்தியாசமான சிந்தனைப் பின்னணியில் சுவாரஸ்‌யமாகச் சொல்லி அசத்திட்டீங்க!//

/தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

/
.மகேந்திரன் /
/
யதார்த்தம்
நிதர்சனம்
பளிச்சிடுகிறது
உங்கள் கவிதையில் ரமணி ஐயா..!

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Sasi Kala //

தங்கள் அனுபவம் அழகாக கேள்வி ///

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

பதிலறியாக் கேள்விகள் புதிய சிந்தனைகளின் வித்து என்கிறீர்கள். ஆனால் கேள்வி கேட்பவன் ஏதோ கிழித்த கோட்டுக்கு உள் இருந்துதான் கேள்விகேட்க வேண்டும் என்றல்லவா எண்ணுகிறார்கள்.பதிவுக்குப் பாராட்டுக்கள்//.

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

புலவர் இராமாநுசம் //

தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Matangi Mawley /


/தங்கள் உடன் வரவுக்கும் ஆழ்ந்த
சிந்தனையுடன் கூடிய
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Manju Bashini Sampathkumar /

/பதிவுக்கு பெருமை சேர்த்தமைக்கு
மனமார்ந்த நன்றி

அப்பாதுரை said...

எழுத்தாளர் பதில் சிரிக்க வைத்தது. இளைஞர் பதில் வியக்க வைத்தது.

Yaathoramani.blogspot.com said...

அப்பாதுரை //

எழுத்தாளர் பதில் சிரிக்க வைத்தது. இளைஞர் பதில் வியக்க வைத்தது//

தங்கள்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Post a Comment