முன்பெல்லாம்
ஒரு காரியத்தை செய்து முடித்ததும்
ஒரு செயலை வென்று முடித்ததும்
அதிலே லயிக்கத் துவங்கிவிடுவேன்
அந்தச் சுகத்தில் சில நாள்
வெறுமனே இருக்கத் துவங்கிவிடுவேன்
நாலுவகைக் காய்கறியோடு
அப்பளம் வடையோடு
உண்ட சுகத்தோடு வரும்
ஒரு அசாத்திய களைப்பைப்போல
அதைத் தொடர்ந்து வரும்
ஒரு அருமையான தூக்கத்தைப்போல
அதிகாலையில் இருந்து
அடுக்களையில் தனியாய் போராடி
அனைவருக்கும் இதமாய் பரிமாறி
அவசரம் அவசரமாய் உண்டு முடித்தும்
அலுப்பில் ஓய்வெடுக்க முயலாது
மீண்டும் அடுத்த வேளைக்கென
பாத்திரங்களை கழுவி முடித்து
சமயலறையை ஒழுங்கு செய்துவைத்து
அடுப்பதனை மீண்டும் பற்றவைக்கும்
அருமை மனைவியைக் கண்டது முதல்
இப்போதெல்லாம்
ஒரு காரியத்தை செய்து முடித்ததும்
ஒரு செயலை வென்று முடித்ததும்
அதிலிருந்து உடன் விடுபட்டுவிடுகிறேன்
அடுத்ததில் உடன் லயிக்க்கத் துவங்கிவிடுகிறேன்
புத்தித் தெளிவடைதலே ஞானமெனில்
அதைத் தருமிடமே போதிமரமெனில்
சமை யலறைக்கூட நமக்கு போதிமரம்தானே
அதைத் தன் செயலால் போதிக்கும்
மனைவி கூட நமக்குப் புத்தன்தானே
ஒரு காரியத்தை செய்து முடித்ததும்
ஒரு செயலை வென்று முடித்ததும்
அதிலே லயிக்கத் துவங்கிவிடுவேன்
அந்தச் சுகத்தில் சில நாள்
வெறுமனே இருக்கத் துவங்கிவிடுவேன்
நாலுவகைக் காய்கறியோடு
அப்பளம் வடையோடு
உண்ட சுகத்தோடு வரும்
ஒரு அசாத்திய களைப்பைப்போல
அதைத் தொடர்ந்து வரும்
ஒரு அருமையான தூக்கத்தைப்போல
அதிகாலையில் இருந்து
அடுக்களையில் தனியாய் போராடி
அனைவருக்கும் இதமாய் பரிமாறி
அவசரம் அவசரமாய் உண்டு முடித்தும்
அலுப்பில் ஓய்வெடுக்க முயலாது
மீண்டும் அடுத்த வேளைக்கென
பாத்திரங்களை கழுவி முடித்து
சமயலறையை ஒழுங்கு செய்துவைத்து
அடுப்பதனை மீண்டும் பற்றவைக்கும்
அருமை மனைவியைக் கண்டது முதல்
இப்போதெல்லாம்
ஒரு காரியத்தை செய்து முடித்ததும்
ஒரு செயலை வென்று முடித்ததும்
அதிலிருந்து உடன் விடுபட்டுவிடுகிறேன்
அடுத்ததில் உடன் லயிக்க்கத் துவங்கிவிடுகிறேன்
புத்தித் தெளிவடைதலே ஞானமெனில்
அதைத் தருமிடமே போதிமரமெனில்
சமை யலறைக்கூட நமக்கு போதிமரம்தானே
அதைத் தன் செயலால் போதிக்கும்
மனைவி கூட நமக்குப் புத்தன்தானே
54 comments:
ஆஹா... இதை ஒவ்வொரு கணவன்மாரும் உணர்ந்து விட்டால் இல்லறத்தில் என்றுமே தென்றல் வீசுமே! அருமையான கருத்தை பளிச்சென்று உரைத்தீர்கள் ஸார்!
அருமை..வார்த்தையே இல்லை..ஒவ்வொரு கணவனும் தன் மனைவியின் வேலைகளைப் புரிந்துகொண்டால் போதுமே, நீங்கள் கவி வேறு படைத்துவிட்டீர்கள்!
நன்றி!
///சமை யலறைக்கூட நமக்கு போதிமரம்தானே
அதைத் தன் செயலால் போதிக்கும்
மனைவி கூட நமக்குப் புத்தன்தானே///
சில குடும்பங்களில் கணவனும் புத்தனே......
புத்தித் தெளிவடைதலே ஞானமெனில்
அதைத் தருமிடமே போதிமரமெனில்
சமை யலறைக்கூட நமக்கு போதிமரம்தானே
போதிமரமாய் கவிதையும் ..பாராட்டுக்கள்...
@பால கணேஷ் ..
ஆஹா... இதை ஒரு சில மனைவிமாரும் உணர்ந்து விட்டால் இல்லறத்தில் என்றுமே தென்றல் வீசும
புத்தித் தெளிவடைதலே ஞானமெனில்
அதைத் தருமிடமே போதிமரமெனில்
சமை யலறைக்கூட நமக்கு போதிமரம்தானே
அதைத் தன் செயலால் போதிக்கும்
மனைவி கூட நமக்குப் புத்தன்தானே
இவ் வகையில் பெற்ற தாயும் கூட போதிமரம்தான்
இரமணி!
புத்தித் தெளிவடைதலே ஞானமெனில்
அதைத் தருமிடமே போதிமரமெனில்
சமை யலறைக்கூட நமக்கு போதிமரம்தானே//
ஆஹா அருமை அருமை. ஞானம்பெற சமையலறையும் சிறந்த இடம்தான்
இந்த ஐயா அம்மாவ எதுக்கோ காக்கா பிடிக்கிறமாதிரியே தெரியுது கவிதை போற
போக்கப் பார்த்தால் :) வாழ்த்துக்கள் ஐயா
சிறப்பான சிந்தனை இதற்க்கு .
கவிஞரின் “ஞானம் பிறந்த கதை”.
வித்தியாசமான அழகான அருமையான சிந்தனை... இவ்வாறு இருந்தால் பிரச்சனை ஏது...? பாராட்டுக்கள்...
ஆண்களுக்காவது பணி ஓய்வு கிடைத்து விடுகிறது.. பெண்களுக்கு ஏது ஐயா வீட்டு பணி ஓய்வு? பெண் என்பவள் எழுந்திருக்கவே முடியாதளவு விழும் வரை ஓடிக்கொண்டுத்தானே இருக்கிறாள். அருமையான புரிதலுடன் எழுதிய கவிதைக்கு மிக்க நன்றி!
த.ம-8
சமையலறையோ சாமியறையோ போதிமரத்தடியில் ஞானம் வந்தால்சரிதான்...
ஐயா... மிக மிக அருமை! அழகிய கவிதையில் அற்புதமாய் விடயத்தைச் சொன்னீர்கள்! வாழ்த்துக்கள்!
த ம 9
//புத்தித் தெளிவடைதலே ஞானமெனில்
அதைத் தருமிடமே போதிமரமெனில்
சமை யலறைக்கூட நமக்கு போதிமரம்தானே
அதைத் தன் செயலால் போதிக்கும்
மனைவி கூட நமக்குப் புத்தன்தானே//
மிகவும் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
//சமை யலறைக்கூட நமக்கு போதிமரம்தானே
அதைத் தன் செயலால் போதிக்கும்
மனைவி கூட நமக்குப் புத்தன்தானே//
இது உண்மையைத் தவிர வேறில்லை...
சமையலறை பெண்களுக்கு போதி மரம் என்றால்...
பெண் உருவமெல்லாம் ஆண்களுக்கு போதி மரமாகும். நல்ல கருத்து ஐயா.
ரொம்ப காலம் கழித்துப் புரிந்து கொண்டீர்களோ...!!
அருமையான படைப்பு. வணங்குகிறேன் இரமணி ஐயா.
காணும் இடங்களில் இருந்தும் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களிடம் இருந்தும் கற்க நிறையவே உள்ளது. போதி மரங்களை அடையாளம் கண்டு கொள்வதுதான் சிரமம். சமையலறை போதிமரம், மனைவி புத்தன். சிறப்பான சிந்தனை.
சூப்பர் சிந்தனை!அசத்தறீங்கசார்!
எல்லா கணவர்களுக்கும் சமையலறை ஒரு போதி மரமாகத்தெரிந்து விட்டால் இல்லற வாழ்க்கை எத்தனை மகிழ்ச்சிக்குரியதாயிருக்கும்!!
அருமையான கவிதை!
புத்தித் தெளிவடைதலே ஞானமெனில்
அதைத் தருமிடமே போதிமரமெனில்
சமை யலறைக்கூட நமக்கு போதிமரம்தானே
அதைத் தன் செயலால் போதிக்கும்
மனைவி கூட நமக்குப் புத்தன்தானே//
அருமையாக சொன்னீர்கள்.
மனைவிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
"சமை யலறைக்கூட நமக்கு போதிமரம்தானே" கவிதைபொழிய மனைவி பல்சுவை விருந்து படைத்து விட்டாரோ :)))
நல்ல சிந்தனை. எப்படிஎல்லாம் சிந்திக்கிறீர்கள். வாழ்த்துகள். தொடருங்கள்....
ஞானசாதனங்கள் கண்பார்வையில்; கண்மட்டும் வெட்டவெளியில்.. இப்படித்தானே வாழ்கிறோம்?! சிந்திக்க வைத்த கவிதை.
எந்தச் செயலையும் ஆர்வமுடன் செய்தால் அதில் அலுப்பு தெரியாது.... சமையலறை கூட சிந்திக்க வைக்கும் இடம்தான்....
நிச்சயமாக!
தத்தாத்ரேயர் ஞானம் பெற்றவற்றுள் இது விட்டுப் போனதோ...
யாரும் யோசிக்காத புதிய பார்வை.
த.ம.13
புதிய பார்வை அய்யா.
ஓய்வில்லா பணி அல்லவா.
பால கணேஷ் //
அருமையான கருத்தை பளிச்சென்று உரைத்தீர்கள் ஸார்!//
தங்கள் முதல் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
கிரேஸ் //
அருமை..வார்த்தையே இல்லை..ஒவ்வொரு கணவனும் தன் மனைவியின் வேலைகளைப் புரிந்துகொண்டால் போதுமே,//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Avargal Unmaigal//
சில குடும்பங்களில் கணவனும் புத்தனே......
ஆஹா... இதை ஒரு சில மனைவிமாரும் உணர்ந்து விட்டால் இல்லறத்தில் என்றுமே தென்றல் வீசும//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
இராஜராஜேஸ்வரி //
போதிமரமாய் கவிதையும் ..பாராட்டுக்கள்..//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
புலவர் இராமாநுசம் //
இவ் வகையில் பெற்ற தாயும் கூட போதிமரம்தான்/
/தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கவியாழி கண்ணதாசன் //
ஆஹா அருமை அருமை. ஞானம்பெற சமையலறையும் சிறந்த இடம்தான்//
/தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Ambal adiyal //
வாழ்த்துக்கள் ஐயா
சிறப்பான சிந்தனை இதற்க்கு .///
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
தி.தமிழ் இளங்கோ //
.
கவிஞரின் “ஞானம் பிறந்த கதை”.//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
திண்டுக்கல் தனபாலன் //
வித்தியாசமான அழகான அருமையான சிந்தனை... இவ்வாறு இருந்தால் பிரச்சனை ஏது...? பாராட்டுக்கள்...//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
உஷா அன்பரசு //
ஆண்களுக்காவது பணி ஓய்வு கிடைத்து விடுகிறது.. பெண்களுக்கு ஏது ஐயா வீட்டு பணி ஓய்வு? பெண் என்பவள் எழுந்திருக்கவே முடியாதளவு விழும் வரை ஓடிக்கொண்டுத்தானே இருக்கிறாள். அருமையான புரிதலுடன் எழுதிய கவிதைக்கு மிக்க நன்றி!//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
இளமதி //
சமையலறையோ சாமியறையோ போதிமரத்தடியில் ஞானம் வந்தால்சரிதான்...
ஐயா... மிக மிக அருமை! அழகிய கவிதையில் அற்புதமாய் விடயத்தைச் சொன்னீர்கள்! வாழ்த்துக்கள்//
!தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வை.கோபாலகிருஷ்ணன் //
மிகவும் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்//!
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
.
rajalakshmi paramasivam //
இது உண்மையைத் தவிர வேறில்லை...//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Sasi Kala //
சமையலறை பெண்களுக்கு போதி மரம் என்றால்...
பெண் உருவமெல்லாம் ஆண்களுக்கு போதி மரமாகும். நல்ல கருத்து ஐயா.//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அருணா செல்வம் //
..!!
அருமையான படைப்பு. வணங்குகிறேன் இரமணி
//.தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
G.M Balasubramaniam //
காணும் இடங்களில் இருந்தும் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களிடம் இருந்தும் கற்க நிறையவே உள்ளது. போதி மரங்களை அடையாளம் கண்டு கொள்வதுதான் சிரமம். சமையலறை போதிமரம், மனைவி புத்தன். சிறப்பான சிந்தனை.//
//.தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
குட்டன் //
சூப்பர் சிந்தனை!அசத்தறீங்கசார்!//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மனோ சாமிநாதன் //
எல்லா கணவர்களுக்கும் சமையலறை ஒரு போதி மரமாகத்தெரிந்து விட்டால் இல்லற வாழ்க்கை எத்தனை மகிழ்ச்சிக்குரியதாயிருக்கும்!!
அருமையான கவிதை!//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கோமதி அரசு //
அருமையாக சொன்னீர்கள்.
மனைவிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மாதேவி //.
நல்ல சிந்தனை. எப்படிஎல்லாம் சிந்திக்கிறீர்கள். வாழ்த்துகள். தொடருங்கள்.../
/தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அப்பாதுரை ''
ஞானசாதனங்கள் கண்பார்வையில்; கண்மட்டும் வெட்டவெளியில்.. இப்படித்தானே வாழ்கிறோம்?! சிந்திக்க வைத்த கவிதை.//
கண்கள் அருகே இமையிருந்தும்
கண்கள் இமையைப் பார்ப்பதில்லை "தானே"
ezhil //
எந்தச் செயலையும் ஆர்வமுடன் செய்தால் அதில் அலுப்பு தெரியாது.... சமையலறை கூட சிந்திக்க வைக்கும் இடம்தான்..//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
நிலாமகள் //
நிச்சயமாக!
தத்தாத்ரேயர் ஞானம் பெற்றவற்றுள் இது விட்டுப் போனதோ../
மனம் கவர்ந்த அருமையான பின்னூட்டம்
வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி/
T.N.MURALIDHARAN //
யாரும் யோசிக்காத புதிய பார்வை./
மனம் கவர்ந்த அருமையான பின்னூட்டம்
வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி/
/
கரந்தை ஜெயக்குமார் //
புதிய பார்வை அய்யா.
ஓய்வில்லா பணி அல்லவா./
/தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
மிக்க நன்றி
மிக்க நன்றி
Post a Comment