Thursday, May 23, 2013

பழநிமுருகனும் நானும்

எதிர்பார்ப்புகள் எதுமின்றி
எப்போதும் உறவு கொள்வதால்
எனக்கு
உறவுகளும் அதிகம்
நண்பர்களும் அதிகம்

அதைப் போலவே
வேண்டுதல்கள் ஏதுமின்றி
சன்னதிக்குச் செல்வதால்
எனக்கும்
பழநி முருகனுக்கும்
பழக்கம் ரொம்ப நெருக்கம்

திருவிழா நாட்களில் அவன்
எப்போதும் கோவிலில் இருப்பதில்லை
சன்னதி திறந்ததும்
தாவிக் குதித்து வெளியேறிவிடுவான்
மீண்டும்
நடை  சாத்துகையில்தான்
கோவிலுக்குள் காலடி வைப்பான்

இன்றும் அப்படித்தான்
மயிலினை உலாவவிட்டு
என் எதிரில்தான் அமர்ந்துகொண்டான்

தக்க சமயம் இதுதானென
மெதுவாக காரணம் கேட்டேன்
சிரித்த முகத்துடன்தான்
என்னோடு பேசத் துவங்கினான்

"உண்மையில் எனக்கு
ஆத்திகர்களை விட
நாத்திகர்களைத்தான்
ரொம்பப் பிடிக்கும் "என்றான்
நான் அதிர்ந்து போனேன்
அவனேதான் தொடர்ந்து பேசினான்

"ஆத்திகர்களைப் போல நாத்திகர்கள்
அதிகம் என்னை தொந்தரவு செய்வதில்லை.
 காவடிக்குள்ளும் பால் குடத்திற்குள்ளும்
கோரிக்கைகள் ஆயிரம்  வைத்து என்னை
இம்சை படுத்துவதில்லை " என்றான்

நான் பணிந்து வணங்கிச் சொன்னேன்
" நீ கொடுப்பவன் என நம்பித்தான்
உன் கோவில் தேடி வருகிறார்கள்
வருகிறவர்களில் நல்லவர்களும் இருக்கலாம்
தகுதியானவர்களாகப் பார்த்து நீ
கொஞ்சம் தயை செய்யலாமே" என்றேன்

முருகனின் முகத்தில் லேசான
மாறுதல் தெரிந்தது

"இந்த மனிதர்களுக்கு நான்
எதைக்  கொடுக்காது இருக்கிறேன்
பஞ்ச பூதங்களைப்
படைத்துக் கொடுத்துள்ளேன்
அதை அடக்கி ஆளும்
அறிவினைக் கொடுத்துள்ளேன்
சக்தியைக் கொடுத்துள்ளேன்
சிந்திக்கும் திறனும் கொடுத்துள்ளேன்
இன்னும் போதாது போதாது என
என் வாசல் வந்து நின்றால்
நான் என்ன செய்யக்கூடும்
நிலம் கொடுத்து
விதை கொடுத்து
நீரும் கொடுத்து
சக்தி கொடுத்து
பயிரிடும் அறிவும் கொடுத்து
பிழைத்துகொள் என அருளினால்
மீண்டும் என்னிடமே வந்து
அடிவயிற்றில் பசி
அனலாய் எரிக்கிறது
எட்டேஎட்டு இட்லியும்
தொட்டுக்கொள்ள ஏதுவாக
கெட்டியாக சட்டினியும்
இருந்தால் நல்லது என்றால்
நான் என்ன செய்யக் கூடும் "என்றான்

நான் கொஞ்சம் பழக்கத்தை
கெடுத்துக் கொண்டேனோ என
பயந்துதான் போனேன்.

பின் தீர்க்கமான குரலில்
சண்முகனே பேசினான்
"என்னிடம் கொடுப்பதற்கு ஏதும் இல்லை
எல்லாமே கொடுத்துவிட்டேன்
இதை அனைவரும் புரிந்து கொள்ளட்டும் என்றே
கோவணாண்டியாகவே காட்சியும் தருகிறேன்
இதற்குமேல் நான் என்ன செய்யட்டும்" என்றான்

திருமுருகன் முகத்தில் தாண்டவமாடுவது
கோபமா கவலையா
என்னால் ஏதும் அனுமானிக்க இயலவில்லை

அதற்குள்
சன்னதியின் மணியோசைச் சப்தமும்
பக்தர்களின் அரோகரா சப்தமும்
குன்றெங்கும் பட்டுத் தெறித்தது
நானும் விழிமூடித் தியானித்து
லேசாக விழி திறந்தேன்
பழநி முருகன் எதிரில் இல்லை
அவன் இருந்து போனதன் அடையாளமாய்
எங்கும் சந்தன மணமே நிறைந்திருந்தது

(வைகாசி  விசாகம் இன்று )(மீள் பதிவு )

32 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

/// இதை அனைவரும் புரிந்து கொள்ளட்டும் என்றே
கோவணாண்டியாகவே காட்சியும் தருகிறேன் ///

புரிந்து கொள்ள வேண்டிய வரிகள்... வாழ்த்துக்கள்...

கவியாழி said...

"என்னிடம் கொடுப்பதற்கு ஏதும் இல்லை
எல்லாமே கொடுத்துவிட்டேன்//வாய்ப்புக் கிடைத்தவர் வசதியாகிறார் இல்லாதவர் அசதியாகிறார்.
நல்ல கனவுகள் நாளும் வரட்டும்.நன்றிங்க சார்

இராஜராஜேஸ்வரி said...

சன்னதி திறந்ததும்
தாவிக் குதித்து வெளியேறிவிடுவான்
மீண்டும்
நடை சாத்துகையில்தான்
கோவிலுக்குள் காலடி வைப்பான்

அருமையான அவதானிப்பு ..!

தி.தமிழ் இளங்கோ said...

மீள்பதிவு என்றாலும், மீண்டும் ஒருமுறை படிக்கும்போதும் புதிய சிந்தனையைத்தான் தோற்றுவித்தது.

அப்பாதுரை said...

கோவனாண்டி கொடுத்து முடித்தாலும் கேனையாண்டிகள் கேட்டு முடிக்கவில்லையே.? கவிதை கொஞ்சம் கற்பனையை நீட்டிப் பார்க்கத் தோணுது.. 'எங்க கிட்டே கொடுக்க எதுவும் இல்லிங்க, தொந்தரவு செய்யாதீங்க'னு திடீரென்று அத்தனை கடவுள்களும் ஸ்ட்ரைக் செஞ்சா எப்படியிருக்கும்?

Unknown said...

எதிர்பார்ப்புகள் எதுமின்றி
எப்போதும் உறவு கொள்வதால்
எனக்கு
உறவுகளும் அதிகம்
நண்பர்களும் அதிகம்

தெளிவாகச் சொன்னீர்கள் இரமணி ! என் நிலையும் இதுதான்!

கரந்தை ஜெயக்குமார் said...

"என்னிடம் கொடுப்பதற்கு ஏதும் இல்லை
எல்லாமே கொடுத்துவிட்டேன்
இதை அனைவரும் புரிந்து கொள்ளட்டும்

சரியாகச் சொன்னீர் அய்யா.
அருமையான மின் பதிவு
என்ன வளம் இல்லை
இந்தத் திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும்
வெளிநாட்டில
ஒழுங்காய் பாடுபடு

என்று பாடினானே ஓர் புலவன்
நம்மிடம் என்ன இருக்கின்றது
என்று நமக்கே
தெரியவில்லை

Avargal Unmaigal said...

///ஆத்திகர்களைப் போல நாத்திகர்கள்
அதிகம் என்னை தொந்தரவு செய்வதில்லை.
காவடிக்குள்ளும் பால் குடத்திற்குள்ளும்
கோரிக்கைகள் ஆயிரம் வைத்து என்னை
இம்சை படுத்துவதில்லை " என்றான்///

ஆயிரம் கோரிக்கைகளுக்கே முருகன் சலிச்சிகிறான் ஆயிரத்து ஒன்றாக எனது பேஸ்புக் ஸ்டேடஸுக்கு லைக் ,பதிவுக்கு ஒட்டு, பின்னூட்டம் என்று கேட்க ஆரம்பித்தால் முருகன் பேசாமல் கமல் சொன்னதை போல எனக்கு பிரச்சனைக்கள் கொடுத்தீர்கள் என்றால் நானும் வெளிநாட்டிற்கு போய்விடுவோம் என்று சொன்னாலும் சொல்லுவான் ஐயா

உஷா அன்பரசு said...

//எதிர்பார்ப்புகள் எதுமின்றி
எப்போதும் உறவு கொள்வதால்
எனக்கு
உறவுகளும் அதிகம்
நண்பர்களும் அதிகம்

// - என் நடைமுறையும் இதுதான்..! அருமை!
த.ம-6

இளமதி said...

எதைச்சொல்ல எப்படிச்சொல்ல
அத்தனையும் ரத்தின வரிகள் ஐயா.
மிகமிக அருமை. வரிக்குவரி மீண்டும் மீண்டும் படித்தேன்.
அழகிய பதிவு. பகிர்விற்கு என் மனமார்ந்த நன்றிகள் பல...

த ம. 7

வை.கோபாலகிருஷ்ணன் said...

மீள் பதிவை மீண்டும் படித்தேன், ரஸித்தேன். பகிர்வுக்கு நன்றிகள்.

”தளிர் சுரேஷ்” said...

அருமை! ரத்தின சுருக்கமாய் முருகரின் நிலையை பாடி விட்டீர்கள்! பக்தர்கள் உணர்ந்தால் நல்லது! பகிர்வுக்கு நன்றி!

அருணா செல்வம் said...

எத்தனை முறை படித்தாலும் என்னை விட்டு
மீளாத பதிப்பு இது இரமணி ஐயா.

G.M Balasubramaniam said...



மீள்பதிவு என்று படிக்க ஆரம்பித்தபோதே தெரிந்துவிட்டது என்றால் பதிவின் வீச்சு இன்னும் மறையவில்லை என்றுதானே பொருள். எத்தனை முறை சொன்னாலும் மீண்டும் மீண்டும் கேட்டு உள்வாங்கிக் கொள்ள வேண்டிய கருத்தல்லவா. ? பாராட்டுக்கள்.

கோமதி அரசு said...

எதிர்பார்ப்புகள் எதுமின்றி
எப்போதும் உறவு கொள்வதால்
எனக்கு
உறவுகளும் அதிகம்
நண்பர்களும் அதிகம்//

எதிர்பார்ப்புக்கள் எதுமின்றி இருப்பது தான் நல்லது.
இறைவனிடமும் தான்.
அருமையாக இருக்கிறது முருகனிடம் நீங்கள் உரையாடியது.

கீதமஞ்சரி said...

எதிர்பார்ப்புகளற்ற வாழ்க்கையில்தான் ஆனந்தம் என்னும் வாழ்க்கை ரகசியத்தை ஆன்மீகத்தின் மூலமாகவும் உணர்த்திய விதம் அருமை. அளவில்லாத ஆசைகளுக்கிடையில் அலைபாயும் மனத்தை ஆண்டவனும் விரும்புவதில்லை என்று அழகாக சொல்லியுள்ளீர்கள். பாராட்டுகள் ஐயா.

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் ''.
/// இதை அனைவரும் புரிந்து கொள்ளட்டும் என்றே
கோவணாண்டியாகவே காட்சியும் தருகிறேன் ///

புரிந்து கொள்ள வேண்டிய வரிகள்... வாழ்த்துக்கள்..

உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

Yaathoramani.blogspot.com said...

கவியாழி கண்ணதாசன் ...

"என்னிடம் கொடுப்பதற்கு ஏதும் இல்லை
எல்லாமே கொடுத்துவிட்டேன்//

வாய்ப்புக் கிடைத்தவர் வசதியாகிறார் இல்லாதவர் அசதியாகிறார்.
நல்ல கனவுகள் நாளும் வரட்டும்.நன்றிங்க சார்

உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

Yaathoramani.blogspot.com said...

இராஜராஜேஸ்வரி //
சன்னதி திறந்ததும்
தாவிக் குதித்து வெளியேறிவிடுவான்
மீண்டும்நடை சாத்துகையில்தான்
கோவிலுக்குள் காலடி வைப்பான்

அருமையான அவதானிப்பு ..!//

உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

Yaathoramani.blogspot.com said...

தி.தமிழ் இளங்கோ .//.

மீள்பதிவு என்றாலும், மீண்டும் ஒருமுறை படிக்கும்போதும் புதிய சிந்தனையைத்தான் தோற்றுவித்தது./

/உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

Yaathoramani.blogspot.com said...

அப்பாதுரை //

கோவனாண்டி கொடுத்து முடித்தாலும் கேனையாண்டிகள் கேட்டு முடிக்கவில்லையே.? கவிதை கொஞ்சம் கற்பனையை நீட்டிப் பார்க்கத் தோணுது.. 'எங்க கிட்டே கொடுக்க எதுவும் இல்லிங்க, தொந்தரவு செய்யாதீங்க'னு திடீரென்று அத்தனை கடவுள்களும் ஸ்ட்ரைக் செஞ்சா எப்படியிருக்கும்?


உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
சிந்திக்கத் தூண்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

புலவர் இராமாநுசம் said...
எதிர்பார்ப்புகள் எதுமின்றி
எப்போதும் உறவு கொள்வதால்
எனக்கு
உறவுகளும் அதிகம்
நண்பர்களும் அதிகம்

தெளிவாகச் சொன்னீர்கள் இரமணி ! என் நிலையும் இதுதான்!//

/உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

Yaathoramani.blogspot.com said...

கரந்தை ஜெயக்குமார் said...
"என்னிடம் கொடுப்பதற்கு ஏதும் இல்லை
எல்லாமே கொடுத்துவிட்டேன்
இதை அனைவரும் புரிந்து கொள்ளட்டும்

சரியாகச் சொன்னீர் அய்யா.
அருமையான மின் பதிவு
என்ன வளம் இல்லை
இந்தத் திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும்
வெளிநாட்டில
ஒழுங்காய் பாடுபடு//



/உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal said...
/
ஆயிரம் கோரிக்கைகளுக்கே முருகன் சலிச்சிகிறான் ஆயிரத்து ஒன்றாக எனது பேஸ்புக் ஸ்டேடஸுக்கு லைக் ,பதிவுக்கு ஒட்டு, பின்னூட்டம் என்று கேட்க ஆரம்பித்தால் முருகன் பேசாமல் கமல் சொன்னதை போல எனக்கு பிரச்சனைக்கள் கொடுத்தீர்கள் என்றால் நானும் வெளிநாட்டிற்கு போய்விடுவோம் என்று சொன்னாலும் சொல்லுவான் ஐயா//


உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
சிந்திக்கத் தூண்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

உஷா அன்பரசு //
//எதிர்பார்ப்புகள் எதுமின்றி
எப்போதும் உறவு கொள்வதால்
எனக்கு
உறவுகளும் அதிகம்
நண்பர்களும் அதிகம்

// - என் நடைமுறையும் இதுதான்..! அருமை!


/உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

Yaathoramani.blogspot.com said...

இளமதி //

எதைச்சொல்ல எப்படிச்சொல்ல
அத்தனையும் ரத்தின வரிகள் ஐயா.
மிகமிக அருமை. வரிக்குவரி மீண்டும் மீண்டும் படித்தேன்.
அழகிய பதிவு. பகிர்விற்கு என் மனமார்ந்த நன்றிகள் பல...//


/உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //

மீள் பதிவை மீண்டும் படித்தேன், ரஸித்தேன். பகிர்வுக்கு நன்றிகள்.//

/உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

Yaathoramani.blogspot.com said...

s suresh //

அருமை! ரத்தின சுருக்கமாய் முருகரின் நிலையை பாடி விட்டீர்கள்! பக்தர்கள் உணர்ந்தால் நல்லது! பகிர்வுக்கு நன்றி!
/உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

Yaathoramani.blogspot.com said...

அருணா செல்வம் s//
.
எத்தனை முறை படித்தாலும் என்னை விட்டு
மீளாத பதிப்பு இது இரமணி ஐயா///

உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

.

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam said...


மீள்பதிவு என்று படிக்க ஆரம்பித்தபோதே தெரிந்துவிட்டது என்றால் பதிவின் வீச்சு இன்னும் மறையவில்லை என்றுதானே பொருள். எத்தனை முறை சொன்னாலும் மீண்டும் மீண்டும் கேட்டு உள்வாங்கிக் கொள்ள வேண்டிய கருத்தல்லவா. ? பாராட்டுக்கள்.//


உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

Yaathoramani.blogspot.com said...

கோமதி அரசு //

எதிர்பார்ப்புக்கள் எதுமின்றி இருப்பது தான் நல்லது.
இறைவனிடமும் தான்.
அருமையாக இருக்கிறது முருகனிடம் நீங்கள் உரையாடியது.


உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

Yaathoramani.blogspot.com said...

கீத மஞ்சரி //

எதிர்பார்ப்புகளற்ற வாழ்க்கையில்தான் ஆனந்தம் என்னும் வாழ்க்கை ரகசியத்தை ஆன்மீகத்தின் மூலமாகவும் உணர்த்திய விதம் அருமை. அளவில்லாத ஆசைகளுக்கிடையில் அலைபாயும் மனத்தை ஆண்டவனும் விரும்புவதில்லை என்று அழகாக சொல்லியுள்ளீர்கள். பாராட்டுகள் ஐயா.//

ஆழமான அழுத்தமான கருத்துடன் கூடிய
விரிவான பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்றி

Post a Comment