அவசரத்தில் போகிற போக்கில்
எதிர்படும் நண்பனை
விசாரித்துப்போகும் "மினிச் சுகத்தை "
"டுவீட்டுகளிலும்
அவசியமாக தவிர்க்க முடியாது
காத்திருக்கும் தருணங்களில்
சந்தித்த நண்பனுடன்
உரையாடும் "தனிச் சுகத்தை "
"முக நூலிலும் "
விடுமுறை நாட்களில்
ஊர்க்கோடி பாலத்தில் அமர்ந்து
சாவகாசமாகப் பேசும் "அற்புதச் சுகத்தை"
"பதிவுப் பக்கங்களிலும் "
அனுபவித்தபடி என்னை நான்
ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்
என்ன செய்வது
கடமைச் சுமை அழுத்த
கூன் விழுந்த மனத்துடன்
கட்டிடக் காட்டுக்குள் வசிப்பவன்
முழு நிலவின் அழகையும்
மனதைக் குளிர் விக்கும்
அந்தப் பனிப் பொழிவையும்
குளிரூட்டப்பட்ட திரையரங்குகளில்
கண்டு தானே
" மெய்மறக்க " முடியும்
எதிர்படும் நண்பனை
விசாரித்துப்போகும் "மினிச் சுகத்தை "
"டுவீட்டுகளிலும்
அவசியமாக தவிர்க்க முடியாது
காத்திருக்கும் தருணங்களில்
சந்தித்த நண்பனுடன்
உரையாடும் "தனிச் சுகத்தை "
"முக நூலிலும் "
விடுமுறை நாட்களில்
ஊர்க்கோடி பாலத்தில் அமர்ந்து
சாவகாசமாகப் பேசும் "அற்புதச் சுகத்தை"
"பதிவுப் பக்கங்களிலும் "
அனுபவித்தபடி என்னை நான்
ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்
என்ன செய்வது
கடமைச் சுமை அழுத்த
கூன் விழுந்த மனத்துடன்
கட்டிடக் காட்டுக்குள் வசிப்பவன்
முழு நிலவின் அழகையும்
மனதைக் குளிர் விக்கும்
அந்தப் பனிப் பொழிவையும்
குளிரூட்டப்பட்ட திரையரங்குகளில்
கண்டு தானே
" மெய்மறக்க " முடியும்
35 comments:
மனம் கனக்கிறது இது என்ன வாழ்க்கை என்று ஆனாலும் எதிர்காலத்தில் இதைக்கூட எமது சந்ததியினர் அனுபவிப்பார்களா என்று எண்ணும் போது நாம் கொஞ்சம் கொடுத்து வைத்தவர்கள் என்றே எண்ணத் தோன்றுகின்றதையா மீண்டும் அதே மனக் கனத்துடன் .
சிறப்பான பகிர்வுக்கு பாராட்டுகள் ஐயா .
nallaa sollideenga ayya..!
அன்று முகம் பார்த்து தோள்தொட்டு கண்களில் புன்னகை தேக்கி கையணைத்து கண்ணீர் துடைத்து மெய்யுறவாடிய நட்பு இன்று உட்கார்ந்த இடத்திலிருந்தே உறவாடிக்கொண்டிருக்கிறது. பேச்சுகள் எழுத்துக்களாகவும் உணர்வுகள் பொம்மை முகக் குறியீடுகளாகவும் மாறிவிட அலைபாயும் மனத்தை ஆற்றுப்படுத்துகின்றன இதுபோன்ற ஆசுவாச முயற்சிகள்... மனம் திறந்து காட்டி மனம் தொட்ட பதிவுக்குப் பாராட்டுகள் ரமணி சார்.
/// கூன் விழுந்த மனத்துடன்
கட்டிடக் காட்டுக்குள் வசிப்பவன் ///
சொன்ன விதம் அருமை...
வாழ்த்துக்கள் ஐயா ...
கூன் விழுந்த மனத்துடன்
கட்டிடக் காட்டுக்குள் வசிப்பவன்//இன்றைய வாழ்க்கை முறையை சொன்னவிதம் அருமை...அருமை
சிறப்பான பதிவு.. மனதை நெகிழ செய்த கவிதை..
என்ன செய்வது
கடமைச் சுமை அழுத்த
கூன் விழுந்த மனத்துடன்
கட்டிடக் காட்டுக்குள் வசிப்பவன்
முழு நிலவின் அழகையும்
மனதைக் குளிர் விக்கும்
அந்தப் பனிப் பொழிவையும்
குளிரூட்டப்பட்ட திரையரங்குகளில்
கண்டு தானே
" மெய்மறக்க " முடிகிறது
ஆகா! என்ன அருமையான சிந்தனை! இதை விட
வேறு யாரும் இதனை இவ்வளவு சிறப்பாகச் சிந்தித்து
சொல்லிவிட முடியாது! நீடூழி நீர் வாழ்க! இரமணி!
விடுமுறை நாட்களில்
ஊர்க்கோடி பாலத்தில் அமர்ந்து
சாவகாசமாகப் பேசும் "அற்புதச் சுகத்தை"
"பதிவுப் பக்கங்களிலும் "//
உண்மை. நன்றாக சொன்னீர்கள்.
என்ன செய்வது
கடமைச் சுமை அழுத்த
கூன் விழுந்த மனத்துடன்
கட்டிடக் காட்டுக்குள் வசிப்பவன்
முழு நிலவின் அழகையும்
மனதைக் குளிர் விக்கும்
அந்தப் பனிப் பொழிவையும்
குளிரூட்டப்பட்ட திரையரங்குகளில்
கண்டு தானே
" மெய்மறக்க " முடிகிறது//
நிலவின் அழகை, ஒளியை ரசிக்க முடியவில்லை கட்டிட காட்டுக்குள். உண்மைதான்.
கவிதை அருமை.
எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!
// என்ன செய்வது
கடமைச் சுமை அழுத்த
கூன் விழுந்த மனத்துடன்
கட்டிடக் காட்டுக்குள் வசிப்பவன் //
ஐயா... இயலாமையைக்கூற இதைவிட வேறில்லை.
எம்மில் அநேகம்பேர் இந்நிலையில்தான் இன்று.
விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் தொண்டைக்குள் துக்கம் அடைக்க வாழ்கிறோம்...
அருமையான கவிதை!
மனம் தொட்ட பதிவையா! உளமார வாழ்த்துகிறேன்....
த ம. 8
மனதின் ஆதங்கத்தை நாம் தவற விட்ட தவிர்த்து விட்ட முழு நிலவின் அழகையும்
மனதைக் குளிர் விக்கும்
அந்தப் பனிப் பொழிவையும் காசு கொடுத்து காட்சியாக மட்டுமே ரசிக்கிறோம் என்பது எத்தனை பெரிய இழப்பு.
அப்பட்ட உண்மை பிட்டு வைக்கப்பட்டுள்ளது.
இக்கட்டில் இன்றைய தலைமுறை இன்னும் மோசமாக.
யாரை நோவது.....புலம்பலைத் தவிர.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
எந்திரமாகிவிட்ட வாழ்க்கையில் இதையாவது முடிகிறதே என்றுதான் திருப்தி பட்டுக்கொள்ள வேண்டியதுதான்..!
த.ம-10
கட்டிடக் காடுகளில் வாழ்க்கை இப்படிதான் நகருகிறது. அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.
ஆதங்கம் வெளிப்படும் அருமையான கவிதை! நன்றி!
அருமையாக சொல்லி இருக்கீங்க.த.ம 12
கட்டிடக்காடுகள் புது வார்த்தை,கவிதையில் மிகுந்து தெரிகிற ஆதங்கம்.ஆதங்கம் தீர்க்கிற வடிகாலாய் ஏதாவது ஒன்று இருந்து கொண்டேதான் இருக்கிறாது,அது சினிமா தியேட்டர் ஆகட்டும்,
அல்லது பழகிய மனிதர்கள் ஆகட்டும்.
யதார்த்த வாழ்க்கையை சுட்டிக் காட்டி விட்டீர்கள்.எதையும் வீட்டுக்குள் இருந்து பிம்பங்களில் இருந்துதான் ரசிக்க முடிகிறது.
த.ம.13
Ambal adiyal //
மனம் கனக்கிறது இது என்ன வாழ்க்கை என்று ஆனாலும் எதிர்காலத்தில் இதைக்கூட எமது சந்ததியினர் அனுபவிப்பார்களா என்று எண்ணும் போது நாம் கொஞ்சம் கொடுத்து வைத்தவர்கள் என்றே எண்ணத் தோன்றுகின்றதையா மீண்டும் அதே மனக் கனத்துடன் .//
தங்கள் முதல் வரவுக்கும்
அருமையான ஆழமான கருத்துடன் கூடிய
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
திண்டுக்கல் தனபாலன் /
/// கூன் விழுந்த மனத்துடன்
கட்டிடக் காட்டுக்குள் வசிப்பவன் ///
சொன்ன விதம் அருமை...
வாழ்த்துக்கள் ஐயா ...//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கவியாழி கண்ணதாசன் //
கூன் விழுந்த மனத்துடன்
கட்டிடக் காட்டுக்குள் வசிப்பவன்//இன்றைய வாழ்க்கை முறையை சொன்னவிதம் அருமை...அருமை/
/தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வேடந்தாங்கல் - கருண் //
சிறப்பான பதிவு.. மனதை நெகிழ செய்த கவிதை..//
/தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
புலவர் இராமாநுசம் said...
ஆகா! என்ன அருமையான சிந்தனை! இதை விட
வேறு யாரும் இதனை இவ்வளவு சிறப்பாகச் சிந்தித்து
சொல்லிவிட முடியாது! நீடூழி நீர் வாழ்க! இரமணி!//
/தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
கோமதி அரசு //
நிலவின் அழகை, ஒளியை ரசிக்க முடியவில்லை கட்டிட காட்டுக்குள். உண்மைதான்.
கவிதை அருமை.///
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அப்பாதுரை //
எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!//
ஆழமான கேள்வியை எழுப்பிப்போகும்
அருமையான பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்றி
இளமதி //
/
ஐயா... இயலாமையைக்கூற இதைவிட வேறில்லை.
எம்மில் அநேகம்பேர் இந்நிலையில்தான் இன்று.
விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் தொண்டைக்குள் துக்கம் அடைக்க வாழ்கிறோம்...
அருமையான கவிதை!
மனம் தொட்ட பதிவையா! உளமார வாழ்த்துகிறேன்..//
தங்கள் வரவுக்கும்
அருமையான ஆழமான கருத்துடன் கூடிய
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Sasi Kala //
மனதின் ஆதங்கத்தை நாம் தவற விட்ட தவிர்த்து விட்ட முழு நிலவின் அழகையும்
மனதைக் குளிர் விக்கும்
அந்தப் பனிப் பொழிவையும் காசு கொடுத்து காட்சியாக மட்டுமே ரசிக்கிறோம் என்பது எத்தனை பெரிய இழப்பு.//
தங்கள் வரவுக்கும்
அருமையான ஆழமான கருத்துடன் கூடிய
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
kovaikkavi //
அப்பட்ட உண்மை பிட்டு வைக்கப்பட்டுள்ளது.
இக்கட்டில் இன்றைய தலைமுறை இன்னும் மோசமாக.
யாரை நோவது.....புலம்பலைத் தவிர.
இனிய வாழ்த்து.//
தங்கள் வரவுக்கும்
அருமையான ஆழமான கருத்துடன் கூடிய
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
உஷா அன்பரசு //
எந்திரமாகிவிட்ட வாழ்க்கையில் இதையாவது முடிகிறதே என்றுதான் திருப்தி பட்டுக்கொள்ள வேண்டியதுதான்..//
தங்கள் வரவுக்கும்
அருமையான ஆழமான கருத்துடன் கூடிய
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ராமலக்ஷ்மி //
கட்டிடக் காடுகளில் வாழ்க்கை இப்படிதான் நகருகிறது. அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.///
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
s suresh //
ஆதங்கம் வெளிப்படும் அருமையான கவிதை! நன்றி//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
!
ஸாதிகா //
அருமையாக சொல்லி இருக்கீங்க//
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
விமலன் //
கட்டிடக்காடுகள் புது வார்த்தை,கவிதையில் மிகுந்து தெரிகிற ஆதங்கம்.ஆதங்கம் தீர்க்கிற வடிகாலாய் ஏதாவது ஒன்று இருந்து கொண்டேதான் இருக்கிறாது,அது சினிமா தியேட்டர் ஆகட்டும்,
அல்லது பழகிய மனிதர்கள் ஆகட்டும்/
தங்கள் வரவுக்கும்
அருமையான ஆழமான கருத்துடன் கூடிய
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
/
T.N.MURALIDHARAN //
யதார்த்த வாழ்க்கையை சுட்டிக் காட்டி விட்டீர்கள்.எதையும் வீட்டுக்குள் இருந்து பிம்பங்களில் இருந்துதான் ரசிக்க முடிகிறது.//
தங்கள் வரவுக்கும்
அருமையான ஆழமான கருத்துடன் கூடிய
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Post a Comment