நண்பன் என்று சொன்னால் இருவருக்கும் பல
விசயங்களில் ஒத்த ரசனை இருக்கும்,
ஒத்த கருத்து இருக்கும்,
குறைந்த பட்சம் ஒத்த லட்சியமாவது இருக்கும்
இப்படி எதுவுமே இல்லாது நெருக்கமான
நண்பர்களாக இருந்தது நானும் கணேசனும்தான்
அவன் தீவீர சிவாஜி ரசிகன்,
நான் அதிதீவீர எம் ஜி ஆர் ரசிகன்,நான் எப்போதும்
எதையாவது அசைபோட்டுக்கொண்டே
இருக்க விரும்புபவன்
அவன் வீட்டில் தவிர வெளியில் தண்ணிர் கூட
குடிக்கமாட்டான்.எனக்கு ஜாலியாக பேச ஆட்கள்
கிடைத்தால் போதும் நேரம் காலம் பார்க்கமாட்டேன்
அவன் எத்தனை முக்கியமான அலுவல் இருந்தாலும்
மிகச் சரியாக ஒன்பது மணிக்கு குறட்டை
விட்டுக் கொண்டிருப்பான்.சில சமயங்களில்
கருத்து மோதல் அதிகமாகையின் நான்
நட்புக்காக விட்டுக் கொடுத்துச் செல்ல முயல்வேன்,
அவன்அவன் கொண்ட கருத்தை
வலியுறுத்துவதில்தான்மிகச் சரியாக இருப்பான்.
அதனால் பலசமயம் மனக்கசப்பு ஏற்பட்டு
இரண்டு மூன்று நாள் பேசாமல் இருப்போம்.
அப்புறம் எங்கள் இருவருக்குமே போரடிக்கத்
துவங்கிவிடும்.பின் யார் அந்தச் சண்டையில்
தேவையில்லாமல் அதிகம் பேசினோமோ அவர்களே
''சாரி''யெனச் சொல்லிவிட்டு முதலில்
பேசத் துவங்கிவிடுவோம்.இந்தச் சண்டை எப்படித்தான்
சுதாரிப்பாக இருந்தாலும் மூன்று மாதத்திற்கு
ஒருமுறை வந்து போய்விடும்
இத்தனை முரண்பாடுகள் இருந்தாலும் ஒரே பள்ளி
ஒரே ஊர் என்னுடைய தந்தையும் அவனுடைய
தந்தையும்நண்பர்களாக இருந்தது எங்கள் நட்புக்கு
அடித்தளமாகஇருந்தது என நினைக்கிறேன்
அதனால்தான் என்னவோ இத்தனைமுரண்களுக்கு
இடையிலும் பள்ளி நாட்கள் முதல்
பணியில் சேர்ந்த பிறகும் இப்போது திருமணமாகி
குழந்தை குட்டிகள் என ஆகிவிட்டபோதும் கூட
எங்கள் நட்பில் இதுவரை எந்தத் தொய்வும் ஏற்பட
வாய்ப்பில்லாமல் போனது என்றும் .என நம்புகிறேன்
ஆனாலும் ஆறு மாதங்களுக்கு முன்
எங்களுக்குள் மீண்டும் ஒரு பெரிய
வாக்குவாதம் வந்துவிட்டது.
அதற்குக் காரணம் அவன் எப்போதும்
அலுவலகத்திற்குச் செல்கையில்
சாப்பிடத்தான் அலுவலகம் போகிறவன் போல
தினமும் இலை தண்ணீர் பாட்டில் சகிதம் போவது
எனக்கு அதிகம் எரிச்சல் கொடுத்துத்தான் வந்தது
அதை ஜாடைமாடையாகச் சொல்லி யிருந்தாலும்
அது குறித்து அழுத்திப் பேச மிகச் சரியான
சந்தர்ப்பம் வாய்க்காது இருந்ததால்
என் மன நிலையையும் சொல்லாது இருந்தேன்
இந்த நிலையில்தான் எனக்கும் அவனுக்கும்
நண்பனாக இருந்த முரளி இது குறித்து
அவனைக் கிண்டல் செய்து பேசியதுதான்
எனக்குள்ளும் கொஞ்சம் அதிக வெறுப்பேற்றியது
எனக்கும் அவன் கூற்று யோசித்துப்பார்க்கையில்
சரியெனவேப் பட்டதால் கொஞ்சம் அவனுக்கு
கோபம் வரும்படியாகவே சொன்னால்
மாறினாலும் மாறிவிடுவான் என்கிற நினைப்பில்
"ஏண்டா இந்தக் காலத்திலும்
இப்படி அம்மாஞ்சியா இருக்கே எனக்கே
" எனக் கேட்டுவிட்டேன்
எப்போது யாருக்கு எந்த வார்த்தை அதிகப்
பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரியாமல்
சில சமயங்களில் நாம் பயன்படுத்திவிடுகிறோம்
அல்லது சனி வாயில் வந்து அப்படி பயன்படுத்தச்
செய்துவிடுகிறது என நினைக்கிறேன்,அதுவும்
நான்குபேர் சுற்றி இருக்கையில் ...
"அம்மாஞ்சி " என பயன்படுத்திய வார்த்தை
அவனைப் பாதித்ததற்கும் மேலாக என்னைப்
பாதிக்கவேண்டும் என நினைத்துச் சொன்னானோ
அல்லது அவன் வாயிலும் சனி புகுந்துவிட்டானோ
என்னவோ " நான் அம்மாஞ்சியாக இருந்தாலும்
இருந்துவிட்டுப் போகிறேன், ஆனால்
நல்லாத் தான் இருப்பபேன் உன்னை மாதிரி
"தின்னிப்பெருச்சாளி மாதிரி கண்டதைத் தின்னு
சீக்கு வந்து சாகமாட்டேன் " எனச்சொல்லிவிட்டான்.
அப்போது நான் தெருவோரக் கடையில்
இரண்டாவது பஜ்ஜி முடித்து அடுத்து ஒரு
மசால் வடையை எடுத்தபோது சொன்னதாலா
அல்லது எனக்கும் சுற்றி நண்பர்கள் சிலர்
இருந்தபோது சொன்னதாலா எனத் தெரியவில்லை
நானும் சட்டென "பாப்போம்டி,உன்னை மாதிரி
பொத்திப் பொத்தி உடம்பை வளர்த்தவந்தாண்டி
பொசுக்குன்னு போயிருக்காங்க.என்ன மாதிரி
ஆட்களெல்லாம் நூறுதாண்டித்தான் போவாம்டி "
என வார்த்தைகளைக் கொட்டிவிட்டேன்
அப்போது இப்படி ஏன் இவ்வளவு மோசமாகப்
பேசினேன் ஏன் பேசினேன் நான்தான் பேசினேனா
அல்லது விதிதான் என்னுள் இருந்து பேசியதா
என எண்ண எண்ண இப்போது கூட
பல இரவுகள் எனக்கு தூக்கமில்லாமல்தான்
கடந்து கொண்டிருக்கிறது
(தொடரும்
59 comments:
தீடிரென்று ஏற்பட்ட கோபத்தால், பலர் முன்னிலையில் சொன்னதால், ஒரு சின்ன வார்த்தையின் தவறான புரிதலால், பல நட்புகள் இவ்வாறு ஆவதும் உண்டு...
இப்படியெல்லாம் அந்த நேரத்தில் பேசிவிட வைப்பது எது என்பதை பலமுறை எண்ணி வியந்திருக்கிறேன். அதுவும், மற்ற நேரங்களில் அது போன்ற எண்ணங்களின் சாயல் கூட நம்மிடம் இல்லாத போது !
உங்கள் நண்பருக்கு என்ன ஆச்சு ? ஒன்றுமில்லை என்று நீங்கள் சொல்லி விட மாட்டீர்களா என்று மனம் துடிக்கிறது.
//அதனால் பலசமயம் மனக்கசப்பு ஏற்பட்டு இரண்டு மூன்று நாள் பேசாமல் இருப்போம். அப்புறம் எங்கள் இருவருக்குமே போரடிக்கத் துவங்கிவிடும்.பின் யார் அந்தச் சண்டையில் தேவையில்லாமல் அதிகம் பேசினோமோ அவர்களே ''சாரி''யெனச் சொல்லிவிட்டு முதலில் பேசத் துவங்கிவிடுவோம்.
இந்தச் சண்டை எப்படித்தான் சுதாரிப்பாக இருந்தாலும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை வந்து போய்விடும்//
இந்த இடத்தை நான் மிகவும் ரஸித்தேன்.. தொடருங்கள்.
ஏன் இவ்வளவு மோசமாகப்
பேசினேன் ஏன் பேசினேன் நான்தான் பேசினேனா
அல்லது விதிதான் என்னுள் இருந்து பேசியதா//நீங்கள் வருத்தப் படுவது புரிகிறது.ஆனாலும் இப்படியும் அலுவலகத்தில்?
நட்புகள் பலவிதமாய்/
அள்ள முடியாது போன தருணம்.
துப்பிய வார்த்தைகளை ஒரு போதும் விழுங்க முடியாது.
சரி போகட்டும் விடுங்கள். பிறகு என்னவாயிற்று?
காத்திருக்கிறேன் இரமணி ஐயா.
நாக்குலே சனி எப்போதும் ஒளிந்தே உக்கார்ந்துருக்கான். தேவை இல்லாதசமயத்தில்தான் சரியா அவன் இருப்பை இப்படிக் காட்டிக் கொள்வான்:(
பெரியவர்கள் சிலசமயம் நாக்கிலே சனி என்று சொல்வது இதைத்தானோ? பேசாமல் அவர் வீட்டிற்கு சென்று அவரையும் அவர் குடும்பத்தாரையும் , உங்கள் மனைவியோடு சென்று பார்த்துவிட்டு வாருங்கள்.
இந்தக்கதையின் [சோக] முடிவினை என்னால் யூகிக்க முடிகிறது. ஆனால் அதுபோல ஏதும் இருக்கக்கூடாதே என என் மனம் விரும்புகிறது.
அனுபவம் கற்றுத் தந்த அறிவை வைத்து அடுத்து என்ன நிகழ்ந்திருக்கும் என்று கற்பனையில் பயணித்து உணர முடிகிறது. ஏனெனில் இதுபோன்ற அனுபவம் பொதுமைப்பட்டது. மனதில் சீரியஸாக எதையும் நினைக்காமல் பேசினாலும், சில சமயம் வார்த்தைகள் கூர்வாளாகி விடுகிறதே ரமணி ஸார்! பேசுவதற்கு முன் யோசித்துப்பேசு என்று நிதானமானவனாக இருக்க முயன்றாலும் விதி சில சமயம் ஏமாற்றித்தான் விடுகிறது!
// விதிதான் என்னுள் இருந்து பேசியதா
என எண்ண எண்ண இப்போது கூட
பல இரவுகள் எனக்கு தூக்கமில்லாமல்தான்
கடந்து கொண்டிருக்கிறது//
கடந்த எழுபது ஆண்டுகளில் நாம் சொன்ன பல வார்த்தைகள்
சொல்லியிருக்க வேண்டுமா என நினைக்கவைத்த
நேரங்கள் எனக்கும் பல உண்டு. உண்மையே.
ஆயினும் இது விதி எனச்சொல்லி எனது பொறுப்பினில் இருந்து
நழுவிக்கொள்வது மதியா எனத்தெரியவில்லை.
சொல்லாத சொல்லுக்கு நம்ம எசமான்.
சொல்லிய சொல்லோ நமக்கு எசமான்
புரியாமலேயே காலம் கடந்துவிட்டோம்
புரிந்தபின் எங்கே நாம் இருக்கப்போறோம் ?
ஒன்றே சொல்லு அதையும்
நன்றே சொல்லு என்ற நல்மொழியும்
நினைவுக்கு வருகிறது.
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in
பல சமயங்களில் இப்படித்தான் யோசிக்காது பேசி, பிறகு துக்கமடைகிறோம்.......
நண்பருக்கு என்னவாயிற்று. எங்களையும் சோகமாக்கப் போகிறீர்களா.....
த.ம. 7
இருவரது பேச்சிலும் ஒளிந்திருப்பது என்னவோ நட்பின் மீதான அக்கறை மட்டுமே. சொல்லிய விதமும்,சொல்லிய இடமும் சற்றுப் பொருத்தம் இல்லாததாய் இருந்திருக்கலாம். ஆனால் சொல்லிய விடயங்கள் நட்பின் கரிசனையில் விளைந்தவை.
gmbat1649.blogspot.in/2011/09/blog-post_30.html
மேலே கண்ட சுட்டியில் வார்த்தை எனும் தலைப்பில் ஒரு பதிவு எழுதி இருந்தேன். நீங்களும் படித்திருக்கிறீர்கள். பின்னூட்டமாக அந்தப்பதிவையே எடுத்துக்கொள்ளலாம். உங்கள் பதிவில் வார்த்தை எப்படி விளையாடப் போகிறதோ. ? பார்ப்போம். வாழ்த்துக்கள்.
ஆமாங்க உங்க நண்பருக்கு என்ன ஆகியிருக்குமோ என்றே பயமாக இருக்கிறது இதனால் நண்பர் கோபித்து பேசாமல் இருந்தாலும் பரவாயில்ல நன்றாக இருக்கவேண்டுமே என்றே நினைக்கிறேன்.
நாக்குதான் நமக்கு பல துன்பங்களுக்கும் இன்பங்களுக்கும் காரணமாக அமைந்து விடுகிறது அல்லவா? தொடர்கிறேன்! நன்றி!
எத்தனைதான் நிதானத்தைக் கடைப்பிடித்தாலும் நாக்கிலிருக்கும் தேள் தன் குணத்தைக் காட்டித்தான் விடுகிறது..
எனவேதான் பெரியவர்கள் சொல்வார்கள் அசுப வார்த்தைகள் சொல்லக் கூடாது என்று!தேவர்கள் அஸ்து என்று சொல்லி விடுவார்களாம்!
அவரும் "உன்னைமாதிரி..." என்று சொல்ல பதிலுக்கு நீங்களும் சொல்ல வேண்டித்தான் வந்துவிட்டது. இருவருமே ஒருவர்மேல் ஒருவர்கொண்ட அக்கறையில் வந்தவார்த்தைகள் அவை என்றே கொள்ளவேண்டி இருக்கின்றது .
அப்புறம் என்ன ஆயிற்று ?
முடிவு சோகமாய் இருக்க்மோ ?
சில நேரங்களில் சனியன் எலும்பில்லாத நாக்கில் வந்து உக்காந்து மன வேதனையை கொடுத்து விடுகிறது குரு ..
//நண்பன் என்று சொன்னால் இருவருக்கும் பல
விசயங்களில் ஒத்த ரசனை இருக்கும்,
ஒத்த கருத்து இருக்கும்,
குறைந்த பட்சம் ஒத்த லட்சியமாவது இருக்கும்
இப்படி எதுவுமே இல்லாது நெருக்கமான
நண்பர்களாக இருந்தது நானும் கணேசனும்தான்//
கொள்கை அல்லது எதாவது பிடிப்பு சார்ந்து இயங்கும் நட்புகள் அவற்றை மாற்றிக் கொள்ள நேரிடும் பொழுது காணாமல் போகும், வலையுலகில் ஒரு சில திமுக அனுதாபிகள் முன்பு நெருக்கமான நண்பர்களாக இருந்தனர், நான் திமுகவை விமர்சனம் செய்யத் துவங்கிய பொழுது அவர்களது நட்பை அவர்களாகவே விடுவித்துக் கொண்டனர்.
:)
உண்மையான நட்புகள் ஒத்த விருங்களால் உருவாகாது என்பது எனது தனிப்பட்ட கருத்து
vaarthai kottinaal ---
alla midivathillai...!
கோபத்தில் பேசும் வார்த்தைகள் அர்த்தமில்லாதது என்றாலும் ஆறாததாகவும் ஆகிவிடும் ..
நம்மையும் அறியாமல் சில நேரங்களில் நம் வார்த்தைகள் பிறரை காயப்படுத்தி விடும். சரியாக சொன்னீர்கள்
த.ம.11
திண்டுக்கல் தனபாலன் //
.
தீடிரென்று ஏற்பட்ட கோபத்தால், பலர் முன்னிலையில் சொன்னதால், ஒரு சின்ன வார்த்தையின் தவறான புரிதலால், பல நட்புகள் இவ்வாறு ஆவதும் உண்டு.//
//புரிதலுடன் கூடிய விரிவான
அருமையான முதல் பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்றி//
bandhu //
இப்படியெல்லாம் அந்த நேரத்தில் பேசிவிட வைப்பது எது என்பதை பலமுறை எண்ணி வியந்திருக்கிறேன். அதுவும், மற்ற நேரங்களில் அது போன்ற எண்ணங்களின் சாயல் கூட நம்மிடம் இல்லாத போது //
சரியாகச் சொன்னீர்கள்
அதற்கான விளக்கமாக சில வரிகளை
அடுத்த பதிவில் சேர்த்துள்ளேன்
வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி!
rajalakshmi paramasivam //
உங்கள் நண்பருக்கு என்ன ஆச்சு ? ஒன்றுமில்லை என்று நீங்கள் சொல்லி விட மாட்டீர்களா என்று மனம் துடிக்கிறது.//
என்ன செய்வது வாழ்வில் கற்பனையை விட நிஜம்
கொடூரமாகத்தானே இருக்கிறது
தங்கள் வரவுக்கும் உணர்வுப்பூர்வமான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
வை.கோபாலகிருஷ்ணன் //
இந்தச் சண்டை எப்படித்தான் சுதாரிப்பாக இருந்தாலும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை வந்து போய்விடும்//
இந்த இடத்தை நான் மிகவும் ரஸித்தேன்.. தொடருங்கள்//
நான் அழுத்தம் கொடுத்த இடத்தை
மிகச் சரியாக அறிந்து பின்னூட்டமிட்டு
வாழ்த்தியது மகிழ்வளிக்கிறது
மிக்க நன்றி
.
பால கணேஷ் //
அனுபவம் கற்றுத் தந்த அறிவை வைத்து அடுத்து என்ன நிகழ்ந்திருக்கும் என்று கற்பனையில் பயணித்து உணர முடிகிறது.//
புரிதலுடன் கூடிய விரிவான
அருமையான பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்றி//
சொல்லாத சொல்லுக்கு நம்ம எசமான்.
சொல்லிய சொல்லோ நமக்கு எசமான்
sury Siva //
புரியாமலேயே காலம் கடந்துவிட்டோம்
புரிந்தபின் எங்கே நாம் இருக்கப்போறோம் ?
ஒன்றே சொல்லு அதையும்
நன்றே சொல்லு என்ற நல்மொழியும்
நினைவுக்கு வருகிறது//
அருமையான கருத்தை அழகாக விரிவாக
பின்னூட்டமிட்டது மகிழ்வளிக்கிறது
தங்கள் மேலான வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
வெங்கட் நாகராஜ் //
பல சமயங்களில் இப்படித்தான் யோசிக்காது பேசி, பிறகு துக்கமடைகிறோம்.......
நண்பருக்கு என்னவாயிற்று. எங்களையும் சோகமாக்கப் போகிறீர்களா.//
புரிதலுடன் கூடிய அருமையான
உணர்வுபூர்வமான பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்றி
தீபிகா(Theepika)//
இருவரது பேச்சிலும் ஒளிந்திருப்பது என்னவோ நட்பின் மீதான அக்கறை மட்டுமே. சொல்லிய விதமும்,சொல்லிய இடமும் சற்றுப் பொருத்தம் இல்லாததாய் இருந்திருக்கலாம். ஆனால் சொல்லிய விடயங்கள் நட்பின் கரிசனையில் விளைந்தவை//
புரிதலுடன் கூடிய அருமையான
உணர்வுபூர்வமான பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்றி
.
சில நேரங்களில் நம்மை அறியாமல் வரும் வார்த்தைகள் இபடித்தான் நம் மனதை வருந்த வைக்கும்.
G.M Balasubramaniam /
. உங்கள் பதிவில் வார்த்தை எப்படி விளையாடப் போகிறதோ. ? பார்ப்போம்.//
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
Sasi Kala //
ஆமாங்க உங்க நண்பருக்கு என்ன ஆகியிருக்குமோ என்றே பயமாக இருக்கிறது இதனால் நண்பர் கோபித்து பேசாமல் இருந்தாலும் பரவாயில்ல நன்றாக இருக்கவேண்டுமே என்றே நினைக்கிறேன்.//
புரிதலுடன் கூடிய அருமையான
உணர்வுபூர்வமான பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்றி
s suresh s//
நாக்குதான் நமக்கு பல துன்பங்களுக்கும் இன்பங்களுக்கும் காரணமாக அமைந்து விடுகிறது அல்லவா? தொடர்கிறேன்//
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
அமைதிச்சாரல் //
எத்தனைதான் நிதானத்தைக் கடைப்பிடித்தாலும் நாக்கிலிருக்கும் தேள் தன் குணத்தைக் காட்டித்தான் விடுகிறது./
/தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
குட்டன் //
எனவேதான் பெரியவர்கள் சொல்வார்கள் அசுப வார்த்தைகள் சொல்லக் கூடாது என்று!தேவர்கள் அஸ்து என்று சொல்லி விடுவார்களாம்!/
/புரிதலுடன் கூடிய அருமையான
உணர்வுபூர்வமான பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்றி
மாதேவி //
.
அவரும் "உன்னைமாதிரி..." என்று சொல்ல பதிலுக்கு நீங்களும் சொல்ல வேண்டித்தான் வந்துவிட்டது. இருவருமே ஒருவர்மேல் ஒருவர்கொண்ட அக்கறையில் வந்தவார்த்தைகள் அவை என்றே கொள்ளவேண்டி இருக்கின்றது .
அப்புறம் என்ன ஆயிற்று ?
/புரிதலுடன் கூடிய அருமையான
உணர்வுபூர்வமான பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்றி
திண்டுக்கல் தனபாலன் .
வணக்கம்
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்..//.
தகவலுக்கு மிக்க நன்றி
புலவர் இராமாநுசம் //
முடிவு சோகமாய் இருக்க்மோ ?//
நிச்சயமாக
வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
MANO நாஞ்சில் மனோ //
சில நேரங்களில் சனியன் எலும்பில்லாத நாக்கில் வந்து உக்காந்து மன வேதனையை கொடுத்து விடுகிறது /
புரிதலுடன் கூடிய அருமையான
உணர்வுபூர்வமான பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்றிகுரு//
..
கோவி.கண்ணன் //
உண்மையான நட்புகள் ஒத்த விருங்களால் உருவாகாது என்பது எனது தனிப்பட்ட கருத்து/
/ஒத்த கருத்தால் மட்டுமே உருவாகாது எனினும்
நட்பு தொடர்வதற்கு ஒத்த கருத்து அவசியம் என்பது
என் கருத்து.வரவுக்கும் விரிவான சிந்தனையைத்
தூண்டிப்போகும் பின்னூட்ட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Seeni s
vaarthai kottinaal ---
alla midivathillai...!//
புரிதலுடன் கூடிய அருமையான
உணர்வுபூர்வமான பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்றிகுரு/
உஷா அன்பரசு //
கோபத்தில் பேசும் வார்த்தைகள் அர்த்தமில்லாதது என்றாலும் ஆறாததாகவும் ஆகிவிடும் .//
புரிதலுடன் கூடிய அருமையான
உணர்வுபூர்வமான பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்றிகுரு/
T.N.MURALIDHARAN //
நம்மையும் அறியாமல் சில நேரங்களில் நம் வார்த்தைகள் பிறரை காயப்படுத்தி விடும். சரியாக சொன்னீர்கள்/
புரிதலுடன் கூடிய அருமையான
உணர்வுபூர்வமான பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்றிகுரு//
கோமதி அரசு //
சில நேரங்களில் நம்மை அறியாமல் வரும் வார்த்தைகள் இபடித்தான் நம் மனதை வருந்த வைக்கும்.//
புரிதலுடன் கூடிய அருமையான
உணர்வுபூர்வமான பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்றிகுரு//
சிந்திய பாலும் வாயில் இருந்து வந்த வார்ததைகளையும் திரும்ப எடுக்க முடியாது என்பது உண்மை நீங்க முடித்த விதத்தில் ஊகிக்க முடிகிறது உங்கள் நண்பருக்கு என்ன நிகழ்ந்து இருக்கும் என்று
( பலரது பதிவுகள் எனது டாஸ்போர்டில் சில சமயங்களில் வருவதில்லை. என்னடா உங்கள் பதிவுகள் ஏதும் வரவே இல்லையே என்று உங்களது வலைத்தளத்திற்கு வந்த போது நீங்கள் பல பதிவுகளை இட்டுச் சென்றுள்ளது தெரிந்தது. சிறு வேண்டுகோள் பேஸ்புக்கிலும் கூகுல் ப்ளஸ் சிலும் உங்கள் பதிவுகலை அப்பேட் செய்யுங்கள். சில சமயங்களில் டாஷ் போர்டில் தெரியவில்லையென்றால் இந்த சோசஷியல் சைட் மூலம் அறிந்து கொள்ளலாம்
Avargal Unmaigal //
( பலரது பதிவுகள் எனது டாஸ்போர்டில் சில சமயங்களில் வருவதில்லை. என்னடா உங்கள் பதிவுகள் ஏதும் வரவே இல்லையே என்று உங்களது வலைத்தளத்திற்கு வந்த போது நீங்கள் பல பதிவுகளை இட்டுச் சென்றுள்ளது தெரிந்தது. சிறு வேண்டுகோள் பேஸ்புக்கிலும் கூகுல் ப்ளஸ் சிலும் உங்கள் பதிவுகலை அப்பேட் செய்யுங்கள். //
அருமையானவிரிவான பின்னூட்டத்திற்கும்
சரியான வழிகாட்டலுக்கும்
மனமார்ந்த நன்றி
ஏதோ சில காரணங்களால் முதல் சில பகுதிகளைத் தவறவிட்டிருந்தேன். தொடர்ந்து வாசிப்பில் லயிக்கவியலாதபடி அடுத்தடுத்தப் பணிகள். முந்தையவற்றைத் தவிர்த்துப் படிக்கவும் மனமொப்பவில்லை. நேரம் சாதகமாய் அமையும்நாளில் மொத்தத்தையும் வாசித்துக் கருத்திடக் காத்திருந்தேன். இப்போதுதான் இந்த முதல் பகுதியை வாசித்தேன். தலைப்பும், ஆரம்பமும் ஒருவித மனக்குமைச்சலை உருவாக்க, அடுத்தென்ன என்று அறிய தொடர்ந்து படிக்கிறேன்.
எமனோடு போராடி இன்று பதிவிட்ட 12வது பகுதியை படித்து விட்டு ஆர்வம் தாளமல் இருக்கும் வேலைகளை எல்லாம் ஒத்திப்போட்டுவிட்டு ஒவ்வொரு பகுதியாக பாடிக்க ஆரம்பித்து இருக்கிறேன்.
கீத மஞ்சரி said..//.
முதல் பகுதியை வாசித்தேன். தலைப்பும், ஆரம்பமும் ஒருவித மனக்குமைச்சலை உருவாக்க, அடுத்தென்ன என்று அறிய தொடர்ந்து படிக்கிறேன்.//sai
அருமையானவிரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
ஸாதிகா said...//
எமனோடு போராடி இன்று பதிவிட்ட 12வது பகுதியை படித்து விட்டு ஆர்வம் தாளமல் இருக்கும் வேலைகளை எல்லாம் ஒத்திப்போட்டுவிட்டு ஒவ்வொரு பகுதியாக பாடிக்க ஆரம்பித்து இருக்கிறேன்./
/புரிதலுடன் கூடிய அருமையான
உணர்வுபூர்வமான பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்றி//
இன்றைக்குத்தான் இந்தத் தொடரின் முதல் பகுதியைப் படித்தேன்.
பல வாரங்கள் ஆன போதிலும் முதலிலிருந்து படிக்க வேண்டும் என்று ஆரம்பித்திருக்கிறேன்.
எல்லோரது வாழ்விலும் இதுபோல சில தருணங்கள் வரத்தான் செய்கின்றன. ஒருத்தரை ஒருத்தர் முகம் பார்த்துப் பேச முடியாத அளவிற்கு பகமை வளர்ந்துவிடுகிறது.
உங்கள் கதையில் என்ன ஆகின்றது என்று பார்க்கலாம். ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.
வாழ்த்துக்கள்!
Ranjani Narayanan //.
/புரிதலுடன் கூடிய அருமையான
உணர்வுபூர்வமான பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்
Post a Comment