Tuesday, May 14, 2013

பாவப்பட்ட அவன்

உட்புறம் தாளிட்டுக்
கதவருகில் அமர்ந்தபடி
யாரேனும் வரமாட்டார்களாவென
வெகு நேரம் காத்திருந்து
மனச் சோர்வு கொள்கிறான்

இழுத்து அடைக்கப்பட்ட
ஜன்னலருகில் அமர்ந்தபடி
அறையினைக் கொதிகலனாக்கும்
வெக்கையில் புழுக்கத்தில் தன்மீதே
கழிவிரக்கம் கொள்கிறான்

தனிமைத் துயர்
குரல்வளை நெறிக்க
யாரேனும் அழைக்கமாட்டார்களாவென
தொலைபேசிக்கு அருகமர்ந்து
மனம் சலித்துப் போகிறான்

யாராவது சிரித்தால்
சிரிக்கலாமென்று ஆவலோடும்
யாராவது பேசினால்
பேசலாமென்று ஆர்வத்தோடும்
காலமெல்லாம் காத்துக்கிடந்தே
கவலை மிகக் கொள்கிறான்

விளைச்சலைப் பெற
முதலில் விதைத்தலும்
வேண்டியதைப் பெற
முதலில் கொடுத்தலும்
காரியம் வெற்றிபெற
முதலில் துவக்குதலும்
அவசியமென்பதை அறியாமலேயே...
துவக்க வேண்டியது
தான்தானென்பது புரியாமலேயே...

எதனையோ எவரையோ எதிர்பார்த்தபடியே
இன்றும் அவன் எப்போதும்போல்
காத்திருந்து காத்திருந்து
வெந்து நொந்துச் சாகிறான்
பாவப்பட்ட அவன்....

30 comments:

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

சபாஷ் ரமணியண்ணா.

காலங்காலமாக சொல்லப்படும் நீதியை எளிமையான தேனில் குழைத்த மருந்தாய்க் கொடுத்துவிட்டீர்கள்.

//விளைச்சலைப் பெற
முதலில் விதைத்தலும்

வேண்டியதைப் பெற
முதலில் கொடுத்தலும்

காரியம் வெற்றிபெற
முதலில் துவக்குதலும்//

ஆனந்தத்தைச் சுவைக்கும் வழிகள் இவை.

திண்டுக்கல் தனபாலன் said...

/// முதலில் துவக்குதலும்
அவசியமென்பதை அறியாமலேயே...
துவக்க வேண்டியது
தான்தானென்பது புரியாமலேயே... ///

அருமையாகச் சொன்னீர்கள்...

கலாகுமரன் said...

கதவு ஜன்னல் => மனவெளி அனேகம் பேர் அதை மூடியே வைத்துள்ளனர்

உஷா அன்பரசு said...

//துவக்க வேண்டியது
தான்தானென்பது புரியாமலேயே...

//- true...
tha.ma-3

சசிகலா said...

யார் யாரையோ எதிர்பார்த்திருக்கும் தனிமை.. ஏன் அந்த யாரோவை நாம் அழைக்க்கூடாது நன்றாக சொன்னீர்கள் ஐயா.

ezhil said...

அருமையான கவிதை துவக்கம் நம்மிடமிருந்துதான் என்பதை அழகாக காட்டியிருக்கிறீர்கள்....

வை.கோபாலகிருஷ்ணன் said...

//விளைச்சலைப் பெற
முதலில் விதைத்தலும்
வேண்டியதைப் பெற
முதலில் கொடுத்தலும்
காரியம் வெற்றிபெற
முதலில் துவக்குதலும்
அவசியமென்பதை அறியாமலேயே...
துவக்க வேண்டியது
தான்தானென்பது புரியாமலேயே...//

அழகோ அழகு ! அருமையோ அருமை !! பாராட்டுக்கள்.

Unknown said...

தனிமை இனிமையல்ல! அதுவும் முதுமையில்!

Yaathoramani.blogspot.com said...

சுந்தர்ஜி //
சபாஷ் ரமணியண்ணா.

காலங்காலமாக சொல்லப்படும் நீதியை எளிமையான தேனில் குழைத்த மருந்தாய்க் கொடுத்துவிட்டீர்கள்.//

தங்கள்முதல் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் /

/அருமையாகச் சொன்னீர்கள்./

/தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி



Yaathoramani.blogspot.com said...

கலாகுமரன் //

கதவு ஜன்னல் => மனவெளி அனேகம் பேர் அதை மூடியே வைத்துள்ளனர்/

/தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

”தளிர் சுரேஷ்” said...

அருமையான கருத்தை அழகாக சொன்னீர்கள்! சிறப்பான படைப்பு! நன்றி!

Yaathoramani.blogspot.com said...

உஷா அன்பரசு //

//- true.//

தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

Yaathoramani.blogspot.com said...

Sasi Kala //

யார் யாரையோ எதிர்பார்த்திருக்கும் தனிமை.. ஏன் அந்த யாரோவை நாம் அழைக்க்கூடாது நன்றாக சொன்னீர்கள் ஐயா///

தங்கள் உடன் வரவுக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

.

Yaathoramani.blogspot.com said...

ezhil //

அருமையான கவிதை துவக்கம் நம்மிடமிருந்துதான் என்பதை அழகாக காட்டியிருக்கிறீர்கள்.///

தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

Yaathoramani.blogspot.com said...


வை.கோபாலகிருஷ்ணன் said...

அழகோ அழகு ! அருமையோ அருமை !! பாராட்டுக்கள்.//

தங்களின் மனம் திறந்த பாராட்டு
அதிக உற்சாகமளிக்கிறது
மிக்க நன்றி

Yaathoramani.blogspot.com said...

புலவர் இராமாநுசம் //

தனிமையை நாம்தான் முதலில்
துரத்தத் துவங்கவேண்டும் என்கிற வகையில்
சொல்ல முயன்றிருக்கிறேன்
தங்கள்வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

s suresh //

அருமையான கருத்தை அழகாக சொன்னீர்கள்! சிறப்பான படைப்பு! நன்றி!//

தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

கரந்தை ஜெயக்குமார் said...

துவக்க வேண்டியது
தான்தானென்பது புரியாமலேயே...

நன்று சொன்னீர் அய்யா. நாம் தான் துவக்க வேண்டும், நாம் தான் துரத்தவும் வேண்டும்

கீதமஞ்சரி said...

மிகவும் அற்புதமான கருத்து. இணைப்புக்கும் பிணைப்புக்குமான தன்முயற்சி எதுவுமின்றி பிறரது முயற்சியின்மை குறித்த ஒருவனின் கவலைகளை இதைவிடவும் அழகாக சொல்லிவிட முடியாது. பாராட்டுகள் ரமணி சார்.

G.M Balasubramaniam said...


கழிவிரக்கம் கொள்வது சரியல்ல.எதிலும் முயற்சி இல்லாமலேயே எதிர்பார்க்கும் அவன் பாவப் பட்டவன் அல்ல. பரிதாபத்துக்குரியவன். ..உரைக்கும்படி உரத்துச் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

Yaathoramani.blogspot.com said...

கரந்தை ஜெயக்குமார் //

நன்று சொன்னீர் அய்யா. நாம் தான் துவக்க வேண்டும், நாம் தான் துரத்தவும் வேண்டும்//

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

Yaathoramani.blogspot.com said...

கீத மஞ்சரி //

பிறரது முயற்சியின்மை குறித்த ஒருவனின் கவலைகளை இதைவிடவும் அழகாக சொல்லிவிட முடியாது. பாராட்டுகள் ரமணி சார்//

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

.

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

பாவப் பட்டவன் அல்ல. பரிதாபத்துக்குரியவன். ..உரைக்கும்படி உரத்துச் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்//.

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

மாதேவி said...

தனிமையை விரட்டுவது நமது கையில்தான் என மிகவும் அழகாக எடுத்துச் சொல்லிவிட்டீர்கள்.

Yaathoramani.blogspot.com said...

மாதேவி //

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

கோமதி அரசு said...

முதலில் துவக்குதலும்
அவசியமென்பதை அறியாமலேயே...
துவக்க வேண்டியது
தான்தானென்பது புரியாமலேயே...//

அருமையாக சொன்னீர்கள்.
எதற்கும் நாம் முதலில் அடி எடுத்து கொடுக்க வேண்டும். தானக பேச முன் வருவது மகிழ்ச்சியை அதிகப்படுத்தும் தனிமையை துரத்தும்.

கவியாழி said...

யாராவது சிரித்தால்
சிரிக்கலாமென்று ஆவலோடும்
யாராவது பேசினால்
பேசலாமென்று ஆர்வத்தோடும்///மனித இயல்பு என்பது உண்மைதான்

Yaathoramani.blogspot.com said...

கோமதி அரசு //

அருமையாக சொன்னீர்கள்.
எதற்கும் நாம் முதலில் அடி எடுத்து கொடுக்க வேண்டும். தானக பேச முன் வருவது மகிழ்ச்சியை அதிகப்படுத்தும் தனிமையை துரத்தும்//

.தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

Yaathoramani.blogspot.com said...

கவியாழி கண்ணதாசன் //

///மனித இயல்பு என்பது உண்மைதான்//


.தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

Post a Comment