நாம்தான் சூட்சுமம் தெரியாது
செக்கு மாடாய்
சுற்றிச் சுற்றித் திரிகிறோமா ?
அழகிய மலரினைப்போல
குழ்ந்தையின் சிரிப்பினைப்போல
அன்றாட விடியலைப்போல
அழகானவை
இனிமையானவை
உயர்வானவை எல்லாம்
ஆடையின்றி
எளிமையாய்
மிக அருகாமையில்
நம்மைச் சுற்றியே
வலம் வருகையில்
நாம் தான்
கண்ணை மூடி
காட்சி தேடி
மூடனாகத் திரிகிறோமா ?
நாம் தினம் எதிர் கொள்ளும்
சுனாமிச் சீற்றங்களும்
பூகம்ப அதிர்வுகளும்
எரிமலை குழம்புகளும் கூட
நம்முள்
எவ்வித சலனங்களையும்
ஏற்படுத்தாது போக....
வெகு சிலருக்கோ.....
...
முதலிரவில் மறுத்துச் சொன்ன
ஒரே ஒரு வார்த்தை.கூட..
கை மாறி மாறி வந்து சேர்ந்த
ஒரு சிறு கனி.கூட..
அலைந்து ஓய்ந்துச் சாய்ந்த
அடி மரத்து நிழல் கூட
விழிபடைதலுக்கு
போதுமானதாகிப் போக
போதி மரமாகி போக
நாம்தான்
கோடாலி கொண்டு
நகம் வெட்ட முயன்று
தினம் நொந்து வீழ்கிறோமா ?
நாம்தான்
விழிகள் மூடும்வரை
விழிப்படையாதிருந்தும்
சூட்சுமம் அறியும் உபாயமறியாது ம்
நாளும் சவமாய் வாழ்ந்தே சாகிறோமா ?
செக்கு மாடாய்
சுற்றிச் சுற்றித் திரிகிறோமா ?
அழகிய மலரினைப்போல
குழ்ந்தையின் சிரிப்பினைப்போல
அன்றாட விடியலைப்போல
அழகானவை
இனிமையானவை
உயர்வானவை எல்லாம்
ஆடையின்றி
எளிமையாய்
மிக அருகாமையில்
நம்மைச் சுற்றியே
வலம் வருகையில்
நாம் தான்
கண்ணை மூடி
காட்சி தேடி
மூடனாகத் திரிகிறோமா ?
நாம் தினம் எதிர் கொள்ளும்
சுனாமிச் சீற்றங்களும்
பூகம்ப அதிர்வுகளும்
எரிமலை குழம்புகளும் கூட
நம்முள்
எவ்வித சலனங்களையும்
ஏற்படுத்தாது போக....
வெகு சிலருக்கோ.....
...
முதலிரவில் மறுத்துச் சொன்ன
ஒரே ஒரு வார்த்தை.கூட..
கை மாறி மாறி வந்து சேர்ந்த
ஒரு சிறு கனி.கூட..
அலைந்து ஓய்ந்துச் சாய்ந்த
அடி மரத்து நிழல் கூட
விழிபடைதலுக்கு
போதுமானதாகிப் போக
போதி மரமாகி போக
நாம்தான்
கோடாலி கொண்டு
நகம் வெட்ட முயன்று
தினம் நொந்து வீழ்கிறோமா ?
நாம்தான்
விழிகள் மூடும்வரை
விழிப்படையாதிருந்தும்
சூட்சுமம் அறியும் உபாயமறியாது ம்
நாளும் சவமாய் வாழ்ந்தே சாகிறோமா ?
16 comments:
நாம்தான்
கோடாலி கொண்டு
நகம் வெட்ட முயன்று
தினம் நொந்து வீழ்கிறோமா ?//
உண்மையான வார்த்தைகள் இது....!
சூட்சுமம் புரிந்தும் தெரியாத மாதிரி நடிக்கவும் செய்கிறோம் என்றே தோன்றுகிறது இல்லையா குரு?
uruththiyathu..!
unarthiyathu...!
விழிகள் மூடும்வரை
விழிப்படையாதிருந்தும்
சூட்சுமம் அறியும் உபாயமறியாது//உண்மைதான் இப்படித்தான் பலபேர் இன்று இருக்கிறார்கள்.
நாளும் சவமாய்......
உண்மை.....
த.ம. 3
சூட்சமத்தை சிளக்கும்
சூட்சமமான வரிகள்.
அருமை இரமணி ஐயா.
த.ம. 4
சூட்சமம் அறிந்தவன் தலைவனாகிறான் அது தெரியாதவன் செக்குமாடாய் அவனை சுற்றி வருகிறான்
உண்மை. நல்ல கவிதை.
இனிய வணக்கம் ரமணி ஐயா ...
உண்மையான உண்மைகள்...
நிறைய விஷயங்களில் நாம் இப்படித்தான்
இருக்கிறோம் என்பது உண்மையே..
நீங்கள் சொல்வது உண்மை.
சூட்சும கவிதை அருமை.
வரிகள் உண்மை... நல்ல கவிதை.... வாழ்த்துக்கள்....
கண்முன்னே இருந்தாலும் காட்டும்போதுதானே கவனம் திரும்புகிறது. சூட்சுமத்தின் விலாசத்தை உங்களைப் போன்றவர்கள் எடுத்துக்காட்டினால்தான் அதுவும் விளங்குகிறது. நன்றியும் பாராட்டும் ரமணி சார்.
அருமையான கவிதை! சூட்சுமம் அறிவது கஷ்டமாகத்தான் உள்ளது! நன்றி!
நல்ல கவிதை.
// சூட்சுமம் அறியும் உபாயமறியாது
நாளும் சவமாய் வாழ்ந்தே சாகிறோமா ? //
நுட்பமான வரிகள். இயற்கையின் சூட்சுமத்தை யார் அறியக் கூடும்?
நாளும் சவமாய் வாழ்ந்தே சாகிறோமா ? அருமை
சூட்சமம் அறிந்தால் தான் தப்பித்து விடுவோமே! என்ன செய்ய!!!
Post a Comment