சிரிக்கத் தெரிந்த பிறவி உலகில்
மனிதப் பிறவியே-இதை
அறிந்தும் இங்கு சிரிக்க மறுத்தல்
பெரிய கொடுமையே
இதழ்கள் வலிக்கச் சிரித்து விட்டால்
இன்பம் இன்பமே-எதையும்
இதயம் தன்னில் மூடி வைத்தால்
என்றும் துன்பமே
வளர்ந்த நிலவு வானில் இருந்து
மெல்லச் சிரிக்குமே-அதன்
அழகு சிரிப்பில் மயங்கி மலரும்
மணந்து சிரிக்குமே-அதன்
மணத்தில் மயங்கி சோலை யெல்லாம்
சொர்க்க மாகுமே-அந்த
உணர்வை உணர்ந்த மனிதர் மனத்தில்
மனிதம் பூக்குமே
குழந்தை மனதில் தெய்வம் இருந்து
சிரிப்பைத் துவங்குமே-அது
குழந்தை இதழில் மெல்ல வழிந்து
இல்லம் நிறைக்குமே-அந்த
அழகை உணர துன்பம் எல்லாம்
அழிந்து ஒழியுமே-இந்த
உலகே உண்மை சொர்க்க மென்று
புரிய லாகுமே
விழிகள் இரண்டும் காண வென்றே
அறிந்தி ருக்கிறோம்-கொண்ட
செவிகள் இரண்டும் கேட்க வென்றே
புரிந்தி ருக்கிறோம்-இனி
இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
உணர்ந்து கொள்ளுவோம்-இதை
உலகு அறியச் சொல்லி நாமும்
உயர்வு கொள்ளுவோம்
17 comments:
புன்னகை ஒன்றே முகத்தை மலரச்செய்யும். ஒரு சின்ன புன்முறுவல்தான் அன்பை வெளிப்படுத்தும். அருமை!
த.ம-1
Kulanthaiyin sirippu magilchiyai kudikkum
வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பார்கள். சிரித்துத்தான் பார்ப்போமே, அருமை அய்யா
சிரிப்பின் சிறப்பை இதவிட சிறப்பாக சொல்ல முடியாது....
//இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
உணர்ந்து கொள்ளுவோம்-//
//வளர்ந்த நிலவு வானில் இருந்து
மெல்லச் சிரிக்குமே// -ரசித்த வரிகள்.
/// குழந்தை மனதில் தெய்வம் இருந்து
சிரிப்பைத் துவங்குமே-அது
குழந்தை இதழில் மெல்ல வழிந்து
இல்லம் நிறைக்குமே-அந்த
அழகை உணர துன்பம் எல்லாம்
அழிந்து ஒழியுமே-இந்த
உலகே உண்மை சொர்க்க மென்று
புரிய லாகுமே ///
மிகவும் அருமையான ரசிக்க வைக்கும் வரிகள்...
வாழ்த்துக்கள்...
மனிதனால் மட்டும்தானே சிரிக்க முடியும்.
சிரிப்பின் மேன்மையை அழாக சொல்லி விட்டீர்கள்
tha,ma.6
//குழந்தை மனதில் தெய்வம் இருந்து
சிரிப்பைத் துவங்குமே-அது
குழந்தை இதழில் மெல்ல வழிந்து
இல்லம் நிறைக்குமே-அந்த
அழகை உணர துன்பம் எல்லாம்
அழிந்து ஒழியுமே-இந்த
உலகே உண்மை சொர்க்க மென்று
புரிய லாகுமே//
;)))) அருமையான வரிகள். சிரித்து வாழ ....... வேண்டும்.!
சிரிக்கத்த்ரிந்தவர்களும்,சிந்திக்கத்தெரிந்தவர்களும்,பேசத்தெரிந்தவர்களும் மனிதர்கள் மட்டுமே/எதைப்பார்த்தாலும் குழந்தைக்கு சிரிக்க வாய்ப்பது அதன் கள்லம் கபடமற்ற மனது ஒரு காரணமாகிப்போகிறது.அது வளர்ந்த பருவத் தினருக்கு கைவரப்பெறாதது மிகவும் வருத்தமளிக்க க்கூடியதே/
''..சிரித்து விட்டால்
இன்பம் இன்பமே-எதையும்
இதயம் தன்னில் மூடி வைத்தால்
என்றும் துன்பமே..'' சிரிக்கச் சொல்லிய வரிகள் அருமை.
இனிய வாழ்த்து.
புன்னகையென்று நானும் ஓரு கவிதை எழுதினேன்.
http://kovaikkavi.wordpress.com/2010/11/03/133-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%95%e0%af%88/
எளிமையிலே இனிமை காண முடியுமா?
உங்கள் கவிதையைப் படித்தால் முடியும்.
இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
உணர்ந்து கொள்ளுவோம்-இதை
உலகு அறியச் சொல்லி நாமும்
உயர்வு கொள்ளுவோம்//
மிக நன்றாக சொன்னீர்கள்.
வாழ்த்துக்கள்.
தமிழ்மண ஓட்டு அளித்துவிட்டேன்.
சிரிக்கத் தெரிந்த பிறவி உலகில்
மனிதப் பிறவியே-இதை
அறிந்தும் இங்கு சிரிக்க மறுத்தல்
பெரிய கொடுமையே
இதழ்கள் வலிக்கச் சிரித்து விட்டால்
இன்பம் இன்பமே-எதையும்
இதயம் தன்னில் மூடி வைத்தால்
என்றும் துன்பமே
அருமையான வரிகள் இந்த வரிகளைப் போல
சிரித்து மகிழ முதலில் இந்த உலகம் மாற வேண்டும்
வன் கொடுமை இளைக்கும் சமூகம் பெண்ணையும்
சிரித்து வாழ விட வேண்டும் .செய்தித் தாள்களில்
எந்நாளும் வரும் செய்தி கண்டு கண்ணீர்த் துளிகள் தான் இங்கே காணிக்கையாகின்றது என்
செய்வோம் :( பாரதி போல பத்துப் பேர் பிறந்தாலும் இனி நீதியைப் பெற முடியாது என்றே தோன்றுகின்றது .தந்தையே மகளை !...என்ன கொடுமை இது...!!! :(((((எம் முந்தையர்
போலிங்கு மனம் அரிது என்பேன் முழு நிலவாய் நாம்
சிரிப்பதற்கு :((((((
அருமையான கவிதை இரமணி ஐயா.
அருமையான கவிதை.....
இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
உணர்ந்து கொள்ளுவோம்-.உண்மைதான் சார்
இளமையில் வாய்விட்டு சிரிக்க முடிந்தது. இப்போதெல்லாம் இதழ்களின் ஓரம் ஒரு முறுவலே பூக்கிறது.
Post a Comment