Tuesday, June 25, 2013

எமனோடு விளையாடி எமனோடு உறவாடி (14 )

பலகற்று  தெளிந்து ஒருவர் கொள்ளும்
ஞானத்தை விட இழப்பில் விரக்தியில்
தோன்றும் ஞானம் நிச்சயமாக அதிக
பலமுள்ளதாகவும் நீடித்து நிலைப்பதுமாக
இருக்கும் என்பதை பர்த்துஹரி மற்றும்
பட்டினத்தார் அவர்கள் வாழ்வின்
மூலம் மட்டுமல்லஎன் நண்பன் மூலமும்
நான் தெளிவாகத் தெரிந்து கொண்டேன்

நேற்று டாக்டர் விரிவாக அவன் நோய் குறித்துச்
சொல்லும்வரை என் போக்கில் வந்தவன்
முழுவதும் தெரிந்தபின் இப்போது
அவன் போங்கில் போக நானும் எவ்வித மறுப்பும்
இன்றி அவனைத் தொடரத் துவங்கிவிட்டேன்

முதலில் காலையில் கபாலீஸ்வரர் ஆலயமும்
பின் சாயிபாபா கோவிலும் போகவேண்டும்
என்றான்.போனோம் .பின் மதியம் ஒரு
ராஜஸ்தானி வகை சாப்பாடு சாப்பிட வேண்டும்
என்றான்.சாப்பிட்டோம்.
 பின் ரெங்கனாதன் தெருவில்உள்ள ஒரு பிரபலத்
 துணிக்கடைக்குப் போய் ஒரு அடர் சிவப்பில்
மனைவிக்கு சேலையும்
மிகவும் மாடனாக தன் மகளுக்கு ஒரு டிரஸ்ஸும்
மகனுக்கு அதிக  விலையில் ஒரு ஜீன்ஸும்
டி சர்ட் ஒன்றும் எடுத்தான்.பின் மாலையில்
சாந்தோம் கடற்கரை செல்லவேண்டும் என்றான்

அங்கு வெட்ட வெளியில் இருந்த கடையில்
அவனுக்குமாகச் சேர்த்து மிளகாய் பஜ்ஜி
வாங்கச் சொன்னான்,நான் கடந்த வாரம்
 நண்பனிடம்ஏற்பட்ட விவாதம் முதல்
அவனுக்காகவேனும் எனக்குப் பிடித்த பஜ்ஜியை
சாப்பிடாது விட்டுவிடுவதுஎன் முடிவெடுத்திருந்தேன்.

அதைச் சொன்னதும் அவன் சப்தமாகச் சிரித்து
"எனக்காக நீ சாப்பிட வேண்டாம் என முடிவெடுத்தது
தெரியாமல் இனி உனகாக நான் சாப்பிடுவது என
முடிவெடுத்துவிட்டேன்,யார் விட்டுக் கொடுக்கலாம் "
என்றான்

"நானே விட்டுத் தருவதுதான் நியாயம் " என்றேன்

"எதற்கு நான் சில மாதங்களில்
போய்ச் சேர்ந்து விடுவேன் என்றா " என்றான்

நான் பதறி விட்டேன் "என்னடா லூஸ் மாதிரி
 பேசுகிறாய்இப்படியெல்லாம் அப சகுனமாக ப்
பேசுவாய் என்றால் நான் பேச்சைக் குறைத்துக்
கொள்வதைத் தவிர வேறு வழியில்லை "என்றேன்

"விடுறா..நெருப்புன்னா வாய் வெந்தா போயிடும்
என் நோய் குறித்து எல்லோருக்கும் தெரிந்தால்
எல்லோரும் இப்படி விட்டுக் கொடுத்துப்போனால்
எனக்கு இருக்கிற சில நாட்களிலும் வாழ்வில்
சுவாரஸ்யம் இல்லாது போய்விடும்,
நான் இருக்கிறவரை எல்லோரும் இயல்பாக
என்னுடன் இருப்பதையே நான் விரும்புகிறேன்
நீ நீங்களாக,,," என்றான்

அவன் ஏதோ முரண்பாடாய் முடிவெடுத்துவிட்டான்
எனப் புரிந்தது. அவன் சிறிது நேரம் பேசவில்லை
அவனாகப் பேசட்டும் என
நானும் மௌனமாயிருந்தேன்

தலைக்கு கையை அண்டக் கொடுத்தபடி
வானத்து நட்சத்திரங்களையே வெறிக்கப்
பார்த்துக் கொண்டிருந்தவன் " என் நோய் குறித்து
நான் என் மனைவி குழந்தைகளிடம் கூட
சொல்லவேண்டாம் என் நினைத்திருக்கிறேன்
நீ உன் மனைவியிடம் கூடச்  சொல்லி
விடவேண்டாம்

மருந்து மாத்திரைகளால் நோய் சரியாய்
போனாலும் சரி அல்லது அது தோத்து
நோய் ஜெயித்தாலும் சரி.இருக்கிறவரை
இயல்பாய் இருந்து போகவேண்டும் என்பதுதான்
என் ஆசை "என்றான்

அப்போது அவன் சொன்னது எனக்கு
அதிர்ச்சியாகவும் ஜீரணிக்கமுடியாததாகவும்
இருந்தாலும்  அந்த முடிவால்தான்
அவன் வாழ்ந்த அந்தக் கடைசிச்
சில  மாதங்களில்அவனைப் பொருத்தவரை
உண்மையாகவும் நிம்மதியாகவும்
அவன் நினைத்தபடி அவனால் வாழமுடிந்தது
என்பது என் சிற்றறிவுக்கு இப்போது புரிகிறது

(தொடரும்

24 comments:

அம்பாளடியாள் said...

மருந்து மாத்திரைகளால் நோய் சரியாய்
போனாலும் சரி அல்லது அது தோத்து
நோய் ஜெயித்தாலும் சரி.இருக்கிறவரை
இயல்பாய் இருந்து போகவேண்டும் என்பதுதான்
என் ஆசை "என்றான்

எதார்த்தமான நற் சிந்தனை .தொடர்ந்து படிக்க
நேரம் போதாமையினால் தங்களின் ஆக்கத்தை
நான் அதிகமாக படிக்கத் தவறி விட்டேன் இதனை
இட்டு மனதில் வருத்தமும் உண்டு ஐயா நீங்கள்
நிட்சயம் என்னிலையைப் புரிந்து கொள்வீர்கள்
என நம்புகின்றேன் .வாழ்த்துக்கள் ஐயா மேலும்
மேலும் சிறப்பான ஆக்கங்கள் தொடரட்டும்
மகிழ்வுடனே !....

கவியாழி said...

இழப்பில் விரக்தியில்
தோன்றும் ஞானம் நிச்சயமாக அதிக
பலமுள்ளதாகவும் நீடித்து நிலைப்பதுமாக
இருக்கும் ///உண்மைதான் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்

கவிதை வானம் said...

என் நோய் குறித்து எல்லோருக்கும் தெரிந்தால்
எல்லோரும் இப்படி விட்டுக் கொடுத்துப்போனால்
எனக்கு இருக்கிற சில நாட்களிலும் வாழ்வில்
சுவாரஸ்யம் இல்லாது போய்விடும்........உண்மையான கூற்று

மனோ சாமிநாதன் said...

இந்த மாதிரி மனநிலைக்கும் மனோ தைரியத்திற்கும் வருவதற்கு மனப்பக்குவம் நிறைய வேண்டும். தன் பிரியத்துக்குரியவர்கள் பதறித் துடித்தவாறே தினமும் இருக்கக்கூடாது என்று முடிவெடுத்த அவரின் நல்ல மனதிற்கு இத்தனை சோதனைகளும் வலியும் வந்திருக்கக்கூடாது. கூடவேயிருந்த பார்த்துக்கொண்டிருந்த உங்களின் தவிப்பும் வலியும் ரொம்பவே கொடுமையானது. வலிகள் நிறைந்தது தானே வாழ்க்கை!

திண்டுக்கல் தனபாலன் said...

என்ன தான் இயல்பாக சொன்னாலும், என் மனதை தேற்றிக் கொள்ள முடியவில்லை... கூடவே இருந்த உங்களின் நிலைமையைப் பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை...

வெங்கட் நாகராஜ் said...

படிக்காத நான்கு பகுதிகளையும் ஒன்றாகச் சேர்த்துப் படித்தேன்......

ம்ம்ம்ம்.. திடமாகவே யோசனை செய்திருக்கிறார். தெரிந்தால் ஒரு வித கஷ்டம். தெரியாவிட்டாலும் கஷ்டம் தான். என்ன நடக்கிறதோ... தொடர்கிறேன்.

ஸாதிகா said...

அந்த முடிவால்தான்
அவன் வாழ்ந்த அந்தக் கடைசிச்
சில மாதங்களில்அவனைப் பொருத்தவரை
உண்மையாகவும் நிம்மதியாகவும்
அவன் நினைத்தபடி அவனால் வாழமுடிந்தது//மிகவும் யோசிக்க வைத்து விட்ட வரிகளிது.

இளமதி said...

ஐயா... முடிவை இலை மறை காயாக காட்டிவிட்டபின் பேச்சில்லை ஐயா......

நம்புவீர்களோ இல்லையோ வாசித்ததும் என்மனம் படும் வலி சொல்லமுடியாது...
கண்ணீருடன்... தாங்கிக் கொள்ளும் வலிமையின்றி.....

Seeni said...

yaa..
allah....!

(sothanaiyinpothu solvathu)

கரந்தை ஜெயக்குமார் said...

ஒவ்வொரு அத்தியாயத்திலும் இதயத்தின் வலியும் வேதனையும் கூடுகிறது அய்யா

கோமதி அரசு said...

மருந்து மாத்திரைகளால் நோய் சரியாய்
போனாலும் சரி அல்லது அது தோத்து
நோய் ஜெயித்தாலும் சரி.இருக்கிறவரை
இயல்பாய் இருந்து போகவேண்டும் என்பதுதான்
என் ஆசை "என்றான்//

நோய்ப்பற்றி எல்லோருக்கும் தெரிந்து விட்டால் அவர்கள் பார்க்கும் பரிதாப பார்வை, நோய்க்கு மருத்துவ குறிப்புகள் சொல்வார்கள் அப்படி, இப்படி என்று எவ்வளவு விஷயங்களை எதிர் கொள்ள வேண்டும்.
தன் முடிவை எதிர்கொள்ளும் மனவலிமை கிடைத்ததே உங்கள் நண்பரின் பலம்.
என் சகோதரி தன் மரணத்தை இப்படித்தான் எதிர் கொண்டார்.
கண்களை கண்ணீர் மறைக்கிறது நண்பரின் குடும்பத்தினரை நினைத்து.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//"எனக்காக நீ சாப்பிட வேண்டாம் என முடிவெடுத்தது
தெரியாமல் இனி உனகாக நான் சாப்பிடுவது என
முடிவெடுத்துவிட்டேன்,யார் விட்டுக் கொடுக்கலாம் "//

;)))))

பால கணேஷ் said...

விட்டுக் கொடுப்பதில் நண்பர்களுக்குள் இப்படியெல்லாம் போட்டி இருப்பது மகிழ்வான விஷயம். உங்கள் நண்பர் அவர் எடுத்த தீர்க்கமான முடிவின் மூலம் மனதில் உயர்ந்து விட்டார்!

Unknown said...

மருந்து மாத்திரைகளால் நோய் சரியாய்
போனாலும் சரி அல்லது அது தோத்து
நோய் ஜெயித்தாலும் சரி.இருக்கிறவரை
இயல்பாய் இருந்து போகவேண்டும் என்பதுதான்
என் ஆசை "என்றான்//

விரக்தியின் முடிவில் வெளிவந்த வார்த்தைகள்! கேட்கவே துன்பமாக இருக்கிறது.

சசிகலா said...

இருக்கும் வரை இயல்பாக இருந்து விட்டு போகவேண்டும் என்று அவர் எடுத்த முடிவு வருத்தத்தை அளித்தாலும் அதுவும் சரிதான். உடன் இருக்கும் உங்கள் தவிப்பை உணர முடிகிறது.

தி.தமிழ் இளங்கோ said...

எமனோடு விளையாடி,
எமனோடு உறவாடி,
பயணம் முடிகின்ற வேளை!
வந்ததே வழியனுப்பும் வேளை!
யோசிக்க நேரம் இல்லை! - மனம்
அமைதியாகவே இல்லை!

”தளிர் சுரேஷ்” said...

என்ன சொல்வதென்று தெரியவில்லை! இறப்பையும் இயல்பாக எடுத்துக்கொண்ட அந்த நண்பரின் ஞானம் வியக்கவைத்தது! நன்றி!

கீதமஞ்சரி said...

நண்பரின் நிலை மனம் கனக்கவைக்கிறது. உற்ற நண்பனைத் தவிர வேறு யாரிடம் தன் எண்ணங்களைப் பகிர முடியும். நல்ல உடல் மனநிலையில் இருக்கும் சிலர் எப்போதும் பிறர் தம்மிடம் அனுதாபம் கொள்ளவேண்டுமென்ற நினைப்பில் அப்படி இப்படி என்று இல்லாத பிரச்சனைகளைச் சொல்லியோ இருப்பதை மிகைப்படுத்தியோ பரிதாபத்தை சம்பாதிப்பார்கள். ஆனால் உண்மையில் பரிதாபத்துக்குரியவர்களோ அவ்வட்டத்தை விட்டு வெளியில் வரவே துடிக்கிறார்கள். அதனாலேயே தங்கள் துக்கத்தையும் துயரத்தையும் தமக்குள்ளேயே முடக்க முனைகிறார்கள். கனத்த மனத்துடன் தொடர்கிறேன்.

Anonymous said...

I read this today. 15.35pm- 30-6-13.
Vetha.Elangathilakam.

அருணா செல்வம் said...

தொடருகிறேன் இரமணி ஐயா.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நீங்கள் எழுதும் விதமும் உரையாடல்களும் மனதை உருக்குகின்றன.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

த.ம. 10

மாதேவி said...

அவருடைய மனத்திடம் பாராட்டத்தக்கது.

"உண்மையாகவும் நிம்மதியாகவும்
அவன் நினைத்தபடி அவனால் வாழமுடிந்தது//
தொடர்கிறேன்.

Ranjani Narayanan said...

உங்கள் நண்பரின் விரக்தி மனதுக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுக்கிறது.

Post a Comment