Sunday, June 2, 2013

எமனோடு விளையாடி எமனோடு உறவாடி ( 4)

நாங்கள் சப்தம் போட்டுச் சிரிப்பதை வினோதமாகப்
பார்த்துக்கொண்டிருந்த மீனாட்சி கொஞ்சம் குரலைத்
தாழ்த்தி "நான் ஏதும் தப்பாகப் பேசிவிட்டேனா ?
என்றார்

"நீ எல்லாம் சரியாகத்தான் பேசினாய்.நாங்கள்
சிரித்ததற்குகாரணம் வேற "என்றான் கணேசன்

"அப்போ இவ்வளவு நேரம் வலின்னு துடிச்சது
நிஜமா பொய்யா "என்றார் சற்று எரிச்சலுடன்

"வலிச்சதும் நிஜம் சந்தோஷமாய் சிரிச்சதும் நிஜம்"
என்று கணேசன் சொன்னதும்  மீனாட்சி சற்று
கோபத்துடன் முறைத்துப்பார்த்துவிட்டு வீட்டிற்கு
உள்ளே போக ,குழந்தைகளும்  எங்கள் இருவரையும்
ஏதோ வினோத ஜந்துக்களைப் பார்ப்பதுபோலப்
பார்த்தபடி  உள்ளே சென்றனர்.

நான் அருகில் இருந்த சேரை இழுத்து அவனருகில்
போட்டு அமர்ந்தபடி "இப்போ சொல்லுடா
உனக்கு என்ன பண்ணுது "என்றேன்

"உனக்குத்தான் தெரியுமே எனக்கு அப்ப அப்ப
உஷ்ணத்தாலே லேசாக வயித்து வலி வர்றதும்
வெந்தயம் மோர் சாப்பிடச் சரியாப் போறதும்,
போன வாரமும் இப்படித்தான் முதல்லே
லேசா வலிக்க ஆரம்பிச்சது ராத்திரி நேரமாக நேரமாக
ரொம்ப அதிகமாயிடுச்சு வெந்தயம் மோர் குடிச்சு
சுடு தண்ணிஒத்தடம் குடுத்தும் எது பண்ணியும்
சரியாகலை. மறு நாள் காலையிலே முதல் வேலையா
மந்தை டாக்டர் கிட்டே போய் வலிக்கு ஊசி போட்டதும்
அவர் குடுத்த மருந்தைச் சாப்பிட்டதும்தான் நின்னது
ஆனா என்னவோ அன்னையிலே இருந்து சரியா
சாப்பிட முடியலை தூக்கமும் இல்லை
சரி வீக்னஸ் சரியாப் போகும்னு பார்த்தா
இப்ப சாயந்திரம் திரும்ப வலிக்க ஆரம்பிச்சுடுச்சு
வாந்தி வேற என்ன செய்யறதுன்னு முழிச்சிக்கிட்டு
இருக்கிறப்பத்தான்நல்ல வேலை நீ வந்தே " என்றான்

இவன் உசிலம்பட்டியில் ஒரு வாரிய அலுவலகத்தில்
அக்கௌண்டெண்டாக வேலைபார்த்து வந்தான்.
அலுவலகத்திற்கு தினமும் வீட்டிலிருந்து டூவீலரில்
ஜங்ஷன் போய் பின் டிரெயின் பிடித்து
அலுவலகம்போய் சீட்டில் பத்து மணிக்கு அமர்ந்தால்
 மதியம்ஒரு  மணிவரை டைட்டாக வேலை இருக்கும்
பின் இரண்டுமணிக்கு சீட்டில் அமர்ந்தால் மாலை
ஆறுமணிவரை வேலை கடினமாக இருக்கும் என்பான்

எல்லோரையும் போல இடையிடையே டீ குடிக்க
காப்பிக் குடிக்க தம்அடிக்க  என எழுந்து செல்லும்
பழக்கம் இல்லாததாலோ என்னவோ அடிக்கடி
உடம்பில் சூடேறி வயிறு வலிக்கும் எனவும் சொல்வான்

அதுபோன்ற சமயங்களில் பகலானால் கடையில்
இள நீர் குடிப்பதும் இரவானால் வீடானால்
பெருங்காயம் கரைத்த மோரோ, வெந்தயம் மோரோ
குடித்தால் சரியாகிப் போகும் எனச் சொல்லியுள்ளான்
இதுவரை உணவுக் கட்டுப்பாட்டையும் தூக்கத்தையும்
மிகச் சரியாகக் கடைபிடிப்பதால்தான் டாக்டரிடம் போக
அவசியம் நேர்வதில்லை என்பதையும் எப்போதும்
பெருமையாகச் சொல்வான்

"இப்பவும் ஒன்னும் பிரச்சனையில்லை
ஹீட் தொந்தரவாகத்தான் இருக்கும்,
இதுவரை என்னைப்போல் நீ அடிக்கடி டாக்டரிடம்
போனவனில்லை.முதன் முதலாகப் போனதாலும்
நானும் லூசுமாதிரி ஏதோ பேசிவிட்டதாலும்
உனக்கு மனசுக்குள்ள ஏற்பட்ட சங்கடத்தால்தான்
இப்ப அதிகமாக வலிப்பது போல இருக்குன்னு
நினைக்கிறேன்.அதனால் உன் மன,என் மன
ஆறுதலுக்காகவாவது நாளை எங்க குடும்ப
டாக்டரிடம் போவோம்

அவர் ரமணா டாக்டர் மாதிரி இல்லை
மிகச் சரியாக டையக்னைஸ் செய்வார்.
நீ இரண்டு நாள் லீவு போடு நானும் போடுகிறேன்
ஒன்றுமில்லை எனத் தெரிந்து மனசு
சரியாகிப்போனாலேஉடம்பும் சரியாகிப் போகும் "
என்றேன்

வலி அதிகமாக இருந்ததாலோ அல்லது
வயது நாற்பதைத் தாண்டி விட்டதால் அவனும்
ஒருமுறை ஒட்டுமொத்த செக்கப் செய்து கொள்வது
நல்லது என நினைத்தானோ என்னவோ அவனும்
இதற்கு உடனடியாக ஒப்புக் கொண்டான்
.
இதற்குப் பின்னால் தொடர்ந்த நிகழ்வுகள் குறித்து
மிக லேசாகவேனும் அவனுக்கோ எனக்கோ
ஒரு சிறு குறிப்போ கற்பனையோ ஒரு கனவோ
தோன்றி இருந்தால் கூட நிச்சயம் நோயுடனே
வலியுடனே கூட சில நாட்கள் வாழ்ந்திருந்து
செத்துத் தொலைத்திருக்கலாம் இந்தப் பரிசோதனைச்
சனியனைச் செய்து கொண்டிருக்கவேண்டாம் என
நிச்சயம் முடிவெடுத்திருப்போம்

(தொடரும் )

55 comments:

ராஜி said...

ந்தப் பரிசோதனைச்
சனியனைச் செய்து கொண்டிருக்கவேண்டாம் என
நிச்சயம் முடிவெடுத்திருப்போம்
>>
ஏன்? ஏன்?

Seeni said...

vethanaithaan sollungayyaa....!!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//நோயுடனே வலியுடனே கூட சில நாட்கள் வாழ்ந்திருந்து
செத்துத் தொலைத்திருக்கலாம் இந்தப் பரிசோதனைச்
சனியனைச் செய்து கொண்டிருக்கவேண்டாம் என
நிச்சயம் முடிவெடுத்திருப்போம்//

அடாடா, பரிசோதனைச்சனியன் என்ன சொன்னதோ, பாவம்,

செக்-அப் என்று போனாலே, சிக்கல் தான்.

தொடருங்கள். தொடர்ந்து கவலையுடன் நாங்களும்.;(

திண்டுக்கல் தனபாலன் said...

பரிசோதனையில் என்ன நடந்ததோ...?

கவலையுடன்...

Anonymous said...

முழுவதும் வாசித்தேன் என்ன கூறுவதெனத் தெரியவில்லை. வாழ்வே சுளரும் சக்கரம் தானே!....தொடருங்கள் வருவேன்.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

வெங்கட் நாகராஜ் said...

பரிசோதனைச் சனியன்..... அடாடா.... அதுவே பிரச்சனையாகிவிட்டதோ!

த.ம. 4

MANO நாஞ்சில் மனோ said...

இதுக்காகத்தான் நிறையபேர் உடம்பை பரிசோதனை செய்யாமலே இருக்காங்க போல இல்லையா குரு...

என்னமோ மனசுக்குள்ளே பந்து போல உருண்ட மாதிரி இருக்கு இதை படித்ததும்...!

மனோ சாமிநாதன் said...

எந்த வலிக்குமே இது தான் காரணம் என்று நாமே முடிவு செய்தால் அப்புறம் மெத்தப்படித்த ம‌ருத்துவர்கள் எதற்கு? இதயப்பிரச்சினைகளுக்கும் மூளையில் ரத்தக்கசிவிற்கும்கூட இப்போதெல்லாம் வாயிலெடுப்பது நிகழ்கிறது. தொடரும் என்று வேறு போட்டு விட்டீர்கள். உங்கள் நண்பரை நினைக்கையில் மனம் கனமாகிறது!

சிவகுமாரன் said...

தொடரா ? அடடா !

அப்பாதுரை said...

//பரிசோதனைச் சனியனைச் செய்து கொண்டிருக்கவேண்டாம்
நாற்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மனநிலை பற்றியப் பெரிய உண்மையைச் சாதாரணமாகச் சொல்லிப் போனீர்கள்.

பால கணேஷ் said...

பரிசோதனையால் பிரச்னையா? என்னவாகியிருக்கும் என்கிற கேள்வியையும் எழுப்பி, சற்றே மனதில் கனத்தையும் ஏற்றிப் போகிறது தொடர். தொடருங்கள்!

இராஜராஜேஸ்வரி said...

இந்தப் பரிசோதனைச்
சனியனைச் செய்து கொண்டிருக்கவேண்டாம்

சீக்கிரமே முடிவை தேட் உதவிவிட்டதே..!

Unknown said...


ஏன் ? என்ன என்ற கேள்விதான் எழுகிறது

G.M Balasubramaniam said...


டாக்டர்களிடம் போனால் எதையாவது சொல்லிக் குழப்ப ...அதைவிட போகாமல் இருப்பதேமேல் என்று தோன்றுவது சகஜம் Ignorance is bliss.!

கரந்தை ஜெயக்குமார் said...

கவலையுடன் காத்திருக்கிறோம்

vimalanperali said...

இன்றைய நடப்புலகில் மருத்துவபரிசோதனை என்பது தவிர்க்க இயலாததாகிப்போகிறது.ஆனால் பழைய காலங் களில் இதற்கெல்லாம் எங்கே போனோம் என்பது நினை -வில்லை.அதற்கான தேவைகளும் மிகவும் குறைச்ச ---லாக இருந்தது.பழைய உணவு முறைகளிலிருந்து பழக்க வழக்கம் வரை இருந்த எதுவும் இப்பொழுது இல்லைஎன்பதே நிஜமாய் உள்ள சமூகத்தில் எதுவும் உடல் என்னென்னமாகவெல்லா மோ ஆகிப்போனது.அதை என்னனென்னமாகவோ ஆக்கி விட்டார்கள்.

இளமதி said...

கடவுளே... என்னால் தாங்கிக்க முடியலை ஐயா!...
எல்லாப் பகுதிகளையும் ஒன்றாக வாசித்து மனங்கனத்து அழுகையே வந்துவிட்டதெனக்கு...

வாயில் சனி இருந்தால் இப்படி பேசுகிறதென்பது என் குடும்பத்தில் என் அப்பா, பெரியப்பாவின் வாயில் அடிக்கடி வரும் வார்த்தை. இப்படித்தான் ஏதாகிலும் வார்த்தை தடித்து பேசிவிட்டு இப்படியே சொல்லி வருந்துவார்கள். இதேபோல் சேர்ந்துகொள்வார்கள்.
ஓரளவுக்கு உங்கள் கூற்றும் உண்மையே...

நண்பருக்கு என்னவானதோன்னு வாசிச்ச எனக்கும் நெஞ்சில் சுள்ளென வலிக்கிறதையா...

அப்படி என்ன மருத்துவ அறிக்கை சொல்லிற்றோ?... த்ரில்லாக தொடரப்போகிறதோன்னு மனசுக்குள் நடுங்குகிறேன்...

த ம. 7

அருணா செல்வம் said...

கவலையுடன் காத்திருக்கிறேன் இரமணி ஐயா.

குட்டன்ஜி said...

என்ன சார்!கவலைப்பட வைக்கிறீர்களே!

Yaathoramani.blogspot.com said...

ராஜி //

தங்கள் உடன் முதல் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Seeni /

/தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி






Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் said...
///

அடாடா, பரிசோதனைச்சனியன் என்ன சொன்னதோ, பாவம்,

செக்-அப் என்று போனாலே, சிக்கல் தான்.

தொடருங்கள். தொடர்ந்து கவலையுடன் நாங்களும்.

/தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
;(

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் //

பரிசோதனையில் என்ன நடந்ததோ...?
கவலையுடன்.///

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

kovaikkavi//

முழுவதும் வாசித்தேன் என்ன கூறுவதெனத் தெரியவில்லை. வாழ்வே சுளரும் சக்கரம் தானே!....தொடருங்கள் வருவேன்.

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //

பரிசோதனைச் சனியன்..... அடாடா.... அதுவே பிரச்சனையாகிவிட்டதோ!//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//


Yaathoramani.blogspot.com said...

MANO நாஞ்சில் மனோ //

இதுக்காகத்தான் நிறையபேர் உடம்பை பரிசோதனை செய்யாமலே இருக்காங்க போல இல்லையா குரு...

என்னமோ மனசுக்குள்ளே பந்து போல உருண்ட மாதிரி இருக்கு இதை படித்ததும்//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

Yaathoramani.blogspot.com said...

மனோ சாமிநாதன் //..
எந்த வலிக்குமே இது தான் காரணம் என்று நாமே முடிவு செய்தால் அப்புறம் மெத்தப்படித்த ம‌ருத்துவர்கள் எதற்கு? இதயப்பிரச்சினைகளுக்கும் மூளையில் ரத்தக்கசிவிற்கும்கூட இப்போதெல்லாம் வாயிலெடுப்பது நிகழ்கிறது. தொடரும் என்று வேறு போட்டு விட்டீர்கள். உங்கள் நண்பரை நினைக்கையில் மனம் கனமாகிறது!/


தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி///

Yaathoramani.blogspot.com said...

சிவகுமாரன் //
.
தொடரா ? அடடா !//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி///

Yaathoramani.blogspot.com said...

அப்பாதுரை //

//பரிசோதனைச் சனியனைச் செய்து கொண்டிருக்கவேண்டாம்
நாற்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மனநிலை பற்றியப் பெரிய உண்மையைச் சாதாரணமாகச் சொல்லிப் போனீர்கள்.//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி///

Yaathoramani.blogspot.com said...

பால கணேஷ் //

பரிசோதனையால் பிரச்னையா? என்னவாகியிருக்கும் என்கிற கேள்வியையும் எழுப்பி, சற்றே மனதில் கனத்தையும் ஏற்றிப் போகிறது தொடர். தொடருங்கள்//!

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி///

Yaathoramani.blogspot.com said...

இராஜராஜேஸ்வரி //

இந்தப் பரிசோதனைச்
சனியனைச் செய்து கொண்டிருக்கவேண்டாம்
சீக்கிரமே முடிவை தேட் உதவிவிட்டதே.

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/////

Yaathoramani.blogspot.com said...

புலவர் இராமாநுசம் //

ஏன் ? என்ன என்ற கேள்விதான் எழுகிறது//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/////

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

டாக்டர்களிடம் போனால் எதையாவது சொல்லிக் குழப்ப ...அதைவிட போகாமல் இருப்பதேமேல் என்று தோன்றுவது சகஜம் Ignorance is bliss.//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/////

Yaathoramani.blogspot.com said...

கரந்தை ஜெயக்குமார் //

கவலையுடன் காத்திருக்கிறோம்/

/தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

கவியாழி said...

மனம் படுத்தும்பாடு பணத்தைதான் செலவழிக்கும்

Yaathoramani.blogspot.com said...

விமலன் ///

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/


Yaathoramani.blogspot.com said...

இளமதி said...
கடவுளே... என்னால் தாங்கிக்க முடியலை ஐயா!...
எல்லாப் பகுதிகளையும் ஒன்றாக வாசித்து மனங்கனத்து அழுகையே வந்துவிட்டதெனக்கு...

வாயில் சனி இருந்தால் இப்படி பேசுகிறதென்பது என் குடும்பத்தில் என் அப்பா, பெரியப்பாவின் வாயில் அடிக்கடி வரும் வார்த்தை. இப்படித்தான் ஏதாகிலும் வார்த்தை தடித்து பேசிவிட்டு இப்படியே சொல்லி வருந்துவார்கள். இதேபோல் சேர்ந்துகொள்வார்கள்.
ஓரளவுக்கு உங்கள் கூற்றும் உண்மையே...

நண்பருக்கு என்னவானதோன்னு உணர்வுபூர்வமான விரிவான
அருமையான பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்றிவாசிச்ச எனக்கும் நெஞ்சில் சுள்ளென வலிக்கிறதை//




Yaathoramani.blogspot.com said...

இள்மதி அவர்களுக்கு

தங்கள் உணர்வுபூர்வமான விரிவான
அருமையான பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அருணா செல்வம் //

கவலையுடன் காத்திருக்கிறேன் இரமணி ஐயா//

தங்கள் உணர்வுபூர்வமான
அருமையான பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்றி

.

Yaathoramani.blogspot.com said...

குட்டன் //

என்ன சார்!கவலைப்பட வைக்கிறீர்களே!//

தங்கள் உணர்வுபூர்வமான
அருமையான பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கவியாழி கண்ணதாசன் //

மனம் படுத்தும்பாடு பணத்தைதான் செலவழிக்கும்/

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

வல்லிசிம்ஹன் said...

வியாதியைவிட இந்தப் பரிசோதனைகள் தான் மன அழுத்தத்தை அதிகரிக்கிறது.
எங்கள் அம்மா நினைவு வருகிறது. ஆஞ்சியோக்ராம் செய்து,அறுவை சிகித்சை செய்யச் சொன்னதும், அந்தநினைவிழந்த நிலையிலும் தீர்மானமாக மறுத்துவிட்டு இன்னும் இரண்டு வருடங்கள் உயிருடன் இருந்தார்,.
உங்களுக்கு என் ஆறுதல்களைப் பதிகிறேன்.

Avargal Unmaigal said...

முடிவு தெரிந்துவிட்டது உங்கள் நண்பருக்கோ வயிற்று வலி இதைப் படிக்கும் எனக்கோ மன வலி எனினும் தொடர்கிறேன் உங்கள் பதிவை

Yaathoramani.blogspot.com said...

வல்லிசிம்ஹன் said...
வியாதியைவிட இந்தப் பரிசோதனைகள் தான் மன அழுத்தத்தை அதிகரிக்கிறது.
எங்கள் அம்மா நினைவு வருகிறது. ஆஞ்சியோக்ராம் செய்து,அறுவை சிகித்சை செய்யச் சொன்னதும், அந்தநினைவிழந்த நிலையிலும் தீர்மானமாக மறுத்துவிட்டு இன்னும் இரண்டு வருடங்கள் உயிருடன் இருந்தார்,.
உங்களுக்கு என் ஆறுதல்களைப் பதிகிறேன்

தங்கள் வரவுக்கும் விரிவான
உணர்வுபூர்வமான அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...


Avargal Unmaigal //

முடிவு தெரிந்துவிட்டது உங்கள் நண்பருக்கோ வயிற்று வலி இதைப் படிக்கும் எனக்கோ மன வலி எனினும் தொடர்கிறேன் //

தங்கள் வரவுக்கும்
உணர்வுபூர்வமான அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி


சசிகலா said...

எனக்கும் என் தாய் தந்தை தான் நினைவுக்கு வருகிறார்கள். இப்படி செக்கப் என்று ஆஸ்பிட்டல் போகாமல் இருந்திருந்தாலாவது இன்னும் கொஞ்ச நாள் இருந்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

Yaathoramani.blogspot.com said...

Sasi Kala //

தங்கள் வரவுக்கும்
உணர்வுபூர்வமான அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

மாதேவி said...

செக்கப் என்பது தவிர்க்க முடியாததும் ஆகிவிடுகிறது. .......தொடர்கின்றேன்

கீதமஞ்சரி said...

நண்பருக்கு ஆறுதல் சொல்லி நல்லதொரு மருத்துவரிடம் காட்ட அழைத்த நிலையிலும் அடுத்து வருவது பெரும் பிரச்சனை என்று அறிய இன்னமும் சுணக்கமாகிறது மனம். பரிசோதனை முடிவுகள் எதைக் காட்டின? என்ன நிகழ்ந்தது? தொடர்கிறேன் ரமணி சார். விறுவிறுப்போடு அதே சமயம் மனத்தை வருத்தும்படியான தொடர்கிறது தொடர்.

ஸாதிகா said...

இந்தப் பரிசோதனைச்
சனியனைச் செய்து கொண்டிருக்கவேண்டாம் என
நிச்சயம் முடிவெடுத்திருப்போம்//வரிகள் கலங்கடிக்குது சார்.பரபரப்பாக ஒவ்வொரு அத்தியாயத்தையும் வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

Yaathoramani.blogspot.com said...

மாதேவி //

செக்கப் என்பது தவிர்க்க முடியாததும் ஆகிவிடுகிறது. .......தொடர்கின்றேன்//

தங்கள் வரவுக்கும்
உணர்வுபூர்வமான அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கீத மஞ்சரி //

. பரிசோதனை முடிவுகள் எதைக் காட்டின? என்ன நிகழ்ந்தது? தொடர்கிறேன் ரமணி சார். விறுவிறுப்போடு அதே சமயம் மனத்தை வருத்தும்படியான தொடர்கிறது தொடர்//.


தங்கள் வரவுக்கும்
உணர்வுபூர்வமான அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸாதிகா said...

//வரிகள் கலங்கடிக்குது சார்.பரபரப்பாக ஒவ்வொரு அத்தியாயத்தையும் வாசித்துக்கொண்டிருக்கிறேன்//

தங்கள் வரவுக்கும்
உணர்வுபூர்வமான அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி


.

Ranjani Narayanan said...

ஒவ்வொரு பகுதியிலும் ஒரு திகில்!
என்ன ஆயிற்றோ என்ற கவலையுடனேயே தொடர்ந்து படிக்கிறேன்.

Yaathoramani.blogspot.com said...

Ranjani Narayanan //

தங்கள் வரவுக்கும்
உணர்வுபூர்வமான அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி


Post a Comment