Wednesday, June 5, 2013

எமனோடுவிளையாடி எமனோடுஉறவாடி /6/

கணேசனுக்கு டாக்டர் பிளட் ,யூரின் ,எம் ஆர்.ஐ
ஸ்கேன் என அனைத்து டெஸ்டும் எடுக்கச் சொல்லி
எழுதி இருந்தாலும் பயாப்ஸி டெஸ்ட் எழுதி
இருந்ததற்காக நான் கலக்கம் கொண்டதற்கு
காரணம் இருந்தது.

நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்
எனது சித்தப்பா ஒருவர் புற்று நோய் கண்டு
இறந்து போனார்.முதலில் அவருக்கு வயிற்று வலி
என்று பல நாள் வைத்தியம் பார்த்தார்கள்
பின் அது சரியாகவில்லை என்று மதுரை
பெரிய ஆஸ்பத்திரியில் வைத்துப் பார்த்ததில்
வயிற்றில் ஒரு கட்டி இருக்கிறது எனச்
சொல்லி அது ஒரு வேளை புற்று நோயாக
இருக்கலாம் எனச் சொல்லி அதை டயக்னஸ் செய்ய
பயாப்ஸி டெஸ்ட் எடுக்கவேண்டும் எனச்
சொன்னார்கள்.

அப்போது அதற்கான வசதி மதுரையில்
மெஷின் ஆஸ்பத்திரியில் மட்டும்தான் இருந்தது.
அப்போது என்னை அவர் கூட துணைக்கு
இருக்கச் சொன்னதால் பயாப்ஸி டெஸ்ட் என்றால்
புற்று நோய் குறித்து அறிவதற்கான டெஸ்ட்
 எனமட்டும்என் மனதில் பதிந்து போய் இருந்தது.
எனக்குஅரைகுறையாக தெரிந்திருப்பது கூட
மருத்துவமனை விவகாரங்கள் எதுவும் கணேசனுக்குத்
தெரியாததால் என் பயம் கூட அவனிடம் இல்லை.
காசு பிடுங்குவதற்காக எல்லா டெஸ்டும்
எடுக்கச் சொல்கிறார்கள் மற்றபடி அதிகப் பட்சம்
தனக்கு அல்ஸர் இருக்கலாம் என்கிற அபிப்பிராயத்தில்
அவன் இருந்தான்

மறு நாளும் நான் அலுவலக்த்திற்கு லீவு
கொடுத்திருந்ததால் நானே காலையில் ஆறு மணிக்கு
கணேசனை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று
மாலை வரை உடன் இருப்பது என்றும்
நண்பனின் மனைவி குழந்தைகளை பள்ளிக்கு
அனுப்பும் வேலைகளை முடித்து விட்டு மதியம்
சாப்பாடு இருவருக்கும் சேர்த்து எடுத்துக்
கொண்டுவருவது என்றும் ஏற்பாடு செய்து கொண்டோம்.
கணேசன் அடுத்த வருடம் வீடு கட்டுகிற எண்ணத்தில்
கஷ்டப்பட்டு ஒரு நான்கு லட்சம் ரூபாய்
சேர்த்து வைத்திருந்தபடியால் பணம் குறித்தும்
அவ்வளவாகப் பிரச்சனையில்லை.டெஸ்ட் எல்லாம்
மதியத்திற்குள் முடிந்துவிடும் என நாங்கள்
எதிர்பார்த்ததற்கு மாறாக மாலை வரை நீண்டுவிட்டது

"நாளைக் காலை டெஸ்ட் ரிபோர்ட் எல்லாம்
டாக்டரிடம் சேர்ந்துவிடும்.நாளைக் காலையில்
டாக்டரைச் சந்தியுங்கள் "என லேப் மேனேஜர் சொல்ல
ஆஸ்பத்திரி விட்டு வெளியே வந்தோம்
உண்மையில் ஒரு நாள் உள்ளே இருந்து வந்ததுகூட
ஏதோ பல நாள் நரகத்தில் இருந்து வெளியே வருவது
போலத்தான் இருந்தது

சும்மா இருந்த எனக்கே இவ்வளவு அலுப்பு எனில்
அவனுக்கு அதிகம் இருக்கும் என்பதால் உடன்
எதிரில் இருந்த ஆட்டோ ஸ்டாண்டில் ஒரு
ஆட்டோ பிடித்து அமரவைத்து

"நாளைக் காலையில் சீக்கிரம்  டாக்டரைப்
பார்க்கும்படியாக டோக்கன் போட்டுவிடுகிறேன்
நீங்கள் இருவரும் நேரடியாக ஆஸ்பத்திரி
வந்து விடுங்கள்.நானும் இருந்து பார்த்துவிட்டு
அப்படியே அலுவலகம் சென்றுவிடுகிறேன்"என்றேன்

நண்பன் சரியெனத் தலையாட்ட நண்பனின்
மனைவியோ "அண்ணே தப்பா நினைச்சுக்காதீங்க
மனசு கொஞ்சம்  சரியில்லை
நாளைக்கு  டாக்டர் இவருக்கு ஒன்னுமில்லை
வெறும் வயித்து வலிதான்னு சொன்னா
திருப்பதி வர்றதாக வேண்டிக்கிட்டு இருக்கேன்
ஆஸ்பத்திரிக்கு  வருவதற்கு முன்னால
எங்க வீட்டுப்பக்கம் உள்ள பெருமாள் கோவிலுக்குப்
போயிட்டுவந்தால் மனசுக்கு கொஞ்சம் தெம்பாயிருக்கும்
ஆகையாலே நாளைக்கும் நீங்களே கூட்டிக்கிட்டு
வந்திருங்க .நான் கோவிலுக்குப் போயிட்டு உங்களுக்கு
முன்னால நான் இங்கே வந்திடறேன் " என்றார்

அவர் சொல்வதும் எனக்கும் சரியெனப்பட்டது
"சரி அப்படியே செய்வோம் " எனச் சொல்லிவிட்டு
நானும் எனது வண்டியில் கிளம்பினேன்

போன ஜென்ம வினையோ அல்லது
இந்த ஜென்மத்தில் அறியாமல் செய்த பெரும்பிழையோ
எது எனத் தெரியவில்லை.

ஆண்டவன் என நண்பனுக்கு எதிராகத்தான் இருந்தான்
என்பது மறு நாள் டாக்டரைப் பார்த்ததும்தான் தெரிந்தது

(தொடரும் )

47 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஆஸ்பத்திரி விட்டு வெளியே வந்தோம் உண்மையில் ஒரு நாள் உள்ளே இருந்து வந்ததுகூட ஏதோ பல நாள் நரகத்தில் இருந்து வெளியே வருவது போலத்தான் இருந்தது//

ஆம், இதை நான் பலமுறை [பிறருக்காக] அனுபவித்துள்ளேன்.

>>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

// போன ஜென்ம வினையோ அல்லது இந்த ஜென்மத்தில் அறியாமல் செய்த பெரும்பிழையோ எது எனத் தெரியவில்லை.//

கஷ்டம் தான். ;(

//ஆண்டவன் என நண்பனுக்கு எதிராகத்தான் இருந்தான்
என்பது மறு நாள் டாக்டரைப் பார்த்ததும்தான் தெரிந்தது//

அடடா ! ;(((((

ஆண்டவன் விருப்பம் எதையும் யாரும் எப்போதும் , என்ன செய்தும் நிறுத்திவிட முடியாது.

டாக்டர்களால் மரணத்தைக் கொஞ்சம் ஒத்திப்போட மட்டுமே முடியும்.

இருப்பினும் கதையைத் தாங்கள் தொடர்வது சுவாரஸ்யமாக உள்ளது. பாராட்டுக்கள்.


திண்டுக்கல் தனபாலன் said...

/// மருத்துவமனை விவகாரங்கள் எதுவும் கணேசனுக்குத்
தெரியாததால் என் பயம் கூட அவனிடம் இல்லை. ///

சில விசயங்கள் சில நேரங்களில் தெரியாமல் இருந்தால்... தெரிவிக்காமல் இருந்தால் நல்லது என்று உணர்ந்திருக்கிறேன்... (முக்கியமாக மருத்துவம் பற்றிய முழுமையான விசயங்கள்)

/// மறு நாள் டாக்டரைப் பார்த்ததும்.../// திக் திக் என்றுள்ளது...

தனிமரம் said...

என்னாச்சு கணேசனுக்கு தொடருங்கள் ஆவலுடன் பின்னே நானும் ஐயா!

சேக்கனா M. நிஜாம் said...

நல்லதொரு படிப்பினை தரும் தொடர்...

// ஆண்டவன் என நண்பனுக்கு எதிராகத்தான் இருந்தான்என்பது மறு நாள் டாக்டரைப் பார்த்ததும்தான் தெரிந்தது //

சஸ்பென்ஸ்டன் முடித்து நண்பர் மீது வைத்துள்ள அன்பு வெளிப்படுகிறது

அடுத்த தொடரை ஆவலுடன் எதிர்பார்கிறேன்...

கரந்தை ஜெயக்குமார் said...

இத்தொடர் மனதினை கலங்க அடிக்கின்றது அய்யா. நானும் இதுபோன்ற ஒரு சூழவில் சிக்கித் தப்பி வந்தவன் அய்யா.நேரம் கிடைக்கும் பொழுது கீழ்க் கண்ட எனது பதிவினைப் பார்க்கத் தங்களை அன்போடு அழைக்கின்றேன்.

http://karanthaijayakumar.blogspot.com/2012_02_01_archive.html

இராஜராஜேஸ்வரி said...

ஆண்டவன் என நண்பனுக்கு எதிராகத்தான் இருந்தான்

ஆண்டவன் சோதனை ..!

இளமதி said...

தொடரும் டெஸ்டுகளும் வேதனைகளும்... கொடூரமாக இருக்கிறதே...

என்ன ஆகப்போகிறதோ...

என் குடும்பத்திலேயே இப்படி ஒன்றை அனுபவிப்பது போல உங்கள் எழுத்துக்களுடன் ஒன்றிவிட்டேன். கதையைப் படிக்கும்போது மனநிலை அப்படி ஆகிறது...

த ம.3

தி.தமிழ் இளங்கோ said...

தங்கள் பதிவு படிப்பவர்களை பல்வேறு வழிகளில் சிந்திக்க வைக்கிறது.

பழைய புராணக் கதைகளில் சாபம் பெற்ற மனிதர்கள், பட்ட வேதனைகளும், இந்தக் கால மனிதர்கள் மருத்துவர்களால் தமக்கு இன்ன நோய் என்று தெரிந்து கொண்டபிறகு அடையும் வேதனைகளும் ஒன்றுதான் எனத் தெரிகிறது. ஒருவேளை இந்த நோய்கள்தான் நாம் பெற்ற சாபமோ?

அருணா செல்வம் said...

கவலையுடன் தொடர்கிறேன் இரமணி ஐயா.

வெற்றிவேல் said...

இன்றுதான் முதல் வாசிப்பு... இனி தொடர்வேன் அய்யா... கணேசனுக்கு ஏதும் நேராமல் பார்த்துக்கொள்ளுங்கள்...

Seeni said...

athirchi...!

சிவகுமாரன் said...

மனம் கனத்தது.
பயாப்சி, அடாப்சி, எம்.ஆர்.ஐ , சி.டி. ஸ்கேன். ரேடியோ , கீமோ இவை எல்லா வார்த்தைகளையும் கேட்டு, அதிர்ந்து, அனுபவித்து பழகி விட்டது. தைரியம், இறைநம்பிக்கை, தன்னை மீறி எதுவும் நடக்காது என்ற அசாத்திய நம்பிக்கை இவை மட்டுமே விதியை வெல்லும் சக்தியைத் தரும். இது என் அனுபவம்.

vimalanperali said...

டாக்டர் ஆஸ்பத்திரி ஸ்கேன் சென்டர் கூட்டம் இவை எல்லாமுமாக மனிதர்களை அலைக்கழிக்கும் விஷயமாக ஆகிப்போகிறது.ஆஸ்பத்திரி நோய் என வராத வரை மனிதன் கெட்டிக்காரனே/

G.M Balasubramaniam said...


தொ.. ட... ரு...கி...றே...ன்...!

பால கணேஷ் said...

ஆஸ்பத்திரி, நோய் என வராத வரை மனிதன் கெட்டிக்காரனே! சரியாச் சொன்னீங்க விமலன்! பதைப்புடனேயே ரமணி ஸாரைத் தொடர்ந்துக்கிட்டிருக்கேன் நான்!

கவியாழி said...

ஆண்டவன் மட்டுமல்ல மருத்துவர்களும் சில நேரம் இப்படித்தான் ஆகிவிடுகிறார்கள்

Avargal Unmaigal said...

இப்பதிவு மனதை கலங்க அடிக்கின்றது

சசிகலா said...

அந்த நேரத்தின் தவிப்பை வரிகள் கொண்டு வருகின்றன.

வெங்கட் நாகராஜ் said...

ஆஸ்பத்திரி என்றாலே எனக்கும் ஒரு வித பயம்/அலர்ஜி தான்.... ரொம்பவும் கலக்கத்துடனே தொடர்கிறேன்.

மாதேவி said...

அட....பாவமே....

கீதமஞ்சரி said...

பயாப்ஸி டெஸ்ட் பற்றி முன்பே அறிந்திருந்ததால் உண்டான கலக்கம் நியாயமானதே... நண்பர் அறிந்தால் என்னவாகும்.. ஏற்கனவே உடல்நிலை நலிவுற்றவர் மனமும் நலிவுற்றுவிடுவாரே..

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //

.தங்கள் முதல் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் said...
/// மருத்துவமனை விவகாரங்கள் எதுவும் கணேசனுக்குத்
தெரியாததால் என் பயம் கூட அவனிடம் இல்லை. ///

சில விசயங்கள் சில நேரங்களில் தெரியாமல் இருந்தால்... தெரிவிக்காமல் இருந்தால் நல்லது என்று உணர்ந்திருக்கிறேன்... (முக்கியமாக மருத்துவம் பற்றிய முழுமையான விசயங்கள்)


.தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தனிமரம்//
.
என்னாச்சு கணேசனுக்கு தொடருங்கள் ஆவலுடன் பின்னே நானும் ஐயா!//

தங்கள் உடன் வரவுக்கும்
உணர்வுபூர்வமான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சேக்கனா M. நிஜாம் //

நல்லதொரு படிப்பினை தரும் தொடர்.../

/சஸ்பென்ஸ்டன் முடித்து நண்பர் மீது வைத்துள்ள அன்பு வெளிப்படுகிறது

அடுத்த தொடரை ஆவலுடன் எதிர்பார்கிறேன்..

.தங்கள் உடன் வரவுக்கும்
உணர்வுபூர்வமான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//




Yaathoramani.blogspot.com said...

கரந்தை ஜெயக்குமார் //
.
இத்தொடர் மனதினை கலங்க அடிக்கின்றது அய்யா. நானும் இதுபோன்ற ஒரு சூழவில் சிக்கித் தப்பி வந்தவன் அய்யா.நேரம் கிடைக்கும் பொழுது கீழ்க் கண்ட எனது பதிவினைப் பார்க்கத் தங்களை அன்போடு அழைக்கின்றேன்.//

.தங்கள் உடன் வரவுக்கும்
உணர்வுபூர்வமான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

Yaathoramani.blogspot.com said...

இராஜராஜேஸ்வரி //

ஆண்டவன் என நண்பனுக்கு எதிராகத்தான் இருந்தான்
ஆண்டவன் சோதனை ..//!

.தங்கள் உடன் வரவுக்கும்
உணர்வுபூர்வமான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

Yaathoramani.blogspot.com said...

.இளமதி //

தொடரும் டெஸ்டுகளும் வேதனைகளும்... கொடூரமாக இருக்கிறதே...
என்ன ஆகப்போகிறதோ...//

.தங்கள் உடன் வரவுக்கும்
உணர்வுபூர்வமான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/


Yaathoramani.blogspot.com said...

தி.தமிழ் இளங்கோ //
.
தங்கள் பதிவு படிப்பவர்களை பல்வேறு வழிகளில் சிந்திக்க வைக்கிறது./.

தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

/

Yaathoramani.blogspot.com said...

அருணா செல்வம் //

கவலையுடன் தொடர்கிறேன் இரமணி ஐயா//.

தங்கள் உடன் வரவுக்கும்
உணர்வுபூர்வமான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

.

Yaathoramani.blogspot.com said...

இரவின் புன்னகை //

இன்றுதான் முதல் வாசிப்பு... இனி தொடர்வேன் அய்யா... கணேசனுக்கு ஏதும் நேராமல் பார்த்துக்கொள்ளுங்கள்...//

தங்கள் உடன் வரவுக்கும்
உணர்வுபூர்வமான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

Yaathoramani.blogspot.com said...

Seeni //

athirchi...!//

தங்கள் உடன் வரவுக்கும்
உணர்வுபூர்வமான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

Yaathoramani.blogspot.com said...

சிவகுமாரன் //

. தைரியம், இறைநம்பிக்கை, தன்னை மீறி எதுவும் நடக்காது என்ற அசாத்திய நம்பிக்கை இவை மட்டுமே விதியை வெல்லும் சக்தியைத் தரும். இது என் அனுபவம்.../

தங்கள் உடன் வரவுக்கும்
உணர்வுபூர்வமான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//



Yaathoramani.blogspot.com said...

விமலன் //

டாக்டர் ஆஸ்பத்திரி ஸ்கேன் சென்டர் கூட்டம் இவை எல்லாமுமாக மனிதர்களை அலைக்கழிக்கும் விஷயமாக ஆகிப்போகிறது.ஆஸ்பத்திரி நோய் என வராத வரை மனிதன் கெட்டிக்காரனே//

தங்கள் உடன் வரவுக்கும்
உணர்வுபூர்வமான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//


Yaathoramani.blogspot.com said...

பால கணேஷ் //

ஆஸ்பத்திரி, நோய் என வராத வரை மனிதன் கெட்டிக்காரனே! சரியாச் சொன்னீங்க விமலன்! பதைப்புடனேயே ரமணி ஸாரைத் தொடர்ந்துக்கிட்டிருக்கேன் நான்!//

தங்கள் உடன் வரவுக்கும்
உணர்வுபூர்வமான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

Yaathoramani.blogspot.com said...

கவியாழி கண்ணதாசன் //
.
ஆண்டவன் மட்டுமல்ல மருத்துவர்களும் சில நேரம் இப்படித்தான் ஆகிவிடுகிறார்கள்

தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி////

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //
.
இப்பதிவு மனதை கலங்க அடிக்கின்றது/

தங்கள் உடன் வரவுக்கும்
உணர்வுபூர்வமான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி///

Yaathoramani.blogspot.com said...

Sasi Kala //

அந்த நேரத்தின் தவிப்பை வரிகள் கொண்டு வருகின்றன.//

தங்கள் உடன் வரவுக்கும்
உணர்வுபூர்வமான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி///


Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //

ஆஸ்பத்திரி என்றாலே எனக்கும் ஒரு வித பயம்/அலர்ஜி தான்.... ரொம்பவும் கலக்கத்துடனே தொடர்கிறேன்.//

தங்கள் உடன் வரவுக்கும்
உணர்வுபூர்வமான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி///


Yaathoramani.blogspot.com said...

மாதேவி //

அட....பாவமே..

தங்கள் உடன் வரவுக்கும்
உணர்வுபூர்வமான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/////

Yaathoramani.blogspot.com said...

கீத மஞ்சரி //
.
பயாப்ஸி டெஸ்ட் பற்றி முன்பே அறிந்திருந்ததால் உண்டான கலக்கம் நியாயமானதே... நண்பர் அறிந்தால் என்னவாகும்.. ஏற்கனவே உடல்நிலை நலிவுற்றவர் மனமும் நலிவுற்றுவிடுவாரே.//

தங்கள் வரவுக்கும்
உணர்வுபூர்வமான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/////

ஸாதிகா said...

இந்த ஜென்மத்தில் அறியாமல் செய்த பெரும்பிழையோ
எது எனத் தெரியவில்லை.

ஆண்டவன் என நண்பனுக்கு எதிராகத்தான் இருந்தான்
என்பது மறு நாள் டாக்டரைப் பார்த்ததும்தான் தெரிந்தது///


இறைவா!!!!!!!!

Ranjani Narayanan said...

அடடா! நான் இதற்கு முன் பகுதிக்குப் போட்ட பின்னூட்டம் பலித்துவிடும் போலிருக்கே!

Yaathoramani.blogspot.com said...

ஸாதிகா //

தங்கள் வரவுக்கும்
உணர்வுபூர்வமான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி////

Yaathoramani.blogspot.com said...

Ranjani Narayanan //

.தங்கள் வரவுக்கும்
உணர்வுபூர்வமான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி////


Post a Comment