ஒரு நாள் இரவு நானும் வான சாஸ்திரம் தெரிந்த
எனது நண்பனும் மொட்டை மாடியில் அமர்ந்து
பல்வேறு விஷயங்கள் குறித்துப்
பேசிக் கொண்டிருந்தோம்..
அப்போது வானில் ஊர்ந்து கொண்டிருந்த
அரை நிலவைக்காட்டி இன்று வளர்பிறையா
தேய்பிறையா சொல் " என்றான் என் நண்பன்
"காலண்டரைப் பார்த்து வரவா "என்றேன் நான்
"அதைப் பார்த்துத்தான் எல்லோரும்
சொல்லிவிடுவார்களே.அதில் என்ன இருக்கிறது
இங்கிருந்தே இப்படியே சொல்லவேண்டும்
அதுதான் விஷயம் "என்றான்
நிலவு அரை தேய்ந்திருந்தது.மிக லேசாக
நடு உச்சத்திலிருந்து கொஞ்சம் கிழக்கே இருந்தது
வேறு குறிப்பிடும்படியாக எதுவும் இல்லை
இதைவைத்து எப்படி வளர்பிறையா தேய்பிறையா
எனச் சொல்லமுடியும்.எனக்குப் புரியவில்லை
என் நண்பனே தொடர்ந்தான்
"இதை வைத்து வளர்பிறை தேய்பிறை மட்டுமல்ல
மிகச் சரியாக இன்றைய நட்சத்திரத்தைக் கூட
சொல்லிவிட முடியும் " என்றான்
என்னால் நிச்சயம் அதை நம்ப முடியவில்லை
நண்பன் தொடர்ந்து பேசினான்
"முன் காலத்தில் பிராமணர்கள் என்றாலே
தனக்கென தன் குடும்பத்திற்கென வாழாது
சமூகத்திற்கு வாழ்பவர்கள் என அர்த்தம்
அதனால் தான் அவர்களுக்கான தேவைகளைப்
பூர்த்தி செய்ய அவர்கள் எந்த பணிகளையும் செய்யாது
வேத சாஸ்திரப் பணிகளை மட்டும் பார்த்துக்
கொண்டிருக்க, அவர்களுக்கான தேவைகளை
சமூகமும் சமூகத்தின் சார்பில் மன்னர்களும்
கவனித்துக் கொண்டார்கள்
அவர்களுக்கு எது தேவை என்பதைக் கூட
அவர்கள் வாய் திறந்து கேட்கவேண்டியதில்லை.
அவர்கள் மார்பில்அணிந்திருந்த பூணூலின்
எண்ணிக்கையேஅவர்கள் பிரம்மச்சாரியா கிரஹஸ்தனா
அல்லது குழந்தைகள் பெற்றவரா எனபதை மிகச் சரியாக
காட்டிக் கொடுக்க அதற்கு ஏற்ப அவர்களுக்குத்
தேவையானதை மன்னன் கொடுத்துவிடுவார்
இவர்கள் எந்தக் காரணம் கொண்டும் லௌகீக
விஷயங்களுக்கு என தனது நேரத்தை தேவையின்றி
செலவிடாது முழு நேரமும் எப்போது எங்கு கேட்டாலும்
அன்றைய தினம் நாள் நட்சத்திரம் மற்றும் அதன்
தொடர்ச்சியாக சுப அசுப பலன்களை மிகச் சரியாகச்
சொல்லும்படி எப்போதும் தன்னை தயார் நிலையில்
வைத்திருக்கவேண்டும்.வைத்திருந்தார்கள்
இதுபோல் காலண்டர் இல்லாத காலங்களில்
எந்த நாட்டிற்குச் சென்றாலும் எப்போது கேட்டாலும்
மிகச் சரியாக நாள் நட்சத்திரத்தைச் சொல்ல
அவர்களுக்கு உதவியது இந்த நிலவின் சஞ்சாரமும்
அதை அறிந்து கொள்ள அவர்கள் அவர்களுக்கென
ஏற்படுத்திக் கொண்டிருந்த சில சம்பிரதாயங்களும்தான்
அதில் மிக மிக முக்கியமானது அவர்களின்
நித்திய கடமையாக நிர்ணயிக்கப்பட்டிருந்த
சந்தியாவந்தனம்தான் "எனச் சொல்லி நிறுத்தினான்
ஆவல் அதிகரித்தாலும் அவன் பாணியில்
அவனாகத் தொடர்வதே சிறப்பாக இருந்ததால்
நானும் அவனாகவே தொடரட்டும் என
மௌனமாய்க் காத்துக் கொண்டிருந்தேன்
(தொடரும் )
எனது நண்பனும் மொட்டை மாடியில் அமர்ந்து
பல்வேறு விஷயங்கள் குறித்துப்
பேசிக் கொண்டிருந்தோம்..
அப்போது வானில் ஊர்ந்து கொண்டிருந்த
அரை நிலவைக்காட்டி இன்று வளர்பிறையா
தேய்பிறையா சொல் " என்றான் என் நண்பன்
"காலண்டரைப் பார்த்து வரவா "என்றேன் நான்
"அதைப் பார்த்துத்தான் எல்லோரும்
சொல்லிவிடுவார்களே.அதில் என்ன இருக்கிறது
இங்கிருந்தே இப்படியே சொல்லவேண்டும்
அதுதான் விஷயம் "என்றான்
நிலவு அரை தேய்ந்திருந்தது.மிக லேசாக
நடு உச்சத்திலிருந்து கொஞ்சம் கிழக்கே இருந்தது
வேறு குறிப்பிடும்படியாக எதுவும் இல்லை
இதைவைத்து எப்படி வளர்பிறையா தேய்பிறையா
எனச் சொல்லமுடியும்.எனக்குப் புரியவில்லை
என் நண்பனே தொடர்ந்தான்
"இதை வைத்து வளர்பிறை தேய்பிறை மட்டுமல்ல
மிகச் சரியாக இன்றைய நட்சத்திரத்தைக் கூட
சொல்லிவிட முடியும் " என்றான்
என்னால் நிச்சயம் அதை நம்ப முடியவில்லை
நண்பன் தொடர்ந்து பேசினான்
"முன் காலத்தில் பிராமணர்கள் என்றாலே
தனக்கென தன் குடும்பத்திற்கென வாழாது
சமூகத்திற்கு வாழ்பவர்கள் என அர்த்தம்
அதனால் தான் அவர்களுக்கான தேவைகளைப்
பூர்த்தி செய்ய அவர்கள் எந்த பணிகளையும் செய்யாது
வேத சாஸ்திரப் பணிகளை மட்டும் பார்த்துக்
கொண்டிருக்க, அவர்களுக்கான தேவைகளை
சமூகமும் சமூகத்தின் சார்பில் மன்னர்களும்
கவனித்துக் கொண்டார்கள்
அவர்களுக்கு எது தேவை என்பதைக் கூட
அவர்கள் வாய் திறந்து கேட்கவேண்டியதில்லை.
அவர்கள் மார்பில்அணிந்திருந்த பூணூலின்
எண்ணிக்கையேஅவர்கள் பிரம்மச்சாரியா கிரஹஸ்தனா
அல்லது குழந்தைகள் பெற்றவரா எனபதை மிகச் சரியாக
காட்டிக் கொடுக்க அதற்கு ஏற்ப அவர்களுக்குத்
தேவையானதை மன்னன் கொடுத்துவிடுவார்
இவர்கள் எந்தக் காரணம் கொண்டும் லௌகீக
விஷயங்களுக்கு என தனது நேரத்தை தேவையின்றி
செலவிடாது முழு நேரமும் எப்போது எங்கு கேட்டாலும்
அன்றைய தினம் நாள் நட்சத்திரம் மற்றும் அதன்
தொடர்ச்சியாக சுப அசுப பலன்களை மிகச் சரியாகச்
சொல்லும்படி எப்போதும் தன்னை தயார் நிலையில்
வைத்திருக்கவேண்டும்.வைத்திருந்தார்கள்
இதுபோல் காலண்டர் இல்லாத காலங்களில்
எந்த நாட்டிற்குச் சென்றாலும் எப்போது கேட்டாலும்
மிகச் சரியாக நாள் நட்சத்திரத்தைச் சொல்ல
அவர்களுக்கு உதவியது இந்த நிலவின் சஞ்சாரமும்
அதை அறிந்து கொள்ள அவர்கள் அவர்களுக்கென
ஏற்படுத்திக் கொண்டிருந்த சில சம்பிரதாயங்களும்தான்
அதில் மிக மிக முக்கியமானது அவர்களின்
நித்திய கடமையாக நிர்ணயிக்கப்பட்டிருந்த
சந்தியாவந்தனம்தான் "எனச் சொல்லி நிறுத்தினான்
ஆவல் அதிகரித்தாலும் அவன் பாணியில்
அவனாகத் தொடர்வதே சிறப்பாக இருந்ததால்
நானும் அவனாகவே தொடரட்டும் என
மௌனமாய்க் காத்துக் கொண்டிருந்தேன்
(தொடரும் )
24 comments:
அதில் மிக மிக முக்கியமானது அவர்களின்
நித்திய கடமையாக நிர்ணயிக்கப்பட்டிருந்த
சந்தியாவந்தனம்தான் "எனச் சொல்லி நிறுத்தினான்//
அறிவை மேலும் சுடர்விட செய்வது அல்லவா !காயத்திரி மந்திரம்.
இதுபோல் காலண்டர் இல்லாத காலங்களில்
எந்த நாட்டிற்குச் சென்றாலும் எப்போது கேட்டாலும்
மிகச் சரியாக நாள் நட்சத்திரத்தைச் சொல்ல
அவர்களுக்கு உதவியது இந்த நிலவின் சஞ்சாரமும்
அதை அறிந்து கொள்ள அவர்கள் அவர்களுக்கென
ஏற்படுத்திக் கொண்டிருந்த சில சம்பிரதாயங்களும்தான்
வணக்கம் ஐயா .எமது சம்புருதாயங்களை எம் முன்னோர்கள் முறையாகப் பின்பற்றிய காலம் என்பது இப்படித்தான் மனதிற்கு மகிழ்ச்சியும் அளிக்கக்
கூடிய காலங்களாக இருந்து வந்தன .ஆனால் இன்று அவைகள் மெல்ல மெல்ல அழிந்து போவதாக உணரும் போது மனதிற்கு கஸ்ரமாகவும் உள்ளது .
சிறப்பான படைப்பு வாழ்த்துக்கள் ஐயா .
ஆவலுடன் அரிய காத்திருக்கிறேன்! அடுத்த தகவலுக்கு! பகிர்வுக்கு நன்றி!
தொடர்கிறேன்
அரிய தகவல்..
மிகவும் சுவாரஸ்யமான உண்மைகள், தொடரட்டும். அடுத்த பகுதிக்கான ஆவலுடன் காத்திருக்கிறேன்.
நாங்களும் காத்துக் கொண்டிருக்கிறோம்...
அறியாததகவலைஅறிந்தேபிறருக்கும்தகவலைச்ாலெ்லும்உங்களின்மகிழ்வுநன்று
சுவையான தகவல்கள்.
த்.ம. 6
நல்ல பகிர்வு. அறியக்காத்திருக்கின்றோம்.
Very interesting infermation and every one shoul
d know. Please continue. VVRamanujam
நானும் காத்துக் கொண்டிருக்கிறேன்!சுவாரஸ்யம்!
நாங்களும் தான்!!!!!
அவர் தொடர நாங்களும் காத்திருக்கிறோம்.
ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றேன் அய்யா
தொடர்கிறேன்
நானும் காத்திருக்கிறேன்......
த.ம. 10
அறியதகவல் நானும் காத்திருக்கிறேன்..
நல்ல தகவல்கள் தரவுள்ளீர்களென ஊகிக்கின்றேன்.
தொடருங்கள் ஐயா...
மேலும் அறிய ஆவலாகக் காத்திருக்கிறேன்!
அதிகரிக்கும் ஆவலோடு நானும் காத்திருக்கிறேன் தொடரும் பதிவுக்காக.
ayya, arumai
அய்யா, கேட்டேன், படித்தேன் ஆச்சரியமடைந்தேன். அதனால்தான் திருவள்ளுவர்
''அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது''
என்று கூறினானோ? சொக்கலிங்கம்.
Post a Comment