திருநாள் ஏதும் உண்டோ ?- தீபத்
திருநாள் எங்கும் உண்டோ ?
வருடம் ஒருநாள் ஆயினும் -திருநாள்
ஒருநாள் இரவே ஆயினும் (திருநாள் )
சிறியவர் பெரியவர் பேதமும்- செல்வம்
உடையவர் வறியவர் பேதமும்
துளியது இன்றி மகிழ்வினில் _அனைவரும்
திளைத்திடும் மகிழ்வைப் பெருக்கிடும் (திருநாள் )
உறவினை எல்லாம் கூட்டியே _ இனிக்கும்
விருந்தினில் அன்பைக் காட்டியே
துயரினைத் தூர ஓட்டிடும் -வீட்டில்
மகிழ்வினை ஆறாய்க் கூட்டிடும் (திருநாள் )
இருளெனும் மடமை ஒழியவே -எங்கும்
அறிவொளிச் சுடரை ஏற்றெனும்
குறிப்பினை நமக்கு உணர்த்திடும் -ஞான
நெருப்பினை நம்முள் விதைத்திடும் (திருநாள் )
திருநாள் எங்கும் உண்டோ ?
வருடம் ஒருநாள் ஆயினும் -திருநாள்
ஒருநாள் இரவே ஆயினும் (திருநாள் )
சிறியவர் பெரியவர் பேதமும்- செல்வம்
உடையவர் வறியவர் பேதமும்
துளியது இன்றி மகிழ்வினில் _அனைவரும்
திளைத்திடும் மகிழ்வைப் பெருக்கிடும் (திருநாள் )
உறவினை எல்லாம் கூட்டியே _ இனிக்கும்
விருந்தினில் அன்பைக் காட்டியே
துயரினைத் தூர ஓட்டிடும் -வீட்டில்
மகிழ்வினை ஆறாய்க் கூட்டிடும் (திருநாள் )
இருளெனும் மடமை ஒழியவே -எங்கும்
அறிவொளிச் சுடரை ஏற்றெனும்
குறிப்பினை நமக்கு உணர்த்திடும் -ஞான
நெருப்பினை நம்முள் விதைத்திடும் (திருநாள் )