Thursday, October 10, 2013

நகத்தோடு போவதற்கு எதற்கு கோடாலி எடுக்கிறார்கள்

தமிழ் நாட்டுக்கென அவ்வப்போது யாரும்
எதிர்பாராதபடி ஏதாவது ஒரு புதுப் பிரச்சனை வந்து
கொண்டே இருக்கும்

வங்கக் கடலில் ஏற்படும் காற்றழுத்தத்
தாழ்வு மண்டலம் என இரண்டு நாள் டி.வி
பத்திரிக்கை யென பயமுறுத்திப் பின் ஒன்றுமில்லாது
ஒரிஸ்ஸா கடற்கரையைக் கடப்பது போல
கடந்த சில நாட்களாக நஸ் ரீன் தொப்புள் பிரச்சனை
பத்திரிக்கைகளையும் நம்மையும் பாடாய்ப்படுத்திவிட்டது

எளிதாகத் தீர்த்து வேண்டிய இந்தப் பிரச்சனையை
ஏன் இப்படிஊதி ஊதிப் பெரிதாக்கினார்கள்
என நினைக்க எரிச்சல் எரிச்சலாக இருக்கிறது

மது குடிக்கிற காட்சி இல்லாமல் இப்போது எந்த
சினிமாவும் வருவதில்லை.
ஆனாலும் அந்தக் காட்சியில் ஓரத்தில்
மதுவின் கெடுதி குறித்து ஒரு வாசகம் போட்டுவிட்டு
அந்த சீனை நாம் அரைமணி நேரம் ஓட்டவில்லையா ?

சிகரெட் குடிக்கும் காட்சியின் போது
அதன்தீங்கு குறித்து ஒரு வாசகம் போட்டுவிட்டு,
அந்தக் காட்சியை அருமையாய்
மனதில் பதியும் வண்ணம் எடுத்து ரசிகர்களைக்
கவரவில்லையா ?

அதைப்போல அது உண்மையில்
 நஸ் ரீன் தொப்புளோ தொடையோ இல்லையோ
அது தேவையற்ற பிரச்சனை
அதுவும் பண்பாடும் பகுத்தறிவும்  மிக்க எம் போன்ற
தமிழ் கலாரசிகர்களுக்கு நிஜமாகவே
இது தேவையில்லாத விஷயம்

 நாங்கள் சொல்லிக் கொள்வதெல்லாம்
அவர் குறிப்பிடுகிற அந்த அற்புதக் காட்சியை
சென்ஸார் செய்யாமல் எடுத்தபடி அருமையாக
ரசிக்கும்படி தெளிவாகக் காட்டிவிட்டு
அது நஸ் ரீன் தொடையல்ல  தொப்புள் அல்ல என
ஒரு வாசகம் போட்டுவிட்டால் நஸ் ரீனின்
 தன்மானமும்காக்கப்பட்டிருக்கும்
 பண்பாடு மிக்க தமிழ் சினிமா
ரசிகர்களின்  பேராவலும் பூர்த்தி
செய்யப்பட்டிருக்கும் இல்லையா?

அதைவிடுத்து நகத்தோடு செய்ய வேண்டியதை
ஏன் இப்படி கொலை வெறியோடு
கோடாலி கொண்டுதாக்க முயல்கிறீர்கள் ?

அவர் குறிப்பிடுகிற காட்சியை  தமிழ் படத்தில் மட்டும்
நீக்குவேன் எனச் சொல்வது உண்மையில்
தமிழினத்திற்குச் செய்யும் மாபெரும் துரோகம்
என்பதை இங்கே நாங்கள் பதிவு செய்ய விரும்புகிறோம்

வயதான இலக்கிய மிராசுதார்கள்
நிறைந்த தணிக்கைக் குழுவும் பார்த்துக் களித்து
பண்பாட்டுக்கு இந்தக் காட்சி கூடுதல் பலம் சேர்க்கும்
எனஅறிந்து தெளிந்து அந்தக் காட்சியை
அனுமதித்த பின்பு அந்தக் காட்சியை நீக்குதல் என்பது
எம் போன்ற்தன்மானம் மிக்க பண்பாட்டுக்
காவலர்களுக்குச் செய்யும் துரோகமே
எனப் பதிவு செய்வதோடு
இனியும் இதுபோன்ற கொடுமைகள் தொடருமாயின்
இதுபோன்ற அற்புதக் காட்சியைக் காண்பதற்காக
 நாங்கள் ஆந்திராவோ கேரளாவோ
 செல்லவேண்டி வரும் எனவும்
தெரிவித்துக் கொள்கிறோம்

வாழ்க  நூறாண்டு கண்ட அற்புதத் தமிழ்  சினிமா

தமிழர்களின் பண்பாட்டுத் தளமாய் விளங்கும்
அதிசயத் தமிழ் சினிமா

20 comments:

”தளிர் சுரேஷ்” said...

சரியா சொன்னீங்க ஐயா!

திண்டுக்கல் தனபாலன் said...

பலவற்றை உண்மையாக பதிவு செய்து உள்ளீர்கள் ஐயா... வாழ்த்துக்கள்...

ப.கந்தசாமி said...

அப்படி கேரளாவோ, ஆந்திராவோ போகும்போது எனக்கும் தகவல் கொடுத்து விட்டுப்போகவும்.

Unknown said...

சினிமா மீடியத்திற்கு வரும் போதே, மனதை காம்ப்ரமைஸ் செய்து தயார் நிலையில்..வைத்துக் கொண்டு வரவேண்டும்! இல்லை எனில் டிவி தொடர்களில் நடிக்க சென்று விடலாம்! தடுப்பார் இல்லை! சினிமா ஒரு வெகுஜன மீடியம் ! சாமானியனுக்கு மகிழ்வுறுத்த சிலக் காட்சிகள் தேவை..தேவை !

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்க நூறாண்டு கண்ட அற்புதத் தமிழ் சினிமா

ஸ்ரீராம். said...

விரக்தியா? ஆதங்கமா? :)

G.M Balasubramaniam said...

யார் அந்த நஸ்ரின். ?பார்த்து ரசிக்க வேண்டியதை ரசித்துவிட்டு ...........

அருணா செல்வம் said...

/தமிழ் கலாரசிகர்களுக்கு நிஜமாகவே
இது தேவையில்லாத விஷயம்/

unmaithan iyya.

கோமதி அரசு said...

வாழ்க நூறாண்டு கண்ட அற்புதத் தமிழ் சினிமா//
வாழ்த்துக்கள்.

ராஜி said...

ஐயே! இந்த விசயத்தை பத்தி நீங்களும் பதிவிட்டுட்டீங்களா?!

vimalanperali said...

சினிமா ஒரு சிறப்புப்பாரவை என இல்லாமல் உண்மையாகவே நம்மை செதுக்குகிற சினிமாக்கள் நிறையவே/

Anonymous said...

வணக்கம்
ஐயா

உள்ளகத் தகவலை உள்ளபடி அழகாக பதிவுசெய்தமைக்கு மிக நன்றி ஐயா

வாழ்க நூறாண்டு கண்ட அற்புதத் தமிழ் சினிமா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Unknown said...

இந்த பதிவு போடுவதற்கு அரைமணி நேரம் முன்பு என் வலைப் பூவில் ...காதல் டிப்ளமா கோர்ஸில் சேரணும்சொல்லிட்டு ,இப்போ ..தொப்புளைப் பார்க்க கேரளாவோ ,ஆந்திராவோ போகணும்னு துடிக்கிறீங்க ...இளமை ஊஞ்சலாடுதா ரமணி சார் ?

Avargal Unmaigal said...

உங்களின் இந்த பதிவைதான் நான் ஒரே ஒரு முறை படித்து புரிந்து கொண்டேன் வழக்கமாக உங்கள் கவிதைகளை ஒரு தடவைக்கு 2 அல்லது 3 தடவை படிப்பேன் முதலில் நடை அழகுக்காவும் 2 தடவை அதில் சொல்லி இருக்கும் விஷயங்களுக்காகவும் 3 தடவை அதில் மறைமுகமாக என்ன சொல்லி இருக்கிறீர்கள் என்று புரிந்து கொள்வதற்காகவும் படிக்கிறேன்

என்னை அதிகம் கஷ்டப்படுத்தாமல் இருக்க பதிவு இட்டதற்கு வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் ரமணி சார். ஹீ.ஹீ

தலைப்பை மற்றும் சற்று மாற்றி வைத்து இருந்தீர்களானல் உங்கள் பதிவு மிக ஹிட்டான பதிவாகி இருக்கும். இப்போதும் ஹிட்தான் ஆனால் சூப்பர் ஹிட்டாகி இருக்கும்

Seeni said...

nallaa sollideenga ayyaaa!

மகேந்திரன் said...

உண்மையே ஐயா..

கவியாழி said...

அந்த அற்புதக் காட்சியை
சென்ஸார் செய்யாமல் எடுத்தபடி அருமையாக
ரசிக்கும்படி தெளிவாகக் காட்டிவிட்டு//நல்ல யோசனைதான் அய்யா

Ranjani Narayanan said...

நையாண்டி சூப்பர்!

ADHI VENKAT said...

கரெக்டா சொல்லியிருக்கீங்க....

த.ம.11

தி.தமிழ் இளங்கோ said...

// வயதான இலக்கிய மிராசுதார்கள் //

நல்ல சொல்லாடல்.

// தமிழர்களின் பண்பாட்டுத் தளமாய் விளங்கும் அதிசயத் தமிழ் சினிமா //

தமிழர்களின் பண்பாடு? வெங்காயம்

Post a Comment